(Reading time: 17 - 33 minutes)

19. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

ரு மெல்லிய புன்னைகையுடன் பேச ஆரம்பித்தான் இந்தர். “முதல் முதலா நான், உன்னோட குரலை தான் கேட்டேன் டா. அது தமிழாக இருக்கவும், நின்று கவனித்தேன். உனக்கே தெரியும், சுவிஸில் பல ஐரோப்பிய மொழிகளுக்கு நடுவே, நமது தாய் மொழி கேட்டால் ஒரு சுகம் தானே. முதலில் உன் குரல் என்னை வசிகரித்தது, அடுத்து நம் மொழி நம்மை இணைத்து. பிறகு உனது உயர்ந்த எண்ணங்கள், என்னை உன் முகம் பார்க்காமலே உன் மேல் மரியாதை கொள்ள வைத்தது டா........அந்த மரியாதை தான் உன் மேல் காதல் கொள்ளவும் வைத்தது.” என இந்தர் கூறிய பொழுது, எதை பற்றி கூறுகிறான் என்று பூஜா அவன் முகத்தை பார்த்தாள்..............

உன் முகம் பார்க்காமலே வந்த காதல் அது. அங்கிருந்த ஒரு உணவு விடுதியில் , நீ உன் தோழிகளுடன் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தாய். அதில் நான் கேட்டது.......

 “நீ ஒரு நாள் முதல்வர் ஆனால் என்ன பண்ணுவ? என்று ஸ்ருதி கேட்க........

“சன் டே , காலையில் எந்த அம்மாவும் பிள்ளைகளை எழுப்ப கூடாதுன்னு சட்டம் போடுவேன்” என ஹெலனா கூறினாள். அவள் கவலை அவளுக்கு ஞாயிறு காலை அவளது அம்மா சர்ச்சுக்கு போக சீக்கிரமே எழுப்பி விடுவார். “ நீ என்ன செய்வ” என்று ஸ்ருதியை திருப்பி கேட்டாள் ஹெலனா.

“பதினாறு  முதல் இருபத்திரண்டு வயது வரை உள்ள பெண்களுக்கு அரசாங்கமே இலவசமாக மேக்கப் ஐட்டம்கள் கொடுக்க வேண்டும் என்று சொல்வேன்.” என ஸ்ருதி பதில் அளித்து விட்டு இருவரும் பூஜாவை பார்த்தனர்.

அதற்கு பூஜாவும், “நான் ஒரு நாள் முதல்வர் ஆனா, இறந்த அனைவரின் கண்களையும் தானமாக கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடுவேன்.” என்று கூறிய போது மற்ற இருவருமே ஒரு வினாடி அசந்து போய், மறு வினாடி கை தட்டி பாராட்டினர்.

“அதை கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் கை தட்ட தோன்றியது டா”....... உடனே அந்த பக்கம் நடப்பது போன்று சென்று, நீ யார் என பார்த்தேன். மற்ற இருவரும் கை தட்டிக் கொண்டிருக்க, நீ தலை நிமிர்வோடு அதை அங்கீகரித்து கொண்டிருந்தாய். உன்னை பார்த்த அந்த வினாடி என் மனதிற்குள் ஓடிய பாடல் வரிகள் இது தான்.

பார்த்த முதல் நாளே, உன்னை பார்த்த முதல் நாளே

காட்சி பிழை போலே உணர்ந்தேன் காட்சி பிழை போலே

என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்

என்றும் மறையாதே........

அப்பொழுதே உன் முகம், என் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து விட்டது.” என்று இந்தர் கூறிய பொழுது பூஜாவிர்க்கும் அந்த உணவு விடுதி ஞாபகம் வந்தது.

வார இறுதி நாட்களில் அந்த உணவு விடுதிக்கு சென்று உணவு அருந்தியது மட்டும் அல்லாது, அந்த உணவு விடுதியின் அமைப்பு பூஜாவுக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.

சுவிசிலுள்ள குளுருக்கு, ஹீட்டர் பொருத்தப்பட்டு கண்ணாடி கதவுகளுக்குள், சாப்பிடும் இடம் இருந்தாலும், வெளியே சோபா போடப்பட்டு, அங்கு அமர்ந்து பார்த்தாலே, அல்ப்ஸ் மலை அழகை கண்டு களிக்கும் படியாகவும், பக்கத்தில் வெந்நீர் நிரம்பிய ஜக்குசி தொட்டியும் அமைந்து, அம்சமாக இருக்கும், அந்த இடமே, மன கண் முன் வந்து போனது பூஜாவிற்கு.

அதற்கு பின்பும், அடிக்கடி உன்னை நமது பல்கலைகழக, புல் வெளிகளிலும், நூலகத்திலும் பார்த்திருந்தேன். உன்னோடு பேச சிலமுறை முயன்றேன். ஆனால் எனது,வியாபாரத்தில்  ஜெயிக்க வேண்டும் என்ற எனது லட்சியம் இதனால் தடை பட கூடாதே என்று விலகியும் சென்றிருக்கிறேன்.

அன்று நான் Rehine Falls ல் உன்னை சந்தித்தது கூட, நீ அங்கு செல்கிறாய் என்று தெரிந்து தான் வந்தேன். கொஞ்ச தூரத்தில் இருந்து உன்னை பார்த்து கொண்டு தான் இருந்தேன். உன்னையே பார்த்து கொண்டு இருந்ததில் உன்னுடைய தோழிகள் உன்னை விட்டு சென்றதை நானும் கவனிக்கவில்லை தான்.

அதன் பின் நீ அவர்களை தேடியது பார்த்து மகிழத் தான் செய்தேன். கடவுள் உன்னை என்னுடன் சேர்க்க தான் நினைக்கிறார் என்று அப்பொழுது புரிந்தது எனக்கு. அதனால் கடவுளின் நினைப்பை மறுக்காமல், உனக்கு உதவி செய்ய, உன் முன்னால், காரை எடுத்து வந்தேன்.

உன் கூடவே எப்பொழுதும் இருக்கனும்ன்னு தோணும். அதனால் உன்னுடன் தோழமையாகவே பழகினேன். அந்த நேரத்தில் உன் மனதில் எந்த ஆசையையும் வளர்த்து விட கூடாது என்பதில் முழு ஜாக்கிரதையாகத் தான் இருந்தேன்.

அன்று பட்டமளிப்பு விழாவில் நடந்த குளறுபாடுகளால், உன்னை வீட்டில் விட்டு கிளம்ப தான் எண்ணினேன். ஆனால் நீ மயக்கத்தில் “ஜித்து பயமா இருக்கு போகாதிங்கன்னு, நீ  சொன்னதை கேட்ட பின் என்னால் எப்படி போயிருக்க முடியும்டா? அதனால் தான் அங்கு தங்கினேன். ஆனால் அதன் பின் நடந்ததற்கு நான் பொறுப்பல்ல.

சரி உன் அழுகை நின்றபின் வந்து உன்னை சமாதான படுத்தலாம் என்று கிளம்பி சென்றால், சித்தப்பா பிசினஸ் பற்றி பேசி, இந்த வயதில், முதலில், சாதித்து காட்டு என்று கூறினார். அதில் கொஞ்சம் என் மதி சற்று திசை திரும்பியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.