(Reading time: 73 - 145 minutes)

ண்ணவலைகள் அவனுள் எழ, யாரோ அவனின் சட்டை காலரை பற்றி இழுக்க நிகழ்வுக்கு திரும்பினன்.

வெள்ளை நிற கவுண் அணிந்த குட்டி தேவதை இவனை பார்த்து தன் முத்து பற்கள் தெரிய சிரித்து கொண்டிருந்தது.

அதன் சிரிப்பில் ஈர்க்கப்பட்டான்.

என்ன அங்கிள் யார் கூட கண்ணாமூச்சி விளையாடுறீங்க.?

அவனுக்கும் தோன்றியது ஆம், இதுவும் கண்ணாமூச்சி தான்..

அதன் கன்னங்களை கிள்ளியவன், அதோ என்று ரிஷிகாவை கை காட்டினான்.

அவங்க கண்ணுல படாம தான் நான் மறைந்து கிட்டு இருக்கேன்.

குட்டியோடு சேர்ந்து அவனும் அவளை பார்த்தான்...

கையில் இருந்த சாக்லேட் கவரையே உற்று பார்த்து கொண்டிருந்தாள்.கண்களில் வலியோ?

கவரை கண்டவனின் மூளைக்குள் மின்னல், ஆக என்னை நினைத்துதான் கவலையா?

அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அருகில் நின்று கொண்டிருந்த குழந்தையை உதவியாய் பார்த்தான்.

என்ன அங்கிள்?

ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா குட்டி...

என் பேர் மலர் அங்கிள்...சரி என்ன ஹெல்ப்?

உன் அம்மா கிட்ட போய் நா இங்க தான் அங்கிள் கூட இருக்கேன்னு சொல்லிட்டுவா..என்று கூறி அனுப்பி வைத்தான். 

அவன் சொல்லியபடியே செய்தது. 

அவனின் அந்த செய்கை அந்த தாயுள்ளத்திற்கு பிடித்து விட்டது.

தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சாக்லேட் கவரை எடுத்தான். 

ஹை, சாக்லேட்... அங்கிள் உங்களுக்கு தெரியுமா.? இது என்னோட ஃபேவரைட்... 

கை காலை அசைத்து துள்ளியது.

மெல்ல சிரித்தவன், 

அப்படியா அப்போ இந்தா என்று அதை அவளின் கையில் திணித்தான்... பின் மற்றுமொரு சாக்லேட்டை எடுத்து ரிஷிகாவை நோக்கி அந்த குழந்தையின் காதில் எதோ கிசுகிசுத்தான். 

அதுவும் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்து விட்டு கட்டை விரலை தூக்கி காண்பித்து விட்டு அவளை நோக்கி சென்றது. 

அழகான மழலை... என்று எண்ணி கொண்டான். 

சிறிது நேரம் எதுவும் பேசாமல் தன்னை அந்த தூணிற்குள் ஒளித்து கொண்டான். 

சில நிமிடம் கழித்து எட்டி பார்த்தவனின் விழிகள் பனித்தது. 

குழந்தையை கட்டி தழுவி முகமெங்கும் முத்தம் வைத்து கொண்டிருந்தாள்.

தன் நினைவில் மூழ்கி கொண்டிருந்தவளின் சுடிதார் ஷாலை யாரோ பிடித்து இழுப்பது போல் தோன்றவே திரும்பி பார்த்தாள். 

ஐந்து வயது குழந்தை தன்னை பார்த்து அழகாய் சிரித்து கொண்டிருக்க அதை குனிந்து தூக்கி தன் அருகில் அமர்த்தினாள். ஆசையாய் அதன் கன்னத்தை கிள்ளி தன் இதழில் ஒற்றி கொண்டாள்.

அக்கா, நீங்க கவலையா இருக்கீங்கள்ள ... இதோ இந்த சாக்லேட்டை சாப்டுங்க உங்க கவலை எல்லாம் போய்டும்...

குழந்தையை கடவுளுடன் ஒப்பிடுவது ஏன் என்று அவளுக்கு அப்போது புரிந்தது. 

கடைசியாய் சகி தன்னிடம் ஆசையாய்(?) பேசிய வார்த்தைகளை இந்த பிஞ்சும் கூறுகிறது.. சந்தோசம் பீறிட அதை தூக்கி தன் முத்திரையை பதித்து கொண்டிருந்தாள்.

குழந்தை சொன்னதை சரியாய் செய்து விட்டாள் என்று சகியும் நினைத்து கொண்டான். 

பின் மலரிடம் எதையோ கேட்டவளின் விழிகள் அங்கும் இங்கும் தேட துவங்கியது.

தன்னை தான் கேட்டு தேடுகிறாள் என்று புரிந்தது சகிக்கு.

நீண்ட நாட்களுக்கு பின் அவளின் " அவனுக்கான விழி தேடலில்" மனம் குளிர்ந்தான் சாஹித்யன்.

இது போதும் என்பது போல் தலையை உள் இழுத்து கொண்டான். 

சுற்றும் தேடியவள் மீண்டும் தோற்று போன விழிகளோடு அங்கிருந்து நகர்ந்தாள்.. போகும் முன் மீண்டும் குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைக்க மறக்கவில்லை.

வீட்டிற்குள் நுழைந்த மகளின் முகத்தில் மறையாதிருந்த வேதனையை கவனித்த மீனாவின் மனம் மகளுக்காய் வருந்தியது.

இருந்து இருந்து தலைவலி என்று வந்த மகளிடமா இப்போது கல்யாணத்தை பற்றி பேச வேண்டும் தன் கணவன்... 

காரணம் புரியாமல் கண் கண்டவரை கரித்து கொட்டியது தாய் மனம்.

ஏதும் பேசாமல் தன் அறையுள் சென்று கொண்டாள் ரிஷிகா...

தலையணையை நனைத்து கொண்டிருந்தாள். 

ஏன்? அவன் என்னை பார்க்க வரவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.