(Reading time: 30 - 60 minutes)

வன் அந்த இடத்தை கடக்கும் வரை வந்த சிரிப்பை  அடக்கி கொண்டிருந்த ஊழியர்கள், அவன் சென்றவுடன் விழுந்து விழுந்து சிரித்தபடி “இன்னைக்கு என்ன நடக்குதுன்னே தெரியல...ஏதோ பேயை கண்ட மாதிரி மொதல மது மேடம் ஓடுனாங்க...அடுத்து கார்த்திக் சாரும் இப்படி ஓடி வர்றார். யாரு அந்த பொண்ணு  புதுசா இருக்கு? இவங்களுக்கு சொந்தமா இருக்குமோ?” என அங்கே ஒரே சலசலப்பு....

மடி கணினியை எடுத்து கொண்டு, பேன்ட்ரி அதாவது காபி, தேநீர் குடிப்பதற்கு என ஒதுக்கப்பட்ட  இடத்திற்கு வந்தாள் சந்தியா. “என்ன வேலை பாக்கிற சந்தியா? லேப்டாப்பை கொடு“ என்ற படி அங்கே வந்த கார்த்திக்கிடம், “அந்த வெண்டிங் மெஷின்ல காப்பச்சின்னோ பிரஸ் பண்ணுங்க பாஸ்” என்று அங்கு பொருட்கள் வைப்பதற்கு போடப்பட்டிருந்த மேடையில் ஏறி உட்கார்ந்த படி மடியில் அவன் கணினியுடன். “ஐ அம் யுவர் பாஸ் சந்தியா” என்று சொல்லி கொண்டே, வேண்டா வெறுப்பாக அந்த வெண்டிங் மெஷினில் முழு பலத்துடன்   அதில் இருந்த பட்டனை அழுத்தி அந்த அம்மையாருக்கு காபியை தயாரித்து நங்கென அவள் அருகில் வைத்து, அவளை பார்க்க  “பாஸ்..எட்டு மணி வரையும் என் கொடுமையை நீங்க தாங்கி தான் ஆகணும் ” என்ற படி அவன் எங்கே லேப்டாப்பை பிடுங்கி விடுவானோ என தன் கைக்குள் அணைத்து வைத்தவளை  பார்த்த  கார்த்திக் கண்களில் ஒரு மின்னல்.  “ஓகே..எட்டு மணி வரையும் நீ எனக்கு டைப் பண்ற வேலைய பாத்தா போதும் “ என்று அவள் அருகில், நூலிழை அளவு இடைவெளி விட்டு அமர்ந்தான். “பாஸ் தள்ளி உட்காருங்க. யாராவது என்ன நினப்பாங்க?” என்றாள் எரிச்சலுடன். “யாமிருக்க பயமேன்..சந்தியா” என்றான் குறும்பாக.

“உங்க தெய்வானை கூப்பிட்டு அந்த பக்கம்  உட்கார வச்சுக்கோங்க..பெர்பெக்டா இருக்கும்” என்றபடி காபியை சுவைத்தாள்.

“தெய்வானைன்னா அபிய சொல்றியா?” என கார்த்திக்.

“நீங்க அந்த அபியோட  ஹம் அப்ப்கே ஹெயின் கவுன் வீட்டில தான் ஓட்ட முடியும் பாஸ்....ஆபிஸ்க்கு வந்தா கந்தன் கருணை....சட்டை மேல எத்தனை பட்டன்...உங்களை சுத்தி எத்தனை பிகரு.  கலக்குறீங்க பாஸ்” என்ற சொல்லி விட்டு சுவைத்த காபியை அருகில் வைத்தாள்.

“அப்ப மது தான் தெய்வானை ...நீங்க வள்ளியா? என்ன அனாலஜி என்ன அனாலஜி ...நீ தான் கலக்குற சந்தியா” என சொல்லும் போது அவளது காபியை அவன் சுவைத்து கொண்டிருந்தான்.

அதை பார்த்து முகம் சுழித்த சந்தியா “ப்ச்...என் காபி...யக்கி...வலாக்...” என உதட்டை குவித்தாள்.

