(Reading time: 33 - 66 minutes)

வள் சொன்னது சிவாவிற்கு புரிந்ததோ இல்லையோ கார்த்திக்கிற்கு புரிந்து விட்டது. “நான் மாட்டியிருந்தா என்ன ஆகியிருப்பேன். சந்தியா உன் குறும்புக்கு அளவே இல்ல. இது தப்புன்னு கூடிய விரைவில் உனக்கு  புரிய வைக்கிறேன்“ வன்மமாக யோசித்தது அவன் மனது.

“யே...இருக்கட்டும். இது அவருக்கு தெரியாதா? நீங்க கவலப்படாம  குடிங்க சிவா ” என்றாள் சக்தி. அவள் ஆத்திரம் அவளுக்கு. அவளுக்கு உயிரான எம்.எஸ். பேரை  கிண்டல் அடித்தவனை சும்மா விடுவாளா?

“ஏன் சிஸ்டர், எனக்கு ஸ்டீல் பாடி. யூத் வேற. கல்லை  தின்னாலும் செரிக்கும் .எனக்கு ஒன்னுமே ஆகாது.” என்று பெருமை அடித்தான் சிவா.

சந்தியா “நழுவிட்ட கார்த்திக். இனிமே ரூட் மாத்தி பேச வேண்டியது தான்” என்று மனதிற்குள் திட்டமிட்டவளாய்,

சந்தியா, “சிவா...அதை குடிக்காதீங்க. சும்மா ஹனி ஹனின்னு சொல்லிக்கிட்டு இருந்த கார்த்திக்கை வார்ன் பண்ண அதுல பேதி மருந்து கலந்தேன்.”

“என்னது பே....பே.....பே”,என சிவா அதிர்ச்சியில் பேச்சு வராமல் திகிலாய்  முழிக்க, சக்தி அவன் சிக்கவில்லையே என்ற எரிச்சலில் “அதான் குடிக்கலேல....அப்புறம் ஏன் அதை குடிச்ச இபெகட்ல  முழிக்கிறீங்க. “ என்றாள். “இந்த பூசணிக்காய் என்னமா தாக்குறா... இந்த வன்முறை கும்பல்ல சிக்கி சின்னாபின்னமாக தெரிஞ்சேன்னே...“  என எண்ணிக்கொண்டே கார்த்திக்கை பார்க்க அவனோ “நம்ம ஆளு விஷத்தை கலந்து குடித்தாலும் சந்தோஷமா  குடிக்கணும் மச்சி”என்றான். “நீ என்னதை வேணாலும் குடி .என் உயிரை பணயம் வைக்காத மாப்ள..... ஆளை விடு..” என ஓட முயன்ற அவனை பேசி ஒரு வழியாக சமாதானபடுத்திய  பின்,

சந்தியாவிடம் திரும்பிய கார்த்திக் “நான் இவ்ளோ ரிஸ்க் எடுத்ததுக்கு நீ எதுவுமே  கொடுக்கல....ம்... நானே குடுத்துட்டு கிளம்புறேன். “ என்று அவளை நெருங்க,

“ஏன் இப்படி க்ளோஸ்ஸா வர்றீங்க கார்த்திக்.....நீங்க என் ப்ர்ண்ட் அவ்வளவு தான்...உங்க லிமிட்டை தாண்டுனீங்க அப்புறம் இந்த சந்தியாவை மறந்துட வேண்டியது தான்” அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் பதட்டத்துடன் சொன்னாள் சந்தியா.  

“யு ஆர் நாட் மை ப்ர்ண்ட் சந்தியா....” என்ற கார்த்திக், “இரண்டுல ஒன்னை தொடு...அதுக்கு மட்டும் உன் லிமிட்டை கிராஸ் பண்ணா போதும்  ஹனி” என இரு விரல்களை அவள் முன் நீட்ட, கேள்வியுடன் பார்த்த சந்தியாவிடம் ,

“பார்பியா ..... “ என்றவாறு  அவள் கண்களை ஒரு நொடி ரசித்து விட்டு, “ இல்ல....  ஏஞ்சியா.... ”  என அவள் உதட்டில்  பார்வையை பொதித்து விட்டு  , “பர்ஸ்ட் ரிவார்ட் யாருக்குன்னு சூஸ் பண்ணனும்...அதுக்கு தான்” என்றான்.

