(Reading time: 30 - 60 minutes)

ந்தியா “ஹாஸ்பிட்டல்ல அந்த குட்டி பையன் என்ன ஆனான்? கார்த்திக்” - கேட்க்கும் போதே கவலை முகத்தில் படர்ந்த படி.

கார்த்திக் “அவனையும் இன்னும் ரெண்டு பசங்களையும்  பிரைவேட் ஹாஸ்பிட்டல்க்கு மூவ் பண்ணியாச்சு. எங்க சப்ஹைர் க்ரூப்ல ஒரு டிரஸ்ட் இருக்கு. அது மூலமா மெடிக்கல் செலவுக்கு ஏற்பாடு  பண்ணிட்டேன். ஆனாலும் நீ சொன்ன அந்த பையன்கிட்ட நான் தீர்க்க வேண்டிய ஒரு கணக்கு இருக்கு. அவன் எப்படி என் ஆளுக்கு கிஸ் கொடுக்கலாம்? அவன் சரியாகி வந்த பிறகு விட மாட்டேன் அவனை” என்றான் வீராவேசமாக.

அவன் சொல்வதை கேட்டு சிரித்தனர்  மதுவும் சந்தியாவும். சந்தியா மதுவிடம், “அவனை ஹாஸ்பிட்டலுக்கு என் மடில வைச்சு ஆட்டோல தூக்கிட்டு போறப்போ சஷ்டி கவசம் சொல்லிகிட்டே அவனுக்கு ஒரு 50 முத்தமாவது கொடுத்திருப்பேன்” என அவனை மேலும் உசுப்பேத்தி விட்டாள்.

அதை பார்த்த கார்த்திக் , “எல்லாத்தையும் ஒன்னு விடாம அவன்கிட்ட வாங்கிடுவேன் சொல்லு மது“ என ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டவது போல  மிரட்டி விட்டு, “ஆனா இவகிட்ட சொல்லி வை. அவனக்கு மாதிரி அம்பதுன்னு கஞ்சத்தனம் பண்ணக்கூடாது மினிமம் சென்சுரியாவது அடிக்கணும்” என  கோடிக்கணக்கில் கடன் கொடுத்து அதை வசூலிக்க வந்தது போல மிரட்டல் விட்டான் மதுவிடம்.

சந்தியாவோ மதுவிடம் “உங்க மச்சான் எப்பவுமே இப்படியா இல்ல எப்பவாது இப்படியா மது?” என கேட்க,

கார்த்திக்கோ மதுவிடம் “எப்பவுமே அவ மேல ஆசை வச்ச மச்சான் எங்க மச்சான்னு சொல்லு மது” என கார்த்திக் சொல்ல

சந்தியா அவளிடம்  “இப்படி காதல் வசனம் பேசிகிட்டே இருந்தா வேலை எப்போ பாக்கிறதுன்னு கேளு மது” என கேட்க,

 கார்த்திக் “அவ காதலிச்சா நான்  ஏன் என் வேலைய பாக்காம இருக்கேன்ன்னு கேளு மது” என மதுவிடம் பதில் கேள்வி கேட்க,

“இவங்ககிட்ட டென்னிஸ் மேட்ச் பாத்து எனக்கு கழுத்து சுளிக்கிடும் போல...இவங்கள திசை திருப்பி எஸ்கேப் ஆக வேண்டியது தான்” என எண்ணி கொண்டே, அங்கிருந்த ஜன்னலை நோக்கி  “அதோ பாரு வைட் காக்கா” என ஏதோ எட்டாவது  உலக அதிசயத்தை கண்டது போன்ற பீடிகையில் சொல்ல இருவரும் துளிகூட அசையாமல் அவளை பார்த்த படி நின்றனர்.

“தலையெழுத்து டா...“ என கையால் தலையை அடித்தவாறே மனதுக்குள் “இவங்க அந்த பக்கம் பாக்கிறப்ப ஓடிடலாம்ன்னு பாத்தா விடமாட்டேன்றாங்களே” என மனதிற்குள் நொந்து படி இருவரையும் “நான் பாவம்” என்பது போல மது பார்க்க, “இப்படி சொன்னா அசந்துடுவேன் பாத்தியா ….விடமாட்டேன் “என  சூசகமாக மதுவிடம் சொல்லி அது  சந்தியாவிற்கு விடும் அறிவிப்பு என சொல்லாமல் சொல்ல ,

அவளும் அவனை போலவே மதுவிடம் “இப்படி பண்ணா மசிஞ்சிடுவேன் பாத்தியா...என்னை அடக்கவே  முடியாது” என பதிலடி கொடுத்தாள்.