“வாமிட் வருதா....அதுக்கெல்லாம் அவசர படக்கூடாது சந்தியா...சரி உங்க பூமாக்கா பர்ஸ்ட் நைட்ல அப்படி என்ன குறும்பு பண்ணி வச்ச?” என கார்த்திக் கேட்க,

“அதெப்படி உங்களுக்கு தெரியும்?” என கேட்க,

“காலையில்  ஒரு ரெண்டு நிமிஷம் முன்னாடி யோகா கிளாஸ்க்கு வந்துட்டு, நீ ஏதோ பங்க்ச்சுவாலிட்டி திலகம் மாதிரி சக்திக்கு கொள்ளு கஞ்சி பனிஷ்மென்ட் கொடுத்து கொடுமை படுத்த பாத்தேல்ல...புவ்வா வாங்கி கொடுத்தேன்..எல்லாத்தையும் கக்கிட்டா... பூமாக்கா மாதிரி அவளுக்கும் செய்துடுவன்னு ஏதோ மிரட்டி வச்சிருக்கன்னு சொன்னா...அதை முறியடிக்க நான் ஹெல்ப் பண்றேன் அவகிட்ட  சொல்லிருக்கேன். இப்போ அவளும் என் கட்சி, என் வள்ளிக்கண்ணு” என்றான் கார்த்திக்.

“சக்கு மக்கு இவன்கிட்ட லூசு மாதிரி உளறி வச்சுருக்கு. உனக்கு இருக்கிடி ஓவரா ஆடுற...” மனதுக்குள் சக்தியை கருவியவள், “நீங்க மட்டும் தான் போட்டு வாங்குவீங்களா...எனக்கும் மது எல்லாமே சொல்லிட்டாளே...இப்போ அவ என் கட்சி” என்றாள் சந்தியா.

“சான்ஸே இல்ல. மது எப்பவும் என் கட்சி. அவ என்னை விட்டே கொடுக்க மாட்டா.” என்றான் கார்த்திக்.

“பாக்காலாம் பெட் என்ன? மது என் உயிர் தோழியா ஆக்கி காமிக்குறேன் “ என்றாள் சந்தியா.

“உருப்படியா ஏதாவது யோசி....அவள கல்யாணத்துக்கு சம்மதிக்க  வைக்கிறியா? அப்படி பண்ணா  உனக்கு என்ன வேண்ணாலும் கொடுக்கிறேன்” என்றான் கார்த்திக்.

“ என்ன வேணும்னாலும்...னா உங்களையா பாஸ்? எனக்கு வேண்டாம்ப்பா. சரி, மதுவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணுமா? எந்த பொண்ணும் அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க, அப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு வாய்விட்டு கேப்பாங்களா ? நாம தான் நல்ல பையனா பாத்து” என்று சொல்ல அரம்பித்தவளை தடுத்த கார்த்திக்,

“ஆரம்பிச்சிட்டியா உன் மொக்கையை...???? அவளுக்கு அம்மா அப்படி ட்ரை பண்ணி தான் சூசைட் வரைக்கும் போய் அவளை காப்பத்துறதே பெரிய கஷ்டமாகி போச்சு. அவளுக்கு கல்யாணத்தில இன்டெரஸ்ட் இல்ல. அவ பாதுகாப்பா எங்க வீடை தான் நினைக்குறா....கல்யாணமாகி வேற வீட்டுக்கு போக பயப்படுறா” என்றான்.

“அப்போ வீட்டோட மாப்பிள்ளையா பாத்திடுங்க. “ என்றாள் சந்தியா.

“நீ  ஈஸியா இப்படி கண்ணை உருட்டி உருட்டி சொல்லிடுவ. அவளை சமாளிக்க நாங்க படுற பாடு எங்களுக்குத் தானே தெரியும்...மாப்பிள்ளைன்னு பேச்ச எடுத்தாலே அழுதுடுவா. பயங்கர டிப்ரஷன்ல இருந்தா. நான் இங்க வந்த பிறகு, அவளோட போகஸ் இந்த பிஸ்னஸ்ல மாத்தின பிறகு பெட்டரா இருக்கா.”

