(Reading time: 73 - 145 minutes)

வுதம் நீ சும்மா இரு... என்றவன் திரும்பி மஹிமாவை பார்த்தான்.

எனக்கும் மனசு இருக்கு... அதுல மகாராணியா ஒருத்தி உக்காந்து இருக்கா....

அவன் மனம் பதில் கூறியது.

அவ என்ன தப்பு பண்ணினா சார்.

உங்கள காதலிச்சா ... அதுவும் தப்புன்னு சொல்ல முடியாது. அப்படி இருக்க ஏன் சார் அவள் உணர்வுகளோட விளையாடுறீங்க.

மஹிமா...என்ன பேச்சு இது...?

சகி ரிஷிகாவை எந்த அளவு விரும்புகிறான் என்பது தனக்கு மட்டுமே தெரியும். அப்படி இருக்க அவன் உணர்வுகளை மதிக்காதவன் என்ற ரீதியில் இவள் பேசி வைக்கிறாளே என்ற கோபம்.

உணர்வுகளோடு தன் நண்பன் படும் பாடை அவனே அறிவான்.

கவுதம்... உன்ன சும்மா இருன்னு சொன்னேன்ல... 

நீ மட்டும் தான் தோழிக்கு ஏற்று பேச வருவாயா?... உங்கள் நட்புதான் அவ்வளவு ஆழமானதா? ரிஷிகாவிற்கு மஹிமா போல் சாஹித்யனுக்கு கவுதம் நின்றான்...ஆனாலும்

மஹிமாவை பேச விட்டு கேட்டு கொண்டிருந்தான் சாஹித்யன்.

கவுதமை ஒரு பார்வை பார்த்த மஹிமா சகியிடம் திரும்பி,

கவுதம் சார உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?

என்னோட சின்ன வயசுல இருந்தே அவன் எனக்கு நண்பன்மா.. 

ஹ்ம்.. நண்பன் இந்த நண்பன எந்த அளவுக்கு புரிஞ்சி வச்சிருக்கீங்க.. நீங்க?

இந்த உங்க நண்பன் கல்யாணம் பண்ண போறது எங்களோட தோழி வனிதாவைனு உங்களுக்கு தெரியும்.

ஆனால், அது காதல் கல்யாணம்ன்றது உங்களுக்கு தெரியுமா?

என்ன? என்பது போல் சகியும் 

அய்யோ என்ற ரீதியில் கவுதமும் பார்க்க.... வனிதாவின் பார்வையை கணக்கிட முடியவில்லை.

ஆமா , எப்போதுல இருந்துனு எனக்கு தெரியாது. ஆனால் ஒரு நாள் வனிதாவை பார்த்த கவுதம் சாரின் கண்ணுல ஒரு ஈர்ப்பு தெரிஞ்சது. அதே சமயம் வனிதா கிட்ட அப்படி எந்த ஒரு மாறுதலும் தெரியலை.காரணம் அவளுக்கு இந்த காதல் விஷயத்துலலாம் நம்பிக்கை இல்லை.வீட்டுல பார்க்குறவனை தான் காதலிக்கனும் கல்யாணம் செஞ்சிக்கனும்னு முடிவோட இருந்தவ..இது தெரிஞ்ச கவுதம் சார் , வனிதா வீட்டுல கல்யாணம் பண்ண முடிவெடுத்து இருக்காங்கனு தெரிஞ்சதும் அவருக்கு தெரிஞ்ச தரகர்ட்ட வனிதாவோட போட்டோ கொடுத்து தன் வீட்டுல கொடுக்க சொல்லி தன்னோட அப்பா- அம்மாவ வச்சே வனிதாவோட அப்பாட்டயும் பேசி கடைசிய எங்க வனிதாட்டயும் பேசி இப்போ கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திருக்காங்க... இது உங்களுக்கு தெரியுமா?

தெரியாதே...என்றொரு அடி பட்ட பார்வை அவனிடம்.

ஒரு நாள் வனிதா தங்களிடம் வந்து கவுதமை சந்தித்ததையும்... வீட்டினரின் முடிவையும் கூறும் போது தோன்றிய சிறு சந்தேகம்... மற்றொரு நாள் வனிதாவின் வீட்டிற்கு வந்திருந்த தரகரிடம் கை குலுக்கி விடை பெற்று கொண்டிருந்த கவுதமை பார்த்ததும் உறுதியாகி இருந்தது.

எல்லாவற்றையும் சேர்த்து நீண்ட விளக்கமாய் இவள் சொல்லி முடித்து கவுதமை பார்க்க, அவன் பார்வை உனக்கு எப்படி தெரியும்? என்று கண்ணாடியாய் காட்டி கொடுத்தது.

உண்மையில் அவன் அன்று வனிதாவிடம் தன் காதலை சொல்லத்தான் வரவழைத்தான். பின் தன் லீலைகளை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்போடு இருந்தவன் கோடிட்டு கூற தொடங்கும் முன்னரே வனிதா காட்டிய கோபம் அவனை சிந்திக்க வைத்து பின் அவள் வழியிலேயே சென்று விட்டான். ஆனால் இந்த இடைபட்ட நாட்களில் அவனே அவளிடம் இதை பற்றி கூறியிருக்க வேண்டும்.உண்மையில் மறந்து போனான்.எத்தனையோ நேரம் ஏதேதோ பேசியவனுக்கு இதை பேச மறந்து போனது தான் உண்மை.

இப்போது மஹிமா கூறியதும் இவன் பயந்தது. வனிதா என்ன நினைப்பாளோ என்று தானே தவிர இந்த விஷயத்தை மறைக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை.

அவன் கவலையோடு வனிதாவை பார்க்க... 

அவள் விழி நீரை துடைத்து கொண்டிருந்தாள்.

அவசரமாக அவள் அருகில் வந்தவன், 

வனிதா... என்ன மன்னிச்சுடு... நானே உன் கிட்ட இத பத்தி பேசி இருக்கனும். ஆனால் உண்மையிலேயே மறந்துட்டேன்டி... அவன் குரலில் இழைந்த சோகம் அவளை தாக்க

அவனை பார்த்து இயல்பாய் புன்னகைத்து,

விடுங்க கவுதம்... முடிஞ்சத பத்தி பேசி ப்ரயோஜனம் இல்லை.

எனக்கு நம்மளோட கடந்த காலத்த பத்தி கவலை இல்லை. அது போல எதிர் காலத்த பத்தின எதிர்பார்ப்பும் இல்லை.

இதோ இந்த நிமிஷம்... இந்த நொடி ... நான் உங்கள காதலிக்கிறேன் அவ்வளவு தான்.

உணர்ச்சி பெருக்குரலில் அவள் கூற

அவசரமாய் அவள் அருகில் வந்தவன் அவள் கைகளை பற்றி கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.