(Reading time: 17 - 34 minutes)

கம்பீரமான ஆண் குழந்தையாவதும் பூ போன்ற பெண் அவனை அன்பில் கட்டி ஆட்சி செய்வதும் இல்லறத்தின் மிகப் பெரிய வெற்றி..

கார்த்திக் லேப்டாப்பில் மூழ்கிப் போக சிறிது நேரத்தில் சஹானா அவனருகில் வந்து அமர்ந்தாள்..சிவா எதுக்கு கால் பண்ணிருந்தான் மாமா..

ஆங்..இதோ கொஞ்சம் டீடெய்ல்ஸ் கேட்டுருந்தேன்டா அதான் ஆந்த அருணை பத்தி அதை அனுப்பிருக்காரு இதெல்லாம் பாத்தாலே தலைசுத்துது..எதை எங்கிருந்து ஆரம்பிக்குறதுநு தெரில..

ஏன் மாமா நீ இவ்ளோ கஷ்டப்படுற??

என்ன சஹி சொல்ற??

இல்ல இவ்ளோதூரம் உன்னை கொண்டுவந்து விட்ட தேவிகா இதுக்கும் உனக்கு வழி வைக்காமயா போய்ருப்பா???

சஹி???

இல்ல மாமா நீ சொன்னதெல்லாம் வச்சு யோசிச்சா எனக்கு தோணிச்சு வேற ஒண்ணுமில்ல..

அன்று சிவாவும் இதையேதான் கூறினான் இன்று சஹியும் கூறுவதைப் பார்த்தால்??என சிந்தனை வேகமாய் பறக்க அதற்கு தடை போடுவதாய் சஹானா பேச்சை தொடர்ந்தாள்..

சரி அதவிடு மாமா நீ மொதல்ல எல்லாருக்கும் கான்ப்ரெண்ஸ் கால் போடுறியா நமக்காக எவ்ளோ பண்ணிருக்காங்க முதல்ல நா தேங்க்ஸ் சொல்லனும் ப்ளீஸ்..

மேடம் பேச்சுக்கு அப்பீல் ஏது பண்ணிட்டா போச்சு என சிவா ஷரவந்தி ஷரவனுக்கு அழைக்க அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு டேபிளில் வைத்தான்..

எடுத்தவுடன் ஷரவ் அவசரமாய் அண்ணா எப்படியிருக்கீங்க அண்ணி நல்லாயிருக்காங்கல..ஒண்ணும் ப்ரச்சனைலா இல்லையே..

ஹலோ ஹலோ மேடம் கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோங்க..நாங்க நல்லாயிருக்கோம் உங்க அண்ணா இருக்கும்போது எனக்கு எதாவது நடந்துடுமா என்ன???

அண்ணி நீங்களா சாரி நா எதார்த்தமா கேட்டேன்..

ஷரவ் ஐ அம் வெரி லக்கி டு ஹாவ் பீபுள் லைக் யூ..உங்க மூணு பேருக்கும் தேங்க்ஸ் சொல்றதுக்காக தான் கால் பண்ணேன் எனக்காக இவ்ளோ அக்கறையெடுத்து கார்த்திக்கு ஹெல்ப் பண்ணி ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கைஸ்..

சஹானா என்ன பேசுற நீ??-சிவா..

தேவிகாவை பத்தி பேசுறேன்டா..கார்த்திக் எல்லாத்தையும் சொல்லிட்டாரு..நிஜமா நீதான் ரொம்ப சப்போர்ட்டா இருந்துருக்க தேங்க்ஸ் சிவா..

சஹானாம்மா என்னடா பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு உனக்காக பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன்..நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாயிருக்கனும் அதான் எங்களுக்கு வேணும்..

கார்த்திக் கைகளை கட்டியவாறு பார்வையாளனாய் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான்..சில நிமிட உரையாடலுக்குப் பின் சிவா கார்த்திக்கை அழைக்க.சொல்லுங்க சிவா..

என்னத்த சொல்ல சஹானாகிட்ட சரண்டர் ஆய்டுவீங்கநு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கிரம் எதிர்பாக்கல கார்த்திக்..

என்ன பண்றது சிவா புருஷ லட்சணம்ங்கிறது இதுதான்நு தெரிஞ்சுடுச்சு சரி லேட் பண்ண வேண்டாமேநு சீக்கிரமே சரண்டர் ஆய்ட்டேன்..

அதுவும் கரெக்ட் தான் கார்த்திக்..பட் ஜோக்ஸ் அப்பார்ட் நீங்க இத சஹானாட்ட சொல்லுவீங்கநு நாங்க எதிர்பாக்கவேயில்ல அதைவிட பெரிய ஷாக் சஹானா இதை இவ்ளோ ஈசியா எடுத்துகிட்டது..ரியலி நீங்க ரெண்டு பேரும் மேட் பார் ஈச் அதர் தான்..ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு..ஹாப்பி ஹாலிடேஸ் என்ஜாய் பை..

அதன்பின் மணி கௌரியை பார்த்து பேசி காயத்ரிக்கு அழைத்து நன்றி கூறியென அன்றைய நாள் கரைய. இரவு உணவை எடுத்துக் கொண்டு இருவருமாய் மொட்டை மாடிக்குச் சென்றனர்..இருவரும் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட சாப்பிட்டு முடித்தவன் சஹானா மடியில் படுத்துக் கொண்டான்..ஆதரவாய் அவன் தலைமுடி  கோத வார்த்தைகள் பரிமாறாமல் காதல் விழி வழியே இருவரையும் இணைத்தது..

ஏன் சஹி எதுவும் பேசமாட்ற???

இவ்ளோ நேரம் சத்தமேயில்லாம பேசிட்டுதான இருக்கோம் மாமா என்றவள் கண்சிமிட்டி சிரிக்க,அவள் இதழோரத்தை விரலால் தட்டி சிரித்தான்..

ஏன் சஹி ரொம்ப நாளா கேக்கனும்னு நினைச்சுருக்கேன்..நீ இன்டிபெண்டட்டா வளர்ந்தவ உனக்கு ஜாய்ன்ட் பேமிலி செட் ஆகும்நு எப்படி நினைச்ச??

நீ சொன்னதுலயே பதில் இருக்கே மாமா..தனியாவே இருந்துட்டேன் கல்யாணத்துக்கப்பறமும் தனிக்குடித்தனம் போய்ட்டு ஹஸ்பெண்ட் ஆபீஸ் போனப்பறம் விட்டத்தை பாத்துட்டு உக்காந்துருக்க முடியுமா சொல்லு..ஒரு வேளை அரேண்ஜ்ட் மேரேஜா இருந்திருந்தாகூட மாமியார் மாமனாரோட செட் ஆகாம போய்ருக்கோமோ என்னவோ பட் ஸ்வீட்டியும் அங்கிளும் சான்சேயில்ல..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.