(Reading time: 19 - 37 minutes)

 கார்த்திக்கின் கேள்விக்கு ஒரு நிமிடம் அதிர்ந்த சூர்யா "ஏன்டா இந்த வீக்கென்ட்  அந்த மும்பை கான்ப்ரென்ஸ்க்கு போக வேண்டியது. நீ, மீரா, அம்மா எல்லாரும் சேர்ந்துகிட்டு எப்போ பாத்தாலும் ஹாஸ்பிட்டல், கான்ப்ரன்ஸ் ன்னு பிஸியாவே  இருக்க, வகேஷன்னா பாமிலி கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்ன்னு ஆளாளுக்கு குடைஞ்சு கான்செல் பண்ண வச்சீங்க. இப்போ அந்த பொண்ணுகாக இப்படி சொல்லி மறுபடியும் ஹாஸ்பிடல் பக்கம் வர சொல்ற?"

 

தனது அண்ணனின் நிலைமையை உணர்ந்த  கார்த்திக், "சாரி சூர்யா, அந்த பொண்ணு ரெம்ப வொர்ரி பண்றா. பாவமா இருக்கு"

 

"யாருடா அந்த பொண்ணு? எங்க இருந்து பிடிச்ச? நான் ஒரு பேச்சுக்கு நேர்ல பாத்தா தான் சொல்ல முடியும் சொன்னவுடனே அப்போ நேர்ல வர்ரீங்களா ன்னு கேக்குது. " என்றான் சூர்யா

 

"அது நம்ம ராம் பெரிப்பாக்கு தெரிஞ்சவங்க. நீ இப்போ ப்ரீ தான, ஹெல்ப் பண்ணலாம்ல" என்றான் கார்த்திக் கெஞ்சுதலாக.

 

"எனக்கே அந்த பொண்ணுக்கு  நோ சொல்ல சங்கடமா இருந்தது. என்ன பண்ண? பசங்கள கிளப்பி தமிழ் கிளாஸ்ல விடணும். நம்ம அம்மா தான் ஸ்ட்ரிக்ட் ஆச்சே. மிஸ் பண்ணா யாரு டோஸ் வாங்குறது? மீராவும் இப்போ  வீட்டில் இல்ல. " என்றான் சூர்யா.

 

"செயின்ட் ஜோசப் ஹாஸ்பிட்டல்ல  இருந்து அந்த தமிழ் மேடம் வீடு பக்கம் தான். நீ நேரா ஹாஸ்பிட்டலுக்கு பசங்கள கூட்டிட்டு வா. நானும் சந்தியாவ கூட்டிட்டு அங்க வர்றேன். சந்தியா தம்பிய  நீ நேரில் பார்த்து எதாவது ஹெல்ப் பண்ண முடியுதான்னு பாரு. நான் அதுக்குள்ள பசங்கள தமிழ் கிளாஸ்ல விட்டிடு ஆபீஸ்க்கு வந்துடுரேன். " என்றான் கார்த்திக்.

 

"அப்ப சரி. நான் இப்போவே கிளம்புறேன். மதுகிட்ட சொல்லிட்டியா? நான் எதுவும் சொல்லணுமா?" என்றான் சூர்யா.

 

"நீயா எதுவும் சொல்ல வேண்டாம். அவளா கேட்டா லைட்டா மட்டும் சொல்லு. எனக்கு அங்க லேட் ஆகுற மாதிரி இருந்தா நானே அவகிட்ட பேசிக்கிறேன். சரி நீ ஹாஸ்பிடல் ரீச் ஆனவுடனே கால் பண்ணு. " என்று கார்த்திக் கூறிய பின் பரஸ்பரம் "பை" கூறி இணைப்பை துண்டித்தனர்.

கார்த்திக் போன்ஐ வைத்தவுடன் திட்டத்தை சொல்ல சந்தியாவிடம் திரும்பினான். அவளோ "வாங்க.. வாங்க லேட் ஆகுது" என அவன் கையை பிடித்து இழுக்காத குறையாக வில்லில்லிருந்து புறப்பட்ட அம்பாய் வேகமாக நடக்க தொடங்கினாள். அவள் கூடவே நடந்தவாறே பச்சிளந்குழந்தையைப் போல அவள் அணைப்பிலிருந்த  பூங்கொத்தை பார்த்தான். அவன் பார்வை சென்ற திசையை கவனித்த சந்தியா, "இது அஜு அவனாவே செய்தது...கிழிந்து போயிடுச்சே.. அவனுக்கு எதுவும்...?" அவளுக்கு பதிலேதும் சொல்லாமல் அவன் கையை நீட்ட அவளும் அந்த பூங்கொத்தை அவனிடம் கொடுக்க, அவன் இன்னும் அகல எட்டுக்கள் வைத்து அலுவக வாயிலை அடைந்தான்.

