(Reading time: 6 - 11 minutes)

தற்கெடுத்தாலும் அங்கே அனுமதி கேட்டு கேட்டு செய்தாள். இங்க என்னடாவென்றால் அவன் மனம் குழம்பியது. அதற்குமேலும் அவனால் பொறுமையாய் இருக்கமுடியவில்லை. மனைவியிடம் கேட்டுவிட்டான்.

“ஜானு நான் ஒன்று கேட்டா மறைக்காம பதில் சொல்வியா..?” கேட்ட கணவனையே ,பார்த்தபடி

“கேளுங்க சொல்றேன் அப்படி என்ன கேட்க போறிங்க.”என்றாள்.

“எங்க வீட்டில் ஒவ்வொன்னையும் கேட்டு கேட்டு செய்யற… இங்க உன் இஷ்டத்துக்கு எல்லாமே செய்யற… அங்க இருந்ததை விட இங்கு சந்தோஷமாவும் சுதந்திரமாவும் செயல்படற… ஏன்?”

கேட்ட கணவனை பார்த்தாள.; முகத்தில ஏகப்பட்ட குழப்ப ரேகைகள் தென்பட்டன.

இதுக்கா இவ்வளவு பில்டப், நான் என்னவோ ஏதோ என்றல்லவா பயந்துவிட்டேன்.என்று கூறியவள்;, அவனைப்பார்த்து புன்னகைத்தாள். அவனைப் பார்த்து,

“ஓவ்வொரு பெண்ணுக்கும் பிறந்த வீடுதான் சொர்க்கம்க… ஏனா அவளுக்கு அங்கு எந்த கட்டுப்பாடும் கிடையாதுங்க. சுதந்திரமாக அவள் என்ன வேண்டுமனாலும் செய்யலாம் ,போகலாம். அதுவே அவள் கணவன் வீட்டில் செய்தால் மதிக்கவில்லை, தான்தோன்றிதனம் என பெயர் கிடைக்கும்;. மாமியாரை கவனிக்கவில்லை, நாத்தனாரிடம் அன்பாக இல்லைனு சொல்வாங்வக. அதுமட்டுமில்லாமல் அம்மாவையும் பிள்ளையையும் பிரிக்க பார்க்கிறாள் என பிரச்சனைகள் வெடிக்கும். இதனால் சண்டையும் சச்சரவும் அதிகமாகும். வெளியில் சென்றுவரும் நீங்கள் மனஉளச்சலுக்கு ஆளாவீர்கள். நிம்மதி பறிபோகும், வாழ்க்கை சூன்யமாகும்.

புகுந்த வீட்டினர் ,இவளும் நம்வீட்டுபெண்தான் என்பதை புரிந்துகொள்ளும் வரை, நான் விட்டுக்கொடுத்து அனுசரித்து நடக்கின்றேன். இதனால் வீட்டில் எந்த பிரச்சனையும் வராது. நாமும் சந்தோஷமா, நிம்மதியா இருக்கலாம்” என்றாள் ஜானகி.

‘இதுபொலவே ஒவ்வொரு பெண்ணும் இருந்து விட்டால் நாட்டில் கேஸ் ஸ்டவ்வும் வெடிக்காது, நீதிமன்றங்களில் விவாகரத்து கோரி வழக்கும் வராது’ என நினைத்தான் . மனைவியை பெருமையாக பார்த்தவன்…..

இவ்வளவும் நீங்க பார்த்து பார்த்து செய்யறதால்தான் மனைவி ஒரு மந்திரினு சொன்னாங்களா? என கணவன் கேட்க , மனைவியோ அழகாய் கண் சிமிட்டி சிரித்தாள்.

 

This is entry #28 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - மனைவி ஒரு மந்திரி

எழுத்தாளர் - மங்கலஷ்மி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.