(Reading time: 20 - 39 minutes)

தற்குள் “இல்லை வேற எதுவும் வேண்டாம். என் டிரைவர் வந்துடுவான்.” என்று மறுத்தார் ராஜலட்சுமி.

“இல்லை இல்லை. டிரைவர் வந்து கொஞ்சம் வெயிட் பண்ணட்டும் ஒரு 15 நிமிஷம் இருங்க. நான் வந்துடறேன்” என்று வர்புறுத்தினார் லட்சுமி.

இனியாவும் சேர்ந்து வற்புறுத்தவே “சரி” என்று சொல்லிவிட்டு காத்திருந்தார் ராஜலட்சுமி.

லட்சுமி இனியாவிடம்  “உங்க அப்பா எங்கம்மா, அப்பாவை தேடி அபியை அனுப்பினா அவளையும் காணும்.” என்று கேட்டார்.

“இதோ போய் பார்கிறேன் அம்மா” என்று அங்கிருந்து கிளம்பினாள் இனியா.

ஜோதியும் ராஜலட்சுமியும் பேசிக் கொண்டிருந்தர்னர்.

டிரைவர் இன்னும் வரவில்லையே என்று டிரைவருக்கு போன் செய்தார் ராஜலட்சுமி.

டிரைவர் போனை எடுத்து “சார் எனக்கு வேற வேலை கொடுத்திருக்கார்ம்மா. அவரே வந்து உங்களை கூட்டிட்டு போறேன்னு சொன்னார்” என்று கூறினான்.

போனை வைத்த ராஜலட்சுமியின் முகம் போன போக்கை பார்த்த ஜோதி “என்ன ஆன்ட்டி என்னாயிற்று” என்று கேட்டாள்.

“இல்லைம்மா. என் பெரிய பையன் கிட்ட நான் ஒன்னும் சொல்லாம கிளம்பி வந்தேன். இப்ப டிரைவர்க்கு வேற ஏதோ வேலை இருக்குனு அவனே வந்து என்னைக் கூட்டிட்டு போறானாம். அதான் யோசிக்கிறேன்.”

“ஏன் மா அவர் கிட்ட சொல்லாம வந்தீங்க”

“இல்லம்மா அவன் கிட்ட சொன்ன சந்துரு மேல இருக்கற அக்கறைல அவனும் வரேன்னு சொல்லிட்டா, நான் அவனும் சரி இல்லன்னு இனியா கிட்ட சொல்ல முடியாதேன்னு அவன் கிட்ட சொல்லாமலே வந்துட்டேன்.”

“சரி விடுங்கம்மா. உங்க சின்ன பையன பத்தி தான் பேச வந்தீங்கன்னு சொல்லிடுங்க” என்று ஈசியாக வழி கொடுத்தாள்.

ராஜலட்சுமியும் அதுவே சரி என்று சொல்லி தலை ஆட்டினார்.

அதற்குள் இனியா கீழே வந்து ஜோதியிடம் “அப்பா ஏதோ ஆபீஸ் விஷயமா முக்கியமா போன்ல பேசிட்டு இருக்காரு. இந்த வால போய் அப்பாவை கூப்பிட சொன்னா அவர தொல்ல பண்ணிக்கிட்டு இருக்குக்கா” என்று அபியின் காதை வலிக்காதவாறு பிடித்து திருகினாள் இனியா.

ஜோதியும் சிரித்தவாறே கிட்செனை நோக்கி போய் தாயிடம் தந்தையை பற்றி விவரம் கூறிவிட்டு இளவரசனின் வருகையை பற்றியும் தெரிவித்தாள்.

இனியாவும் ராஜலட்சுமியும் பேசிக் கொண்டிருக்க அபி இடையிடையே அவளின் ரைம்ஸ் பாடி காட்டி அவர்களை தொல்லை படுத்திக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு சில நிமிடங்கள் சென்ற பிறகு இளவரசன் இனியாவின் வீட்டிற்குள் சென்றான்.

அவனை முதலில் கண்ட அபி தான் உற்சாகமாக வரவேற்றாள். “வாங்க அங்கிள். நீங்க வரலையான்னு நான் பாட்டிக் கிட்ட கூட கேட்டேன் தெரியுமா” என்று அபி வளவலக்கவும் திரும்பி பார்த்த இனியா திகைத்தாள். இவன் எங்கே இங்கு வந்தான். இவன் வருவதாக ஆன்ட்டி சொல்லவில்லையே என்று அதிர்ச்சியாக பார்த்தாள் இனியா.