 

அங்கே நின்றிருந்த மணியிடம் அதை கொடுக்க, "சார், நான் அதை ஜாடியில் போட்டுடுறேன். சந்தியா பொண்ணு ஏன் கலங்கி போய் இருக்குது?" என கேட்டார் மணி. "அவங்க தம்பிக்கு தலைல அடிபட்டதுன்னு நியூஸ் வந்துச்சு அதான். சரி இதை பத்திரமா வைச்சிருங்க. உங்களுக்கு சந்தியா.." என்று சொன்ன கார்த்திக்கிடம் "நேத்திக்கு அவுங்க பரீட்சை வந்தாங்க. அப்போ தெரியும். அவுங்க இருந்த இடமே கலகலப்பா இருந்ததே. இன்னிக்கு அவங்க முகத்தை பாக்கவே முடியல. பாவமா  இருக்கு"  என்றார் வருத்ததுடன்.

 

அதற்குள் அவர்களை நெருங்கிய சந்தியா, "நான் முன்னால போறேன்" என்று சைகை செய்தவாறே அந்த அலுவலகத்தை கடந்து படிகளில் இறங்கி பார்கிங் லாட்டை நோக்கி வேக வேகமாக நடந்தாள். அவளை பின் தொடர்ந்த கார்த்திக், தனது பைக்கை அடைந்து ஹெல்மெட் அணிந்து ஸ்டார்ட் செய்து சந்தியாவை பார்த்தான். அவளின் ஸ்கூட்டியோ  உயிர் பெற திணறி கொண்டிருந்தது. அவளுக்கு உதவ சென்ற கார்த்திக் இரண்டு, மூன்று முறை முயன்று தோற்று "முன்ன பின்ன தெரியாதவானோட பைக்ல வர யோசிப்பாளோ  ஆட்டோ ஸ்டாண்ட் வரை அவளை கன்வின்ஸ் பண்ணி பைக்கில் கூட்டிட்டு போய்டு ஒரு ஆட்டோ பாத்து ஏத்தி விடலாம்" என்று அவளிடம் சொல்ல நினைத்து திரும்பிய போது  அவளை பார்த்து திகைத்தான் .

கார்த்திக் பொதுவாக அவனது பைக்கை யாரையும் தொடக் கூட விடமாட்டான் . அவன் அண்ணன் சூர்யாவின் பிள்ளைகள் நிக்கிதாக்கும், நிஷிதாக்கும்  மட்டுமே  சிறப்பு அனுமதி உண்டு. ஆனால் இப்பொழுது  அது சந்தியாவின் கைகளில்.

 

சந்தியா ஹெல்மெட் அணிந்தபடி அவன் பைக்கை ஓட்டிக் கொண்டு அவன் அருகில் "கம் ஆன், கார்த்திக். இட் இஸ் கெட்டிங் லேட். முன்ன பின்ன தெரியாத பொண்ணோட எப்படின்னு எல்லாம்  யோசிக்காதீங்க. என் ஹன்ட்பாக் நடுவுல வைச்சிட்டு ஏறுங்க" என அவனுக்கு யோசிக்க நேரமே கொடுக்காமல் அவசர படுத்தி, அவன் யோசனையோட அவள் பின்னாடி அமரும் போது "ஐ டிரஸ்ட் யு. யு வோன்ட் பிஹேவ் சீப்" என்று சொல்லியவாறே பைக்கை ஸ்டார்ட் செய்தாள்.

 

கார்த்திக்கிற்கு 'த்ரில் ரைட்' என்றால் மிகவும் பிடிக்கும். உலகிலேயே மிகவும் அச்சம் உண்டாக்கும் ரோலர் கோஸ்டரில் முதல் வரிசையில் உட்கார்ந்து செல்லவதற்கு  வரிசையில்  கால் கடுக்க காத்திருந்த  காலங்கள் எல்லாம் உண்டு. ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் படி இந்த சவாரி அமையும் என அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவள் ஓட்டிய வேகமும் பிரேக் பிடிப்பதை தவிர்க்க பைக்கை வளைத்து வளைத்து  ஓட்டிய விதம் கார்த்திக்கிற்கு வயிற்றை கலக்கியது. இதில் அவள் செய்த எச்சரிக்கையால் சரியான பிடிமானம் இல்லாமல் கைகளை அவன் வண்டியின் பின்புற கம்பியை பிடித்தவாறே தனது விரல் நகம் கூட அவள் மீது படாமல் இருக்க போராடி பயணித்தது அவனுக்கு கத்தியின் மேல் நடப்பது போல் இருந்தது.

