(Reading time: 5 - 10 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

“அதெல்லாம் வேண்டாம் விக்கி... ஹி இஸ் ஹார்ம்லெஸ்... எங்க ஃபேமிலிக்கு தெரிஞ்சவன் தான்... அப்பா கூட கேட்டார் உனக்கு பிடிச்சிருக்கான்னு... எனக்கு என்னவோ இன்ட்ரெஸ்ட் இல்லை... பை தி வே, நீ இப்படி கோபமா கேட்டது ரொம்ப பிடிச்சிருக்கு...”

  

விக்கிராந்திற்கு அவனுக்காக மட்டும் தனியாக ஐஸ் கட்டி மழை பெய்தது போல் உச்சி குளிர்ந்தது...!!!

  

“நான் உங்களை விக்கின்னு கூப்பிடலாம் தானே?”

  

“இதுக்கு எல்லாம் கூட என் கிட்டே பர்மிஷன் கேட்கணுமா என்ன?”

  

“தேங்க்ஸ்...”

  

“ஹலோ ஆர்த்தி!!!” என்ற ஆனந்த கூச்சலுடன் வந்தான் பிரதாப்.

  

“வாட் அ சர்ப்ரைஸ் ஆர்த்தி! காஃபி ஷாப் உள்ளே வந்த உடனேயே ஜில்லுன்னு இருந்தது! அப்போவே நினைச்சேன் நீ இங்கே எங்கேயோ தான் இருக்கேன்னு...” பிரதாப் அவன் பாட்டிற்கு ரீல் சுற்றிக் கொண்டே போனான்...

  

இவன் யாருடா என்னுடைய வில்லன் என மனதில் நினைத்துக் கொண்டே அவனை முறைத்தான் விக்கிராந்த்! ஆர்த்திக்கு பிரதாப்பின் பேச்சு பழக்கம் என்பதாலோ என்னவோ அவள் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை!

  

“ஹாய் பிரதாப்! மீட் மிஸ்டர் விக்கிராந்த்...” என்று விக்கிராந்தை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ஆர்த்தி.

  

ஆர்த்திக்காக விக்கிராந்தை பார்த்து, “ஹலோ...” என்ற பிரதாப்பின் குரலில் நட்பு சிறிதளவும் இல்லை...

  

விக்கிராந்தும் பெயருக்கு பிரதாப்பிடம், “ஹலோ...” என்றான்...!

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Unathu kangalil enathu kanavinai kaana pogiren... story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.