(Reading time: 19 - 37 minutes)

ங்க நல்லா கவனி இனியா. சின்ன வயசுல இருந்தே எங்களுக்கு யாரும் சொந்தக் காரங்கன்னு இல்லை. சின்ன வயசுல நானும் சந்துருவும் எல்லாருக்கும் இருக்கற மாதிரி தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, அத்தை இப்படி யாரும் எங்களுக்கு இல்லையேன்னு ரொம்ப பீல் பண்ணி இருக்கோம். நான் ஒரு ஏஜ் வந்த உடனே எல்லாம் புரிஞ்ச பிறகு எங்க அப்பா அம்மாவை வேண்டாம்ன்னு சொன்னவங்க எனக்கும் வேண்டாம்ன்னு முடிவு பண்ணி அதை பத்தி பீல் பண்றதில்லை.”

“ஆனா சந்துரு அப்படியில்லை. சம்மர் வெகேஷன் வந்தா அவன் பீலிங் இன்னும் அதிகமாகிடும். அதுக்காகவே அப்பா எங்களை ஒவ்வொரு வெகேஷனுக்கும் எங்கயாச்சும் டூர் கூட்டிட்டு போயிடுவாரு. பட் அவனோட அந்த பீலிங்க்ஸ் முழுசா போகல.”

“அப்ப அவனுக்கு பதினோரு வயசு, எனக்கு பதினாலு. அவன் என் கிட்ட வந்து அண்ணா எல்லாருக்கும் இருக்கற மாதிரி நமக்கு யாருமே இல்லையேன்னு ரொம்ப பீல் பண்ணான். நான் அப்ப அவனுக்கு சொன்னேன், சந்துரு நமக்கு யாரும் இல்லைன்னு பீல் பண்ணாத, நமக்கு நல்ல அப்பா அம்மா கிடைச்சிருக்காங்க. நீ ஏன்டா யாரும் இல்லைன்னு பீல் பண்ற, நான் உனக்கு அண்ணன் மட்டும் இல்லை. நான் உனக்கு எல்லாமா இருப்பேன்னு சொன்னேன்.”

“அனைக்கு அவன் கிட்ட சொன்ன மாதிரி தான் இன்னைக்கு வரைக்கும் இருந்துட்டு வரேன். அதுவும் அப்பா போனதுக்கு அப்புறம் அவரோட ஸ்தானத்தில இருந்து அவனுக்கு எல்லாம் செய்யறேன். இதுல நான் போய் அவன் கஷ்டப்பட காரணமா இருப்பேன்னு நம்பறியா.”

இனியா திரும்ப ஏதோ சொல்ல வர “வேண்டாம்மா நீ ஏதும் சொல்ல வேண்டாம். இன்னைக்கு அந்த பேச்சை பேசறதையே நான் விரும்பல. அதனால தான் நீ கேட்கறதுக்கு முன்னாடி நானே எல்லாம் சொன்னேன். உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா ஒரு ரெண்டு மாசம் என் கிட்ட இதைப் பத்தி ஏதும் கேட்காத, அதுக்கப்புறம் நானே எல்லாம் சொல்றேன், அதுக்குள்ளே இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவும் வந்துடும்” என்றான்.

இனியாவும் சரி என்று ஒத்துக் கொண்டாள்.

“அதெல்லாம் இருக்கட்டும் பாருங்க ரொம்ப லேட் ஆகிடுச்சி. நீங்க பர்ஸ்ட் இங்கிருந்து கிளம்புங்க. அதெப்படி நீங்க இப்படி தைரியமா இங்க வந்தீங்க. அத்தை நடுவுல வந்திருந்தா என்ன ஆகியிருக்கும்”

“என்ன ஆகியிருக்கும் நமக்கு மேரேஜ் ஆகியிருக்கும்” என்றான் உல்லாசமாக.

இனியாவோ அவனை முறைக்க

“சரி சரி. நாங்க அப்படி எல்லாம் முன்னெச்சரிக்கை இல்லாம வருவோமா, சந்துரு கீழே அம்மா கூடவே இருந்து அவங்க டேபிலேட் போட்டு தூங்கனதுக்கு அப்புறம் தான் அவன் ரூம்க்கு போயிருப்பான்”

“என்னது” என்று அவள் அதிர்ந்தாள்.

“ம்ம்ம். ஆக்சுவலி அவன் தான் எனக்கு இந்த ஐடியாவே குடுத்தான்”

“என்ன சொல்றீங்க. சந்துருக்கு இதெல்லாம் தெரியுமா. நான் ஏற்கனவே அவருக்கு தெரியும்ன்னு தான் நினைச்சேன். ஆனா இவ்வளவு ஓபனா தெரியும்னு நினைக்கல”

“இதுக்கே ஷாக் ஆகிட்டா எப்படி டா செல்லம். உனக்கு நான் இன்னொரு ஷாக் நியூஸ் சொல்லட்டுமா” என்றான்.

“ஐயய்யோ இன்னொன்னா. அது என்ன, அத்தைக்கும் இது தெரியுமா”

“ஹிஹிஹி. ரொம்ப புத்திசாலி. என் அம்மாக்கு இல்லம்மா. உங்க அக்காக்கு தெரியும். அவங்களும் எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னாங்க. இன்பாக்ட் அவங்க தான் பர்ஸ்ட் எனக்கு ஹெல்ப் பண்றேன்னு வாலன்டியரா சொன்னாங்க.”

