(Reading time: 22 - 43 minutes)

ராதிகாவின் வீட்டினர் இவர்கள் இருவரிடமும் நன்றாக பேசினார். ராதிகா தன் மகனை பற்றி நிறைய கேட்டுக் கொண்டாள். அவன் படிப்பு, பொழுதுபோக்கு, எல்லாம் தெரிந்து கொண்டாள். பாலாவிடமும் அவனின் நலம், அவன் அம்மாவை பற்றி விசாரித்து எதிலும் குறை வைக்கவில்லை.

இவர்கள் இருவரும் கிளம்பும்போது அவர்களின் மகன்,

“அம்மா... இத்தனை நாட்கள் நாம் பிரிந்து இருந்தது போதும். நீங்களும் எங்களோடு வந்து விடுங்களேன்..” என்று கேட்க,

பாலாவின் எண்ணமும் அதுவே என்றாலும் , அவன் வாய் திறந்து கேட்கவில்லை.

ஆனால் ராதிகாவோ “வேண்டாம்.. அருண்.  நான் இப்படியே இருக்கிறேன். இனிமேல் என்னால் புது இடத்தில எத்தனை தூரம் பொருந்த முடியும் என்று தெரியவில்லை.”

“அம்மா.. அதுவும் உங்கள் வீடு தானே.. இரண்டு நாட்களில் பழகி விடுவீர்கள்.”

“இல்லை பா.. அந்த எண்ணம் எனக்கும் தோன்றவில்லை. அவர்களுக்கும் அதை கொடுக்கும் எண்ணம் இல்லை. அதனால் தான் என்னால் அங்கு பொருந்த முடியாமல் எல்லோரையும் கஷ்டபடுத்தி விட்டேன்.. இனிமேல் மீண்டும் அந்த வாழக்கைகுள் செல்ல விரும்பவில்லை. எனக்கு யாரின் மேலும் பற்று, பாசம் எதுவும் இல்லை. உயிர் இருக்கிறவரை அடுத்தவருக்கு கஷ்டம் கொடுக்காமல் வாழ விரும்புகிறேன்.. அவ்ளோதான்.”

அருண் மீண்டும் ஒருமுறை சொல்லி பார்க்க, இந்த முறை பாலா அவனை தடுத்தான்.

“விட்டு விடு அருண்.. உன் அம்மா இங்கே அவளாக இருக்கிறாள். அங்கே வந்தால் அவளால் பழைய விஷயங்களை மறக்க முடியாமல் மீண்டும் தன் சுயத்தை இழந்து விடுவாள். “ என்று கூறினான்.

“அம்மா.. அப்போ நான் உங்களை அடிக்கடி பார்க்க வரலாமா.?”

“நிச்சயம் வரலாம்.. “

இப்போ பாலா “இதை நான் சொல்ல கூடாது. இத்தனை நாட்கள் தவறியது, இனிமேலாவது சரி செய்ய பார்கிறேன்.. உனக்கு இங்கே ஏதாவது பிரச்சினை என்றால் என்னை தொடர்பு கொள்ளலாம்.. அதற்கு அவசியம் இருக்காது. இருந்தாலும் என் மன திருபதிக்காக சொல்கிறேன்.. செய்வாயா?” என்று வினவ,

“சரி.. என்றாள் ராதிகா.

அவர்கள் சென்ற பின் ராதிகாவின் பெற்றோர் “ராதிகா ... நீ இப்போது உன் புகுந்த வீட்டிற்கு சென்று இருக்கலாமே... உன் மாமியாரும் இல்லை. உனக்கு உன் மகன் சப்போர்ட் இருக்கு.. பிறகு ஏன் போக மறுக்கிறாய்..?”

“ஏன்மா.. நான் இங்கே இருக்கிறது உங்களுக்கு கஷ்டமா இருக்கா?”

“அப்படி இல்லை மா.. எங்களுக்கும் வயசு ஆகுது.. நாளைக்கு எங்களுக்கு முடிவு வந்துட்டா , நீ எப்படிம்மா தனியா இருப்ப..?”

“என்னாலே முடியற வரைக்கும் இப்போ பார்த்துட்டு இருக்கிற வேலை செய்வேன். முடியாதப்பா ... நானே ஒரு முதியோர் இல்லத்துக்கு போய்டுவேன்..”

