(Reading time: 23 - 45 minutes)

தெல்லாம் வேண்டாம்டா நீ பார்க்குரதுனா பாரு” என்று நல்ல பிள்ளைபோல் கூறிவிட்டு மணமகனை பார்த்தான்.

அஹல்யாவும் தலையை திருப்பாமல் இருக்க அர்ஜுனை முதலில் பார்த்தது அர்ச்சனாதான், பார்த்தவுடன் பதறிபோய் தன் தோழியின் காதில் கிசுகிசுத்தாள்.

அவள் அர்ஜுன் என்று கூறிய மறுநொடி நெஞ்சம் படபடக்க மனதில் உள்ள காதல் எல்லாம் பொங்க ஆசையில் அவனை தேடி கண்டுக்கொண்டாள்.

அஹல்யா அர்ஜுனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க நவீனிர்கு சந்தேகமாக இருந்தது, “இவ்ளோ நேரம் இந்த பொண்ணு நிமிர்ந்தே பார்க்கலையே அந்த பொண்ணு ஏதோ சொன்னதும் இப்படி பார்க்குதே” என்று மனதில் எண்ணிக்கொண்டு “டேய் அர்ஜுன் அந்த பொண்ணு உன்னையே பார்க்குதுடா, நீயும் பாருடா உன் ஆளையே மறந்துடுவ அவ்ளோ அழகாய் இருக்கு அந்த பொண்ணு” என்று அவனை மீண்டும் ஊக்குவித்தான்.

“ப்ச்..” என்று அலுத்துக்கொண்டு நானாவது அஹல்யாவை மறப்பதாவது என்று மனதில் எண்ணிக்கொண்டு நவீனை முறைத்தான்.

அர்ஜுன் எதற்கு முறைக்கிறான் என்று புரிந்துபோக “சரி சரி ஏன்டா இப்படி முறைக்குர” என்று அலுத்துக்கொண்டு “கொஞ்சம் திரும்பிதான் பாரேன்” என்று கட்டாயப்படுத்தி அவன் முகத்தை திருப்பினான் நவீன்.

வேண்டா வெறுப்பாக திரும்பிய தன் தோழன் இப்போது வைத்த கண் எடுக்காமல் அந்த பெண்ணையே பார்ப்பதை நக்கலாக பார்த்தான் நவீன். அர்ஜுனின் முகமோ ஆயிரம் ஆயிரம் மின்னல்கள் வெட்டும் ஒளி பொதித்து பிரகாசமாக இருந்தது, இத்தனை நாட்களாய் இருந்த தவம் எல்லாம் பயனுள்ளதாக மாறிய உணர்வு, கண்டுவிட்டேன் என் மனம் கவர்தவளை கண்டுவிட்டேன் என்று அவனது மனம் கூத்தாடியது.

இருவரின் விழிகளும் இத்தனை நாட்களாய் பேசாத ஆயிரம் கதைகள் பேசின, இருவரின் விழிகளிலும் மற்றவர் மீது இருந்த அன்பு புரிந்தது, உன்னை பிரிந்து நான் ஏங்கி போனேன் என்று மொழி பரிமாறிக்கொண்டது.

இவர்கள் விழிகளில் பேசிக்கொண்டிருக்க நவீன் தோளை தட்டினான் “நான் சொன்னேனா உன் ஆளையே மறந்திடுவனு” என்று பெருமையாக சிரித்துக்கொள்ள, அர்ஜுன் அவன்புரம் திரும்பி அவன் தோளில் கைபோட்டு “அவள் தான் என்னோட ஆளே” என்று அடக்கமாக மெல்லிய புன்னகையுடன் கூறினான்.

அவன் சொன்னவுடன் நவீனின் முகம் ஒரு நிமிடம் சுருங்கி போக மறு நிமிடமே “பாரு அப்ப நான் தான் உன் ஆள் கூட உன்னை சேர்த்து வைத்திருக்கிறேன்” என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டான். இப்போது பதிலுக்கு நக்கலாக எதுவும் கூற தோணாமல் மீண்டும் தன் காதல் பார்வையை அஹல்யாவிடம் வீசினான். இதுவரை இருந்த ஏக்க பார்வை பறந்து காதல் பார்வை சீண்ட அஹல்யாவிற்கு வெட்கத்தில் கன்னம் சிவந்தது. அந்த கன்ன சிவப்பில் மேலும் வசீகரிக்க அதையும் தாண்டி அந்த வெட்கம் அவனுக்கு கர்வம் தந்தது.