“விட்டா லிப் டு லிப்பே கொடுத்துடுவான் போல இருக்கே...பப்ளிக்கா கன்னத்தில் அறைந்தவன் செய்தாலும் செய்வான். இந்த லவ் பர்டை சூ...பத்தி விடணும் “ என்று எண்ணிக் கொண்டே

 

“ஏன் கார்த்திக் இப்படி கஷ்டபடுறீங்க. உங்களுக்கு ரிவார்ட்  தான  வேணும். நானே வீட்டில் போய் கொடுக்கிறேன். இப்போ கொஞ்சம் தள்ளி உட்க்காறீங்களா ப்ளீஸ். இதை யாராவது பாத்து எங்க அப்பாகிட்ட போட்டு கொடுத்தா என்னை வேலைக்கே அனுப்ப மாட்டாங்க.... “

“ஹையோ....அப்படி வேற ஒன்னு இருக்கோ......ஆனா எனக்கு பிடிச்ச மாதிரி ரிவார்ட் நீ கொடுக்கிறவரைக்கும் உன்னை விடவே மாட்டேன் சந்தியா. “ என்று சற்று தள்ளி உட்கார்ந்தான்.

“கண்டிப்பா உங்களுக்கு பிடிச்சது கிடைக்கும்  கார்த்திக். உங்களுக்கு இந்த தம், தண்ணி இந்த மாதிரி கெட்ட பழக்கம் உண்டா?”

“நீ 99% என்னை நம்பலாம். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது சந்தியா. ஏதாவது பிஸ்னஸ் மீட்டிங் அவாட் பண்ண முடியாத நேரத்தில்   பார்மாலிட்டிக்கு அ சிப் ஆப் வைன் அவ்ளோ தான். ஆனா ஹனி உனக்கு பிடிக்காட்டி 100% நல்ல பையன் ஆகிடுறேன்.“ என்றான்.

“அடடா... நான் பாதி கெட்ட பொண்ணு.. நான் தம்மடிப்பேன். நீங்க நல்ல பயனா தெரியுறீங்க. சும்மா என் பின்னாடி சுத்தாம, ஒரு அடக்க ஒடுக்கமான பொண்ணா பாருங்க” என்றாள் சந்தியா சாவகாசமாக.

அவள் சொல்வதை கேட்டு தோழிகள் கிண்டலாக சிரிக்க, கார்த்திக், சக்தியை பார்க்க “ஆமாம்...சந்தியா சொல்றது உண்மை தான்” சொல்லிவிட்டு சந்தியாவை நமட்டு சிரிப்போடு பார்த்தாள்.

சிவாவோ “உனக்கு இந்த பெட்ரோமாட்ஸ் லைட் தான் வேணுமா?” என  கேட்க

“மச்சி, எனக்கு லைப்ல ஒரு ஆம்பிஷன்.....லவ் பண்ணா ஒரு தம்மடிக்கிற பைக் ரேசரை தான் லவ் பண்ணும்னு” என்றான் கார்த்திக்.

“உன்னை திருத்த முடியாது. வா போலாம்...பாக்கலாம் சிஸ்டர். உங்க புறந்த நாளை நினச்சாலே  வயிறு கலங்குற அளவுக்கு ட்ரீட் கொடுத்துட்டீங்க. ரெம்ப தேங்க்ஸ். “ என்றபடி விடைபெற யத்தனிக்க,

கார்த்திக் தன் இருக்கையை விட்டு எழும் முன் “சந்தியா  ஒன் செகண்ட்” என்று தனது ஷார்ட்ஸ் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு பெட்டியை சந்தியாவிடம் நீட்டியவன்,

 “இது தான் ஆக்ட்டிவலா என்னோட நச்சு ரிவார்ட். வீட்டுக்கு போய் பாத்துட்டு எனக்கு கால் பண்ணு. சும்மா உன்னை ஓட்ட தான் ஏஞ்சலினா  ஜோலியெல்லாம்  இழுத்தேன். கிஸ் பண்ணிடுவேன் பயந்துட்டியா?“ என குறுகுறுப்பானா பார்வை வீச,

“இல்லவே இல்லயே...நீங்க பழுத்த பழம்ன்னு பைக்ல வந்தப்பவே தெரிஞ்சதே” என்ற வழக்கமான மழுப்பல் பதில் கொடுத்தாள்.

