(Reading time: 34 - 67 minutes)

வள் சொன்னதும் புன்முறுவலித்தவன்,

“சுத்தி சுத்தி அங்கயே வர்றியே... உன் காத்து பட்டாலே ஏதேதோ செய்யுது... கிஸ் அடிச்சா…. “ என்று யோசனையாய் சொல்லிக் கொண்டே அவள் முகத்தருகே  சென்று ரகசிய குரலில், “அப்புறம் பிள்ளை குட்டி பெத்த பிறகு தான் கல்யாணம்... பரவாயில்லையா?”, என விஷமமாக சிரித்து, அவள் மெல்லிடையை தன் கரங்களால் வளைத்து தன்னோடு அணைத்தான்.

அவன் பார்வையில் கன்னங்கள் சிவக்க, பார்வையை தாழ்த்தி, அவனது சட்டையில் இருந்த பித்தானை நோண்டியவாறு, “சகுனி இதுக்கு தான் திட்டம் போட்டு கிஸ் அடிக்காம லந்து பண்றியா?”, என குரலில் குழைந்தாள்.

“திட்டம் போடுறதை கண்டுபிடிச்சிட்டியா? நாளைக்கு நமக்கு வடபழனி முருகன் கோவில்ல கல்யாணம். உனக்கு ஓகே தானே?”’ என்றான் சாவகாசமாக.

அவன் சொன்னதும் அதிர்ச்சியாய் நிமிர்ந்தவள்,

“என்ன உளருறீங்க... நம்ம அம்மா அப்பா??!!!”

“அவங்களுக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே! இனி நாம தான் கல்யாணம் செய்து  அம்மா அப்பா ஆக வேண்டும்”, என்று குறும்பாக புன்னகைத்தான்...

அதை கேட்டதும் மீண்டும் கன்னங்கள் சிவக்க, “ஆசை தோசை.... கல்யாணம் அடுத்த வருஷம் தான்!” என முஷ்டியால் அவன் நெஞ்சில் குத்தினாள்....

”அப்போ இந்த வருஷம்?” என அவன் கேட்கும் பொழுது,

சுலோ பாட்டியின் அழைப்பு குரல் கேட்க “இதோ வர்றேன் பாட்டி” என பதில் கொடுத்துக் கொண்டே வளைத்திருந்த அவன் கரத்தை விலக்கி விட்டு ஓட முயல அவனோ  தன் பிடியை தளர்த்தாமல்,

“சொல்லிட்டு போ”, என்றான் அவள் நெற்றியில் முட்டி....

“என்ன்ன்ன?”,  நீட்டி முழக்கினாள்....

அவனோ அவள் மூக்கில் மூக்கை வைத்து உரசிய படி,

தாலியைத் தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா

பிள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமா...

என்று பாடிய நேரம் சுலோ பாட்டியின் குரல் மிக அருகாமையில் கேட்க, படக்கென அவளை விடுவிக்க, அவனுக்கு அழகு காட்டி விட்டு பாட்டியின் குரல் வந்த திசை நோக்கி ஓடினாள் சந்தியா.

அவளுக்கு எதிர்பட்ட சுலோ பாட்டி கூட்டி சென்ற அறையில் மதுவும், சக்தியும் கையில் பட்டு புடவை பெட்டியுடன் நிற்க, அவர் தன்னை அழைத்ததின்  காரணம் புரிந்தது. அவர் ஆசையுடன் கொடுத்த புடவையை ஆசி பெற்று வாங்கிக் கொண்டாள்.

“புடவை கட்டிட்டு அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கு போயிட்டு வாங்க. எம். எஸ்.க்கு இன்னைக்கும் டியூட்டியா? அவரையும் வர சொல்லலாமே?” சக்தியிடம் கேட்டார் சுலோ பாட்டி.

“இன்னைக்கு தெரியலை பாட்டி..... கேட்டு பார்க்கிறேன்” என சக்தி அவருக்கு அழைக்க, அன்று மாலை நேராக கோவிலுக்கு வருவதாக அவர் சேதி சொல்லவும் அன்றே கிளம்ப முடிவெடுத்தனர். புடவையை பெற்றுக் கொண்டு மூவரும் வெளியேற, சந்தியாவுடன் பேச ஆசைப் பட்டு அவளை அங்கேயே இருக்க சொன்னார் சுலோ பாட்டி.

“உனக்கு எழுமிச்சம் பழ பச்சை பிடிக்குமாமே....”, கேட்டார் அவர்.

“ஆமாம் பாட்டி...உங்களுக்கு தெரியுமா?”, வியப்புடன் வினவினாள்.

“காதி தான் உனக்கு பிடிக்கும்னு இந்த கலர்ல புடவை எடுத்தான். ஆனா அவன்கிட்ட சொல்லிடாத.... தெரிஞ்சதுன்னா ஓட்டை வாய்ன்னு என்னை திட்டுவான்” என்றார் பாட்டி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.

அவர் பாவனையில் அவரைப் பார்க்க ஒரு புறம் பாவமாக இருந்தாலும் மறு புறம் சிரிப்பாக வந்தது.

“அப்படி என்ன திட்டுவார் கார்த்திக்?”, கேட்டாள் சந்தியா.

“இப்போ பியூட்டி பியூட்டின்னு கொஞ்சுறான்...கோவம் வந்தா கிழவி கிழவின்னு திட்டுவான்”, என்றார் சோகமாக.