“அப்பாவை விட அதிகமா மதுக்கு கேர் தேவை. ஷி இஸ் சோ டெலிகேட். அதுனால அவளை நல்லா புரிஞ்சிகிட்டவன் தான் மாப்பிள்ளையா வர முடியும்” என்றான் கார்த்திக்.

“ஓ...அப்போ நீங்களே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான” என்று  சந்தியா  வினவ,

“உளராத சந்தியா “, என எரிச்சல் பட்டவன், “நீயும் மொட்டை மாதிரியே யோசிக்கிற. மது இஸ் மோர் தேன் எ சிஸ்டர், மோர் தேன் எ பிரண்ட் டு மி  இருந்தாலும், ஷி கான்ட் பி மை வைப்” என்றான் கார்த்திக்.

சந்தியா,  “டென்ஷன் ஆகாதீங்க பாஸ்.  ஆனா அது யாரு மொட்டை? சிவாஜில வர்ற எம்.ஜி.ஆர் ரா ?“ என விழிகள் விரிய அவள் வினவ,

கார்த்திக் “எம்.ஜி.யாரு, சிவாஜின்னு சொல்லிக்கிட்டிருக்க....மது மொட்டைன்னாலே டென்ஷன் ஆவா ... இப்படியெல்லாம் சொல்லாத. நீ நினைக்கிற மாதிரி அவளுக்கு என் மேல காதல் கத்திரிக்காய் எல்லாம் கிடையாது. ஏன்னா நாங்க அப்படி பழகினது இல்ல.” என்றான்.

சந்தியா “நான் அப்படியெல்லாம் நினைக்கலயே ” என ராகத்துடன் சொல்ல,

அவளை நக்கலாக பார்த்தவனை, “சரி...சரி......அப்புறம் ஏன் அவ உங்களை கல்யாணம் பண்ண ஆசை பட்டா? மது பளாஸ் பேக்கை கண்டின்யூ பண்ணுங்க” என்றாள்.

கார்த்திக், “கல்யாண பேச்சை ஆரம்பித்தவுடனே மேடம்க்கு பயம் வந்துடுச்சு. ரெம்ப இன்செக்யூர்ட்டா பீல் பண்ணிட்டு, ஒரு ஸ்டேஜ்ல, தெரியாதவன கட்டிக்கிறதுக்கு  உன்னை கல்யாணம் பண்ணா என்னன்னு கேக்க ஆரம்பிச்சிட்டா......... கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு புரிய வைச்சு, கடைசியா இப்போ உன்னை கல்யாணம் பண்ணாட்டினாலும் பரவாயில்லை, ஆனா உங்க வீட்டை விட்டு எங்கேயும் போக முடியாதுன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கா” என்றான்.

“ஆனா அவ இந்த அளவுக்கு மனசு மாறுனதே பெரிய விஷயம். அவளுக்கு பேரன்ட்ஸ் தான் சரியா அமையல கல்யாண வாழ்க்கையாவது நல்லபடியா அமையணும் சந்தியா. “ என்ற கார்த்திக்கிடம்

“ஏன் அவங்க பேரண்ட்ஸ்க்கு என்ன ஆச்சு?” என சந்தியா கேட்க,

“ஏதுக்கு கேக்குற? கேட்டுட்டு போய் உங்க பாமிலி நெட்வொர்க்ல டெலிகாஸ்ட் பண்றதுக்கா?” என்றான் கார்த்திக்.

“அப்போ நீங்க எதுக்கு பாஸ் மது விஷயத்தை பத்தி இவ்வளோ நேரம் என்கிட்ட பேசுறீங்க?...அதையும் தானே பாமிலி நெட்வொர்க்ல சொல்லுவேன்?” என்றாள் சந்தியா.