“ம்.......சமாளிச்சுபிகேஷன்....நீ புழச்சுக்கிவ. ஆனா யு ஆர் நாட் மை ப்ர்ன்ட்...நீயும் அப்படி கூடிய சீக்கிரம் பீல் பண்ணுவ...அதுக்கப்புறம் உன்னை ஹனின்னு கூப்பிட்டு அந்த ரிவார்ட்டை கொடுப்பேன்.” என புன்முறுவலித்து கண்சிமிட்டி விடை பெற்றான்.

பின், தோழிகள் வழக்கம் போல கார்த்திக்குடன் இணைத்து அவளை சிறிது நேரம் ஓட்டிவிட்டு அவரவர் வீட்டிற்கு கிளம்பினர். சக்தியை வீட்டில் இறக்கி விட்டு கிளம்பிய சந்தியாவிடம் “மெய் மறந்து  ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தது பாக்கிறப்போ லவ் தான்டி..கன்பர்ம்ட். நீ சொன்ன முதல் உலக அதிசயம் நடந்திடுத்து” என்றாள் சக்தி. “சும்மா உளறாதே... அவன் சரியான சகுனி..இந்த அங்க்ரி பர்ட் எப்படி லவ் பர்ட் ஆனதுன்னு டவுட்டா இருக்கு” என்றாள் சந்தியா.

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்லவதில்லை

புத்தகம் மூடிய மயிலிறகாய்

புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

என்று பாடிய சக்தியிடம் “சிட்டுவேஷன் சாங்கு?!!!! கொழுப்புடி..நாளைக்கு யோகா கிளாஸ் கூட்டிட்டி போய் தான் உன் கொழுப்பை கரைக்கணும்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றாள்.

மாலை நேரம். ஆதவன் தனது ஒரு நாள் ஓட்டத்தை முடித்து இரவென்னும் வெற்றி கோடை நெருங்கும் நேரம், சந்தியா தனது தமக்கைகளுடன் அவர்கள் ஊரில் உள்ள உயர்தர உணவகத்தில் பிறந்த நாள் விருந்தளிக்க அழைத்து வந்தாள். சந்தியாவின் தந்தை அவர்கள் பூர்வீக கிராமத்திற்கு சென்று விட்டு அன்று இரவு தான் வீடு திரும்புவதால் அவள் தாயார் லக்ஷ்மி பெண்கள் எவ்வளவு அழைத்தும் அவர்களுடன் வரவில்லை. அந்த உணவகத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு என  ஒதுக்கப்பட்ட இடத்தில் இடுப்பில் ஸ்ரீ பையன் தருணை தூக்கி கொண்டு, விந்தியா குழந்தைகளுடன் விளையாண்டு கொண்டிருந்த சந்தியாவை நோக்கி சூர்யாவின் பிள்ளைகள் ஓடி வர, “ஹே நித்தி, நிக்கி இங்க எப்படிடா..” என “யு நோ சந்து...திஸ் இஸ் அபி சித்தி” என்று அவர்களை அங்கு கூட்டி வந்த அபியை அறிமுகப்படுத்தினர். அபி, சந்தியா அறிமுகத்திற்கு பின்  ஒத்த வயதுள்ளவர்கள் என்பதால் அவர்கள் தொடர்ந்த பேச எளிதாக இருந்தது. சந்தியாவிற்கு மனதிற்குள் கார்த்திக் மீது பொறாமையாய் “உனக்கு வீட்டில் தெய்வானை பத்தாதுன்னு, ஹம் ஆப் கே ஹையின் கொவ்ன்....அண்ணியோட  தங்கச்சி...நடத்து கார்த்திக் நடத்து. லட்டு லட்டா உனக்கு சாய்ஸ் இருக்கு” என்று நினைத்துக் கொண்டாள். அவனை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு இருப்பது தெரிந்ததும் மனதில் ஒரு அச்சமும், துள்ளலும் ஒரு சேர அவளை வதைத்தது.