சிரித்தாள் சந்தியா. “என் மக செல்லமா வளர்ந்தவள்... ஆனா பாரு அவ பெத்த பிள்ளைங்ககிட்ட அன்பா ஒரு வார்த்தை கூட பேச விட மாட்டாங்க அவங்க வீட்டில. மதுவிற்கு அம்மா ஏக்கம் வந்துடக் கூடாதாம்... மது பிறந்தப்போ சூர்யா பெரிய பையன் அதனால சமாளித்துட்டான்.... ஆனா எங்க காதிக்கு ரெண்டா கெட்ட வயசு.... கைக்குள்ளே வச்சிருந்த பிள்ளைய வலுக்கட்டாயமா கான்வென்ட்ல சேத்து விட்டாங்க....நோய் வர்றப்போ பிள்ளைங்க தாயை தேடுங்க. அப்ப கூட சௌபர்ணிகாவை அவன் பக்கத்தில் விட மாட்டாங்க....இங்க வந்தா அம்மாகிட்ட கிடைக்காததை என்கிட்ட எதிர்பார்ப்பான். இன்னும் கூட நான் தான் அவனுக்கு ஊட்டி விடணும், திடீர்னு மடியில் வந்து படித்துக்குவான்... இவ்வளோ பாசத்தை பொழிந்துட்டு கோபத்துல ஒரு வார்த்தை திட்டினா கூட தாங்க முடியாதுடாம்மா!” என்றார் கண் கலங்க.

அதற்கு சந்தியாவோ, “என்ன பாட்டி? இப்படி சென்டிமென்ட்டா பேசினா  கார்த்திக்கிட்ட சொல்லாம விட்டுடுவேனா....” என மிரட்ட, இதை சற்றும் எதிர்ப்பார்க்காத சுலோ பாட்டி திடுக்கிட்டார். அவளோ அதைக் கண்டு கொள்ளாமல், “பாட்டி நான் கார்த்திக்கிட்ட இதை சொல்லாம இருக்கணும்னா என் பின்னாடியே சென்னைக்கு வந்து, இந்த ஒரு வாரமா என்னன்ன பண்ணார்ன்னு புட்டு புட்டு வைக்கிறீங்க..” என்று தாஜா செய்து அத்தனை விஷயத்தையும் கறந்து விட்டாள்... அவளுக்கு தெரியாமல் கல்லூரிக்கு பார்க்க வருவது, அவளுக்கு மதிய உணவை தானே சமைத்து பேராசிரியர் மூலம் கொடுத்து விடுவது... இது போல அவளுக்காக அவன் செய்த  விஷயங்களை அவர் சொல்ல கேட்டு ரசித்தாள்...

“நீங்க நடத்துற பவுண்டேஷன்க்கு கூட்டிகிட்டு போனான். புத்தி சுவாதீனம் இல்லாதவங்களுக்கு உதவுறது சாதாரண விஷயம் இல்லை... இந்த வயசுல முதிர்ச்சியா யோசிக்கிறாங்களே  காலேஜ் படிக்கிற பிள்ளைங்கன்னு மலைப்பா இருந்ததும்மா.. எல்லாம் உன்னோட முயற்சின்னு காதி சொன்னான்”, என்று அவளை மெச்சுதலாக பார்க்க, அதற்கு புன்னகையை பதில் ஆக்கினாள். மனதிற்குள் கார்த்திக் அங்கு சென்றிருப்பதை வியந்தாள்.

மாலையில் அனைவரும் கோவிலுக்கு புறப்பட ஆயத்தமாக, யாதவ்வோ வேறு திட்டம் போட்டான்.

“பொண்ணுங்க எல்லாம் கோவிலுக்கு போங்க...எங்களுக்கு வேற வேலையிருக்கு...”, என்றான்.

அவனை முறைத்த சந்தியா, “ஏன்டா எங்களை கழட்டி விடுற?” என கேட்க,

மறுநாள் திருமண வரவேற்பு நாளை எதிர்நோக்கியிருந்த அவள்  தோழி ஸ்வேதா, “என்கிட்ட ட்ரீட்க்கு காசை  கறந்துட்டானுங்கடி.. ...அதான் எஸ்கேப் ஆகப் பாக்குறானுங்க” என, அதற்கு சந்தியா,

“என்ன வேணாலும் செய்துக்கோ. எங்க வேணாலும் போயிக்கோ. ஆனா, நாளைக்கு காலையில் ஒன்பது மணிக்கு ஆர்ம்ஸ் பவுண்டேஷன்ல இருக்கணும்... அங்க முழு நாள் இருந்துட்டு ராத்திரி ஸ்வேதா ரிசப்ஷன்க்கு போறோம்”, கட்டளையாக அடுத்த நாள் திட்டத்தை கூறி அனுப்பி வைத்தாள்.

கோவிலுக்கு கிளம்பி தயாராகி வந்த கார்த்திக்கும், நிருவும் மாறி மாறி கைக் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.... புடவை கட்ட சென்ற பெண்கள் இன்னும் வந்த பாடில்லை... அப்போது அங்கே வந்த சிவா,

“என்ன மாப்ளே வாட்ச் ஓடுதா இல்லை ஓடலையான்னு டெஸ்ட் பண்றீங்களா?..” என கேட்டான் கார்த்திக்கிடம்.

“இல்லே...பட்வே கட்ட போனது...இன்னும் வர்லே”, நிரு.

“கொல்காப்பியன் சப்வே மாதிரி ஏதோ சொல்றானே... என்னதுடா?”, கார்த்திக்கிடம் கேட்டான் சிவா.

“ப்ச்...புடவையை கட்ட போனாங்க....”, என்றான் கார்த்திக் பொறுமை இழந்து.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.