“அட என் வள்ளிக்கண்ணுக்கு பல்பு எரியுதே....” என விரலால் அவள் தலையை சுற்றியவாறு கிண்டலடித்து விட்டு “என்னை பாத்த பத்து நிமிஷத்தில என்கிட்ட மதுவை பத்தி போட்டு வாங்குனவ தான நீ.....இன்னைக்கு அவ கூட இவளோ நேரம் இருந்திருக்க, கண்டிப்பா விஷயத்தை கறந்திருப்ப.........அறையும் குறையுமா கேட்டுட்டு என்னை பத்தி தப்பு  தப்பா யோசிச்சு வைச்சு இருப்ப. நேத்து நைட் நீ கேட்டப்பவே, அவளோட மாரேஜ் பத்தி உன்கிட்ட பேசணும்னு முடிவு பண்ணிட்டேன். அது மட்டும் இல்ல, அத்தை இப்போ உயிரோட இல்ல. மாமாவும் பிரிஞ்சு போயிட்டாரு. அவங்கள பத்தி இப்போ பேசி  ஒன்னும் ஆகபோறது கிடையாது.....இப்போ ஆகவேண்டியது மதுவோட கல்யாணம் மட்டும் தான்...….அதுனால அதை பத்தி மட்டும் பேசுவோமா....... என் வள்ளிக்கண்ணு ”

“என்ன கார்த்திக்? சும்மா வள்ளிக்கண்ணு வள்ளிக்கண்ணுடன்னுட்டு.. நான் வள்ளிக்கண்ணும்  இல்ல கொள்ளிகண்ணும் இல்ல.....கால் மீ சந்தியா “ என்றாள் சந்தியா.

“இப்படி தான என்னை ஸாண்டி ன்னு கூப்பிடாதன்னு சொல்லிட்டு அந்த ரிக்கை மட்டும் மெனக்கெட்டு அப்படி கூப்பிட சொல்ற...என்னை கடுப்பேத்த தான....இரு...இரு ….உன்னை எப்படி கடுப்பேத்துறேன்னு பாரு” என்றான் கார்த்திக்.

“சரி அதை அப்புறம் பாக்கலாம்..இப்போ மது கதைக்கு வருவோம்... கார்த்திக்..பிலீவ் இட் ஆர் நாட், இதே  ஸ்டோரி லைன்ல எந்த படமும் நான் பாத்ததே இல்ல.....இண்டரஸ்டிங்......இப்போ என்ன பண்ண போறீங்க கார்த்திக்? மதுவை எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க போறீங்க?...” என கேள்வி மழை பொழிந்தாள்.

கார்த்திக், “வள்ளிக்கண்ணு, நீ  அப்படி கேக்க கூடாதுடா.... நாம என்ன பண்ண போறோம், எப்படி மதுவை ஒத்துக்க வைக்க போறோம்ன்னு கேக்கணும், அப்ப தான் இன்னும் இண்டரெஸ்டிங்கா இருக்கும்.” என்றான் கார்த்திக்

சந்தியா “ஏன் கார்த்திக் மது நல்லாயிருக்கணும் சொல்லிட்டு... ப்ளான் போட என்னை போய் கூப்பிடுறீங்க ...சரி தெய்வத்தால் ஆகாது எனினும் தமிழ் சினிமா தன் மெய் வருத்த  ஐடியாக்கள் தரும்.  அதை வச்சு ப்ளான் பண்ணலாம். ஆனா, மதுவை பத்தி நல்லா அறிஞ்ச புரிஞ்ச தெரிஞ்ச நல்ல மாப்பிள்ளைக்கு எங்க போக? “ என்றாள் .

கார்த்திக் “மாப்பிள்ளை ரெடியாகி பல வருஷமாச்சு. மதுக்கு மட்டும் அவன் தான் மாப்பிள்ளைன்னு  தெரியாது. என் ப்ரண்ட்...அண்ட் பிஸ்னஸ் பார்ட்னர் நிரஞ்சன் போஸ் அவர்கள் பல வருஷமா  மொட்டைய நினச்சு உருகிட்டு இருக்கான். என்னோட IIT ல படிச்சான்.  ஹி இஸ் மை பெஸ்ட் பிரண்ட். மதுவுக்கும் தான். இப்போ மலேசியால ஒரு மிட் சைஸ்டு சாப்ட்வேர் கம்பெனி நடத்திகிட்டு இருக்கான். என்னை விட நல்ல பையன்..” என்ற கார்த்திக்கிடம்

“உங்களை விட கெட்ட பையன் இந்த உலகத்திலே கிடையாது “ என்றாள் சந்தியா.

