(Reading time: 13 - 26 minutes)

"எனக்கு எப்படி தெரியும்? நான் மனுஷன்"

"உனக்கு தெரிஞ்சத சொல்லு"

"தங்களுக்கு தேவையான உணவை தேடி சாப்பிடும். இரவில் தன்னுடைய துணையோடு கூட்டுல தங்கிக்கும். தன்னுடைய ஜோடியோடு ஒண்ணா சுத்தும். இதை தவிர பறவைகளை பத்தி எனக்கொண்ணும் தெரியாது"

"நீ சொல்லுறத பார்த்தா சாப்பிட்டுட்டு துணையோடு சுத்துறது தான் அவங்களோட தினசரி வேலை"

"ஆமா"

"ஆனா அதுங்க எவ்வளவு சந்தோசமா இருக்குதுங்க. ஒரே வேலை செய்யுற நமக்கு ஏன் போர் அடிக்குது? வேலை மேல வெறுப்பு வருது?"

"அதுக்கு சில காரணங்கள் இருக்கலாம்"

"என்ன?"

"பறவைகளுக்கு பணம் தேவைப்படாது, போட்டி இருக்காது, பொறாமைப்படாது, காட்டிக்கொடுக்காது. அதுக்கும் மேல அதுங்க ஒற்றுமையா இருக்கும். தங்களோட துணையோடு சந்தோசமா இருக்கும்"

ஜெஸிகாவின் கண்கள் மீண்டும் பறவைகளை நோக்கின.

"இது தான் காதலோடு சக்தி ஜெஸ்ஸி"

ஜெஸிகா சிரித்தாள். 

"என்ன சிரிப்பு?"

"இல்லை, எங்க போனாலும் காதல்லயே வந்து நிக்குறியே"

"இந்த உலகம் காதலால் பிணைக்கப்பட்டது ஜெஸ்ஸி. நம்ம ஆசைப்படுற எல்லா விஷயங்களும் காதல் தான். நீ எது மேல வச்சிருக்க ஜெஸ்ஸி. அதாவது காதல் வச்சிருக்க?"

"எனக்கு என் மேல தான் காதல். ஐ லவ் ஜெஸ்ஸி. ஐ லவ் மீ எ லாட்"

அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத ஜான் அதிர்ச்சியானான். அது அவன் கண்களில் பிரதிபலித்தது.

"என்ன பேயறைஞ்ச மாதிரி பாக்குற?"

"உன் ஆசைக்கு பேரு பைத்தியக்காரதனம்"

ஜெஸிகா சிரித்தாள். "நான் பைத்தியமாவே இருந்துட்டு போறேன் ஜான். எனக்கு புத்திசாலியா இருக்க பிடிக்கலை"

ஜான் நீண்ட மூச்சை விட்டெறிந்து சோம்பல் முறித்தபடி எழுந்தான். "ஜெஸ்ஸி உனக்கு பசிக்குதா?"

"நீ சொன்ன உடனே தான் எனக்கே தோணுது. எனக்கும் பசிக்குற போல தான்  இருக்கு"

"ரொம்ப சந்தோசம். வீட்டுக்குள்ள போய் சமைச்சு எனக்கும் கொண்டு வா"

அதைக் கேட்ட ஜெஸிகா திடுக்கிட்டாள். "என்ன கிண்டலா? போனா போகுதுன்னு உனக்கு உதவி செய்ய கூட இருந்தா நீ என்ன வேலைக்காரி மாதிரி நடத்துற"

"அப்போ வா, ரெண்டு பேரும் சேர்ந்து சமைக்கலாம்"

"சாரி, எனக்கு இது தேவையில்லாத வேலை. உனக்கு பசிச்சா நீ சமைச்சு சாப்பிடு. எனக்கு நேரமாகுது, நான் வீட்டுக்கு கிளம்புறேன்"

"அதுக்குள்ளே ஏன் கிளம்புற? வசந்த் வருவான், பார்த்துட்டு போ. எனக்கும் சில திங்ஸ் வாங்க வேண்டி இருக்கு"

வசந்த் என்ற சொல் ஜெஸிகாவை சில நொடிகள் சிலையாக்கின. 'அவன் ஏன் அவ்வளவு பதட்டாம அன்றைக்கு ஓடினான். இப்ப என்ன பண்ணிட்டு இருக்கான்?' என்று சிந்தித்தாள் ஜெஸிகா.

"என்ன யோசனை?"

தான் நினைத்ததை ஜானிடம் தெரியப்படுத்தினாள் ஜெஸிகா.

"இந்த கேள்வியை தான் நான் ரெண்டு நாளா கேட்டுட்டு இருக்கேன். அமேலியா விவகாரத்துல வசந்த் ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறான்"

"இதுக்கு என்ன அர்த்தம்?"

"என்னால உறுதியா சொல்ல முடியல. ஆனா ஏதோ இருக்கு"

ஜான் கூறியதை ஜெஸிகாவால் நிராகரிக்க முடியவில்லை.

"திடீர்னு அமேலியா மேல காதல்னு வந்து நிக்க போறான். அன்றைக்கு நாராயணன் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக போறாரு"

"உனக்குள்ள நல்ல எண்ணமே இருக்காதா?"

"விளையாட்டுக்கு தான் சொன்னேன்"

"எனக்கு என்னமோ இது காதல்ல போய் முடியும்னு தோணலை"

"ஏன் அப்படி சொல்லுற?"

"இது அக்கறையா கூட இருக்கலாம். எதை பேசி அவங்களுக்குள்ள காதலை வளர்த்துப்பாங்க?"

ஜான் சிரித்தான். "பேசி விளக்குறதுக்கு காதல் என்ன போர்ட் மீட்டிங்கா? அது உணர்வு. உணரத்தான் முடியும்"

"என்ன கண்றாவியோ. நான் வீட்டுக்கு போறேன். தயவு செஞ்சு என்னை பஸ் ஸ்டாப்ல கொண்டு போய் விடுறியா? ப்ளீஸ்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.