 

ஒரு தருணத்தில் முன்னால் சென்ற பேருந்தை  முந்த எதிர் திசை வண்டிகள் வரும் பாதையில் கடந்து செல்ல சந்தியா முயல அதே நேரத்தில் அவர்களை விட வேகமாக ஒரு மணல் லாரி எதிரில் வந்து கொண்டிருந்தது. "இவளட்ட  சிக்கி திணறதுக்கு இந்த லாரியே மேல். இன்னிக்கு செத்தோம்" என்று கண்களை இருக மூடினான். சில நிமிடங்களில் வண்டி நிற்கவே தன்னினைவுக்கு வந்த அவன் " அட .. நான் சாகலையா.." என்ற நிம்மதியுடன் லேசாக கண்களை திறக்க அவன் முன் மாட்டின் கூரிய கொம்புகள். போக்குவரத்து நெரிசல் இருந்ததால் அவள் ஒரு மாட்டு வண்டியின் மிக அருகில் நின்று கொண்டிருந்தாள். அது வரை சாதுவாக அருகில் இருந்த அந்த மாடு கார்த்திக்கின் மிரண்ட பார்வையாலா இல்லை அதற்கு அசௌகரியமாக இருந்ததால என்னோவோ அதன் கொம்புகளை வேகமாக ஆட்டியது. "நியூஸ்ல கூட மாடு முட்டி பைக்கில் சென்ற இளைஞன் மரணம்ன்னு பாத்து இருக்கோமே.. அப்படி கூட நடக்குமோ ." என எண்ணிகொண்டே அதை குறு குறுவென உற்று பார்க்க, அந்த மாட்டிற்க்கு இன்னும் வெறி பிடித்து  அவனை முட்ட வந்தது. கார்த்திக் பதறி செய்வதறியாது திகைக்க, இது எதையும் அறியாத சந்தியா நெரிசல் சரியானதால், மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு அகல அவன் மயிரிழையில் தப்பித்தான். "எதுக்கு வம்பு கண்ண மூடியே இருப்போம்" என்று மூடிய கண்களை அதன் பின் திறக்கவே இல்லை.

 

சற்று நேரத்தில் யாரோ  தன்னை அழைப்பது போல தெரிய கார்த்திக் கலங்கிய கலங்கில் கண்களை  மெதுவாக திறக்க, சந்தியா "கார்த்திக், கார்த்திக்" என்று அழைத்துக் கொண்டிருந்தாள். அவள் அவன் விழிப்பதை பார்த்து "எனக்கு அஜூ வை நினச்சு பயமா இருக்கு. நான் முன்னாடி போறேன். நீங்க அந்த பார்கிங் லாட்டில் பார்க் பண்ணிட்டு உள்ள வாங்க "  என்று விறு விறுவென்று பைக்கில் இருந்து குதித்து கைப்பையை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குள் ஓடினாள். கார்த்திக் அந்த நிலையிலும் தெளிவாக யோசித்து அவள் நகல்வதைக் கண்டு "சந்தியா உன் போன் நம்பர் கொடு" என்றான். அவளோ திரும்பவே இல்லை. இது பின் எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கி அவன் கோபத்தை தூண்ட போகுது என்று அப்போது அவளுக்கு தெரியாது.

 

அவன் பைக்கை நிறுத்தி விட்டு, சந்தியா போன் நம்பர் பெற மதுவை போனில் அழைத்தான்.

 

"மது ", கார்த்திக்

 

"ம்.. அண்ணனும் தம்பியும் எந்த பொண்ணுக்காக இந்த ஓட்டம் ? " என்றாள் மது.

 

"மது அதெல்லாம் அப்புறும் நான் சொல்றேன். எனக்கு மொதல்ல சந்தியான்ற இண்டர்வியூ காண்டிடேட் கான்டக்ட் நம்பர் அவ ரெசுமே பாத்து எனக்கு SMS பண்ணு  " என்றான் கார்த்திக்

 

"சந்தியா....பேரு நல்லா  இருக்கு. ஆளும் நல்லா இருப்பாளோ?. நேத்து ரெக்ரூட்மெண்ட் டீம்ல  இருந்தவங்க அவளை பத்தி தான் பேச்சு. ஹம் இன்னிக்கு அவளை நானும் பாக்கத் தானே போறேன். பாக்கிற எல்லாரையும் மயக்கிடுவா போல.." அவள் 'எல்லாரையும் ' என சொன்ன அழுத்தத்தில் கார்த்திக்கையும் சேர்த்து தான் என்பதை உணர்த்தினாள்.