சற்று நேரத்தில் மீராவும் அங்கு வர, “நீ பெரிய பைக் ரேசர்ன்னு காதி சொன்னான்” என கேட்க, “என் டீனேஜ்ல எங்க கிராமத்துக்கு திருவிழாக்கு போவோம். அந்த ஊரு பெருசுங்க எல்லாம் சாமிக்கே சாராயம் காச்சி ஊத்திட்டு, அதை சாக்கு வைச்சு அவங்களும் மட்டையாகிடுவாங்க. அந்த நேரம் நாங்களும் எங்க பெரியப்பா பசங்களும் பைக் எடுத்துக்கிட்டு பொட்டல் காட்டில் ஓட்டி பழகினது. டிரைவிங் எனக்கு ரெம்ப பிடிக்கும். காலேஜ் கேம்பஸ்குள்ள பசங்க பைக் ஓட்டியிருக்கிறேன். ஆனா பைக் ரேஸ் எல்லாம் எங்க பக்கத்துக்கு வீட்டு பையன் கூட வீடியோ கேம்ஸ்ல விளையாண்டது தான். கார்த்திக் ரெம்ப பயந்தார். அவர் பயந்தா பர்ஸ்ட் டைமா ரோட்டில் ஓட்டுற எனக்கு எப்படி தைரியம் வரும்? அதான் அப்படி சொன்னேன். ஆனா ப்ளீஸ் இதை கார்த்திக்கிட்ட சொல்லி, வீணா தூங்கிகிட்டு இருக்கிற அங்க்ரி பர்ட்டை எழுப்பிடாதீங்க ” என்றாள் சந்தியா. அவள் சொல்வதை கேட்டு கார்த்திகின் ஆம்பிஷனனை நினைத்து  சிரித்தாள் மீரா. பின், மீராவின்  தாய் தந்தையரின் கல்யாண நாளை அந்த உணவகத்தில் உள்ள பார்ட்டி ஹாலில் கொண்டாடுவதாக தெரிவித்தாள்.

“ஓ...உங்களுக்கு சொர்ணாக்கா தெரியமா ? அவங்க அந்த பார்ட்டி ஹால்க்குள்ள போனதை பாத்தேனே” என சந்தியா கேட்க, “சொர்ணாக்காவா?..அப்படி யாரும் எனக்கு தெரியாதே” என மீரா சொல்ல,

“அடடா....அது நாங்க வச்ச பேரு...அவங்க பேரு.... சௌபர்ணிகா. அந்த பேரு சொல்றதுக்கு கரடு முரடா இருக்கும்...அப்புறம் அந்த பேரை போலவே அவங்களும் ரெம்ப ஸ்ட்ரிக்ட்டா கரடு முரடா இருப்பாங்க. அதான் சொர்ணாக்கா ன்னு ஷார்ட்டா கேட்ச்சியா  வச்சிட்டோம். அப்படியே பேசி பழகி அவங்க ஒரிஜினல் பேரு சட்டுன்னு வரமாட்டிங்குது. அவங்க உங்களுக்கு ரிலேஷனா?” என்றாள் சந்தியா.

அவள் சொல்லவதை கேட்ட மீரா தனது மாமியாருக்கு மிக பொருத்தமாக அவள் பேர் வைத்திருப்பதை மெச்சினாலும், “சந்தியா அது யாரு தெரியுமா...என் மாமியார்... காதியோட அம்மா. இப்படி வேற யார்கிட்டயும் சொல்லிடாத. அவுங்க காதுக்கு போச்சு அவ்வளவு தான்” என்ற மீராவை சொல்வதை கேட்டதும் சந்தியாவிற்கு லேசான அதிர்ச்சி.

