(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 14 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

ட்சணா சுப்ரியாவின் கடைசி அத்தியாயத்தை ஆர்வமாய் படிக்கத் துவங்கினாள்.

எல்லாரும் பேசிக்கொண்டபடி டாக்டரின் ஒப்புதலோடு, மாயாவின் ஐாகையை சென்னைக்கு கமலின் வீட்டிற்கு மாற்றியாகிவிட்டது. விபத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சியினால் தான் இந்த நிலைமை ! மூளை செயல்பட்டாலும் ஏதோ ஒரு காரணத்தினால் அவங்களால தன்னோட உடல் இயக்கத்தை தொடங்க முடியலை, இந்த நிலைமை கண்டிப்பா மாறும் மருத்துவத்தையும் தாண்டி மனரீதியான உணர்வுகள் எத்தனையோ நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கு ! 

அதனால நீங்க உங்க கூட அவங்களை கூட்டிப்போகணுமின்னு எடுத்த முடிவு நல்லதுதான்.உங்களுடைய அருகாமை அவங்களுக்கு ஒரு மாற்றத்தைத் தர வாய்ப்பிருக்கிறது. டாக்டரின் அறிவுரைப்படி சென்னைக்கு அழைத்து வந்து விட்டாலும் அந்தப் பெண்ணிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை, ஆனால் கமல் மட்டும் அந்த நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து கொண்டு இருந்தான். 

மாயா மாயா என்று அவளின் கட்டிலுக்கு அருகிலேயே அமர்ந்து இருந்தான். இந்த உலகமே அவளுக்காகத்தான் சிருஷ்டிக்கப்பட்டது என்பதைப் போல் அவனின் சிந்தனையில் மாயாவைத் தவிர வேறு எந்த நினைப்பும் இல்லை. 

லட்சணாவும் கூடவே இருந்து அவளைப் பார்த்துக் கொள்வதால் அவர்களைப் பற்றிய கவலையை விட்டு அடுத்த முயற்சியில் இறங்கிவிட்டார்கள் அசோக்கும் வீராவும்....! சற்றே ஓய்வு நேரத்தில்தான் சுப்ரியாவின் டைரியைப் புரட்ட முடிந்தது லட்சனாவால்!

னிதர்களில் தான் எத்தனை மாற்றங்கள் எங்கோ ஒரு மூலையில் கிடந்த என்னையும், என் கருப்பையையும், உயிர் கொடுக்க வைத்து இந்த ஒன்பது மாதங்களில் அவர்கள் இருவரும் என்னை உள்ளங்கையில வைத்து தாங்காத குறைதான். பெண் எதையும் விட்டுத்தருவாள் ஆனால் தன் கணவனை இன்னொருத்திக்கு அதையும் எனக்காக விட்டுத்தந்த கல்பனா, இந்த ஒன்பது மாத வாழ்க்கை வெறும் நாட்களில்லை தவம். என் வயிற்றுக்குள் நிகழும் அந்தக் குட்டி குட்டி மாற்றங்கள் இலேசாக கூசும் தருணங்கள், வயிற்றுக்குள் இருந்து உதைக்கும் அந்தப் பிஞ்சுப் பாதங்களை நான் எப்போது பார்க்கப்போகிறேன் என்று துடித்துக் கொண்டு இருக்கிறேன். 

ஆனால் இந்த சில நாட்களாக ரவியும் கல்பனாவும் என்னை தனித்து ஒதுக்கிவிட்டு, தனித்தனியே பேசிக்கொள்கிறார்கள். எத்தனையோ தவறுகளில் தைரியம் தந்த மனம் இன்று பயந்து ஒடுங்கிக்கொண்டு இருக்கிறது. கர்ப்ப காலம் நெருங்க நெருங்க மனசுக்கு புரியாத பயமும் பதட்டமும் வருமோ ஒருவேளை அதுவாகத்தான் இருக்கும். நானே என் மனதைத் தேற்றிக் கொண்டேன். இதென்ன சுரீர் என்று ஒரு வலி அய்யோ என்று கத்த வேண்டும் போல இருந்தது. அப்போது திடுமென்று வலி விட்டது. மீண்டும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு வலி இப்படியே வலி தொடரவும் நான் ரவியை நோக்கிச் சென்றேன். 

அங்கே படுக்கையறையில் ரவியும், கல்பனாவும் சாரையும், பாம்புமாய் அவசரத்தில் ஜன்னலை சாத்திடவில்லை, ரவி என்ற அலறல் என் வாயிலிருந்து பீறிட்டு எழுந்தது. அடுத்த நொடி நான் மயங்கிச் சரிந்தேன். கண்விழித்துப் பார்த்தபோது, மருத்துவமனையில் அசைய முடியவில்லை,

இத்தனை மோசமாகவா உடல் நிலையை வைத்துக் கொள்வது. அதுவும் மாசமா இருக்கிற பொண்ணு நிறைமாசம், உங்க அஜாக்கிரதையால இப்போ குழந்தையோட தலை பிறண்டு போய் இருக்கு, சுப்ரியா உங்ககிட்டே குழந்தையோட பிரச்சனையைப் பற்றி எதுவும் சொல்லலையா ?! 

இல்லையே மேடம் ?

குழந்தைக்கு மட்டும் இல்லை, குழந்தையைச் சுமந்து கிட்டு இருக்கிற அந்தப் பொண்ணுக்கும்தான் ! அவகிட்டே எல்லாத்தையும் விவரமா சொன்னேனே, அவளோட உடல் நிலை மோசமா இருக்கு, இப்படியே போச்சுன்னா இரண்டுல ஒரு உயிரைத்தான் காப்பாத்த முடியும், அதேமாதிரி அவ சரியா கவனம் எடுத்துக்கலை, இப்போ ஆபரேஷன் பண்ணாலும் இரண்டுல ஒண்ணைத்தான் காப்பாத்த முடியும். 

டாக்டர்

விடுங்க அவங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்லுங்கள், நானும் கொஞ்சம் முயற்சிப் பண்றேன்.

டாக்டர் நகர, சுப்ரியாவின் பக்கம் வந்தான் ரவி

ஏன் சுப்ரியா இதையெல்லாம் என்கிட்டே சொல்லலை, 

விடு.ரவி என்னாலே யாருக்கு என்ன லாபம் இதெல்லாம் ஒரு வாழ்க்கையான்னு வாழ்ந்தப்போ அதுக்கு அர்த்தம் சொல்லிட்டீங்க, இப்போ எனக்கு ஏதாவது ஆனாலும் நீங்க இரண்டுபேரும் இருந்து என்னை அடக்கம் செய்திடுங்க. 

ரியா...

பரவாயில்லை, என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமின்னு தெரிந்தாலும் என்னோட சாவு அர்த்தம் உள்ளது. இந்தக் குழந்தையைப் பிறக்கும் போது அது முகத்தைப் பார்க்கும் அளவிற்கு என்னை உயிரோடு விட்டு வைச்சா போதும் தாமதிக்காதே ரவி.. எதையும் யோசிக்காம உடனே ஆபரேஷன் பண்ணச்சொல்லு, இருக்க இருக்கு குழந்தைக்கும் ஏதாவது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.