தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 08 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மாலையில், ஆறு மணியாக சில நிமிடங்கள் இருக்கும் போதே காஃபி ஷாப்பிற்கு வந்து விட்ட விக்கிராந்தை காத்திருக்க வைக்காமல் சொன்ன நேரத்திற்கு வந்தாள் ஆர்த்தி.
“ஹலோ ஆர்த்தி...!”
விக்கிராந்தின் குரலில் இருந்த ஆச்சர்யத்தை கவனித்து விட்டு,
“என்ன அப்படி ஒரு ஆச்சர்யம்?” எனக் கேட்டாள் ஆர்த்தி.
“நீங்க லேட்டா வருவீங்கன்னு நினைச்சேன்...”
“க்கும்... பொதுவா எல்லோரும் சொல்ற டையலாக்... நீங்களும் அதையே சொல்றீங்க விக்கிராந்த்...!”
“அப்படி இல்லை ஆர்த்தி, என்னை பார்க்க வர்றீங்களே கொஞ்சம் எக்ஸ்ட்ராவா டைம் எடுப்பீங்கன்னு நினைச்சேன்...”
“சீக்கிரம் வந்தா இப்படி சொல்லுங்க... ஆனால் ஏன் இந்த மரியாதை எல்லாம்? சாதாரணமா நீ வா போன்னே பேசுங்க...”
“நான் அப்படி பேசினா உங்களுக்கு சாரி உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு டவுட் இருந்தது... நீயும் என்னை அப்படி ஈஸியாவே கூப்பிடலாம்...”
“எப்படிங்க விக்கிராந்த் இப்படி அக்மார்க் நல்லவரா இருக்கீங்க? நிஜமாகவே அப்படி தானா இல்லை எனக்காக கொஞ்சம் ஃப்லிம் காட்டுறீங்களோ?”
விக்கிராந்தின் முகத்தில் புன்னகை அரும்பியது!
“கொஞ்சமாவது பந்தா காட்டனும் தானே ஆர்த்தி?”