கார்த்திக் ஏதோ பணக்கார வீட்டு பையன்  என்ற அளவுக்கே தெரிந்த அவள், அவன் அந்த ஊரிலே பல தலைமுறையாக செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவன் என தெரிய மனம் ஏதோ லேசாக வழித்தது. “விரலுக்கேத்த வீக்கம் வேண்டும் சந்தியா” என அது எச்சரிகை குரல் எழுப்பியது.

“என்னாச்சு சந்தியா...உன்னை பத்தி தப்பா யாரும் சொல்ல கூடாதுல்ல அதுக்கு தான் சொன்னேன். நீ என் கூட வா ப்ங்கஷனுக்கு. எங்க பாமிலில எல்லாரையும் அறிமுகப்படுத்துறேன்.“ என மீரா விடுத்த அழைப்பை சகோதரிகளுடன் வந்ததையும் நேரத்திற்கு வீட்டுக்கு செல்லாவிட்டால் தனது தந்தை கோபப்படுவார்கள் என்றும் நாசூக்காக மறுத்து விட்டு, குழந்தைகளை அழைத்து சென்றாள். குழம்பிய மனதுடனே சகோதரிகளுடன் உணவருந்த ஆரம்பித்த அவளின் போன் சிணுங்க அழைத்தது கார்த்திக்.

“எங்க அண்ணி கூப்பிட்டா வர மாட்டியா சந்தியா? அம்மா வந்து சொன்னாவாது வருவியா?” என்று அவன் சினத்துடன் கேட்க, அவள் “அதெல்லாம் இல்ல கார்த்திக். பார்ட்டிக்குன்னு  ப்ரிபேர்ட்டா வரல. எனக்கு ப்ராப்ளம் இல்ல. அக்கா எல்லாம் அப்படி நினைப்பாங்கல்ல. அங்க வந்து மத்தவங்க ட்ரெஸ்ஸிங்க் பாத்து  சங்கோஜமா நினைக்க கூடாது.. அப்புறம் சீக்கிரம் வீட்டிக்கு போகணும். இல்லாட்டி அப்பா திட்டுவாங்க.“ என்றாள்.

“எத்தனை மணிக்கு போகணும்? “

“எட்டு மணிக்கு...மே பி ஒரு கால் மணி நேரம் எக்ஸ்ட்ரா..,அவ்ளோ தான்”

 

“இப்போ மணி ஏழு தான ஆகுது. கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு பத்து நிமிஷம் இஷ்டம் இருந்தா வந்துட்டு போ. “ பேசி விட்டு அவள் பதில் சொல்லும் முன்  இணைப்பை  துண்டித்தான்.

“பெரிய இவன். சப்ஹைர் குரூப் ன்னா போய் கால்ல விழணுமா? நான் போக மாட்டேன். அந்த சொர்ணாக்காவுக்கு இருக்கிற கெத்து அப்படியே மகனுக்கும் இருக்கு.”  என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாலும், அவனை பார்க்க முடியாமல்  போய் விடுமோ என்ற ஏக்கம் ஒருபுறம் தலை விரித்தாடியது.

“யாருடி போன்ல? பேசி முடிச்சவுடனே ஏதோ பஸ்ஸை பிடிக்க போற மாதிரி இவ்வளோ அவசரமா  சாப்பிடுற ?” என்று ஸ்ரீ கேட்டாள். “நான் சொன்னேன்ல என் பாஸ் கார்த்திக், இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்த  டாக்டர் சூர்யாவோட தம்பி. அவங்க யாரு தெரியுமா? சப்ஹைர் குரூப்பாம். நானும் பூமாவும்  ஸ்கூல் படிக்கிறப்போ சப்ஹைர்  சௌபர்ணிகாகிட்ட தான் பெயிண்டிங் கத்துகிட்டோம், உனக்கு ஞாபகம் இருக்கா ?” என கேட்க “ஆமா....அவங்க குரலை கேட்டாலே நீயும் பூமாவும் நடுங்குவீங்களே? அவங்க இங்க இருக்காங்களா?” என ஸ்ரீ வினவினாள்.

