(Reading time: 73 - 145 minutes)

ன்னை பத்தி நிறையவே சொல்லனும் உன் கிட்ட.. என் மனசை பத்தி... என் மனதில் நீ வந்த கதையை பற்றி பேசணும்.

அவளின் விழிகள் நீரை சிந்தியது.

அதை துடைத்தவன், 

எந்த மன கசப்பிற்கும் இடம் கொடுக்க மாட்டேன்..ஏன்னா..? நான்....

" நான் உன்னை காதலிக்கிறேன் ரிஷிகா " 

இப்போது அவள் உடல் தூக்கி போட்டது. பதறி எழுந்த சாஹித்யன்...

ரிஷிகா...ரிஷிகா... அவளின் கன்னம் தொட்டு எழுப்பினான். 

அதே நேரம், அவளிடம் தெரிந்த சிறு அசைவிலேயே மருத்துவரை அழைத்திருந்தாள் நர்ஸ்... ரிஷிகாவின் உடள் அதிர்வுறவும் மருத்துவர் உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.

டாக்டர்... ரிஷிகா.... 

ஈசி ஈசி... நீங்க கொஞ்சம் வெளிய இருங்க... என்றவாறே....சிஸ்டரை அழைத்தார்.

மீண்டும் அதே இடத்தில் தஞ்சம் அடைந்தவன் கண் மூடி கொண்டான்.

புதிதாய் வந்தவனையும்... புதிராய் நடப்பவற்றையும் புரியாமல் பார்த்து கொண்டிருந்த ரகுராமனுக்கு மகளின் மன சிக்கலுக்கான முனை கிடைத்து விட்டதாய் உணர்ந்தார்.

நீண்ட நேர இடைவெளிக்கு பின் இன்முகமாக வெளிப்பட்டார் மருத்துவர்.

அனைவரின் பார்வையும் ஆவலாய் அவர் முன்...

மிஸ்டர்.ரகுராமன் .. உங்க பொண்ணு ஆபத்து கட்டத்த தாண்டிட்டாங்க...என்று கூறவுமே...

அத்தனை நேரமும் அடைபட்டிருந்த அனைவரின் மூச்சு காற்றும் சீரான வேகத்தில் சீறி பாய்ந்தது.

ரொம்ப நன்றி டாக்டர்... அவரின் கை பிடித்து கண்ணீர் சிந்தியவரை தேற்றி

நாங்க எங்க ட்யூட்டிய தான் செஞ்சோம் சார்...அதோட ஸ்லீப்பிங் டேப்லட் கொடுத்து இருக்கோம்.. டூ அவர்ஸ் கழிச்சு கண் முழிச்சுடுவாங்க அப்போ போய் பாருங்க...என்று கூறி நகர்ந்தார்.

ஏனோ அந்த கணம் தான் அனைவரின் மனமும் லேசானதை போன்று உணர்ந்தனர்.

வட்ட வாயிலின் வழியே ரிஷிகாவை பார்த்தவர்களின் மனதில் இப்போது பயம் இல்லை.

சகி... ஒரு கப் டீ சாப்பிடவா..ரொம்பவே சோர்வா தெரியுற...என்று கவுதம் அழைக்க...

ப்ச்...வேண்டாம் டா

மறுத்தவனை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான்.

மஹேன் கவுதமுடன் செல்லும் சகியையே பார்த்து கொண்டிருந்தார் ரகுராமன்.

வனிதாவின் மூலம் விபரம் சேகரித்து வைத்திருந்த மஹிமா... ரகுராமனின் பார்வையை புரிந்தவளாய்...

என்ன அங்கிள் ... சகி சார அப்படி பார்க்குறீங்க

என்னமா?..சிந்தனை கலைந்தவாறு இவளிடம் வினவ..

சின்ன சிரிப்போடு...

சகி சாரயே பாக்குறீங்களேனு கேட்டேன்... என்றாள்

அவளின் கேள்விக்கு பதில் அளிக்காது சுவர் கடிகார மணியை பார்த்தவர்,

அடடா மணி 7.30 ஆய்டுச்சே நேரம் வேற இருட்ட தொடங்கிருச்சேமா வீட்டுல... என்று வருந்த போனவரிடம்...

வீட்டுக்கு போன் போட்டு சொல்லியாச்சு அங்கிள்...அதோட என்னை மஹேனும் வனிதாவ கவுதமும் ட்ராப் பண்றதா சொல்லிட்டாங்க..

அவரின் கவலைக்கு முற்று புள்ளி வைத்தாள். 

ருத்துவமனையின் வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் மார்புக்கு குறுக்காக கை கட்டி கொண்டு அமர்ந்திருந்த சகியின் அருகில் வந்து அமர்ந்தார் ரகுராமன்.

தூரத்தில் இதை கண்ட கவுதம்- மஹிமா- வனிதாவுக்கு

ஏதும் அற்புதம் நிகழ்ந்து சிக்கல் தீர்ந்து விடாதா என்ற எண்ணம். அவர்களை பொறுத்தவரை இங்கு யாரையுமே குறை கூற முடியாதே...ஆகவே அற்புதம் நிகழ்ந்தால் தான் உண்டு. அற்புதம் நிகழுமா? சிக்கில் தீருமா?

அருகில் நிழலாட திரும்பிய சகி, ரகுராமனை கண்டு ஏதும் பேசாமல் பார்வையை திருப்பி கொண்டான். அவன் மனம் ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது.

சிறிது தயக்கதிற்கு பின் ரகுராமன் பேச்சை தொடங்கினார்.

தம்பி...உங்க பேர்?

சகி..சாஹித்யன் கடுப்பாக வெளிவந்தது.

ஓஹ்.. அப்பா, அம்மா, கூட பிறந்தவங்க... விடாமல் தொடர்ந்தார்.

அப்பா இல்லை..அம்மாவும் தம்பியும் தான்...

பட்டு கத்தறித்தான்...

மறக்க வைக்கப்பட வேண்டிய நிகழ்வுகள் தோண்டி எடுக்கப்படுவதாய் உணர்ந்தான்.

இதற்கு மேல் எப்படி பேச்சை தொடர என்று தயங்கி பின் மெதுமெதுவாய்,

தம்பி.. உங்கள எங்கயோ பார்த்த மாதிரி தோணுது...ஆனால் சரியா நியாபகம் வர மாட்டேங்குது... உங்களுக்கு அப்படி எதுவும் தோணுதா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.