அவள் சொன்னவுடன் கைகடிகாரத்தில் மணியைப் பார்த்தவன் “இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்தில் எல்லாரும் கிளம்பிடுவாங்க... அப்புறம் நீயும் நானும் தான் இருக்க போறோம். அப்போ நீ சொன்னதை ப்ரூவ் பண்றேன்” என குறும்பாக சிரித்த படி சொல்ல,

“உலகத்திலே கெட்ட பொண்ணுன்னு என்னை ப்ரூவ் பண்ண வைக்க மாட்டேங்க  தானே  பாஸ்” என பதிலுக்கு கேட்டாள்  சந்தியா. பின் அவளே,

“டைம்மே இல்ல...பெண்டிங் வொர்க் இருக்குன்னு  சொல்லிட்டு, இப்படி கடலை போட மட்டும் எப்படி டைம் இருக்கு?”

 

“என்ன பண்ண?...என் லேப்டாப்க்கு வள்ளியோட அருள்  கிடைக்குதே! டைம் ஆனாலும் பரவாயில்லைன்னு விட்டுட்டேன் “ என சொன்னவுடன் தான் அந்த லேப்டாப்பை அணைத்து வைத்திருந்தவளின் முகம் அஷ்டகோணலாக, “எனக்கு வேண்டாம் “ என அதை அவனிடம் நீட்ட, கார்த்திக் சிரித்துக் கொண்டே “நீயே வைச்சுக்கோ, இன்னக்கு நீ தான் எனக்கு டைப்பிஸ்ட்...” என சொல்ல “இருங்க பாஸ் ஒரு டு மினிட்ஸ்ல வந்துடுறேன்” என்று அதை அவனிடம் கொடுத்து விட்டு அவள் கிளம்ப, “நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன்.  ஏன்  பக்கவாதம் வந்த மாதிரி லெப்ட் ஹன்ட்டை அசைக்காமலே வைச்சிருக்க?” என கேட்க, “அதெல்லாம் ஒரு பொம்பளைங்க சமாச்சாரம்..உங்களுக்கு புரியாது” என சொல்லிகொண்டே அந்த இடத்தை விட்டு சென்றாள்.

சிறிது நொடியில் பாண்ட்ரிக்கு திரும்பியவள், மதுவும் கார்த்திக்கும் அங்கு அலுவலக HR தினேசுடன் பேசுவதை பார்த்தாள். கார்த்திக், அவளை பார்த்ததும் அவசரமாக அழைத்து அவனருகில் அமர்த்தியவன், தினேசிடம் அவர்கள் மூவரையும் படம் பிடிக்க சொன்னான்.  கார்த்திக்கின் வலது புறத்தில் மதுவும் இடது புறத்தில் சந்தியாவும் உட்கார கார்த்திகேயன் அவதாரம் போல  புகைப்படம் வந்தது.....

மதுவும், தினேசும் வீட்டிற்கு கிளம்ப, கார்த்திக், சந்தியாவை கூட்டிக் கொண்டு  கார்த்திக் அறைக்கு திரும்பினான். பின் கார்த்திக் தனது அலுவலக விவரங்களை சந்தியாவிற்கு விளக்கினான். “சந்தியா நானும் நிரஞ்சனும் சேர்ந்து ஒரு ப்ராடக்ட் பண்றேன். அது என்ன கான்செப்ட்ன்னா, இப்போ பேஸ்புக் எடுத்துக்கோ. அதுல ஒரு xyz கம்பனி பத்தி யாரெல்லாம் பேசுறாங்க, அவங்க கருத்துக்கள் என்ன, அவங்க சொல்லும் குறைகள் இந்த மாதிரி கோடிக்கணக்கில இண்டர்நெட்ல சிதறி கிடக்கிற விவரங்களை  சேகரிச்சு அதை அனலைஸ் பண்ணி ரிபோர்ட் ரெடி பண்றது தான்.  நீ உங்க ப்ரொபசரோட சேர்ந்து பண்ண அந்த அல்காரிதம் (வழிமுறை)  வச்சு இந்த ப்ராடக்டை  பண்ணா இதோட வால்யூ கூடும். ஆனா ஏற்கனவே முக்கால்வாசி டிவல்ப்மென்ட் முடிச்சாச்சு. இப்போ உன்னோட கான்செப்ட்டை என்ஹான்ஸ்மென்ட்டா சேர்க்க ப்ளான் பண்றேன். அதை பத்தி ஒரு அவுட்லைன் போட்டு வைச்சிருக்கேன். நீ அதில டீட்டெயில்டா வொர்க் பண்ணிட்டு,  வர்ற வெள்ளிக்கிழமை மலேசியால இருக்கிற நம்ம நிரு & டீம்க்கு ப்ரெசென்ட் பண்ணப் போற” என அவன் பேசிக் கொண்டே போக,