“ஆமாம், அதான் கார்த்திக் அம்மா” என்ற சந்தியா சுருக்கமாக மீராவும் கார்த்திக்கும்  அழைத்ததையும் சொன்னாள். “சாப்ட்டுட்டு  தலைய காண்பிச்சிட்டு வா சந்தியா. நாங்க வெயிட் பண்றோம் ” என்றாள் விந்தியா. “இல்ல அக்கா. உங்க கூட வந்துருக்கேன். நியாயமா உங்களையும் சேர்த்து தான கூப்பிடணும். இவங்க கிட்ட காசு இருக்கிறதுனால எப்ப கூப்பிட்டாலும் ஓடணுமா? அந்த பணக்கார கும்பல் சகவாசமே வேண்டாம்னு நினைக்கிறேன்” என அங்கு செல்ல விருப்பமில்லாததை தெரிவித்தாள்.

பின் சற்று நேரத்தில், விந்தியா தனது இரண்டு வயது மகன்  அர்விந்திற்கு ஊட்டி முடிக்க, “அக்கா, நான் சாப்பிட்டேன், அவனுக்கு நான் பேஸ் வாஸ் பண்ணி கூட்டுட்டு வாரேன்” என அவனை கூட்டி அவனது முகத்தை கழுவி விட்டு “அர்விந்த் வா பாத்ரூம்க்கு போயிட்டு போலாம்” என கூப்பிட  அர்விந்த் மறுக்க,

“அர்விந்த் நீ இப்போ பிக் பாய்ன்னு அம்மா உனக்கு டயப்பர் போடல. நீ  ஷார்ட்ஸ்லே உச்சி போய்ட்டா, எல்லாரும் ஷேம் ஷேம் சொல்லுவாங்க”

“நானுக்கு வரல” என  சிணுங்கிய அரவிந்திடம்,

“டேய் அங்க பாரு. சூப்பர்  சூப்பரா கேர்ல்ஸ் இருக்காங்க. அவுங்க உன்னை பாத்து  ஷேம் ஷேம் சொல்லுவாங்க. பரவாயில்லையா?”

“நேணாம் சித்தி... அரவிந்த் பிக் பாய்”  என ஓய்வு அறைக்கு செல்ல ஒத்துக்கொண்டான். அவன் என்ன செய்வான் பாவம். இதையே சொல்லி தான் சற்று முன் விந்தியா அவனை அங்கு அழைத்து வந்தாள். ஓய்வு அறைக்கு அருகில் தான் பார்ட்டி ஹால் இருந்தது. சந்தியாவின் உளவு வேலைக்கு அர்விந்தை உபயோகிக்கிறாள் என்பது அவனுக்கு தெரியாதே!

அரவிந்தை தூக்கிக் கொண்டு அந்த பார்ட்டி ஹால்லை தாண்டி செல்லும் போது  “நித்தி அக்கா , நிக்கி அக்கா இங்க தான் குட்டி இருக்காங்க” என அவனிடம் சொல்லிகொண்டே அந்த பார்ட்டி ஹாலில் பார்வையை  பொதித்த படி, கண்கள் அங்கும் இங்கும் எதையோ தேடி தோற்க,  அடுத்த எட்டு வைக்க காலை எடுத்தவள், “ஹலோ" வென காதருகில் குழைந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு தடுமாற பின்னாலிருந்து தாங்கி பிடித்தான் கார்த்திக்.  

“எங்க சித்தி....நீ போ” என மழலையாய் மொழிந்த அர்விந்த் கார்த்திக்கை விலக்க முயல  “உங்க அப்பா பேரனையும் நல்லா மிலிட்டரி ட்ரைனிங்  கொடுத்து வச்சிருக்காரு” என சொல்லிக் கொண்டே அவளின் இடையை பற்றியிருந்த கையை விலக்கினான்.  “ஆமா.. இது என் கருப்பு பூனை அர்விந்த்” என்றபடி சித்தியை சொந்தம் கொண்டாடி இறுக அணைத்திருந்த அரவிந்த்தை முத்தமிட்டாள்.  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.