“அதான் முருங்கை மரத்தை பிடிச்சு தொங்கிட்டு இருப்ப.... தெரிஞ்சது தான” என நக்கலடித்தான் இப்போது சந்தியாவிடம் நேரடியாக.

சந்தியாவோ “நான் பேயாவே இருந்துட்டு போறேன்..ஆனா உங்களுக்காக இறங்கி வர மாட்டேன்” என அவனிடம் பதிலுக்கு நக்கலடித்தாள்.

அவர்களின் நேருக்கு நேர் விவாதத்தை பார்த்து குஷியான  மது  “அப்பாடா...என்னை விட்டாங்க..இப்படியே பாக்வேர்ட்ஸ்ல ஓட வேண்டியது தான்” என மெதுவாக பின்னெட்டுகளை வைத்து தப்பிக்க முயன்று கொண்டிருந்தாள்.

கார்த்திக் சந்தியாவிடம் “போடுற பூஜைய போட்டா எப்படி பட்ட பேயும்  தானா இறங்கி வரும்”என பதிலுக்கு சொல்ல

“அதுக்கு விட்டா தானா” என இளக்காரமாக சொன்ன படியே மதுவிடம் திரும்பி “என்னை மட்டும் இந்த ‘லவ் பர்ட்‘கிட்ட விட்டுட்டு எங்க நைசா நழுவி  போற ” என கேட்க, மாட்டிகொண்ட மதுவோ  “அடப்பாவி விட மாட்டேன்றாளே” என்று நினைத்துக் கொண்டே “ஹி...ஹி...ஒன்னும் இல்ல. காபி குடிக்க பான்ட்ரி போறேன்” என்று சிரித்த படியே சமாளித்தாள் மது. “இரு நானும் வாறேன்” என சந்தியா கட்டளையிட, மது அதற்கு “நீ இப்போ தான அன்பு இல்லத்தில குடிச்சுட்டு வந்த” என அவளை கழட்டி விடும் யோசனையுடன் கேட்க,

சந்தியாவோ   “ஐ அம் எ  காபி அடிக்ட்” என சொல்லிக்கொண்டே மதுவை நோக்கி நடந்தாள்.

“ஐ அம் எ  சந்தியா அடிக்ட்” என மந்திரித்து விட்ட சேவல் மாதிரி அவள் பின்னே வர, மது அவர்களிடம் “ரெண்டு பேரும் கொஞ்சம் உங்க கைய கொடுங்க” என தன் இரு கரத்தையும் நீட்டினாள்.

மதுவும் கார்த்திக்கும்  கேள்வியுடனே தங்கள் கரத்தை அவள் கரத்தில் ் வைக்க, அந்த கரங்களை கண்களில் ஒத்தியவாறே “தெய்வங்களே, உங்க கைய காலா நினச்சு கேக்குறேன். என்னை விட்டுடுங்க....உங்க திருவிளையாடலுக்கு வேற ஆள் பாருங்களேன் ப்ளீஸ்”  என அழாத குறையாக கெஞ்சவே, கார்த்திக் அவளிடம்  “நாங்க என்ன  சண்டையா போட்டோம்? “ என கேட்க, சந்தியாவோ “நான் இல்லப்பா... கார்த்திக் தான் ஓவரா பேசி உன்னை ஓட வைக்கிறாரு”  என சொல்ல கார்த்திக்கோ “நான் பேசுறது என்ன  இந்த பேய பாத்தாலே ஓடிடுவ” என அடுத்த யுத்தம் தொடங்க  சங்கை ஊத, அதை பார்த்து அரண்ட  மது, “மறுபடியுமா...ஆளை விடுங்கடா சாமி” அவர்கள்  கைகளை உதறி விட்டு, உலகின் வேகமான மனிதன் உசேன் போல்ட்டுக்கு இணையான வேகத்திற்கு ஓட்டம் பிடித்தாள்.

அவளை பார்த்து கார்த்திக்கும், சந்தியாவும் விழுந்து விழுந்து சிரித்த படியே அவன் ஹை பை கொடுக்க அவளிடம் கையை நீட்ட, அவளும் பதிலுக்கு ஹை பை கொடுக்க, இருவருக்குள்ளும்  மின்சாரம் பாய,  கொடுத்த வேகத்தில் கையை எடுத்தனர்.  “இவளுக்கும் இதே மாதிரி இருக்குமோ ...ஹம்...திமிர் பிடிச்ச பேய்...எதுக்கும் அசர மாட்டா...இதெல்லாம் அவளுக்கு ஒரு விசயமாவே இருக்காது” என மனதிற்குள் எரிச்சல் பட்டு கொண்டே அவளை பார்த்து “ஹி...ஹி..” அசட்டு சிரிப்பு சிரித்தான்.

