(Reading time: 12 - 23 minutes)

சொன்னா புரிஞ்சிக தம்பி, அவர் சொல்றது உண்மைதா, நீ என்னை அண்ணனா ஏற்றுக்கலை நாலும், இனி நீ எனக்கு தம்பிதான்” என்ற பல பரிவான வார்த்தைகளை கூறி அவனின் மனதை தேற்றி, உண்மை நிலையை ஏற்க்கச்செய்தான். “உங்க வார்த்தையில் ஏதோ உண்மை இருக்குதுனு எனக்கும் புரியுது, ஆனா……. எதைவெச்சி நான் செத்துடேன்னு சொல்றீங்க”? என்று கேட்டான். “அவங்க உன்னை ஆழமாக வெட்டும் போதுதான நீ எங்க எல்லோரையும் பார்த்த”? என்று கேட்க அவசரமாக “ஆமா, ஆமா” என்றான்.

“எங்களை எப்பொ உன்னால பார்க்க முடிஞ்சதோ அப்பவே நீ செத்துட தம்பி” என்றான். “என்ன”?...... என்று திகைத்தான். “ஏன்னா நாங்க எல்லோருமே உன்னை மாதிரியே ஏதோ ஒரு காரணத்துக்காக முன்னாடியே வெட்டப்பட்டு செத்துப்போனவுங்க” என்றான். தான் வெட்டப்பட்டதை குறித்து இதுவரை அவன் பேசும்போதெல்லாம் மகிழ்சி பாவத்தை வார்த்தைகளில் வெளிகாட்டியவன், இன்று முதல்முறையாய் தான் இறந்ததை கூறும் போது துக்கத்தை தன்வார்த்தைகளில் தெறிவித்ததை கண்டு கூட்டத்து தலைவர், தனது இத்தனை வருட அறியாமை தவறை நினைத்து வறுந்தினார்.

“அப்பொ, நம்ம எல்லோரும் பேய் ஆயிட்டமா”? என்று அதிசயித்தான். “ஆமா, தம்பி” என்று கூற “அது எப்படி சாத்தியம்”? “மனிதர்கள் செத்துட்டாதா ஆவியா மாறி முரங்கை மரம், ஆலமரம், வேப்ப மரம், மாமரம், புளிய மரம்னு, மரத்துக்கு மரம் ஆவியா சுத்துவாங்கனு எனக்கு தெறியும். ஏன்னா? என்மேலயே இரண்டு ஆவிகள் இருந்தாங்க. ஆனா மரம் கூட செத்துட்டா ஆவியாயிடும்னு எனக்கு இன்னைக்குதான் தெறியும்” என்று தனது நிலையை அதிசயமாய் எண்ணி பேசினான்.

“இறைவன் பூமிமேல விதிச்ச காலம் முடியும்வரை எந்த உயிரினமா இருந்தாலுல் மேல்லோகம் போக முடியாது, அந்த நியதிக்கு மரங்களான நாமும் கட்டுபட்டவுங்கதா” என்றார் தலைவர். “ஓஓஓஓஓ அதனாலதா எனக்கு இப்பொ வலிக்களையா”? என்று விளையாட்டு பிள்ளையாய் வினவினான். அதுவரை அவனின் அழுகைகண்டு சோகத்தில் மூழ்கி இருந்த கூட்டத்து மரங்கள் அனைவரும் அவன் வார்த்தையை கேட்டு சிரித்தனர். “இதனாலதா தம்பி நீ கத்தினபோது நாங்கள் யாரும் உன்னை காப்பாத்த வரலை, இப்பொ நம்மால எந்த பொருளையும் தொடமுடியாது” என்றான்.

