(Reading time: 17 - 33 minutes)

னியா கிளம்பி சென்ற உடன் இளவரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். அவன் எண்ணியதே வேறு. ஆனால் நடந்ததோ அதற்கு தலைகீழாய். இப்போது என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் அமர்ந்து விட்டான்.

இளவரசனுக்கு எப்படி அவன் இப்படி இனியாவிடம் பேசினான் என்றே தெரியவில்லை. அவன் இனியாவிடம் ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று முன்னரே முடிவு செய்து எல்லாம் செய்யவில்லை. அவன் இன்று இருந்த டென்ஸன் எல்லாம் இனியா வந்த பிறகு பறந்து விட்டது. அவள் வந்த பிறகு சூழ்நிலையே மாறி விட்டது. அந்த சந்தோசத்தில் தான் அவன் திடீர் என்று அவன் விருப்பத்தை பற்றி கூறிவிட்டான்.

அவள் யோசித்து சொல்கிறேன் என்று சொன்னதை அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அவனுக்கு அவள் விருப்பமும் தெரிந்ததால் தான் அவனால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

வீட்டிற்கு முதல் மகன், நன்கு படிப்பவன், அவன் தந்தைக்கு செல்ல மகன். அவன் சிறு வயதில் இருந்தே அவன் நினைத்தது எல்லாம் அவனுக்கு கிடைத்து விடும் என்பதில் அவனுக்கு கர்வம் அதிகம். கல்லூரியிலும் அப்படி தான். அவன் தான் எப்போதும் முதலில் வருவான். அவன் அழகை பார்த்தும், படிப்பை பார்த்தும், நிறைய பெண்கள் அவன் பின்பு சுற்றினார். ஆனால் அவனுக்கு ஏனோ பெண்கள் மீது எப்போதும் விருப்பம் இருந்தது இல்லை.

ஆனால் இப்போது அவன் ஒரு பெண்ணை விரும்புவதாக கூறி, அவள் யோசிப்பதாக கூறியது ஏனோ அவள் அவனை மறுத்து விட்டதாகவே அவன் எண்ணினான். அவனுக்கு அது அவன் தன்மானத்திற்கு விழுந்த அடியாக தோன்றி அவனின் வழக்கமான கண்மூடித்தனமான கோபத்தில் ஏதேதோ பேசி விட்டான்.

இப்போது அவள் பேசி விட்டு சென்ற பிறகு தான் அவனுக்கு அவன் செய்த தவறே தெரிந்தது. ஆனால் இப்போது என்ன செய்வது. அவன் முதலில் இருந்து பேசியதற்கு அவள் அவனை மன்னித்து இவ்வளவு நாள் பேசியதே பெரிய விஷயம். இன்று அதையும் கெடுத்துக் கொண்டது போல் பேசியாகி விட்டது. இப்போது என்ன செய்வது என்று தலையை பிய்த்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

அங்கு இனியாவின் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது. எப்படி வீடு போய் சேர்ந்தாள் என்றே அவளுக்கே தெரியவில்லை. என்னவெல்லாம் பேசி விட்டான். எப்படி அவனால் அப்படி பேச முடிந்தது. எவ்வளவு தான் சமாதானப்படுத்தி பார்த்தும் அவள் மனது சமாதனம் அடையவில்லை. எவ்வளவு இழிவாக பேசி விட்டான்.

வீடு சென்ற இனியாவை பார்த்த அவள் அன்னையோ அதிர்ந்து விட்டார். “என்னாயிற்று இனியா. என்னம்மா, இப்படி உட்கார்ந்திருக்கிறாய். உடம்புக்கு ஏதும் சரி இல்லையா, இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாய்.” என்று இனியாவை தொட்டு பார்த்தார்.

இனியா பேசும் நிலையில் கூட இல்லை. “இல்லை” என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.

அவள் அன்னையும் “பீவர் கூட இல்லையேடா. ஆனா ஏன் உன் முகம் இப்படி சோர்ந்து கிடக்கு” என்றார்.

“இல்லம்மா தலை வலிக்குது. கொஞ்சம் டயர்டா இருக்கு” என்று சொல்வதற்குள் சோர்ந்து போனாள்.

“ஐயோ ரொம்ப தலை வலிக்குதாடா. இது வரைக்கும் நான் உன்ன இப்படி பாத்ததே இல்லையேடா.” என்று புலம்பியவாறே அவளின் தலை வலிக்கு மாத்திரையை கொடுத்து சிறிது நேரம் படுத்து ஓய்வெடுக்க சொன்னார்.