 

"தேவ இல்லாம உனக்கு தெரியாதவங்கள பத்தி பேசாத மது. " என்று கண்டித்தான்  கார்த்திக்.

 

"அப்படியா.. பின்ன சார்  எதுக்கு எனக்கு தெரியாதவங்களோட போன் நம்பர் என்கிட்ட கேக்கணும். உங்களுக்கு ரெம்ப தெரியும்னா அவங்கள்ட்டே கேக்கலாமே" என்றாள் மது.

 

"மது இங்க பாரு. உனக்கு பைவ் மினிட்ஸ் தாரேன். அதுக்குள்ள SMS பண்ண முடிச்சா பண்ணு. இல்லாட்டின்னா நான் எப்படி யார்கிட்ட வாங்கணும்மோ அப்படி அவங்ககிட்ட வாங்கிக்குவேன், பை" என்று சொன்ன படி போன் ஐ வைத்த கார்த்திக்கிற்கு மது மேல் இருந்த அத்தனை கோபமும் சந்தியாவிடம் திரும்பி இருந்தது. "இவளுக்காக இவ்ளோ தூரம் வந்துருக்கு. ஒரு போன் நம்பர் கூட குடுக்காம ஓடிட்டாளே. உள்ள போய் இவளை எப்படி பிடிப்பேன் " என்று யோசனையோடே ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான்.

 

து ஞாயிற்று கிழமையாதலால், மற்ற நாட்களை விட கூட்டம் குறைவாக இருந்தது. பணியாட்களும் குறைவாகவே இருந்தனர். வரவேற்பு பகுதியும் அதனை அடுத்து அருகே பணம்  செலுத்தும் இடமும் இருந்தது. வரவேற்பு பகுதியில் ஒரு ஒரு இளம்பெண் இருந்தாள். அவளிடம் சென்ற கார்த்திக்

 

"இங்க என் ப்ரெண்ட் ப்ரதர் அட்மிட் பண்ணி இருக்காங்க. பேரு அஜு. அவங்க எந்த வார்ட்ல இருக்காங்கனு சொல்ல முடியுமா?" என்றான்.

 

அவள் எதோ எழுத்து வேலை பார்த்து கொண்டிருந்தவள் கம்ப்யூட்டரில் பார்த்து விட்டு "அந்த பேரில் எந்த பேஷன்ட்டும் இல்ல சார் " என்றாள். கார்த்திக் "எனக்கு புல் நேம் தெரியல..அஜய், அஜீத்  இந்த மாதிரி 'எ' அண்ட் 'ஜெ' ஆரம்பிக்கிற மாதிரி பேர் இருக்கான்னு கொஞ்சம் பாக்க முடியுமா" என்றான்.

 

அவளோ "ப்ச்.." என உச்ச்கொட்டிக் கொண்டு மறுபடியும் கம்ப்யூட்டரில் தேடி பார்த்து "அப்படி எந்த பேரிலும் இல்ல. நீங்க வேணா உங்க ப்ரண்ட்டுக்கு போன் போட்டு கேட்டு சொல்லுங்க." என்றாள் அவள்.

 

"அவங்க போன் நம்பர் இல்லாததுனால தான் உங்கள்ட்ட கேக்க வேண்டியிருக்கு. அவங்க தம்பிக்கு தலைல அடிபட்டுச்சுன்னு சொன்னங்க. அதனால் எமெர்ஜென்சி, ICU வார்ட்ல ஒரு 16, 17 வயசுல  பையன் யாராச்சும் அட்மிட் ஆகி இருக்காங்களான்னு பார்த்து சொல்லுங்க" என்றான் கார்த்திக்.