அவனை இடைமறித்த சந்தியா “...கார்த்திக், இப்படி வந்த அன்னைக்கே அணுகுண்டா வீசினா எப்படி?..கிவ் மி சம் டைம்...எனக்கு மூச்சு திணறுது...முக்கால்வாசி டெவலப்மெண்ட் முடிஞ்சதுன்றீங்க...அதை கத்துக்க நாலு நாள்ல எப்படி முடியும்? இதுல அந்த அவுட்லைன்ன டிவலப் பண்ண வேற சொல்றீங்க....ரெம்ப கஷ்டம். அதுவும் என்ன ஏதுன்னு தெரியாமலே என்னால கமிட் பண்ண முடியாது கார்த்திக்” என பட படவென பொரிந்தாள்.

அதற்கு கார்த்திக்,  “புருஞ்சிகோ சந்தியா. திடீர்ன்னு நெக்ஸ்ட் வீக் US போக வேண்டிய சிட்டுவேஷன் வந்திருக்கு. இந்த சனிக்கிழமை போயிட்டு அடுத்த ப்ரைடே தான் வருவேன். அதுனால தான் நான் ரஷ் பண்ண வேண்டியிருக்கு. இது உனக்கு கஷ்டம் தான். ஆனா செய்ய முடியாதது இல்லை. ஏற்கனவே மதுகிட்ட சொல்லிட்டேன். சிக்மா ப்ரஜெக்ட் தவிர அவ உனக்கு வேற எந்த வேலையும் கொடுக்க போறது இல்ல. உன்னோட போகஸ் இதுல மட்டும் தான். என்னை நம்பி கமிட் பண்ணு. உனக்கு நான் ஹெல்ப் பண்றேன் “ என உறுதி அளித்தான் கார்த்திக்.

“நீங்க கெட்ட பையன்னு  ப்ரூவ் பண்ணிட்டீங்க கார்த்திக்” என்றாள் சலிப்புடன்.

“ஹா..ஹா...” கார்த்திக் சிரித்த படி, “என் வள்ளிக்கண்ணு,  நான் சொல்றதை எல்லாம் கேட்டு நல்ல பொண்ணுன்னு ப்ரூவ் பண்ணிடுவா “ என்றான்.

“ஆசை தோசை....தோசை.....அய்யோ எனக்கு  பசிக்குது” என சந்தியா சொல்ல,

“பசில இளரத்தம் வேணும்ன்னு  என்னை வேட்டையாடிடாதம்மா   ப்ளீஸ்...வாழ வேண்டிய வயசு”, என்றான்  கிண்டலாக.

“கிண்டலா? நான் இப்போவே வீட்டுக்கு கிளம்புறேன்” என சந்தியா மிரட்ட,

அவனருகில் உட்கார்ந்திருந்த சந்தியாவின் தலையில் பேனாவால் தட்டிய படி “சாப்பாட்டு ராமி.....நாளைல இருந்து உனக்கு டின்னர் ஏற்பாடு பண்ணிடுறேன். இன்னைக்கு பொறுத்துக்கோ ப்ளீஸ். ஜஸ்ட்  ஒரு மணி நேரம் தான்...” என  கெஞ்சலாக முடித்தான்.

