(Reading time: 19 - 38 minutes)

துவரை இல்லாத பொல்லாத எண்ணங்கள் அவன் மனதில் எழுந்ததின் காரணமாக, “ஆம்……. தாம் கூரியது சரியே, நான் ஒருவனே தம் அனைவரைகாட்டிலும் உயர்ந்தவன், முகத்தில் மூக்கைக்கொண்ட ஒரே மனிதன்”……… என்று கர்வம் தெரிக்கும் வார்த்தைகளில் கூரினான். அவனின் வார்த்தைகளில் தெரிந்த மாற்றம், தமது திட்டத்திர்க்கு கிடைத்த முதல் வெற்றி என்பதை உணர்ந்த மக்களனைவரும் மேலும் சிலபொய்யான வார்த்தைகளை பேசி அவ்விடம் விட்டுச்சென்றனர். ஒருவாரம் கழிந்திருந்த அன்று தமது திட்டத்தின் அடுத்த கட்டமாக ருத்ரனை கோவிலில் சந்திக்கும் முடிவிர்க்கு வந்தனர்.

கோவிலின் நுழைவாயிலின் அருகில் நின்றிருந்தவர்கள் அவனைகண்டதும் வணக்கம் கூறி வரவேற்றனர். ருத்ரனை கண்ட ஒருவர், “தங்களின் தரிசனம் கிடைத்ததால் புனிதமடைந்தது இன்நாள்” என்று கூறி வணங்கினார். இவ்வாறு கோவிலின் அடுத்தடுத்த இடங்களில் நின்றிறுந்தவர்கள் பர்பல விதங்களில் பேசியும், பனிவை காட்டும் பாவங்களில் நடித்தும், அவனை தர்பெருமை வலையில் சிக்கச் செய்தனர். சுவாமி சுந்தரேஷ்வரரின் தரிசனத்தை முடித்து திரும்பினான் ருத்ரன். தமது திட்டத்தின் இருதி கட்டத்தை நிறைவேற்ற காத்திருந்த இருவரும், அவனை காணாதவாறு திரும்பிநின்று அவனிர்க்கு கேட்கும் விதத்தில் பேசத்துவங்கினர்.

“அப்படி என்ன? சாதித்துவிட்டான் என்று அனைவரும் ருத்ரனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் என்று எனக்கு புரியவே இல்லை”??? என்று கொந்தலிக்கும் வார்த்தைகளை, சலிப்புடன் கேட்டான் ஒருவன். “உலகிலேயே மூக்கை கொண்ட ஒரே மனிதன் என்பது பெருமைக்குறியது அல்லவா!!! அதலால்தான் அனைவரும் அவனிர்க்கு மரியாதை தருகின்றனர்”……… என மற்றவன் பதிலுரைத்தான். “அதையெல்லாம் நானும் அறிவேன். நமக்கும் தான் சிரிது நாட்களிர்க்கு முன்வரை மூகத்தில் மூக்கு இருந்தது, பொய் பேசியதின் விளைவாக நாம் அனைவரும் தொலைத்து விட்டோம்”.

“நம்மைபோல் என்றேனும் ஒருநாள் ருத்ரனும் தனது மூக்கை துலைக்கும் நாள் வரலாம் அல்லவா??? அப்படி இருக்கும் பட்சத்தில், நிரந்தரமற்ற அந்த மூக்கிர்க்கு நாம் ஏன் மரியாதை தரவேண்டும்”??? என்று கூறி, நஞ்சு விளையும் கேள்வி விதைகளை ருத்ரனின் மனதில் விதைத்தான். “என்னபா இது”?..... “நீ ஏதேதோ சொல்ற, ஒன்றுமே புரியலை எனக்கு” என்று குழம்பியவன் போல் பேசினான் மற்றவன். “அட என்ன நீ”? “இது கூட புரியலைனு சொல்ற…… உனக்கு புரியும் விதத்திலேயே சொல்கின்றேன் கேட்டுக்கோள்” என்றான். சூழ்ச்சிவலையில் சிக்கியிருந்த ருத்ரனும், அதை அறியாது ஆர்வத்தோடு கூர்ந்து கவனித்தான்.