“இவனக்கும் இதே மாதிரி இருந்திருக்குமோ...ஹம்..அமெரிக்கால இருந்துருக்கான்.. பொண்ணுங்களுக்கு ஷேக் ஹான்ட்ஸ், ஹை பை …..... உரசி உரசி கை மரத்து தான் போயி இருக்கும். அவனுக்கு இதெல்லாம்  ஒரு விஷயமா என்ன ..சரியான லூசுடி நீ “ என தன்னை திட்டிக் கொண்டே பதிலுக்கு “ஹி...ஹி...” என வழிந்தாள்.  

அப்பொழுது தான் அவன் காலையில்  கோபத்தில் வெளியே போக சொன்னது அவள் நினைவுக்கு வர ரோஷம் வந்தவளாய், “ஓகே. கார்த்திக் நீங்க சொன்ன மாதிரி மது மனசை மாத்தி அவளை இங்க வந்துவிட்டுட்டேன். நான் கிளம்புறேன்” என அவனிடம் சொல்லி விட்டு பையை தூக்கி கிளம்ப, தனது சுழல் நாற்காலியில் வந்து அமர்ந்தவன்,  “ஓகே!” என்று பெருமூச்சு விட்டு விட்டு, அவளை பார்த்தவாறே நாற்காலியில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்தவன், “ஒரு லட்சம் US டாலர்ஸ்ஸ குடுத்திட்டு கிளம்பு... காஷ்ஷா.?..செக்கா? எப்படி வசதி?”  என புருவத்தை உயர்த்தி வினவினான்.

கார்த்திக் சொல்லவதை கேட்டு பையை அருகில் இருந்த நாற்காலியில் வைத்து விட்டு, அவனுக்கு எதிரே சற்று குனிந்து  தன் ஒரு கரத்தால்  மேஜையை அழுத்தியவாறே அவனை கண்ணோடு கண் நோக்கி, “ஆங்கிரி பர்ட்க்கு காலையில் என்னை வெளிய போக சொல்றப்போ இந்த யோசனை தெரியாதோ? “ என கேட்டாள்.

“என் கோபத்தின் காரணம் உனக்கு தெரியாதோ?” என கார்த்திக் எதிர்கேள்வி கேட்க,

“தெரியும் கார்த்திக். நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்தா கண்டிப்பா சொல்லியிருப்பேன் “ என்றாள் சந்தியா.

 

“உன் அக்கா, அர்ஜுன், சக்தின்னு உன் ப்ரண்ட்ஸ் அத்தனை பேர்க்கிட்டவும் சொல்லுவ.....மீடியாவை வரவழைச்சு தமிழ்நாடு முழுக்க அந்த ஆக்க்சிடென்ட்டை டெலிகேஸ்ட் பண்ண வைப்ப...என்னை உன் பிரண்ட்ன்னு சொல்லுவ....ஆனா இதை பத்தி ஒரு வார்த்தை சொல்ல மாட்ட.... அப்படி தான சந்தியா? சரி பாஸ்ன்னு எடுத்துக்கிட்டாலும் ஏன் லேட்டுன்னு சொன்னியா?...அந்த ரிக் கூட என்னை விட  உனக்கு முக்கியமா போயிட்டான். நானே வழிய வந்து என்ன ஏதுன்னு  கேட்டா, ஒன்னு பொய் சொல்லுவ இல்லாட்டி எதுவுமே சொல்ல மாட்ட. இப்படி நீ செய்றதை எல்லாம் பார்த்துட்டு  நான் சும்மா இருக்கணும். அப்படித்தான?” என இருகிய முகத்துடன் கேட்டுவிட்டு பின்  சற்று இடைவெளி விட்டவன் ஒரு பெருமூச்சுடன் “எனக்கு உன்னை மாதிரி பொறுமை இல்ல தான் சந்தியா ஒத்துக்கிறேன்” என உணர்ச்சியற்ற குரலில் கூறியவாறே அவள் இதற்கு முன் கையெழுத்திட்டு இருந்த ஒப்பந்த படிவம்  இருந்த கோப்பை தனது மேஜைக்குள் இருந்து எடுத்து அவளிடம் வீசி எறிவது போல அவள் புறம் தள்ளியவன்,“இதை என்ன வேணாலும் செய்துக்கோ.....இங்க இருக்கிறதும் போறதும் உன் இஷ்டம்....” என்றான் முகத்திலும் குரலிலும்  உணர்ச்சிகளை துடைத்த படி.

