(Reading time: 12 - 23 minutes)

வற்றுள் ஏதோ ஒன்றுதான் என்னை வெட்டிய இடத்தில், ‘அரசின் சாலை விறிவாக்க திட்டத்தில்’ இதுவரை எவ்வித வேலையும் நிகழ்ந்தேராததற்கு காரணம் என்று இப்போதுதான் புரிந்தது” என்றார். “இத்தகைய தீய செயல்களை தமது திறமை என்று தவறாக நினைத்திருக்கும் மனிதர்கள், அவர்களின் இனத்தை அழிப்பதோடு அல்லாது உலகில் நிறைந்திருக்கும் இயற்கையின் படைப்புகளையும் அழித்துக் கொண்டுள்ளனர். அவற்றுள் சில ஆண்டுகளிளேயே அதிவேகமாக பாதிப்படைந்து அழிந்து வருவது மரங்களும், செடிகொடிகளும்.

இந்த பூமியின் மீது தாவர இனம் முழுவதுமாக அழியும் நாள்தான், அவர்களின் நிம்மதியான வாழ்விற்கு கடைசிநாள், அழிவின் விழும்பில் நின்றிருக்கும் மனித இனத்தின் சர்வ நாசத்திர்க்கான துவக்க நாள் என்பதை கூட உணரமுடியாது, ஆனவத்தின் வசப்பட்டு குறுட்டு வாழ்வை வாழ்கின்றனர்” என்ற வார்தைகளோடு சேர்த்து தனது கோபத்தையும் கொட்டினார் தலைவர். “அவர்களின் இந்த அறியாமையை உணர்ந்தே, இத்தகைய நிலையை மனித இனம் என்றும் அடைந்துவிடக்கூடாது, என்ற என்னத்தோடு அவற்களின் நலனில் அக்கரை கொண்டு அமைதியாக இருந்தேன்”, என்றவாரு அவரின் இத்தனை வருட பொருமையின் காரணத்தை கூறினார்.

“இனியும் நாம் மௌனம் காப்பது, அவர்களை போல் நாமும் நம் இனத்திர்க்கு செய்யும் துரோகம்”, என்று கூறியவாறு மற்ற மரங்களை கண்டார் தலைவர். அவரின் கூற்றுகளே மற்ற மரங்களின் மனதிலும் எழுந்திருந்ததை வெளிகாட்டியது அவைகளின், “ஆமா, ஆமா” என்ற கோஷம். தலைவரின் சொல்லிலிருந்த உண்மையை உணர்ந்த செடிகொடிகள், மரங்கள் முதல் புல்பூண்டு வரை உலகிலிருந்த அனைத்து தாவர இனமும், தமது உயிர்த்துரந்து அழிந்தது இரண்டே நாட்களில்.

மது தர்ம வாழ்வினை சாட்சியாக்கி, தாவர இனத்தவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு அண்டத்தை துரந்தார் தலைவர். அவர்களின் அந்த தீர்க முடிவின் விளைவாக அமைந்தது அண்டத்து தாவர இனத்தின் முழுஅழிவு. மனிதனின் வாழ்வில் எதைகொண்டும் மாற்ற இயலாத, இன்றியமையாத முக்கிய இடம் பிடித்திருக்கும் தாவர இனத்தை நீங்கி அவனால் பூமியின்மேல் நீண்ட காலம் அமைதியாக வாழ இயலாது என்பதை அவைகளின் மறைவு சிலதினங்களிலேயே நிரூபித்தது. ஆணவத்திலும், அலட்சியத்திலும் மரங்களையும், பயிர், செடி-கொடிகளையும் பராமரிக்க தவறியதை உணர்ந்தான் மனிதன்.

நேராகவும், மறைமுகமாகவும், மனித இனத்திற்கும், விலங்கினத்திற்கும், உணவாக அமைவதே தாவர இனம்தான் என்பதை உணர்த்திகாட்டியது அவைகளின் பிரிவு. அதன் அடுத்த கட்ட விளைவாக அமைந்தது உயிரினங்களின் இறப்பு. எதையும் தன்னால் சாதிக்க இயலும் என்ற கற்பனையில் வாழ்ந்த மனிதனிற்கு, கனவு வாழ்வாக மாறியது பசுமைநிறைந்த பூமி. தமது தவறுகளை உணர்ந்து வருந்த துவங்கினர் மனிதர்கள். “பார்வையை இழந்த பிறகு சூரிய நமஸ்காரம் வீண்”, என்னும் கூற்றின் சரியான சான்றாக அமைந்தது அவர்களின் வீணான வருத்தம்.