சந்தியா வேகமாக தனது பையை திறந்து உள்ளே துலாவியவாறு  “கார்த்திக் உங்களுக்கு  சிப்ஸ், ஓரியோ, பைட்ஸ், சீட்டோஸ், மில்க் பிகிஸ்  இதுல எது பிடிக்கும்” என கேட்க,

“எனக்கு எதுவமே பிடிக்காது. இத்தனையும் இதுல வச்சிருக்க? “ என்றான் கார்த்திக் வியப்புடன்.

சந்தியா அதற்கு “முண்டாசு கவிஞன் என்ன சொன்னான்? பசிக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு....நான் பாரதி கண்ட புதுமை பெண். அதுனால பசியே வராத படி என் பைல ஏகப்பட்ட சரக்கு வைச்சிருப்பேன். அதை விடுங்க பாஸ்.  உங்களுக்கு ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா இந்த மாதிரி ப்ரூட்ஸ் பிடிக்குமா?” என கேட்க,

“பேக்ல ஒரு சூப்பர் மார்க்கெட்டே வச்சிருப்ப போல..உன்னை விட்டா எட்டு மணி வரையும் சாப்பாட்டுகிட்டே இருப்ப” என சொல்லி அந்த பையை பிடுங்கியவன், “நாளைல  இருந்து வெறும் லேப்டாப் பாக் மட்டும் தான் கொண்டு வரணும். வீணா என்னை கெட்ட பையனாக்கிடாத!” என போலி மிரட்டல் விடுத்தான்.

வீட்டில் தன்ராஜ் லக்ஷ்மியிடம் சந்தியாவை விசாரித்துக் கொண்டிருந்தார். “மணி ஏழு. ஏன் பாப்பா வர இவ்வளவு லேட் ஆகுது? முதல் நாளே அவ்வளவு வேலையா? நான் போய் கூப்பிட்டு வந்துடவா?” என லக்ஷ்மியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். லக்ஷ்மி அதற்கு “புது வேலை, முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். வர முன்ன பின்ன ஆகும்ன்னு அவங்க ஆபிஸ்ல சொன்னதா ஸ்ரீ சொன்னா.”

“வயசு பிள்ள இப்படி நேரங்கெட்ட நேரத்தில வர்றது நல்லா இல்ல லக்ஷ்மி. சம்பளம் கம்மின்னாலும் லெக்சரர்  வேலைக்கு போயிருந்தா இந்த பிரச்சினை இல்ல. மத்த மூணு பிள்ளைகளையும் கரை சேத்த மாதிரி இவளுக்கும் காலாகாலத்தில ஒரு கல்யாணத்தை முடிச்சா தான் எனக்கு நிம்மதி”  என்றார் தன்ராஜ் ஒரு பெருமூச்சுடன்.

“கல்யாண விஷயமா நான் ஸ்ரீகிட்ட பேசுனது காத்து வாக்கில சந்துக்கு கேட்டுடுச்சு. என் மேல அப்பாக்கு நம்பிக்கை இல்லையா?  ஏன் இப்பவே உறுதி செய்யணும்? அடுத்த வருஷம் பாக்கலாம்லன்னு கேக்குறா” என லக்ஷ்மி தெரிவித்தார்.

“என் பிள்ள மேல எனக்கு எப்படி நம்பிக்கை இல்லாம  போகும். அந்த நம்பிக்கை இருக்க போய் தான் வடிவுகிட்ட வாக்கு கொடுத்திட்டு, பாண்டியன் ஜாதகத்தை வாங்கிட்டு வந்திருக்கேன். வடிவும் இப்போ உறுதி செய்திட்டா மட்டும் போதும் கல்யாணம் மெதுவா வச்சுக்கிலாம்ன்னு சொல்லிருக்கா. முதல்ல  ஜாதகம் பொருந்தட்டும் அதற்கு பிறகு மற்றதை  யோசிக்கலாம்.

அதுவரைக்கும் அவகிட்ட இதை பற்றி பேசாத” என்று தன்ராஜ் கடைசி வாக்கியத்தை கண்டிப்புடன் முடித்தார்.

ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 11   

Go to Episode 13

 

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.