(Reading time: 9 - 18 minutes)

றுதியாக அவர்கள் கேட்ட கேள்வி அவனை மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. 

“என்ன….சார்? என்ன கேட்கிறிங்கனு தெரிந்துதான் கேட்கிறிங்களா?” படபடப்புடன் கேட்டாள் கல்யாணி. 

“இதில் என்ன மேடம் தப்பு இருக்கு. உலகத்தில் நடப்பதைதானே கேட்டேன்”. 

“உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களால் மனதளவில் இயல்பா நிகழும் நிகழ்வு இது. அதனால வீட்டை விட்டு ஒதுங்கிபோய் வாழவேண்டும் என்ற அவசியமில்லை”.  

“எல்லா உயிரும் ஒன்று என்று நினைத்தால் எந்த உயிரையும் தாழ்த்தியும் பேசமாட்டோம், உயர்த்தியும் பேசமாட்டோம். எந்த உயிரா இருந்தா என்ன சார்… .எந்த மாதிரியான பிறப்பா இருந்தா என்ன சார்...நீ நலமா ? நான் நலம்னு சொல்லறதுல என்ன வந்திடுத்து 

நமக்குள்ளேதான் ஆண், பெண் என்ற மனப்பான்மை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதமை, பணக்காரன், ஏழை என்ற மனோபாவம் இப்படி பல நிலைகளை நாமே உருவாக்கி உருவாக்கி சமுதாயநிலை சீரழிய நாமே காரணமாய் இருந்துவிட்டோம்.மற்றவர்கள் கேலி செய்வார்களோ! யார் என்ன சொல்வார்களோ என்று பார்த்தும் பயந்தும் வாழ்வதால்தான் இவர்களின் நிலை கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும்படி ஆகிவிட்டது”. 

“அன்பும் ஆதரவும் காட்டினாலே சமுதாயத்தில் இவர்களும் ஒரு நல்ல நிலைக்கு வருவார்கள். அன்பும் ஆதரவும் இன்மையால்தான் ஒழுக்ககேடான செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் சீரழிந்து போகிறார்கள்”. 

“ஆடு, மாடு மேல் எல்லாம் பாசம் வைக்கின்றோம். ஆனால் அவர்களும் ஒரு உயிர் என்ற நிலையிலேனும் மதிக்க தவறிவிட்டோம்”;.

“அந்த நிலை மாறவேண்டுமானால் முதலில் பெற்றோரும் உற்றாரும் உறவினரும் புரிந்துகொண்டு ஆதரவு கரம் நீட்டினாலே அவர்கள் வாழ்வு மறுமலர்ச்சி பெறும்.” 

“என் மகனுக்கு கிடைத்த அன்பும் ஆதரவும் இவனைப்போல் உள்ளவர்களுக்கும் கிடைக்க வழி செய்வோமே!” என்றவள், சுரேஷின் கையை அழுந்த பற்றினாள். 

அதேநேரம் கல்யாணி பேசியதை கேட்ட ரமேசும் வனிதாவும் கண் கலங்க சுரேஷின் மறுகையைப்பற்றினர். அந்த பற்றுதலில் நாங்க இருக்கோம் என்பதை உணர்ந்த சுரேஷின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்ட மாதிரி பிரகாசமானது. அவன் மனமோ நலம்நலம் அறிய ஆவல் என்ற பாடலை முணுமுணுத்தது.    

சுரேஷ் ஆணும் அல்ல, பெண்ணுமல்ல. இறைவன் படைப்பில் அவனும் ஓர் உயிர். 

கலங்கிய கண்களுடன் கல்யாணி பேசியதை கேட்ட மீடியாக்காரர்களும் பத்திரிக்கையாளர்களும் மனம் நெகிழ்ந்துபோய் ஏதோ ஒருவகை புரிதலுடன் கிளம்பினர்…..

 

This is entry #21 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம்நலம் அறிய ஆவல்

எழுத்தாளர் - மங்கலஷ்மி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.