“ருத்ரனிர்க்கு வரம் வழங்கிய, நம் ‘ருத்ரனிர்க்கும்’ தான் முகத்தில் மூக்கு உள்ளது, இதில் என்ன அதிசயம், சொல்லு பார்க்கலாம்”? என கேட்டான். “அட ஆமா, இல்ல”……. “இதை மரந்துடனே”? என்றான். “அப்படி ஒருவேலை நம் தில்லை நாதனும் மூக்கில்லாமல் போனால்!!!! ‘அப்போதும் ருத்ரன் முகத்தில் மூக்கை கொண்டிருந்தால்’…… அது அதிசையம். அன்று அதை அவனின் திறமை என்று ஏர்க்கலாம். அதைவிட்டுவிட்டு ஒன்றுமே சாதிக்காத அவனை, மற்ற முட்டாளர்கள்போல் என்னால் கொண்டாட இயலாது” என்று கூறி தனது நடிப்புரையை முடித்தான்.

“இத்தனை நாட்களாக, இதை அறியாது போனேனே”!!!!! “நீ சொல்வதுதான் சரி”…… “விஷ்வத்தை ஆலும் ‘விஷ்வனாதனும்’ என்று நம்மைபோல் மூக்கில்லாமல் போகின்றாறோ, அன்று ருத்ரன் முகத்தில் மூக்கை உடையவன் ஆனால், அன்றே அது அவனின் சாதனை ஆகும், அதுவரை அவனும் நம்மைபோல் சாதாரனமான ஒருவனே. ஆதலால், நானும் உன்னைபோல், அவனிர்க்கு சமமரியாதையே தருவேன்” என்று கூறி தமது சூழ்ச்சி நாடகத்தை முடித்து, ருத்ரன் இருக்கும் திசையில் திரும்பினர். அவனை அங்கு கண்டதும், ‘அலட்சியம் நிறைந்த பாவத்தை தம்கண்களில் வேளிகாட்டியவர்களாக’ அவனை கடந்துச்சென்றனர்.

முன்பே, ஆனவ வலையில் சிக்கியிருந்த ருத்ரன், நடந்தவை அனைத்தையும் உண்மையென எண்ணி, “இன்று தனக்கு மக்களிடையில் இருக்கும் நர்பெயர், பெருமை, கௌரவத்தை காக்கும் முடிவிர்க்கு வந்தான்”. அதர்க்கு தான் முதலில், “ஷங்கரன் மற்றும் தேவர்கள் என அனைவரின் மூக்கையும் உடைப்பதே ஒரேவழி” என்னும் எண்ணம் கொண்டான். எனவே, இதுவரை உபயோகிக்காது இருந்த இரண்டாம் வரத்தின் பலனாக தேவலோகத்தை சென்றடைந்தான் ருத்ரன். “இதை எப்படி சாதிப்பது”? என்ற அவனின் மனக்கேள்விக்கு விடையாய் உதித்தது ‘மோகம்’ என்னும் ஆயுதம். ‘மனிதர்களிர்க்கு மண், பொன், பெண், என்பவை மீது தீராத மோகம் இருப்பதைபோல், தேவர்களுக்கும் பெயர், பதவியின் மேல் மோகம் இருப்பதை நினைவு கூர்ந்தான்’.

அதர்க்கு உதாரணம் பல…….. ஏன்? “நம் அய்யனின் பெயரிர்க்காக சனீஷ்வரார், பட்ட பாடு நினைவில் இல்லையா”?...... மோகத்தை ஆயுதமாகிய ருத்ரன், ‘முதல்கட்ட வெற்றியாக தேவர்கள் அனைவரையும் மூக்கின்றி நிற்க்கச்செய்தான்’. தனது அடுத்த கட்ட பயணமாக கைலாயத்தை வந்தடைந்தான். ருத்ரனின் வரம், என்றேனும் ஒருநாள் தனது மூக்கின் பக்கமும் திரும்பும் என்பதை அவனிர்க்கு வரம்தரும் முன்பே அறிந்திருந்ததால், வரம் வழங்கிய மறுகணம் முதல் தியானபோர்வையில் ஒலிந்திருந்தார் லிங்கேஷ்வரர். ‘கண்களை இருக்க மூடியிருப்பினும், செவியின் வாயிலாக யாரோ தன்னை நெருங்குவதை உணர்ந்தார்’.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.