இனியாவும் அவள் அறைக்குள் நுழைந்து அப்படியே கட்டிலில் வீழ்ந்தாள். அவளுக்கு ஆயாசமாக இருந்தது. தன்னை எப்படி எல்லாம் பேசிவிட்டான் என்று அவளுக்கு மனதே ஆறவில்லை. திரும்ப திரும்ப அவன் பேசியதே அவளுக்கு கேட்டுக் கொண்டிருந்தது.

அதையே நினைத்து நினைத்து வருந்திக் கொண்டே அப்படியே உறங்கி போனாள்.

இரவு 7 மணி போல் இனியாவை அவள் தாய் எழுப்பினார். இனியாவிற்கு கண்ணையே விழிக்க முடியில்லை. தலை மிகவும் பாரமாக இருந்தது.  இனியாவை தொட்டு பார்த்தால் அவளுக்கு காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது. எப்படியோ இனியா கண் விழித்து விட்டாள்.

“என்னடா இப்படி காய்ச்சல் அடிக்குது. வா நம்ம டாக்டர் கிட்ட போயிட்டு வந்துடலாம்”

இனியாவால் பேசவே முடியவில்லை. நன்றாக கண்ணை விழித்து பார்த்து விட்டு எழுந்து முகத்தை மட்டும் கழுவி வந்தாள்.

பின்பு “இல்லம்மா. ஒரு பாராசிடமால் டேபிலேட்டும், தலை வலிக்கு ஒரு டேபிலேட்டும் தா. காலையில சரி ஆகிடும். எனக்கு இப்ப டாக்டர் கிட்ட எல்லாம் போக வேண்டாம்.”

“என்னடா இப்படி சொல்ற. இங்க பக்கத்து தெருல இருக்கற ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்மா”

“இல்லம்மா. எனக்கு இப்ப டேபிலேட் மட்டும் கொடுங்க. நாளைக்கு சரி ஆகலன்னா நான் எங்க ஹாஸ்பிடல்லவே பாத்துக்கறேன்”

“சரி இரு. நான் கொஞ்சம் ரசம் சாதம் மட்டும் எடுத்துட்டு வரேன். அத மட்டும் சாப்டுட்டு டேபிலேட் போட்டு தூங்கு.”

சொன்ன மாதிரியே சாதம் பிசைந்து எடுத்து வந்து அவளுக்கு ஊட்டி விட்டு மாத்திரையும் கொடுத்தார் அவள் தாய். இனியா அதற்குள்ளே ஓரளவுக்கு முகம் தெளிந்து இருந்தாள்.

“சரி நீ தூங்குடா. நீ தூங்கின பிறகு நான் கீழே போறேன்”

“இல்லம்மா. இப்ப ஏனோ தூக்கம் வர மாதிரி இல்ல. ஆனா டையர்டா இருக்கு”

“சரி டா. நீ அப்படியே படு. கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்துடும். உன்ன பாத்தா உட்கார கூட தெம்பு இல்லாத மாதிரி இருக்கு”

ம்ம் என்றவாறே இனியா படுத்துக் கொண்டாள். இனியாவின் தாய் அவள் தலையை அழகாக வருடி விட்டுக் கொண்டிருந்தார்.

“அம்மா. எனக்கு ஒரு அண்ணன் இருந்திருக்கலாம் இல்லம்மா” என்றாள் இனியா.

இனியாவின் தாய்க்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா இது இவள் இன்று ஏதேதோ பேசுகிறாள் என்று நினைத்துக் கொண்டார்.

“ஏன் டா உனக்கு திடீர்னு அண்ணன் கேட்கற” என்று சிரித்துக் கொண்டே தான் கேட்டார்.

“இல்ல. எனக்கு எதாச்சும் ஒண்ணுன்னா, இல்ல என்ன யாருனா திட்டிட்டாங்கனா அண்ணன்னு இருந்தா அவர் போய் கேட்பாங்க இல்ல, அதான்” என்றாள்.

“ஏன் டா. நம்ம பாலு உன்ன தங்கச்சி மாதிரி தானே நினைக்கறாரு. உனக்கு எதாச்சும் ஒண்ணுன்னா அவர் சும்மா விட்டுருவாரா இல்ல உங்கப்பா தான் சும்மா இருப்பாரா. அதெல்லாம் விடு. இப்ப உனக்கு என்னாச்சி. உன்ன யாருடாம்மா ஏதும் சொன்னது. இப்ப ஏன் இப்படி எல்லாம் பேசற”

“இல்லம்மா. எனக்கு ஒன்னும் இல்ல. என்ன யாரு எதாவது சொல்ல போறது. சும்மா ஏதோ அண்ணன்னு இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சி. அவ்ளோதான். சரிமா எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கறேன்” என்று போர்வையை போர்த்திக்கொண்டு படுத்து விட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.