“அக்காவுமா. இவங்களுக்கு எல்லாம் எப்படி தெரிஞ்சது. நீங்க சொன்னீங்களா”

“நோ நோ. நான் ஏதும் யார் கிட்டவும் சொல்லலை. நம்ம பண்ண அலம்பல்ல அவங்களே கெஸ் பண்ணிருக்காங்க”

“ஐயோ போங்க. நான் இனி எப்படி தான் அவங்களை எல்லாம் பேஸ் பண்ண போறேன்னே தெரியலை”

“ஹேய் சந்துரு, உங்க அக்கா ஜோதி எல்லாருமே நம்ம சேர்ந்தா நல்லா இருக்கும்ன்னு நினைக்கறவங்க. அவங்க என்ன சொல்ல போறாங்க. ஜஸ்ட் நம்மள கிண்டல் வேணும்னா பண்ணலாம். அது பாத்துக்கலாம். ஓகே”

“ம்ம். அதெல்லாம் ஓகே தான். உங்களுக்கு தான் இத்தனை பேரோட ஹெல்ப் தேவை பட்டிருக்கு. அந்த கொடுமையை நான் எங்க போய் சொல்றது”

“என்னம்மா நான் என்ன பண்றது, நீ தான் அப்பப்ப மூஞ்ச தூக்கி வச்சிட்டிருந்த, நான் யாரையாச்சும் யூஸ் பண்ணி தான் உன்னை பார்க்க முடிஞ்சிது”

“என்னவோ போங்க. நான் நாளைக்கு சந்துரு என்ன பண்ண போறாரோன்னு பயந்து போயிருக்கேன். ஏற்கனவே என்னை அண்ணி அண்ணின்னு கூப்டுக்கிட்டிருக்காரு தெரியுமா”

“ஹேய் அப்படியா சூப்பர் இல்ல என் தம்பி, அவனுக்கு முதல்ல ஒரு ட்ரீட் குடுக்கணும்” என்று சொல்லிவிட்டு அவன் மந்தகாசமாக சிரித்தான்.

இனியா அவன் சிரிப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா ஆச்சி. இப்படி என்னையே பார்த்துட்டு இருந்தா நான் என்னன்னு நினைக்கறது. நீ இப்படி எல்லாம் பார்த்துட்டு அப்புறம் நான் எதாவது செஞ்சி வச்சிட்டேன்னு என்னை குறை சொல்ல கூடாது.”

“உங்களை என்ன பண்றதுனே தெரியலை”

திரும்பவும் இளவரசன் சிரித்தான்.

“இந்த சிரிப்பு தான் என்ன டிஸ்டர்ப் பண்ணுது. அதை முதல்ல ஸ்டாப் பண்ணுங்க.” என்றாள்.

“என்ன என் சிரிப்பு உன்னை டிஸ்டர்ப் பண்ணுதா”

“ஆமா. நேர்ல மட்டும் இல்லாம கனவுலையும்”

“என்ன நான் உன் ட்ரீம்ல வந்தேனா, பார்த்தியா சொல்லவே இல்ல. எப்ப எப்ப நான் உன் ட்ரீம்ல வந்தேன்”

“நிறைய டைம் வந்திருக்கீங்க. உங்க இந்த ஸ்மைல் பர்ஸ்ட் டே நம்ம மீட் பண்ணோம் இல்ல, அன்னைக்கு வந்துச்சு”

ஒரு நிமிடம் அவளை ஆச்சரியமாக நோக்கி விட்டு “என்ன சொல்ற இனியா, பர்ஸ்ட் டே வே வா” என்றான்.

இனியா ஆம் என்பதை போல் தலையசைத்தாள்.

இளவரசனுக்கு ஒரே பரவசமாக இருந்தது.

“ஹேய் நம்ம பர்ஸ்ட் மீட் ஒன்னும் நமக்கு அந்த அளவுக்கு சுமூகமா இல்ல, ஆனா பார்த்தியா பர்ஸ்ட் டே வே நான் உனக்குள்ள வந்துட்டேன், நீ தான் மண்டு, உனக்கு தான் இது புரிய ரொம்ப லேட் ஆயிடுச்சி. இல்லன்னா நான் இவ்வளவு நாள் டைம் வேஸ்ட் பண்ணி இருக்கவே தேவை இல்லை”

“ஆமா நான் மண்டு தான். போங்க. அப்படியென்ன இப்ப டைம் வேஸ்ட் பண்ணிட்டோமாம்.”

“இல்லையா பின்ன, உங்க அத்தை வந்து உன்னை பெண் கேட்கறதுக்குள்ள இந்நேரம் நம்ம மேரேஜ் முடிஞ்சிருக்கும் இல்ல, அதான்” என்றான்.

“அதுக்குள்ளே மேரேஜ் லெவல்க்கு போயிட்டீங்களா. கிரேட்”

“என்ன நீ அதுக்குள்ளேன்னு சொல்ற. நான் எப்படா உன்ன பார்ப்பேன்னு ஏங்கி போய் இருக்கேன். உனக்கு இது இஷ்டம் இல்லையா”

“அதெல்லாம் ஓகே. பட் ரொம்ப சீக்கிரம் மேரேஜ் எல்லாம் வேண்டாம்”

“சரி இப்ப இதை பத்தி வேண்டாம். பர்ஸ்ட் டே நோ பைட்ஸ் ஓகே”

“ஓகே ஓகே. பட் நீங்க இப்ப கிளம்பரீன்களா. இட்’ஸ் டூ லேட்”

“இனியா ஒரே ஒரு ஐந்து நிமிஷம் இருந்துட்டு போயிடறேன். ப்ளீஸ்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.