கோபத்தில் எடுக்கும் எந்தவிதமான முடிவும், சரியான விளைவையோ, நிலையான நிரந்தர முடிவாகவோ அமைவதில்லை என்பதை காட்டியது, தலைவரின் மனதில் எழுந்த மனிதர்களின் நினைவு. அவரின் மனதை இத்தனைநாட்களாய் வியாபித்திருந்த, மனிதர்களின் மீதான கோபம், “விமலனின் காலை கதிர்வீச்சில் சரியும் பனியாய் ஆனது”. பல நாட்கள் கடந்திருந்த அன்று மனிதா உன் “நலம் நலமறிய ஆவல்" என்ற எண்ணத்தோடு பூமிக்கு திரும்பினார் தலைவர்.

தனது வயிற்று பசிபோக்க உயிர்பிரிந்த கூடுகளை தேடித்தின்னும் காட்டை இழந்த வாசியாகி இருந்தான் மனிதன். அவன் எதை உற்பத்தி செய்ய வேண்டுமானாலும் அதற்கு மூலாதாரமாக அமைவது தாவர இனம் என்பதால், உடையின் உற்பத்தியும் அழிந்து உடல் மறைக்க இலை, தழைகளும் இல்லாத ஆதிவாசியாகி இருந்தான். மரங்களின் மறைவாலும் மழையின் பிரிவாலும் கொதித்தெழுந்த பூமி, பரிசாய் தந்தது பூகம்பம். அவற்றில் சாம்பல் மேடுகளாய் ஆனது மனிதனின் கட்டிடங்களும், இத்தனை வருட நவீன, நாகரீக வளர்ச்சியின் சாதனை வாழ்வும்.

உண்ண உணவின்றியும், உடுத்த உடையின்றியும், ஒதுங்க மரநிழலுமின்றி தவிக்கும் மனித இனத்தின் சர்வ நாசத்தைகண்டு திகைத்தார் தலைவர். மற்ற அனைத்து உயிரினங்களின் முழுஅழிவை போல், இன்னும் சில நாட்களில் எஞ்சிய சில மனிதர்களையும் இழந்துவிடும் என்ற நிலையையெட்டி இருந்தது அண்டம். தவறினை உணர்ந்த உண்மையான மன்னிப்பு, தவத்திற்கும், தாயிற்கும் சமம், அவற்றால் நல்லாசியையும், சுயனலமற்ற ஆக்கத்தையும் மட்டுமே தரயியலும், என்பதை உணர்த்தும் வகையில், பேரழிவில் சிக்கியிருந்த மனிதனிற்கு கிடைத்தது ஒரு தாவர விதை.

அதை மண்ணில் புதைத்து நீரிட வழியின்றி தன் தவறுகளை நினைத்து அழுதான் மனிதன். அதை கண்ட தலைவரின் மனதில் பொங்கியது தாய்மை குணம், மீண்டும் மண்ணில் உயிர்த்தெழுந்தது தாவர விதை. மனிதனின் கண்ணீரில் முலைத்தது ஒருவிதை, இதுவே அவனியின் மேல் ஆனந்தவாழ்விற்கான கதை”……….. என்ற வாக்கியத்தை உரக்க ஒலித்துக்கொண்டிருந்த அதே சமயம், விழுந்தது ஒருதிரை.

பலத்த கரகோஷத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது முதலாமாண்டு மாணவர்களின் பசுமையை காக்கும் படைப்பான, “மனிதா உன் நலம் நலமறிய ஆவல்” என்னும் நாடகம் முதல் பரிசைத்தட்டி செல்வதாக.

இந்த கதையிலோ, கருத்திலோ, வாக்கியத்திலோ, வார்த்தையிலோ, எழுத்துப்பிழையோ இருந்தால் என்னை மன்னியுங்கள்.

This is entry #112 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - ஷிவானி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.