Page 5 of 20
”அதுக்கு”
”நானும் வரேன் சார்“
”நீங்க எதுக்கு“
”ஒரு ஆசை“
”எதுக்கு”
”ரோஜா போறா நான் வந்தா என்ன தப்பு“
”ஷ்ஷ்ஷ்“
”அதுவும் இல்லாம உங்களை அங்க இருக்கறவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, நான்னா மத்தவங்க யார் என்னன்னு உங்களுக்கு சொல்வேன், உங்களையும் எல்லாருக்கும் அறிமுகப்படுத்துவேன் அதுக்குத்தான்” என ஈஈஈ என இழிக்க உடனே ஆனந்தோ
”உங்க சிரிப்பை பார்த்தா இன்னும் வேற ஏதோ விசயம் இருக்குப் போலயே செல்லப்பா”
”அங்க டிரிங்ஸ்லாம் இருக்கும்னு கேள்விப்பட்டேன் சார்” என வழிய அவன் புரிந்துக் கொண்டு தலையை பலமாக ஆட்டிவிட்டு
”அதுக்குன்னு இப்பவேவா எட்டறைக்குதானே“
”இப்பவே போகலாம் சார் அங்க நிறைய விளையாட்டுக்கள் இருக்கும், பந்தயம் கட்டி ஜெயிப்பாங்க”
”ஓ இதுவேறயா“