(Reading time: 13 - 26 minutes)

"சரி, நான் கார் எடுத்துட்டு வரேன்" என கூறி கார் ஷெட்டை நோக்கி சென்றான் ஜான். ஜெஸிகா அவனை பின்தொடர்ந்தாள். அப்போது வழியில் கார் ஒன்று பழுது ஏற்பட்டு நின்றிருந்ததை பார்த்த ஜான், "இது வசந்தோட கார் மாதிரி தெரியுதுல்ல" என கேட்டான்.

"ஆமா"

"அவன் கார் இங்கிருக்குன்னா வேற யாரோட காரை எடுத்துட்டு போயிருப்பான்?"

"ஐ டோன்ட் நோ"

"யாரோ ஒரு கூமுட்டை சாவியை கார்லயே விட்டு போயிருப்பான். அவனுடைய காரை எடுத்துட்டு வசந்த் கிளம்பிருப்பான்" என்று சிரித்தான் ஜான்.

"இருக்கலாம்"

"அது நிச்சயமா உங்க டைரக்டரோட காரா தான் இருக்கும். இங்க இருந்தவங்களிலேயே பெரிய முட்டாள் அவன் மட்டும் தான். ஆமா, அந்த மாடல் பெண்ணை எப்படி மயக்கினான்னு உனக்கு தெரியுமா?"

"தெரியாது"

"காதலுக்கு கண்ணில்லைன்ற விஷயம் உங்க டைரக்டர் விஷயத்துல எவ்வளவு சரியா பொருந்தியிருக்கு" என்றபடி கார் ஷெட்டை திறந்த ஜான் அதிர்ச்சியானான். அங்கு அவன் கார் காணாமல் போயிருந்தது.

"என்ன ஆச்சு?"

ஜான் பதில் கூறாமல் வசந்தின் காரை சில நொடிகள் நோக்கினான். தன் கார் நின்ற இடத்தை பார்த்தான்.

"அந்த கூமுட்டை நீ தானா?"

"ஆமா?"

ஜெஸிகா கோபமடைந்து மூச்சினை உள்ளிழுத்தாள்.

"ஐயோ! நான் எப்படி வீட்டுக்கு போவேன்?"

"வெரி சிம்பிள் ஜெஸிகா. இன்னைக்கு ஒரு நாள் இங்கயே தங்கி நல்லா ரெஸ்ட் எடு. நாளைக்கு வீட்டுக்கு போகலாம்"

ஜான் கூறிய பதில் ஜெஸிகாவை மேலும் எரிச்சலடைய வைத்தது. "ஷூட்டிங் ஆட்களோடவே நானும் போயிருக்கணும். தப்பு பண்ணிட்டேன். எல்லாம் என் நேரம்" என நொந்துகொண்டாள்.

அந்நேரத்தில் திடீரென மரங்களின் நடுவே புகைமூட்டம் சூழ்ந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

"ஐயோ! காடு தீ புடிச்சு எரியுது. வா, தப்பிச்சு போலாம்" என்று ஜான் ஜெஸிகாவை அழைத்தான்.

"எதோ சத்தம் வருது" என்ற ஜெஸிகா புகைமூட்டத்தை நோக்கினாள்.

"இந்த புகை வாசம் மரம் எரிஞ்சு வர போல இல்லை. எதோ ஆயில் ஸ்மெல்"

ஜானின் கூற்றை ஆமோதித்தபடி ஒருவித இரும்பு சப்தத்துடன் வசந்த் ஓட்டி வந்த கார் அவர்கள் முன் வந்து நின்றது. இன்ஜினில் இருந்து கருகிய வாசமும் புகையும் ஜெஸிகாவை ஆஸ்துமா நோயாளியை போல் இருமச் செய்தது. புகையின் நடுவே கதவைத் திறந்துகொண்டு வசந்த் கீழே இறங்கினான்.

"அடப்பாவி! என் காரை இப்படி கதற கதற கற்பழிச்சு கொண்டு வரியே!" என்று ஜான் வசந்தை பார்த்து சோகமும் ஆத்திரமும் கலந்தபடி கூறினான்.

"என்ன வசந்த் இதெல்லாம்?" ஜெஸிகாவும் கோபத்தோடு கேட்டாள்.

"சாரி சாரி" என்ற வசந்த் காரின் பின் கதவை திறக்க முடியாமல் சிரமப்பட்ட அமேலியாவை நோக்கினான்.

"பின்னாடி என்ன சத்தம்?" என்றபடி கதவின் கைப்பிடியை பிடித்து இழுத்த ஜானின் கையோடு கார் கதவும் சேர்ந்து வரவே, அதிர்ச்சியின் பிடியில் விழுந்தான் ஜான்.

அதை விட அதிர்ச்சியாக அமேலியா காரை விட்டு கீழே இறங்கினாள்.

தொடரும்...

Episode # 37

Episode # 39

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.