இளவரசன் அபியிடம் பேசியவாறே ஹாலிற்குள்ளே வந்து விட்டான். அவனை வீட்டு ஆளாக வரவேற்க இனியாவை தவிர அங்கு வேறு யாருமில்லை. அவள் தாய், தமக்கை இருவருமே கிச்சனில் இருந்தார்கள். இனியாவிற்கு அவனை வாருங்கள் என்று அழைக்க வேண்டுமென்று தான் இருந்தது. ஆனால் அவளால் அவனை அழைக்க முடியவில்லை.

இனியா அவன் வீட்டிற்கு சென்ற போது அவன் அவளை வெளியிலேயே வந்து வரவேற்றது நியாபகம் வந்தது. என்ன இருந்தாலும் வீட்டிற்கு வந்தவனை வா என்று அழைக்காமல் இருப்பது தவறு என்று எண்ணி “வாருங்கள்” என்று அழைத்தாள்.

இளவரசன் அவளின் தயக்கம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். கடைசியாக அவள் அவனை அழைத்து விட்ட பிறகு வேண்டுமென்றே ஒரு பெரு மூச்சை விட்டவாறு “எப்படியோ ஒருவாறு வா என்று அழைத்தாயிற்று” என்றான்.

இனியாவிற்கு தான் ஏன் இவனை வா என்று அழைத்தோம் என்று கோபமாக வந்தது.

இளவரசனை அவன் தாய் ஏதோ சொல்ல வரும் போது இனியாவின் தாயும் சகோதரியும் வரவும் அந்த பேச்சும் தடை பட்டது.

ராஜலக்ஷ்மி இளவரசனுக்கு இனியாவின் தாயையும் ஜோதியையும் அறிமுக படுத்தி வைத்தார்கள்

லட்சுமியும் ஜோதியும் இளவரசனை வரவேற்று அவர்களுக்கு டிபன் கொடுத்தார்கள். இளவரசனும் ஏதும் பேசாமல் அமைதியாக உண்டான்.

பின்பு தாயிடம் திரும்பிய இளவரசன் “ஏனம்மா என்னிடம் சொல்லாமல் வந்தீர்கள், என்னிடம் சொல்லி இருக்கலாமே” எனக் கேட்டான்.

“இல்ல எனக்கு ஏதோ திடிர்னு இனியா கிட்ட சந்துருவை பத்தி எல்லாம் சொல்லிட்டு அவளோட ஹெல்ப் கீட்கனும்னு தோணுச்சி. அதுவும் இல்லாம ஹாஸ்பிடல்ல வந்து ட்ரீட்மென்ட் பண்றதுனா வேற. இங்க நம்ம வீட்டுக்கு வரணும்னா நம்ம நேரா வந்து அவங்க அம்மா கிட்ட கேட்கறது தானே முறை. அதான் திடிர்னு தோணின உடனே வந்துட்டேன். நீ எப்பவுமே பிஸியா இருப்ப. அதான் உன்ன தொல்லை பண்ணாம நானே வந்துட்டேன்.”

“என்னம்மா நீங்க முதல்ல சொன்னதெல்லாம் ஓகே தான். ஆனா நான் பிஸி. என்ன தொல்லை பண்றது அப்படி எல்லாம் சொல்றீங்க. நம்ம சந்துருக்காக வரர்து எனக்கு தொல்லையா” என்றான்.

“சரி விடுப்பா. நான் சொன்ன மாதிரி எனக்கு தோணின உடனே வந்துட்டேன். அவ்வளவு தான்”

பிறகு அவர்கள் இனியா வீட்டினரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்று சென்றார்கள்.

அவர்கள் கிளம்பி சென்ற உடன் இனியாவின் தாயும் தமக்கையும் அவர்களை பற்றியே பெருமையாக பேசிக் கொண்டிருக்க இனியாவிற்கு தான் இளவரசனை பற்றி நினைத்து எரிச்சலாக வந்தது.

அவனுக்கு எவ்வளவு திமிர் என்று எண்ணி எண்ணி கோபம் கொண்டாள். விடை பெரும் போதும் தன்னிடம் வருகிறேன் என்று சொல்லவில்லை. சரி எல்லோரும் இருக்கும் போது தன்னிடம் தனியாக சொல்ல முடியவில்லை என்றாலும் சின்னதாக ஒரு தலை அசைப்பு அதுவும் இல்லை என்பது தான் இனியாவிற்கு எரிச்சல் தான் அதிகமாகியது.