இந்த பார்வையே அஹல்யாவிற்கு போதுமானதாக தோன்ற அவள் வெற்றி புன்னகையுடன் அர்ச்சனாவின் பக்கம் திரும்பினாள், அவளோ அர்ஜுனை கூர்மையாக அளவெடுத்துக்கொண்டு இருந்தாள். அவனை கவனித்துவிட்டு தன் தோழியிடம் திரும்பியவள், “இது போதாது அஹல் அவர் வாயால சொல்லட்டும், இந்த முறையும் பார்வையில் சொல்லிட்டு போனார் நான் நம்புறேன் அது இதுனு நீ புலம்புறதை என்னால ஏத்துக்க முடியாது. காதல் இருக்குனா வெளிய காட்ட சொல்லு” என்று கோவமாக தன் தோழியிடம் கொஞ்சம் சத்தமாகவே பேசினாள். அர்ச்சனா பேசியது தெள்ளதெளிவாக அர்ஜுனின் காதில் விழுந்தது. அவளது பேச்சை கேட்டவனுக்கு கோவம் தலைக்கேறியது. “இவள் என்ன தன்னைப்பற்றி இப்படி பேசுவது அதையும் அஹல்யா கேட்டுக்கொண்டிருகிறாளே” என்று கோவம் வந்தது. இவர்கள் வெவ்வேறு மனநிலையில் இருக்க, ஸ்ரீஹரி ஸ்ரீமதுவின் திருமணம் இனிதாக முடிந்தது.

திருமணம் முடிந்த கையோடு அர்ஜுன் மண்டபத்தை விட்டு வெளியே செல்வதை ஏமாற்றமும் வருத்தமும் கலந்து பார்த்தாள் அஹல்யா. தன்னிடம் கூட சொல்லாமல் எங்கு சென்றுவிட்டான் என்று குலம்பிபோக நவீன் அர்ஜுனின் கைபேசிக்கு அழைத்தான். ஆனால் அர்ஜுன் அதை எடுக்கவில்லை. நிமிடங்கள் ஓட ஓட அஹல்யா வாசலை பார்த்தவாறே அமர்ந்து இருந்தாள். அவளை நோட்டம் விட்ட நவீனுக்கு கவலையாக இருந்தது அடுத்தடுத்து அழைத்து பார்த்தான் பயனில்லை.

இப்போது கவலை பெருகி போனது அஹல்யாவிற்கு, அர்ச்சனாவின் மீது கோவமாக வந்தது. “என்ன அர்ச்சு இப்படி பண்ணிட்ட?” என்று அழுகாத குறையாக கவலை முகத்தில் தெரிந்தது. மண்டபத்தின் உள்ளே இருக்க மனமின்றி வெளியே சென்று நின்றுக்கொண்டாள் அஹல்யா. அவள் வருத்தமாக செல்வதை செயல் இழந்து பார்த்த அர்ச்சனா அவள் பின்னே சென்று நின்றுக்கொண்டாள். இவர்களை தொடர்ந்து நவீனும் வர மண்டபத்தின் வெளியே மூவரும் அர்ஜுனுக்காக காத்திருந்தனர்.

தேடிக்கொண்டிருந்த விழிகளில் அர்ஜுன் தென்பட அந்த ஆர்வத்திலேயே ரோட்டை கடக்கின்றோம் என்பதுகூட அறியாமல் அவனிடம் ஓடிச்சென்றாள். அவள் செல்லும் நேரம் வாகனம் ஒன்று நெருங்க மூவரும் ஒரே நேரத்தில் அஹல்யா என்று கத்தினர். அப்போதுதான் உலகத்திற்கு வந்தவள் தன்னை நோக்கி வாகனம் வருவதை கண்டு அதிர்ந்தாள். என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து போனவள் சிலையாக நின்றாள். அவள் வருவதை பார்த்தே நெருங்கி வந்த அர்ஜுன், அஹல்யா சுதாரித்து நகராமல் நிற்க பயந்து போனவன் அவசரமாக ஓடி சென்று அவளை தன்புறம் இழுத்தான். இழுத்த மறு நொடி வாகனம் வேகமாக அவர்களை கடந்து செல்ல உள்ளே உள்ள டிரைவர் வெளியே எட்டிபார்த்து திட்டிச் சென்றான். அதையும் உணராதவளாக பயத்தில் அர்ஜுனின் நெஞ்சில் ஒடுங்கிக்கொண்டாள் அஹல்யா. இதை பார்த்துக்கொண்டு நடுங்கி போன அர்ச்சனாவும் நவீனும் அவர்கள் அருகில் ஓடிச்சென்றனர். பயம் குறையாமல் மனம் படபடவென அடித்துக்கொள்ள அர்ஜுனின் நெஞ்சில் முகத்தை புதைத்துக்கொண்டாள். அவளது பயம் புரிந்து போக மெதுவாக தலை கோதினான்.