“ஓ அப்படியா அண்ணா”??? “நீங்க ரொம்ப நல்லவரா இருகீங்களே, உங்களை ஏன் வெட்டனாங்க? அப்பொ நீங்களும் என்ன மாதிரியே கத்தனீங்களா? உங்களுக்கும் வலிச்சதா”? என்று கேள்விமழை பொழிந்தான். “நான் ஒரு கோவிலில் பூஜை மரமா இருந்த, எனக்கு பக்கத்துல ஒரு சின்ன சன்னிதி இருந்துச்சு அதை விரிவு படுத்தி கட்ட என்னை வெட்னாங்க, நல்ல எண்ணத்துக்காக வெட்னதால அதை நான் என்னோட வரமாகதா பார்த்த, ஆனா காரணமே இல்லாம உன்னை வெட்டின போதுதா மனிதர்கள் மரங்களை மதிக்கரதே இல்லைனு புரியுது” என்று தன் வாழ்க்கை வரலாரை கூறியதோடு, மனிதர்களின் மேல் தான் கொண்ட வெருப்பை வார்த்தைகளில் வெளிக்காட்டினான்.

“சரி, சரி” என்றவன் தலைவரை கண்டவனாய் திரும்பி, “நீங்கதா பெரிய ஆலமரமா இருகீங்களே, உங்க மேல எத்தனயோ பறவைகள், பாம்புகள், பூச்சுகள் இருந்திருக்குமே, ஏ மனிதர்கள் கூட உங்க நிழல்ல நிக்கிறது, கூடி பேசுரது, தூங்குரது, சின்ன பசங்க உங்க விழுதபுடிச்சி ஊஞ்சல் ஆடுவதுனு, நீங்க அவங்களுக்கும் உதவியாதான இருந்திருப்பீங்க, அப்படி இருந்தும் உங்களையுமா வெட்டிட்டாங்க”? என்றான். சோகத்தோடு “ஆமாபா, நான் ஒரு நல்ல தாய்போலதா இருந்த மனிதர்களுக்கு, மற்ற உயிரினங்களுக்கு, அப்பொ ஒருநாள் சாலை விரிவாக்க நடவடிக்கைனு அரசாங்கத்துல இருந்து கடிதம் வந்தது அதனால கிராம பஞ்சாயத்து மக்கள் எல்லோரும் என் நிழல்ல கூடிபேசி, அடுத்த இரண்டு நாட்கள்ள என்ன வெட்டிட்டாங்க”.

“அப்பொ, நான் அதை மனித இனத்தோட வலர்ச்சிக்கான வழினு நெனச்சி சந்தோஷம ஏத்துகிட்ட. ஆனா உன் காரணமில்லா மரணத்த பாத்து இப்பொதான் நான் ஏமாந்து போனதே எனக்கு தெறியுது” என்றார். “ஏமாந்துடீங்களா எப்புடி”? என்றான். “என்ன வெட்டி எத்தனையோ வருஷங்கள் ஆச்சு, ஆனா இதுவரைக்கும் என்னை வெட்டிய காரணம் நிறைவேறவே இல்ல. இதுவரைக்கும் மனிதர்களை நம்பினதால, ஏதோ ஒரு சரியான காரணத்தாலதான் தாமதம், அரசியல் கட்சியின் மாற்றம்னு, அந்த ஊர்மக்கள் பேசிகிட்டதை நானும் உண்மைனு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா, இப்பதான அவங்கள முழுச புரியுது” என்றார்.

“உங்களுக்கு ஏதோ புரியுதுனு எனக்கு தெரியுது, ஆனா எனக்கு புரியல”! என்று அசடு வடியும் சிரிப்போடு கூறினான். அவனின் சிறுவயதை வெளிகாட்டும் பேச்சு, தலைவரின் மனதில் மேலும் பாதிப்பை ஏர்படுத்தியதை வெளிகாட்டியது அவரின் அமைதியற்ற பேச்சு. “மனித இனம், இறைவனின் படைப்பில் தமது இனமே தலைச்சிறந்தது என்ற எண்ணத்தில் வாழ்வதை நாமறிவோம். ஆனால் மனிதர்கள் அவர்களின் இனத்தினருக்கே உண்மையாக இருப்பது இல்லை என்பதே நிஜம். அதற்கு சான்றாக அமைந்திருப்பதே அவர்களின் பணத்தாசை, பொருலாசை, லஞ்சம், ஊழல், அரசியல் போட்டி, சாதி-மத வெரி, பெண் இனத்தின் மீதான தாழ்வெண்ணம், தவறான நாடு மற்றும் மொழி பற்று, நிறவேற்றுமை என பல செயல்களை கூறலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.