இதில் அவள் யோசித்து வாருங்கள் என்று கூப்பிட்டால் என்று கிண்டல் வேறு செய்கிறான். அவன் என்னை மருத்துவமனையில் கோபமாக பேசிய பிறகும் போய் வாருங்கள் என்று அழைத்தேன் அல்லவா. நான் ஒரு முட்டாள். எனக்கு இதெல்லாம் தேவை தான் என்று பொருமிக் கொண்டிருந்தாள்.

ஆனால் அங்கு இளவரசனோ காரை சிரித்தவாறே ஓட்டிக் கொண்டிருந்தான். 

னியா அடுத்த இரண்டு வாரத்தில் நான்கு நாட்கள் சந்துருவை பார்க்க இளவரசன் வீட்டிற்கு சென்றிருந்தாள். ஆனால் அவள் செல்லும் நேரத்தை முன்பு சொன்னதை போல் முன்னதாகவே இளவரசனுக்கு தெரிவிக்கவில்லை.

அவன் அன்னையே “வருவதற்கு முன்ன எதுக்கும் போன் செஞ்சிடேன்மா. ஒரு வேளை நாங்க வீட்டுல இல்லேன்னா உனக்கு அலைச்சல் தானே” என்றதுக்கும்,

“இல்லை ஆன்ட்டி. நான் எப்ப வருவேன்னு முன்னாடியே ப்ளான் பண்ணிட்டு எல்லாம் வரர்து இல்லை. அதனால அப்படி சொல்லிட்டு எல்லாம் வர முடியாது. அப்படி நான் வரும் போது நீங்க இல்லைனாலும் பரவால்லை. இங்க தான் என் பிரண்டு ஒருத்தி வீடு இருக்கு. அதனால நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க” என்று சொல்லி விட்டாள்.

இதனால் இளவரசனால் அவள் வரும் நேரத்திற்கு கரெக்டாக வீட்டில் இருக்க முடிவதில்லை. இருந்தாலும் இனியா வந்திருப்பதை அவள் அன்னை போனில் அழைத்து சொன்ன சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டிற்கு வந்து விடுவான். அப்படியும் ஒரு முறை அவன் சிறிது தொலைவில் இருந்ததால் அவ்வளவு சீக்கிரமாக வர இயலவில்லை. அவன் வருவதற்குள் அவள் சென்று விட்டாள்.

அப்படியே இருந்தாலும் அவர்கள் முன்பு போல் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. இவன் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் இனியா கிளம்பி விடுவாள். இளவரசனால் அவளை ஒன்றும் கூறவும் முடியவில்லை. அவன் வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

கார்த்திக்கை அவன் தந்தை வேறு மருத்துவமனையில் இரண்டாவது ஒபினியன் கேட்பதாக கூறி அழைத்து சென்று விடவே இளவரசனால் மருத்துவமனையிலும் இனியாவை சந்திக்க இயலவில்லை.

அடுத்து ஒரு சனிக்கிழமை இனியா இளவரசன் வீட்டிருக்கு சென்றிருந்தாள். அப்போது இளவரசனும் வீட்டிலேயே இருந்து விட்டதால் இனியாவால் அங்கு இருக்கவே இயலவில்லை. வழக்கத்தை விட சீக்கிரமாகவே கிளம்புவதாக கூறினாள். ஆனால் சந்துருவோ “இல்லை, இன்று மதியம் எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும்” என்று அடம் பிடித்து “இருங்கள் நான் அம்மாவை கூட்டிட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டு சென்றான்.

இளவரசனும் இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தான். ஆனால் அவனால் இனியாவிடம் சென்று ஏதும் சொல்லவும் இயலவில்லை.

இளவரசன் சந்துருவின் மொபைலை எடுத்து அவன் என்னிற்கே அழைத்தான். அவன் மொபைலில் “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன, ஏன் அவசரம், என்ன அவசரம், நில்லு பொண்ணே” என்று திரும்ப திரும்ப பாடியது.

இனியா அதைக் கேட்டவாறே இளவரசனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளவரசனும் இமைக்காமல் இனியாவையே பார்த்துக் கொண்டிருந்தான். 

தொடரும்

En Iniyavale - 06

En Iniyavale - 08

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.