(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

ப்ளீஸ் வாங்க தருண்” என அவள் கெஞ்ச அவனோ மசியவில்லை

  

”நிவேதினி என் ஆருயிர் காதலி, உன்னை கைவிடமாட்டேன்னு சத்தியம் செய்தேன் ஆனா இப்போ இதே கையால இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்டப்போறேன், நினைச்சாலே எனக்கு வேதனையா இருக்கு, நாம எப்படியெல்லாம் வாழ்ந்தோம், ஒவ்வொரு நாளும் உன்னை நான் திருப்திப்படுத்தினேன், இப்ப என்னை திருப்தி செய்ய யார் இருக்கா சொல்லு” என உளற பவானிக்கு வெறுப்பே வந்தது

  

”தருண் ப்ளீஸ்” என கைகூப்பி விட்டாள் அதில் அவன் இறங்கி வந்தான்

  

”சாரி பவானி உன்னை காயப்படுத்தனும்ங்கற எண்ணம் எனக்கில்லை. என்னால நிவேதினியை மறக்க முடியலை, அதுலயும் இந்த கல்யாண ஏற்பாடுகளை பார்த்த உடனே எனக்கும் நிவேதினிக்கும் நடந்த கல்யாணம்தான் நினைவுக்கு வருது” என சொல்ல பவானியின் கண்கள் கலங்கிவிட்டது

  

”உங்க காதல் இவ்ளோ ஆழமானதா, நிஜமாவே உங்க காதல் புனிதமானது தருண், இந்த இடத்தில வந்தும் பழைய காதலை மறக்காம இருக்கீங்களே உங்களை அடைய நான் புண்ணியம் செய்திருக்கனும்” என்றாள் அதைக்கேட்டதும்

  

”பவானி எனக்கொரு சின்ன விண்ணப்பம் இருக்கு, அதை உன்னால செய்ய முடியுமா”

  

”சொல்லுங்க எதுவாயிருந்தாலும் செய்ய காத்திருக்கேன்“

  

”ஒண்ணுமில்லை. நிவேதினியை என்னால மறந்துட்டு உன்னோட வாழ முடியாது, அதுக்கு பதிலா உன்னை நிவேதினியா நினைச்சிக்கவா”

  

”என்னது” என பவானி அலற

  

”கொஞ்ச நாளுக்குதான் எப்போ எனக்கு நிவேதினியோட நினைப்பு மறையுதோ அப்புறம் உன்கூட புதுவாழ்க்கை வாழறேன் நீ என்ன சொல்ற” என கேட்க அந்நேரம் அந்த திருமணம் நடந்தால் போதுமென நினைத்த பவானியும் அவ்விசயத்திற்கு ஒப்புக் கொண்டு சரியென

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.