“குட் மார்னிங் மம்ஸ்... இன்னும் என்ன இது போல ஓல்ட் ஃபேஷன்ட் கேசட் டேப் எல்லாம்... நான் வாங்கி கொடுத்த எம்.பி.த்ரீ ப்ளேயரை ஸ்பீக்கரில் கனெக்ட் செய்து கேட்க வேண்டியது தானே?”
அவனைப் பார்த்து முறைத்த ராஜம்,
“ஆமாம்டா நான் இன்னும் ஓல்ட் ஃபேஷன் தான், இப்போ என்ன?” என்றாள்!
“ப்ச்... என்ன அம்மா நீங்க? அஞ்சு வருஷம் கழிச்சு வந்திருக்கேன்... ஏன்ம்மா இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்கீங்க?”
“நீ சும்மா இருடா! பேசாதே... அவ பாட்டுக்கு என் முன்னாடியே உன்னை கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துட்டுப் போறா, அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்கனுமா?”
“ராஜம், தப்பா பேசாதே! அந்த பொண்ணு, நம்ம ஊருக்காரங்க விருந்தோம்பலை பற்றி புகழ்ந்துட்டு போனா... நீ இப்போ பேசுறது மட்டும் அவளுக்கு கேட்டுச்சு, அவ்வளவு தான்,” என்றார் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணபதி!
“நீங்க சும்மா இருங்க! அவனுக்கு சப்போர்ட் செய்யாதீங்க...!”
“இத்தனை வருஷம் நீ அவனுக்கு சப்போர்ட் செய்த, நான் ஒரே ஒரு நாள் சப்போர்ட் செய்தால் தப்பா?”
“ஆமாம் தப்பு தான்...!”
முறைத்தப்படி ராஜம் கொடுத்த காஃபியை வாங்கி பருகிய விக்ராந்த்,
“வாவ்! என் அம்மா கையால் காஃபி குடிச்சு எத்தனை நாளாச்சு... எத்தனை ஊரில் எத்தனை காஃபி ஷாப் இருந்தாலும், என் அம்மா காஃபி போல வருமா? சூப்பர் மம்ஸ்! ஐ மிஸ்ட் யூ