பயம் குறைந்து போக அர்ஜுனை நிமிர்ந்து பார்த்தவள், அவனது முகம் முழுதும் கவலை தெரிய குழம்பி போனாள், “என்னம்மா இப்படி பண்ணிட்ட? உனக்கு ஏதாவதுனா என்னால தாங்கிக்க முடியாதுடா...” என்று குரல் தழுதழுக்க கூறியவனின் கண்கள் கசிந்து இருந்தது. அந்த ஒருவரியும் கசிந்த கண்களும் அளவில்லாத காதலைக் கொட்டியது. அந்த வரிகளில் பெருமகிழ்ச்சிக் கொண்டவள் இறுக்கமாக அர்ஜுனை தழுவிக்கொண்டாள். அவனது நெஞ்சில் சாய்ந்தவாறே அர்ச்சனாவை பார்க்க, அவளது முகத்தில் உயிர் தோழியின் காதல் வெற்றி அடைந்ததன், அளவில்லாத மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது.            

“நான் உங்களை ரொம்ப தப்பா நினைச்சிட்டேன் சாரி, எங்கே அஹல்யா எமாந்திடுவாளோனு ஒரு பயம்தான்” என்று கூறி மன்னிப்பு கேட்டாள் அர்ச்சனா.

“அதெல்லாம் தேவையில்லை அர்ச்சனா, முதலில் நான் கூட கோவப்பட்டேன் ஆனால் அப்பறம் தான் நீ இப்படி பேசுறீனா அஹல்யா இத்தனை நாள் என்ன நிலைமையில் இருந்திருப்பாள்னு தோனுச்சு, சோ அதை புரிய வைத்ததுக்கு நன்றி” என்றி சாந்தமாகக் கூறினான் அர்ஜுன். 

அவனது பேச்சு அவனின் மீது புது நம்பிக்கையையும் மரியாதையையும் தர, “சரி சரி நான் இனிமேல் இங்க இருக்கலை நீங்க கொஞ்ச நேரம் பேசிட்டு வாங்க..” என்று அஹல்யாவை பார்த்து கண்ணடித்தவாறு இருவருக்கும் தனிமை தந்து நகர்ந்தாள் அர்ச்சனா.

“நல்லாத்தான் பேசுகிறாள் ஆனால் ஆளு தான் பார்க்க ரௌடி மாதிரி இருக்காள் இல்லை...” என்று கொஞ்சம் சீண்டலாக அஹல்யாவிடம் கேட்டான், தன் தோழியை விளையாட்டாய் கிண்டல் செய்கிறான் என்று தெரிந்தாலும் போலியாக முறைத்தாள்.

“அப்படியெல்லாம் சொல்லாத மச்சான், பார்க்க சப்ப பிகரா இருந்தாலும் ஒரு ஸ்மார்டான.... சரி சரி ஒரு சுமாரான பையன் கிடைப்பாண்டா...” என்று தன் தலையை கோதியவாறு அர்ச்சனா செல்லும் திசையையே பார்த்து கூறினான் நவீன். அவனது பேச்சில் ஆச்சர்யபட்ட அர்ஜுன் “டேய் இது எப்போ இருந்து???” என்று கிண்டல் அடித்தான். அதற்கு கேவலமாக வெட்கப்பட்டு “இப்போதான்டா...” என்று கூறிக்கொண்டே விட்டத்தை பார்த்தான்..

ம்ம்ம் ஹ்ம்ம் இவனும் மாட்டிகிட்டான் என்று மனதில் நினைத்து சிரித்துக்கொண்டு, “சரி சரி வழியாத” என்று கூறிக்கொண்டிருக்க அஹல்யா துவங்கினாள். “அண்ணா...”

“என்னையாமா சொல்லு தங்கச்சி..”

“அர்ச்சுக்கு கராத்தே தெரியும்” என்று மெல்லிய புன்முறுவலுடன் கூறினாள்.

அவளது வாக்கியத்தில், கராத்தே தெரிந்தவள் உன் காதல் விளையாட்டை அவளிடம் காட்டாதே என்ற மறைமுக எச்சரிக்கை ஒலி இருந்தது. கொஞ்சம் நடுங்கி போனவன் ரொம்ப அடிப்பாளோ என்று உள்ளே நடுங்கி போனாலும், வெளியே சிரித்துக்கொண்டு “எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்த்துக்க மாட்டோமா” என்று அசால்டாக கூறிவிட்டு, “அர்ச்சு கண்ணு....” என்று அழைத்தவாறு மண்டபத்தை நோக்கி நடந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.