(Reading time: 15 - 30 minutes)

வன் இவ்வாறு கேட்பான் என்று எதிர்பார்க்காத அனு, “நான் உன்னை பத்தி எதுவும் பேசினது இல்லை”” என்று கூறியவாறு தேஜுவை முறைத்தாள். அவள் முறைத்ததில் இவன் நம்மளை அனுகிட்ட அடிவாங்காமல் விட மாட்டன் போல என்று எண்ணி பேச்சை மாற்றினாள் “சரி அஸ்வத் ஒன்னு நீ கவனி இல்லை இடத்தை காலி பண்ணு”” என்று கூறினாள்.

“என்ன இப்படி சொல்லிட்ட உங்க விளக்கத்தை கேட்க ஆவலாக வந்த என்னை ஏமாத்தாதிங்க யு மே ப்ரோசீட்(you may proceed)”” என்று கூறினான்.

தேஜு விளக்கம் தரத்துவங்க அஸ்வத் தடுத்தான் “ப்ளீஸ் லெட் ஹெர் எக்ஸ்ப்ளைன் (please,let her explain)”” என்றுக் தேஜுவிடம் சிறிது கெஞ்சலாக கூறினான்.

சரி ஆளு தனி ரூட்டு விடுகிறான் என்று எண்ணிக்கொண்டு நக்கலாக சிரித்தவாறே அமைதியானாள் தேஜு. இது வேறையா என்று எண்ணிக்கொண்டு வேலையே கண்ணென எண்ணிக்கொண்டு விளக்கத்தை அனு தொடர, அவனது பார்வை அவளையே தொடர்ந்தது, அவளது விளக்கத்தை கவனித்தானோ என்னவோ அவள் விளக்கம் தரும் அழகை ரசித்தவாறே நின்றான். அவளை தொடர்ந்தவனுக்கு தான் ஏன் ஈர்க்கப்படுகிறோம் என்று புரியவில்லை அதை யோசித்து நேரத்தை அப்போது வீணடிக்க அவனும் விரும்பவில்லை. அவனது பார்வையை சந்திக்க முடியாமல் தங்கள் மாடலை பார்த்தவாறே பேசினாள் அனு, விளக்கம் முடியும் வரை அவள் நிமிரவில்லை.

அவனது பார்வையையும் அனுவின் தடுமாற்றத்தையும் மனதில் குறித்துக்கொண்டாள் தேஜு. விளக்கம் முடித்த பிறகும் அவன் எந்த அசைவும் காட்டாமல் நிற்க “தம்பி விளக்கம் குடுத்து முடுச்சாச்சு”” என்று அவனது முகத்தின் முன் சொடுக்கு போட்டு அழைத்தாள் தேஜு.

அவன் என்ன கூறுவது என்று புரியாமல் ““நல்லா இருக்கு”” என்று கூறினான்.

“என்ன விளக்கமா? இல்லை விளக்கம் தந்த ஆளா?!”” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்மாறு கூறினாள் தேஜு.

பதிலுக்கு “இரண்டுமே தான்”” என்று அவளுக்கு மட்டும் ரகசிய புன்னகையுடன் கூறினான்.

“அடப்பாவி, இப்படிலாம் கூட நீ பேசுவியா? அமைதியான பையன்ல நினைச்சே”” என்று ஆச்சர்யமாக கூறினாள் தேஜு. என்ன? என்பது போல் அனு புருவம் உயர்த்தி தேஜுவிடம் கேட்டாள். ஆனால் கூற வேண்டாம் என்று அஸ்வத் கேட்டுக்கொண்டதால் ஒன்றும் இல்லை என்று கூறி மழுப்பினாள் தேஜு.

பின் அவன் எதுவும் சொல்லாமல் புன் சிரிப்பின்னோடே அனுவை பார்த்தவாரு பொதுவாக விடைபெற்று அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அவன் அவ்விடத்தை விட்டு அகலும் வரை அனன்யா அவன் புறம் பார்க்கவில்லை, அவன் சென்றதும் லேசாக கண்கள் உயர்த்தி அவனை பார்க்க அவன் மீண்டும் ஏதோ எண்ணிக்கொண்டு திரும்பிப்பார்ப்பதை கண்டு கண்கள் தாழ்த்திக்கொண்டாள். அஸ்வத் மெல்லிய புன்னகையோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

“ஹப்பாடா” என்று பெரும் மூச்செடுத்துக் கொண்டு தேஜுவிடம் திரும்பினாள் அனு. அவளோ ஒரு குறும் படம் பார்க்கும் தோரணையில் ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.

