(Reading time: 19 - 38 minutes)

காம்பரனின் தோல்பட்டையைத் தொட்டது ஒருகை. “வரம் பெற்றவர்கள், இப்போது தொட்டு பேசும் அலவிர்க்கு வந்துவிட்டனரா”?.......... “எல்லாம் அந்த மாதவனை சொல்ல வேண்டும், அவன் அன்று புரட்டாசி மாதம் என்று திருபதி போகாது இருந்திருந்தால் எனக்கேன் இன்று இந்த நிலை”?...... “என்ன கொடும ஈஷ்வரன்”?......... என்று மனதில் நினைதார். ‘தியானத்தில் இருப்பவரை தொடுவது தவறு என்பதை காரணம் காட்டி முதலில் நாம் அவனை சபித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற முடிவோடு, “தொட்டதின் விளைவாக”………… என்று கூறியவாறு கண்களைத் திரந்தான் கங்காதரன்’. “அய்யோ, வேண்டாம், வேண்டாம்”……... என்று அலரியவாறு பின்சரிந்தான் நாராயணன்.

“நாராயனா, நீயா”? “சற்று தாமதமாக நான் கண்களைத் திரந்திருந்தால் என்னவாகியிருக்கும், உன்னிலை?????…….. என்றார். “இன்றுதான் உனக்கு புரட்டாசி முடிந்ததா”? என்று கனல் பொங்கும் வார்த்தைகளை உதிர்த்தார் ‘முக்கண்ணன்’. “சென்ற இடத்தில் தாமதம் ஆனது என்னவோ, என் தவறே”. “ஆனால், மாதம்முடிந்து திரும்பியநாள் முதல் தினமும் தம்மை சந்திக்க வந்தவண்ணமே உள்ளேன். எப்போதுமே தியானத்தில் இருந்தது நீரே. இன்று தம் ருத்ரன் தேவலோகத்தை வந்தடைந்ததை கேள்வியுற்றேன், மறுகணமே தம்மை காண கிளம்பிவிட்டேன்”. “நீர் தியானத்தில் இருப்பதாக காட்டிக்கொண்டு, தப்பிவிடுவீர்…… என்பதை நான் நன்கறிவேன்”. “ஆனால் எனது நிலை என்னவாகும்”? “தேவர்களின் நிலையே என்பதை உணர்ந்தேன், எனவே கைலாயத்தை வந்தடைந்தேன்”.

“இன்றும் தாம் தியானத்தில் இருந்ததால், தம்மை தொட்டாவது நான் வந்திருப்பதை தமக்கு தெரிவிக்கவே முயன்றேன். ஆனால் தாமோ, எண்ணையே சபிக்க முற்ப்படுகின்றீர்” என்று கூறியதன் மூலம் தனது வருகைக்காண கதை சுருக்கத்தை முடித்தான் நாராயனன். “நான் என்ன செய்ய?.... எனதுவரம் என்னையே தாக்காது இருக்கவேண்டும் அல்லவா, அதர்க்காகத்தான் இப்படி நிரந்தர தியானத்தில் இருந்தேன்”. “இப்போது கூட, அவனை சபித்து அதன்மூலம் அந்த வரத்திர்க்கு ஓர்முடிவுகட்டி, நனது மூக்கை காக்க முயன்றேன்”…… “ஆனால், அதயும் தாம் கெடுத்துவிட்டீர்”. “இக்கணம் எனக்கோ, எந்த வழியும் தோன்றவில்லை. கைலாயத்திர்க்கு வருகைத்தந்ததால் எதுவும் மாறிவிடாது மாதவா, அந்த வரத்திர்க்கு முடிவுகாணும் வழியை யோசி,” என்றார் நீலகண்டன்.

