(Reading time: 10 - 19 minutes)

19. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

தன் பிறகு சதீசையும் நித்தியையும் ஓட்டுவது அஸ்வினது முறையானது.அவனிடம் இருந்து தப்பிபதே அவர்களுக்கு பெரிய வேலையானது..எதற்குடா அவனை ஓட்ட ஆரம்பித்தோம் என்று நினைக்கும் அளவிற்கு அவனது செயல் இருந்தது.

இந்த அனைத்து அலும்பளையும் ஓர் பார்வையாளராக இருந்து பார்த்துக்கொண்டிருப்பதே கவியின் வேலையாக இருந்தது.அவள் அந்த கலாடாக்களை ரசிப்பதை விட  தன்னவனை ரசிப்பதையே பேரும் வேலையாக வைத்திருந்தாள்.

ஒரு வழியாக எல்லா கலாட்டாவும் முடிந்து இரவு உணவையும் முடித்துவிட்டு தங்களது அறைக்கு இருவரும் வந்தனர்.

தங்களது அறைக்கு வந்ததும் அஸ்வின் தனது லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டு தனது வேலையில் மூழ்க கவி உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து அதைக் கவனித்த அஸ்வின்,”ஏன் கவி உனக்கு தூக்கம் வரலையா...,நான் வேணா ஆபீஸ் ரூமுக்கு போயிடுறேன் நீ படுத்து நல்லா  தூங்கு” என்றுக் கூறி விட்டு அவன் அடுத்து  இருந்த தனது அலுவலக அறைக்கு சென்றுவிட்டான்.

அவன் லைட் ஆப் பண்ணிவிட்டு சென்ற பின்பும் கவிக்கு தூக்கம் வரவில்லை.நேற்று இரவு முழுவதும் அவனது கை அணைப்பில் ஒரு பாதுகாப்பு உணர்வுடன் தூங்கியவளுக்கு இன்று தூக்கம் வர மறுத்தது.தூக்கம் வராமல் அவள் கண்களை மூடி படுத்துக் கொண்டிருக்க தனது வேலையை முடித்து விட்டு ஒரு இரண்டு மணி நேரம் கழித்து உறங்க வந்தான் அஸ்வின்.

கவி உறங்கிவிட்டாள் என்று நினைத்து சத்தம் எதுவும் வராமல் அவளது அருகில் படுத்துக் கொண்டு அவளது முகத்தைப் பார்த்தான் அவளது கண்களின் கண்மணிகள் அங்கும் இங்கும் ஓடுவதை பார்த்தவன் அவள் இன்னும் உறங்கவில்லை என்பதை அறிந்துக் கொண்டான்.

அவளது பக்கம் நன்றாக ஒருகளித்து படுத்துக் கொண்டவன்.தனது ஆள் காட்டி விரலால் அவளது முகத்தை வருடினான்.

அவனது தீண்டலில் விழித்தாள் கவி.

திருமாலை போல தனது அருகில் படுதிருந்தவனை பார்த்தவளுக்கு அதை ரசிக்க தான் தோன்றியது.அவனையே பார்த்துக் கொண்டிருத்தவளை கலைத்தது அவனது குரல்.

“இன்னும் ஏன் தூங்காம இருக்க கவி..,என்ன ஆச்சு உனக்கு..,நேத்து எல்லாம் நல்லா தானா தூங்கின இப்ப என்ன ஆச்சு..”என்று அவன் கேட்க

அமைதியாக இருந்தாள் அவள்.அவளுக்கு அவனை இப்பொழுது எப்படி கூப்பிடுவது என்று பெரிய குழப்பமாக இருந்தது நித்தி அவனை மாமா என்று விளித்ததை கேட்டப்  பிறகு அவளுக்கும் அவனை மாமா என்று அழைக்க ஆசையாக இருந்தது.

அவன் வாழ்கையை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு அவளது குடும்பத்துடன் அவர்களுக்கு பகை  இருந்தாலும் அவள் தான் இனி தன் வாழ்க்கை முழுவதும் வரும் துணை என்று  அவளிடம் கூறிய பொழுது அவன் இன்னும் அவளது பார்வையில் உயர்ந்து நின்றான்.

அந்த நொடியே அவளும் முடிவு எடுத்து விட்டாள் அவன் தான் இனி தன் வாழ்க்கை என்று..

அவனை மாமா என்று அழைக்க அவளுக்கு ஆசையாக இருந்தது ஆனால் மற்றவர்களை விட தான் அழைப்பது ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள்

தான் கேட்டு இவ்வளவு நேரம் ஆகியும் அமைதியாக இருக்கம்  அவளை பார்த்தவனுக்கு ஒரு வேலை அவள் தூங்கி தான் தான் எழுப்பி விட்டு விட்டோமோ என்ற எண்ணினான் அவன்.

“சாரிமா தூங்கிட்டு இருந்தியா நான் தான் உன்ன எழுப்பி விட்டுட்டேனா..”என்று அவன் வருத்தத்துடன் கூறவும் அப்பொழுதுதான் அவனுக்கு தான் இன்னும் பதில் கூற வில்லை என்று புரிந்தது.

“அதுவந்து....அ...அ..”என்று அவள் திக்கி திணற

“என்ன சொல்லு கவி..”என்று அவன் கூற

“அதுவந்து...வந்து...நா...நா..நான் இன்னும் தூங்கல அஷு மாமா..”என்று ஒரு வழியாக அவனை தன் விருப்பப்படி அவனைக் கூப்பிட்டிருந்தாள்  அவள்.

அவளது இந்த அழைப்பு அவனுக்கும் பிடித்திருந்தது.ஆனால் அவள் தன்னை திடிர் என்று அப்படி அழைத்ததுதான்  அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது இருந்தாலும் அவளிடம் அதைப் பற்றி கேட்டு அவளை சங்கடபடுத்த வேண்டாம் என்று அவன் நினைத்தான்.

“எதுக்கு இன்னும் தூங்கல..,பாட்டி எதாவது சொன்னாங்களா..,இல்ல அம்மா எதாவது சொன்னாங்களா..,என்ன ஆச்சுன்னு சொல்லு..”என்று அஸ்வின் கேட்க

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..,தனியா படுக்க ஒரு மாதிரி இருக்கு..”என்று மறைமுகமாக அவனது கை அணைப்பில் தூங்கும் தனது விருப்பதை அவள் தெரிவிக்க அதை உணர்ந்துக் கொண்டவன் தனது சிரிப்பை அடக்கி கொண்டு அவளை தனது கை அணைப்பில் கொண்டு வந்தவன்,”தூங்குடா..”என்று அவன் அவளிடம் கூற அவள் தூங்காமல் அவனையே பார்க்க ஏன் தன்னை அவள் அப்படி பார்க்கிறாள் என்று புரியாமல் இருந்தவன் அவள் எதற்கு தன்னை பார்க்கிறாள் என்று புரிந்து கொண்டவன் அவளது உச்சியில் முத்தம் இட்டு “தூங்குடா..” என்றுக் கூறி அவளை அணை த்தவாறு கூற அதுவரை எந்த பாதுகாப்புக்காக அவள் ஏங்கி இருந்தாளோ அது கிடைத்துவிட தூங்கிபோனாள் கவி.

அஸ்வினுக்கு அவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்துவிட்டு அன்பை காட்டும் இந்த சின்ன சின்ன செயலுக்கு அவள் எதுக்கு இப்படி ஏங்குகிறாள் என்று புரியாமல் யோசித்தவன் ஒரு வழியாக தூங்கி போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.