இவள் ஏன் இப்படி பார்க்கிறாள்? என்று எண்ணிக்கொண்டு பேச்சை மாற்றுவதற்காக “ஆமா உனக்கு எப்படி அஷ்வத்தை தெரியும்?”” என்று சலனமற்று கேட்பது போல் அனு கேட்க, “எங்க அப்பாவும் அவங்க அப்பாவும் ரொம்ப வர்ஷமா ஃப்ரண்ட்ஸ், அப்பறம் நானும் அவனும் கொஞ்ச வர்ஷம் ஒன்னாதான் படுச்சோம் நல்ல ஃப்ரண்ட்”” என்று அவள் சுருக்கமாக முடித்தாள்.

“ஓஹோ...”” என்று யோசனையாக அனு இழுக்க 

“ரொம்ப யோசிக்காத உங்க அளவுக்கு எனக்கு எந்த பிளாஷ்பேக்கும்(flashback) இல்லைப்பா”” என்று நக்கல் அடித்தாள்.

“நான் ஒன்றும் அப்படி யோசிக்கவே இல்லையே”” என்று அனு கூறினாலும் அவள் மனதில் ஓடியது என்னவோ தேஜு கேட்டது போல் தான்.

“ஆஹா என்ன... ஒரு chemistry? நான் chemistry புத்தகத்துல கூட இப்படி ஒரு formula mixing பார்க்கலைபோ”” என்று வேண்டும் என்றே அனுவை பார்த்து கிண்டல் செய்தாள்.

“chemistrya? எங்கே? யாருக்கு?”” என்று சுற்றும் முற்றும் பார்த்து எதுவும் புரியாதவள் போல் நடித்தாள் அனு.

“நீ நடிக்காதடி இந்த மாதிரி விஷயத்தில் தெரிஞ்சும் தெரியாத மாதிரிதான் நடிப்ப நீ”” என்று அனுவை நன்கு அறிந்தமையால் தேஜு கூறினாள்.

“ஹே அப்படிலாம் எதுவும் இல்லை நீயா கற்பனை பண்ணிக்காத”” என்று மென் முறுவலுடன் ஒன்றும் நடவாதது போல் நடித்தாள் அனு.

“யாரு நான் பொய் சொல்றேன்னா? சார் வந்ததில் இருந்து உன்னை மட்டும் தான் பார்த்தாரு”” என்று தன் போக்கில் கிண்டல் செய்தாள் தேஜு.

அவள் கிண்டல் செய்வதை தடுத்தாலும் ஒரு வகையில் அனுவிற்கு அது இனிமையாகவே இருந்தது. (சம்பந்த பட்டவங்க சும்மா இருந்தாலும் இப்புடி உசுபேத்தி உசுபெதியே பாதி பேர செட்டு சேக்குறது தானே நம்ம ஃப்ரிண்ட்ஸ் வேலை...)

தேஜு கிண்டல் செய்ததில் அஸ்வத்தின் நினைவு வர மௌனமாக நின்றாள் அனு. லேசாக அவளை இடித்து “போதும்டி கனவு கண்டது இப்போ வேலையை பார்ப்போம் அப்புறம் அஷ்குட்டிய நினச்சுக்கோ” என்று மாணவர்கள் வருவதை கண்டு ரகசியமாக கூறி அவளை திசை திருப்பினாள் தேஜு.

என்னதான் ஒருபுறம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருந்தாலும், அனுவினுள் பல குழப்பங்கள் ஓடியது ஏன் அஸ்வத்தை கண்டதும் தடுமாறினோம்?! ஏன் அவனை நேராக சந்திக்க முடியவில்லை?! என்று குழம்பினாள்.... அதே போல் அஸ்வதிற்கு ஏன் அவளை கண்டால் ஈர்க்கப்படுகிறோம்?! ஏன் அவளை கண்டால் மனதிற்கு இனிமையாக இருக்கிறது?! என்று புரியவில்லை... என்னதான் உணர்ந்தாலும் இந்த மாற்றதிற்கு இருவருக்குமே காரணம் தெரியவில்லை, இந்த இனிமையான உணர்வுக்கு இருவருக்கும் அர்த்தம் புரியவில்லை ஆனால் இருவரும் மனதிற்குள் அந்த உணர்வை ரசித்தனர்.

ஹீரோ என்ட்ரி வந்தாச்சு... அப்பறம் என்ன? நெக்ஸ்ட் எபிசோடுல பாப்போம்...

Go to Kadhal payanam # 01

Go to Kadhal payanam # 03

பயணம் தொடரும்...


{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.