“உனக்கு உன் குடும்பத்தோடு சேர்ந்து இருக்கிற ஆசை இல்லையா?”

“என்னாலே அது என் குடும்பம்ன்னு உணர முடியல. உங்க மேலே எனக்கு கோபம், வருத்தம் எல்லாம் இருக்கு.. ஆனால் நான் உங்க பொண்ணுன்னு என்னாலே அத பொருட்படுத்தாம இருக்க முடியாது. ஆனால் அங்கே நான் மூணாவது மனுஷி ஏன் இன்னும் சொல்லபோன வேலைக்காரி மாதிரிதான் பீல் பண்ணினேன். இப்போவும் அவர் என்னை மனைவியா பார்த்தாரா தெரியல.. ஒருவேளை சக மனுஷிய பார்த்து இருக்கலாம். அவர்கள் இருவருக்குமே நான் தேவை இல்லை. “

“நீ வேணாம்நு நினைச்சிருந்தா இத்தனை வருஷம் கழிச்சு உன்னை பார்க்க வந்து இருப்பங்களா?”

“இத்தனை வருஷம் கழிச்சு என்னை தேடி வந்து இருக்காங்க என்றால் என் நினைவை ஏற்படுத்தக் கூடிய ஏதோ ஒரு விஷயம் அங்கே அவர்களுக்கு கிடைத்து இருக்கிறது. அவ்ளோதான்.”

“சரி.. அப்படியே இருந்தாலும் உன்னை அழைத்தார்கள் தானே?”

“நான் பழைய ராதிகாவாக இருந்தாலோ அல்லது முற்றிலும் மனநிலை பாதிக்கப்பட்டவளாக இருந்தால் என்னை அழைத்து போக என்னியிருப்பர்களா?”

இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

“அப்போ உன் நிலை இப்படித்தான் இருக்குமா?”

“எனக்கு என்ன குறைச்சல்.? இன்றைக்கு என்னால் யாருக்கும் தொந்தரவு இல்லை. கடவுள் அனுமதிக்கும் காலம் மட்டும் இப்படியே வாழ்ந்து முடித்துவிடுவேன்”

என்று சிரித்தாள் ராதிகா.

ஹாய் friends,

கணவன் மனைவி இருவர் சம்பாதித்தால் வாழ்க்கை தரம் உயரும். பொருளாதாரம் முன்னேற்றம் கிடைக்கும்.. ஆனால் எல்லா பெண்களாலும் அது முடியாது. ஒரு சிலர் இந்த கதை நாயகி ராதிகா மாதிரி சற்று கூச்ச சுபாவமும், பயந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களிடம் மற்ற பெண்களை போல் எதிர்பார்த்து , compare செய்து மட்டம் தட்டுவதால் இருக்கும் அவர்களது கொஞ்ச திறமையும் மழுங்கி போவதுடன், வாழ்க்கையின் பிடிப்பும் போய் விடும். கதை நாயகன் நல்ல மகனாகவும், நல்ல அப்பாவாகவும் இருப்பவன், நல்ல கணவனாக நடந்து கொள்ளாததால் தான் ராதிகா போன்றோரின் வாழ்க்கை அசாதரணமான நிலைக்கு சென்று விடுகிறது.

ராதிகாவின் பெற்றோர் போன்றோர்கள் கொண்டுள்ள தேவை இல்லாத ஈகோவால் , அவளை புரிந்து கொள்ள முடியாத நபர்களிடம் கொண்டு தள்ளி விட்டு, பிறகு கண்ணீர் வடிக்கின்றனர்.

இது பெண்களுக்கு மட்டும் அல்ல .. ஆண்களுக்கும் பொருந்தும். அதனால் ஒருவரின் திறமை என்பது படிப்பிலோ புத்திசாலித்தனத்திலோ இல்லை. அமைதியாக இருந்தாலும் அவர்களையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே இக்கதையின் நோக்கம்.

வழக்கம் போல் உங்கள் கருத்துக்களுக்கு காத்து இருக்கிறேன்.

 

This is entry #89 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - தேவி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.