அவளை ஒரு வெற்று பார்வை பார்த்து விட்டு, தனது மடிக்கணினியில் கவனத்தை செலுத்தினான். அவன் சொல்வதைக் கேட்டு தன் தவறை உணர்ந்தவளாய், “சாரி கார்த்திக்” என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு தனது பையை அவன் அறையிலே அவளுக்கு என ஏற்பாடு செய்திருந்த இடத்தில் வைத்தாள். பின் அவன் அருகில் சென்று “பழச பத்தி நினைக்காம சியர் அப் அண்ட் பி ஹப்பி கார்த்திக். ஹொவ் அபொவ்ட் எ காபி பிரேக் ?” என அங்கு எதுவுமே நடக்காதது போல புருவத்தை உயர்த்தி அவனிடம் இயல்பாக கேட்டாள்.

அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் கணினியில் முகத்தை பதித்தவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன், “பாஸ் காபி ப்ளீஸ்?” என மீண்டும் அழைக்க “ப்ச்..” என உதட்டை சுழித்து மறுப்பாக தலையை ஆட்டி விட்டு கண்களை கணினியில் இருந்து அகற்றாமல் இருக்க, “சும்மா பந்தா பண்ணாதீங்க பாஸ்...என்னால ஓபி அடிக்காமலும் இருக்க முடியாது...காபி குடிக்காமலும் இருக்க முடியாது” என்று  அவனுடைய கணினியை அவள் மூடி வைக்க நிமிர்ந்தவன் “சந்தியா, ஏற்கனவே இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல ரெண்டு மணி நேரம் வேஸ்ட் ஆகிடுச்சு. இப்போ ஒரு ஹாப் அன் அவர் வேஸ்ட். நிறைய பெண்டிங் வொர்க் இருக்கு. நீ வேணா போய்ட்டு வா. ஆனா எட்டு மணிக்கு தான் நீ வீட்டுக்கு போக முடியும் ” என்றான் கார்த்திக்.

சந்தியா “எட்டு மணிக்கா? ஈவினிங் டியூஷன் இருக்கு கார்த்திக்...வீட்டில வேற சொல்லவே இல்லையே“ என கேட்க “உங்க வீட்டிலையும், அர்ஜுன் கிட்டயும் நானே சொல்லிட்டேன்...இன்னும் வேற யார்கிட்ட சொல்லணும்?” என அவளிடம் கேட்க மலைத்து போய் பார்த்தவள் “எல்லாமே பிளான் பண்ணி தான் நடத்துறீங்களா பாஸ்? “ என கேட்க “ஆமா” இப்போது அவன் ஒற்றை வரியில் விடையளித்தான். பின், “சீக்கிரம் போயிட்டு வா. உன்கிட்ட பிஸ்னஸ் விஷயமா பேச வேண்டியிருக்கு” என்று மூடி வைத்த கணினியை மறுபடியும் திறக்க, படக்கென்று அவனது மடி கணினியை பிடுங்கியவள் “வாங்க பாஸ்”, என முன்னே நடக்க, “எங்க போற சந்தியா” என கேட்டுக்கொண்டே அவன் நிதானமாக எழுந்தரிக்க, “நீங்க எங்கிட்ட கேக்காம தான பிளான் பண்ணீங்க, நானும் என்னோட பிளான்னை சொல்ல மாட்டேன்” சொல்லிகொண்டே அந்த அறையை விட்டு வெளியேற கார்த்திக்கோ பயந்து விட்டான். “அய்யோ...இந்த பேய் பழி வாங்க என் லேப்டாப்பை சுக்கு நூறாக உடைத்திடுவாளோ....பேக்அப் கூட எடுத்து வைக்கலையே” என அரண்ட கார்த்திக் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வர, வெளியில் பணி செய்தவர்கள் அவனை வித்தியாசமாக பார்ப்பதை கவனித்தவன் ஓடுவதை நிறுத்தி, “ஹி..ஹி..”என அவர்களிடம் வழிந்து விட்டு தலையை கோதியவாறு, சாதாரணமாக நடப்பது போல பார்வையால் மட்டும் சந்தியாவை தொடர்ந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.