(Reading time: 73 - 145 minutes)

டாக்டர்..என்ன சொல்றீங்க எங்க ரிஷிகாவுக்கு ஒன்னும் இல்லையே..?

கடவுள்ட்ட வேண்டிகோங்க... எதுவும் இருக்க கூடாதுனு தான் நானும் வேண்டிக்குவேன். 

பட் சாரிமா... இத சொல்றதுக்கு...

ஏற்கனவே சொன்ன மாதிரி தேவைக்கு அதிகமாகவே வேளை செஞ்சிட்ட மூளை ஒரேயடியாய் ஓய்வெடுத்துட கூடாது. அதான்... கோமா, இன்னக்கி நைட்குள்ள கண் முழிச்சிடாங்கனா பயப்பட ஒன்னுமில்லை. ஆனால் முழிக்கலைனா?..

இல்லை டாக்டர் எங்க ரிஷிகாவுக்கு ஒன்னும் ஆகாது ...என்று வெளியேறினாள்.

நோயின் முதல் மருந்தே நாம் இதில் இருந்து மீண்டுவிடுவோம் என்ற மன வலிமை தான், இது நோயுற்றவருக்கு மட்டும் பொருத்தமல்ல, அவரை சுற்றி உள்ள நலம் விரும்பிகளுக்கும் தான். மஹிமாவிடமும் அத்தகைய மன வலிமை இருந்தது.

ரகுராமனும் மீனாவும் டாக்டர் கூறியதை மஹிமாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள , 

தன்னால் தானே தன் மகளுக்கு இந்த நிலை என்று மீண்டும் சேரில் அமர்ந்து கொண்டார்.

ரிஷிகா வந்துடுமா... அப்பா இனிமே கல்யாணத்த பத்தி பேசவே மாட்டேன்... நீ எங்க பொண்ணா கடைசி வரைக்கும் எங்க கூட நடமாடிட்டு இருந்தா அதுவே போதும்... வந்துடுமா அப்பா பண்ண தப்புக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுமா... ஆனா இது... இந்த தண்டனை வேண்டாம்மா...

மனம் விட்டு புலம்பி கொண்டிருந்தார்..

ஸ்ஸ்ஸ் அப்பா..என்னதிது..? நீங்களே குழந்தை மாதிரி அழலாமா?

ரிஷிகாவுக்கு ஒன்னும் ஆகாது. அவளுக்கு தெரியும்.அவளுக்கு எதாவது ஒன்னுனா அதனால பாதிக்க படுறது அவ மட்டும் இல்லை.. .அவள சுற்றி உள்ள நாமும் தான்னு.. அப்படி இருக்கும் போது நமக்கு இவ்வளோ பெரிய கஷ்டத்தை கண்டிப்பா கொடுக்க மாட்டா... நீங்க அழாம தைரியமா இருங்க... அவரை முடிந்த மட்டும் சமாதானம் படுத்தி விட்டு தனியே போய் அமர்ந்தவளின் விழிகள் அத்தனை நேரம் அடக்கிய அழுகையை வெளிகொணர...

வனிதா ஆதுரமாய் கை பற்றினாள். 

மருந்து வாங்கி கொடுத்து விட்டு வந்த மஹேனும் அவளின் அந்த பக்கம் சென்று அமர்ந்து கொண்டான்.

மஹிமா... எங்களுக்கு தைரியம் சொல்லிட்டு நீயே அழலாமா?

பயமா இருக்குடீ?

ஊசி ஸ்மெல், மருந்துனாலே அலறுவா இப்போ தன்னையே மறந்து போய் அதுலயே அடங்கி இருக்கா..

அவளுக்கென்ன தலையெழுத்தா இப்படில்லம் இருக்கனும்னு..ஏன்? இப்படி ஆகிட்டா...டாக்டர் சொல்றாரு கொஞ்ச நாளாவே அவ எதையெல்லாமோ நினைச்சு தன்னை தானே கஷ்டபடுத்தி இருக்கா...அது என்னனு நம்ம கிட்ட கூட சொல்லலையே வனிதா.. சொல்லி இருந்தா இவள இப்படி கொண்டு வந்து விட்டுருப்போமா?.

ஏன் சொல்லல மஹிமா... அவ தான் சொல்லிருக்காளே.

புரியாமல் விழித்த மஹிமாவிடம் கையில் இருந்த கவரை காண்பித்து தனக்கு தெரிந்த தகவலையும் சொன்னாள்.

எனக்கு தெரிஞ்சி இவளோட கவலை சகி சார் தான்.

கண்ணீரை துடைத்து விட்டவள் திரும்பி மஹேனிடம்

மஹேன், நீ அப்பா அம்மாவ பார்த்துக்கோ நாங்க ஒரு வேலையா வெளிய போய்ட்டு வரோம்.

மஹிமா...

ஸ்ஸ்..வனிதா நீ வா என்று 

அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்.

தலையில் கை வைத்து கவுதமின் முன் அமர்ந்திருந்தான் சகி.

பாவம்டா அவ....

இதை சொன்னது நிச்சயம் கவுதம் இல்லை. சகியின் இந்த வார்த்தை மற்றவனின் நெற்றி பொட்டை சுருங்க வைத்தது.

ரொம்பவே மெலிஞ்சு போயிருக்கா டா...

குரலில் வழிந்த சோகம் நண்பனுக்கு புரிந்திருந்தது.

புயலென உள்ளே புகுந்த மஹிமாவை தொடர்ந்து வந்த வனிதாவையும் பார்த்தவர்கள், 

என்ன ? என்பது போல் தங்களுக்குள் பார்த்து கொண்டனர்.

என்ன ஆச்சு வனிதா...? கவுதம் கேட்டான்.

எதோ கூற வாயெடுத்த வனிதாவின் கை பிடித்து தடுத்த மஹிமா ,

கவுதம் சார்... நான் உங்க ஃப்ரண்ட் கிட்ட கொஞ்சம் பேசனும்.

வார்த்தை கவுதமிடம் என்றாலும் விழிகள் சகியை சுட்டு கொண்டிருந்தன.

என்ன மஹிமா..?? புரியாமல் விழித்து கொண்டே சகி கேட்டு வைக்க

அதற்காகவே காத்திருந்தாற் போல் ,

உங்களுக்கு மனசு என்ன கல்லா...?

இல்ல மனசே இல்லையா?

மஹிமா என்னதிது.?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.