(Reading time: 13 - 25 minutes)

'வனா... அவன் வரலை...'

'ஏன்???'

'தெரியலை. இப்போவெல்லாம் அவன் எங்ககூட எல்லாம் ஜாஸ்தி பேசறது இல்லை...'

'அப்படியா??? சரி அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...' கேட்டாள் லாவண்யா. அவன் மனைவி எப்படித்தான் இருக்கிறாள் என பார்த்துவிடும் ஆர்வம் லாவண்யாவிடம்.

'ஓ... ஆயிடுச்சே...காலேஜ் முடிஞ்சதுமே அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டானே ' பதில் வந்தது மனோஜிடமிருந்து.

'அவன் அட்ரெஸ் தெரியுமா உனக்கு எனக்கு அவனை பார்க்கணும்...' நண்பர்களிடமிருந்து அவனது முகவரியையும், தொலைப்பேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு விடைபெற்றாள் லாவண்யா.

காரில் வீடு நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்தாள் அவள். மனம் இன்னமும் பழைய நினைவுகளில் சுழன்றுக்கொண்டிருந்தது.

எப்படியோ முடிந்தது அவளது கல்லூரி வாழ்க்கை. என்னை சுற்றி உள்ளவர்கள் எல்லாருமே இப்படிதானோ என்று அவள் எண்ணிக்கொண்டிருந்த போதுதான் திடீரென ஒரு நாள் அவன் வந்தான் அவள் வாழ்க்கைகுள்ளே. அவன் கிருஷ்ணன்!!! சுருக்கமாக க்ரிஷ்!!!

அவனது மழலையர் பள்ளியில்தான் அவள் முதல் முதலாக ஆசிரியையாக சேர்ந்தாள்.  அவளை விட ஒரு வயது மூத்தவன் க்ரிஷ். அவனுக்கும் அவளுக்குமானது என்ன விதமான உறவு??? காதலா??? நட்பா??? வெறும் பாசமா??? இல்லை எல்லாமுமா??? இதுவரை அவளுக்கு புரியவில்லை. இது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அவளது நம்பிக்கை ஊற்றாக இருப்பவன் அவன்.

பெரிதாக ஒன்றும் செய்ய மாட்டான் அவன். அழகாய் புன்னகைப்பான் அவளை பார்த்து. உனக்கென்ன??? நீ குயீன்....' என்பான். பல லட்சம் பூக்கள் பூக்கும் அவளுக்குள்ளே.

'உன்னாலே முடியலன்னா வேறே யாராலே முடியும். தைரியமா இறங்கு..'  என்பான் பல கோடி தன்னம்பிக்கை ஊற்றுகள் திறக்கும் அவளுக்குள்ளே.

அவனது பள்ளி மழலைகளுடனும் அவர்களது கள்ளமில்லா அன்புடனுமே இவளது தன்னம்பிக்கை பயணம் துவங்கியது. தன்னம்பிக்கை வார்த்தைகள் இத்தனை பெரிய மருந்தா??? அவளுக்கே இது மிகப்பெரிய ஆச்சர்யம்தான்!! அதை பிடித்துக்கொண்டே கிடுகிடுவென உயர்ந்து இதோ இன்று தொட்டிருக்கிறாள் வெற்றியின் எல்லையை.

அவன் இவளை நேசிக்கிறானா???? தெரியவில்லை அவளுக்கு. ஆனால் தன்னைதானே நேசிப்பது எப்படி என்ற அழகான பாடத்தை அவளுக்கு கற்றுக்கொடுத்தவன் அவன். இப்போது அவளுக்குள்ளே, மற்றும் அவளது நடை உடை பாவனைகளில் வந்திருக்கும் அந்த கம்பீரத்துக்கும் இந்த பாடமே காரணம்.

இப்போதும் எத்தனை வேலைகள் இருந்த போதும் அவனை வாரத்துக்கு இரண்டு முறையாவது சந்தித்துவிடுவாள் லாவண்யா. இப்போது அவனை பற்றி நினைக்கும் போதே இதழ்களில் தன்னாலே ஒரு புன்னகை ஓட்டம்.

வீட்டுக்கு சென்று கைப்பேசியில் க்ரிஷை அழைத்து எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் லாவண்யா. மறு புறத்தில் இருந்து மலர்ந்த சிரிப்பு மட்டுமே பதிலானது.

உனக்கென்ன??? நீ குயீன்..'

'போடா...உனக்கு வேறே வேலை இல்லை...' சிரித்தபடியே துண்டித்தாள் அழைப்பை.

றுநாள் ஞாயிற்றுகிழமை. அஸ்வின் எண்ணை அழைத்தாள் லாவண்யா. அவள் யாரென அவன் புரிந்துக்கொள்ளவே சில நிமடங்கள் பிடிக்க..

'நான் உன் வீட்டுக்கு வரலாமா???' பேச்சினிடையே இவள் கேட்க

'வீட்டுக்கா சரி வா...' அவன் சொன்னான் சற்றே இறங்கிய குரலில். அரை மனதுடனே அவன் சம்மதித்தது போலே இருந்தது அவளுக்கு.

அவன் வீட்டை அடைந்திருந்தாள் சில மணி நேரங்களில். வாசலுக்கு வந்து வரவேற்றான் அவளை. அந்த நொடியில் அவன் புருவங்கள் உயர்ந்து இறங்கவும் தவறவில்லை.

'நீ நிறைய மாறிட்டே லாவண்யா...' என்றான் அவன்.

ஒரு பெருமூச்சு கலந்த புன்னகையுடனே வீட்டினுள் நுழைந்தாள் அவள். அறிமுக படுத்தி வைத்தான் அவனது மனைவியை.

'அழகியல் இலக்கணங்களுக்கு உட்பட்ட தேவதை!!!' புன்னகைத்துக்கொண்டாள் லாவண்யா. அதை விட அழகாய் அவனது மகள். நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும் அந்த குழந்தைக்கு.

தடபுடலாக விருந்து. இடையிடையே தனது மனைவியை பற்றியும் மகளை பற்றியும் பெருமை பாட தவறவில்லை அவன். அந்த குழந்தையும் சுட்டித்தனமாக பேசிக்கொண்டிருக்க நேரம் போனது தெரியவில்லை அவளுக்கு.

திடீரென அவனுக்கு யாரிடமிருந்தோ அழைப்பு வர,

'எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வெளியே போயிட்டு வந்திடறேன் லாவண்யா...' அவன் சொல்ல..

'ஓ ஷூர் நானும் அப்படியே கிளம்பறேன்...' அவள் எழ அவள் கையை பிடித்துக்கொண்டாள் அவன் மனைவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.