இருவரும் ஏதோ ரகசியம் பேசிகொண்டனர். சோமசுந்தரர் தியான கோலத்தில் அமர்ந்தார், அவரை காண்பவராக நின்றார் நாராயணர். “அய்யா, ஈசனே! எங்குள்ளீர்”?..... என்று அழைத்தவனாக வந்தான் ருத்ரன். “பெருமாளே! தாமும் இங்கேயே உள்ளீரா”? “தம்மை தரிசிக்க நான் வைகுண்டம் சென்றிருந்தேன், அங்கு தாம் இல்லாத காரணத்தால், அய்யனை தரிசித்து பிறகு, மீண்டும் தம்மைகாண வரலாம் என்று நினைத்திருந்தேன். இங்கு தம்மை கண்டதால் என்வேலை குறைந்தது” என்று வஞ்ச வார்த்தைகளை இன்முகத்தோடு பேசினான் ருத்ரன். “உலகலந்த எனக்கு, உன் மனதை அலக்க எத்தனை நேரமாகும்”? என்று நினைத்தவனாக சிரித்த நாராயணன், “நீ சிவபக்தன் அல்லவா, பிறகு ஏன் இந்த திடீர் விஜயம் வைகுண்டத்திர்க்கு”???? என்றார்.

தேவர்களின் மூக்கை சுலபமாக உடைத்ததால், “முகத்தில் மூக்கை சுமக்கும் தகுதி உனக்கு மட்டுமே உண்டு” என்று தன்னைதானே பாராட்டியவனாக கைலையில் நுழைந்த ருத்ரனிர்க்கு, மாதவனின் முதல் கேள்வியே மலையாய் தோன்றியது. “பொய்யான எந்த பதிலை உறைத்தாலும், தான் மூக்கை இழக்கும் நிலைவரும் என்பதில் தெலிவாக இருந்த ருத்ரன், அக்கேள்விக்கு பதில் கூறாது நிராகரித்தான்”. மோகத்தை, ஆயுதமாக கொண்டு எப்படியோ தேவர்களை வெற்றிக்கொண்டோம், அதே வழிமுறையை “ஈசனின் பெயர் கொண்டு மாதவனிர்க்கும்”, “மாதவனின் பெயர் கொண்டு ஈசனிர்க்கும்”, செய்வதாகத்தான் என் திட்டமாக இருந்தது, ஆனால், ‘இப்போது, இருவரும் ஒரே இடத்தில் உள்ளனரே என்செய்வது’?....... என்று தனக்குள் தானே பேசிக்கொண்டான்.

“ஏன், இந்த மௌனம்? இருவரையும் ஒரே இடத்தில் கண்டதால் திகைத்தாயோ” என்றார் நாராயனர். இக்கேள்விக்கு “ஆம்” என்றால் உண்மையா? இல்லை “இல்லை” என்று கூறினால் உண்மையா? என்ற குழப்பத்தில் அவனை திகைப்போடு பார்த்த ருத்ரன். மாதவனின் இக்கேள்விக்கும் பதில் கூறாது மௌனம்காத்தான். “எதை பதிலாக கூறுவது? என்ற குழப்பத்தில் இப்படியே மௌனமாக நின்றால், நான் அவனை உதாசீனம் செய்வதாக நினைத்து மாதவன் என்மீது கோபம் கொண்டு மறைந்து விட்டால், பிறகு அவனை எங்கு சென்று தேடிவது?..... என்று அஞ்சிய ருத்ரன், மாதவனின் அடுத்த கேள்விக்கு தவறாது பதில் உறைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டான்”.

‘ருத்ரனின் மன ஊட்டத்தை அறிந்த மாதவன், அவனை சிந்திக்க விடாது, “சிவபக்தன் என்பதால் கண்களை திரந்த நிலையிலேயே, தியானநிலைக்கு சென்றுவிட்டாய் என்று நினைக்கின்றேன்” என்று பரிகாசித்தான். மறுபடியும் ஆம், இல்லை என்னும் பதில்களில் எதைக்கூருவது? என்ற குழப்பத்தில் “தாம் கூறினால் சரியாகத்தான் இருக்கும்” என்று உலரினான் ருத்ரன். “வில்லாலனாக இருந்தாலும், மாதவன் சொல்லாலனும் தான்” என்பதை, தரையில் விழுந்த ருத்ரனின் மூக்கைக்கொண்டு நிருபித்தான். தன்னால் எதையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தோடு, கையிலையில் நுழைந்த ருத்ரனின் ஆனவமும், அவனின் மூக்கோடு சேர்ந்து தரையில் சரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.