 

அதற்கு அவள் "பேஷன்ட் பத்தி ஒன்னும் தெரியாம அங்க பாரு இங்க பாருன்ட்டு காலங்காத்தால வந்துட்டாங்க உயிரை எடுக்கிறதுக்குனே" என முனங்கிக்கொண்டே எரிச்சலுடன் கம்ப்யூட்டர் பக்கம் திரும்ப, கார்த்திக்கோ கோபத்தில்  "ரிசப்ஷன்ல இருக்கீங்க. ஹாஷ்பிட்டலுக்கு வர்றவங்ககிட்ட இப்படி தான் பேசுவீங்களா?" என்றான் உயர்ந்த குரலில். அவன் மேலும் "உங்கள வேலைக்கு வச்சவுங்கள கூப்பிடுங்க. நான் அவங்கள்ட்டே கேட்டுக்கிறேன் " என்றான்.

அவன் சத்தம் கேட்டு அந்த இடத்தில் இருந்த அனைவரும் திரும்பி பார்க்க, அருகில் இருந்த பணம் செலுத்தும் இடத்தில் இருந்த தலைமை கணக்கர் அவனை அடையாளம் கண்டவராய்  "சார் நீங்க சப்ஹயர் சதாசிவம் பையன் தான?.. சாரி சார். அது சின்ன பொண்ணு. உங்கள யாருன்னு தெரியாம பேசிடுச்சு. வீட்ல அப்பா அம்மாலாம் சவுக்கியமா சார்? இங்க யாரயும் பாக்க வந்தீங்களா?" என்றார்.

 

கார்த்திக் அவரிடம் சுருக்கமாக தான் வந்த காரணத்தைக் கூறினான். அப்போது மதுவின் SMS வந்தது.  கார்த்திக் சந்தியாவின் போன்னுக்கு அழைத்தான். அவளோ அழைப்பை எடுக்கவில்லை. அவன் மீண்டும் இருமுறை அழைத்து விட்டு அவள் எடுக்காததால் அந்த கணக்கருடன் சேர்ந்து சந்தியா சொன்ன அஜுவின் விவரத்தை கம்ப்யூட்டரிலும் நர்சிடமும் விசாரித்து ஒரு வழியாக கண்டு பிடித்தனர்.

 

சந்தியா சொன்னவன் பெயர் அர்ஜுன். அன்பு இல்லம் என்ற அனாதை இல்லத்தில் இருந்து வந்தவன். அவனுக்கு பயப்படும் படி ஒன்றும் இல்லை என்றும் தலையில் நெற்றிக்கு சற்று மேலே சிறு வெட்டு காயத்திற்கு  தையல் போட்டு  சோர்வைப் போக்க  'ட்ரிப்' ஏறிக் கொண்டு இருப்பதாகவும் அறிந்தான். கார்த்திக் விசாரித்து முடிக்கும் நேரம் சூர்யாவும் வந்து சேர்ந்தான்.

 

அந்த கணக்கர், "வாங்க சார், நான் கூட்டிட்டு போறேன்" என்றார் . கார்த்திக்கோ  "நீங்க இவ்ளோ ஹெல்ப் பண்ணதுக்கு தேங்க்ஸ். நாங்களே பாத்துகிறோம். " என்று அவரை அனுப்பி விட்டான்.

பின், சூர்யாவை பார்த்து "இந்த சந்தியா ஒன்னும் இல்லாத விசயத்துக்கு ஓவரா சீன் போட்டு என்னை படுத்தி எடுத்திட்டா.. அதை நம்பி உன்னை வேற அலைய விட்டுடேன். சாரி சூர்யா. நாம கிளம்பலாம்" என்றான்.

 

சூர்யா "என்னடா இவ்ளோ தூரம் வந்துட்டு அந்த பையனை ஒரு எட்டு பாத்துட்டே போகலாம். "

 

கார்த்திக், "சரி நீ வேணா போ. நான் வரல. அவ என்ன படுத்தின பாடுக்கு என் கைல கிடைச்சா என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. இட் இஸ் பெட்டர் இப் ஐ லீவ்" என்று சொல்லி கொண்டிருக்கும் போது

 

"கார்த்திக்" என்று சந்தியா அழைக்க கோபத்துடன் திரும்பினான்.

 

"போன் பண்ணா எடுக்க மாட்டியா?" என்றான் கார்த்திக் கோபத்துடன்.

 

"இல்ல கார்த்திக். நான் டாக்டர் மீட் பண்ண போறப்போ எதோ விளங்காதவன் கால் பண்ணிகிட்டே இருந்.....ஸ்.... அய்யோ அது உங்க நம்பரா..சா" அவள் சொல்லி முடிக்கும் முன் கார்த்திக்கின் கை இடியென "பளார் " என மொழு மொழுவென்ற அவளது இடது கன்னத்தில் இறங்கியது.

                                                                        ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 2       

Go to Episode 4

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.