(Reading time: 73 - 145 minutes)

ழுதாள்.. நீண்ட நேரம் அழுதாள். விசும்பி விசும்பி அப்படியே உறங்கியும் போனாள். கண் விழித்தவளின் முன் கடிகாரம் ஒன்பது என்று காண்பிக்க படுக்கையை விட்டு எழுந்து குளித்து விட்டு நைட்டிக்கு மாறினாள். மீனா வந்து சாப்பிட அழைக்கவே அமைதியாய் சென்றமர்ந்தாள்.

என்னமா தலை வலி இப்போ எப்படி இருக்கு?

இப்போ கொஞ்சம் பரவா இல்லைப்பா.

டாக்டர்ட வேணும்னா போய்ட்டு வருவோமா

வேணாம்ப்பா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்...என்று கூறியவளின் மனம் இது சரியாகும் விஷயமா? என்று கேள்வி எழுப்பியது. 

இயந்திரமாய் உண்டுவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அன்று மட்டுமில்லை அதன் பின் வந்த நாட்களுமே அவள் இயந்திரத்தை போலவே இயங்கினாள். கல்லூரி பின் கம்ப்யூட்டர் சென்டர்,வீடு இப்படியே நகர்ந்தது.

ரிஷிகாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதை கவுதமும் , வனிதா மஹிமாவும் கண்டு கொண்டிருந்தனர். முகம் வாடி இருந்தவள், கடுமையின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

அவளை பார்க்க எபடியோ இருந்தது. அவளின் இந்த நிலைக்கு காரணம் சாஹித்யன் என்று சொல்லாமல் புரிய அவன் மேல் கோபம் துளிர்த்தது தோழியற்கு.

கல்லூரி படிப்பும், கம்ப்யூடர் கோர்சும் முடிவடைந்தது.

மஹிமா-ரிஷிகா-வனிதாவின் ப்ராஜக்ட் தேர்ந்தெடுக்க பட்டு மூவருக்குமே ஒரே கம்பனியில் பணி நியமனம் கிடைக்க.. ஆனந்தம் கொண்டனர்.

மூன்று மாதங்கள் கடந்திருந்தது.

ரிஷிகாவின் செயல் முறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தோழியரோடு கலகலப்பாள்.வீட்டில் இயல்பாய் இருப்பது போல் நடிப்பாள். ஆனால் தனிமையிலோ நத்தை தன் ஓட்டிற்குள் ஒடுங்குவதை போன்று , தன் உணர்வுகளுக்குள் சுருண்டு கொள்வாள். 

இவளை பற்றிய கவலையோடு ரகுராமன் மீனாவிடம் கேட்கும் போது, 

அவ இப்போ தானே காலேஜ் முடிச்சிருக்கா. எங்க நீங்க கல்யாண பேச்ச எடுத்துருவீங்களோனு அமைதியா போறா.. கொஞ்ச நாள் போகட்டுமே நாமளே என்னனு கேப்போம். 

அவரும் சரியென்று அமைதியாகி விடுவார்.

இதற்கிடையில் ஒரு நாள் கவுதமிடம் இருந்து வனிதாவிற்கு கால் வந்தது.

லோ, 

ஹலோ.. நான் கவுதம் பேசுறேன்.

கவுதம் சார், எப்படி இருக்கீங்க...

மறு முனையில் ஒரு நொடி மௌனம், 

உன் கிட்ட கொஞ்சம் பேசனுமே வனிதா...

பக்கென்றது அவளுக்கு சாஹித்யனை பற்றிய தகவலாய் இருக்குமோ ஒரு முறை ரிஷிகாவை திரும்பி பார்த்தாள், கம்ப்யூட்டரில் தன் பார்வையை பதித்து கொண்டிருந்தாள்.

எதாவது முக்கியமான விஷயமா சார்.

ஆமாம், நேர்ல சொல்றேன். 

ஆபிசில் விடுப்பு சொல்லிவிட்டு போனில் அவன் கூறிய ரெஸ்டாரண்ட்டிற்குள் நுழைந்தாள்.

சாரி சார் வந்து ரொம்ப நேரம் ஆச்சா?

ஒரு நொடி அவளை பார்த்தவன்

இல்லை, 

இப்போ தான் வந்தேன் உட்காரு... தனக்கு எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையை காண்பித்தான்.

வனிதா நீ இப்போ என்னோட ஸ்டூடண்ட் இல்ல... அப்புறம் எதுக்கு இன்னும் சார்னு கூப்டுற.

புரியாமல் பார்த்தாள் ,

ஏதோ பேசனும்னு வர சொன்னீங்களே சார்..

ம்ம் ஆமா... 

வேலைலாம் எப்படி போகுது...

ம்ம்ம் நல்லா போகுது சா...

அவன் பார்த்த பார்வையில் சாரி..என்று உதடு கடித்தாள்.

இதை கேட்கவா அவள் வேலையில் அரை நாள் விடுப்பு எடுத்து வந்தாள். இந்த லட்ஷணத்தில் தேவையே இல்லாமல் எதேதோ நினைத்து பதறி வந்து சேர்ந்தாள்

அப்புறம்...

.அப்புறம்.... வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்க போல

அவன் எங்கு வருகிறான் என்பது புரிவது போல இருந்தது.

ஆமா சார்.

அவளால் அப்படி அழைப்பதை தவிர்க்க முடியவில்லை.

அருகில் இருந்த தண்ணீர் தம்ளரை எடுத்து பருகினாள்.

என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா வனிதா....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.