(Reading time: 17 - 33 minutes)

02. ஆசை ஆசையாய் - அனிதா S

விடிந்தவுடன் பரபரப்பாக நண்பர்கள் அனைவரும் 9 மணிக்கே க்ரவுண்ட்ல சேர்ந்துவிட்டனர். பள்ளிகூடத்திற்கு சேர்ந்து செல்வதற்கு தான் இந்த மீட்டிங். 10 மணிக்கு அனைவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். அனைவரின் முகத்திலும் ஒரு வித பயம். ரிசல்ட் என்றாலே பயம் தானே எவ்வளவு நன்றாக எழுதி இருந்தாலும் எழுதவில்லை என்றாலும் . ஒவ்வொருவராக ரிசல்ட் பார்த்து சந்தோசமும் கவலையும் அழுகையுமாக வந்தனர். நண்பர் கூட்டத்தில் அனைவரும் பாஸ். ராமும் கிரிஷ்னாவும் ஓரளவுக்கு மதிப்பெண் பெற்றிருந்தனர். ரிசல்ட் பார்த்து முடித்து வீட்டிற்கு வரும் வழியில் ராமும் கிரிஷ்னாவும் நிஷாவை சந்தித்தனர். நிஷாவும் பாஸ் செய்திருந்தாள். வெகு நாட்கள் கழித்து சந்திக்கும் அவர்கள் பார்த்தவுடன் பேசுவதற்கு தயங்கினர். அப்படியே நின்றனர்... ஒரே நேரத்தில் மூவரும் சிரித்தனர். சண்டை என்பதே நினைவில் இல்லாதவாறு பேசிக்கொண்டனர்.

"அடுத்து என்ன செய்ய போகிறீர்கள், எங்கு படிக்க போகிறீர்கள்" என்று மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டனர். பேசி வீட்டு சகஜ நிலைக்கு திரும்பினர். யார் மனதிலும் ஒன்றும் இல்லை தற்போது. விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டனர்.

Aasai aasaiyaaiவீட்டில் அனைவரும் காத்திருந்தனர். ராமும் கிரிஷ்னாவும் அவரவர் வீட்டில் சென்று ரிசல்ட் பற்றி கூறினர். அடுத்து என்ன செய்வது என்று வீடுகளில் தீவிர மீட்டிங் நடந்தது. இருவருக்கும் ஒரே கல்லூரியில் சீட் கிடைத்தது. கிரிஷ்னாவின் அக்கா படிக்கும் அதே கல்லூரி. இருவருக்கும் அதீத மகிழ்ச்சி. கல்லூரிக்குச் செல்கிறோம் என்ற நினைப்பை விட நண்பர்கள் இருவரும் ஒரே கல்லூரி, ஒரே பிரிவு வேறு என்ற சந்தோஷம் தான் அதிகம் இருவருக்கும்.

அவர்களின் ஊர் கிராமம். ஒரளவுக்கு வளர்ச்சியடைந்திருந்தது. கல்லூரி வேறு ஊரில். கிரிஷ்னாவின் அக்கா விடுதியில் தங்கி பயின்று வருகிறாள். பணம் அதிகமாக தேவைப்பட்டதால் கிரிஷ்னா விடுதியில் தங்கவில்லை. ராமும் கிஷ்னாவும் தினந்தோறும் பஸ்ஸில் சென்று வருவதாக பேசப்பட்டது. எல்லாம் முடிந்து கல்லூரிக்கு செல்லும் நாள் வந்தது.

முதல் நாள் கல்லூரிக்கு சென்றனர் இருவரும். முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்து மதியமே கல்லூரி விடப்பட்டது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும்.

"டேய் மச்சா அம்மா அக்காவ பாத்து இந்த கவர கொடுக்க சொன்னாங்கடா" என்றான் ராம்.

"ஆமாடா இது வேறயா, முதல் நாளே கேர்ள்ஸ் ஹாஸ்டலா. போகலனா அம்மா திட்டுவாங்க, சரி வாடா மச்சா பாக்கலாம். கேர்ள்ஸ் ஹாஸ்டல் எங்கடா இருக்கு" என்றான் கிரிஷ்னா.

"டேய் அந்த கவலை வேணாம்டா, இங்கே காலேஜ் பக்கத்துல தாண்டா இருக்கு. வர்ர வழில பாத்தேண்டா நான்" என்றான் ராம்.

"வந்தவுடனே கேர்ள்ஸ் ஹாஸ்டல பாத்தியாக்கும், மாப்பு நீ சரி தாண்டா, சரி வா போவோம்" என்றான் கிரிஷ்னா.

வர்களுக்காக அக்கா திவ்யா ஹாஸ்டலுக்கு வெளியில் காத்துக்கொண்டிருந்தாள். கொடுத்து விட்டதை அக்காவிடம் கொடுத்தான் கிரிஷ்னா. ராமிற்கும் திவ்யா பாசமான அக்கா தான். திவ்யா அவர்களை வெளியில் காத்திருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் ஏதோ அம்மாவிடம் கொடுப்பதற்காக எடுப்பதற்கு.

ஒரு பெண் அவர்களை தாண்டி விடுதிக்குள் சென்றாள். கிரிஷ்னா எங்கேயோ பார்த்துகொண்டிருப்பதை கவனித்து என்ன என்று கேட்டான் ராம்.

"ஒன்னும் இல்லடா, ஒரு பொண்ணு இப்போ போச்சுல நம்மல கிராஸ் பன்னி அந்த பொண்ணை எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சுடா அதான் பாத்தேன்" சொல்லி சமாளித்தான் கிரிஷ்னா.

"ஆமாண்டா தெரியும் உனக்கு ஏன் தெரியாது, என்னை சொல்லிட்டு நீ என்ன பாக்குற இப்போ, யாருடா அந்த பொண்ணு நா அப்படி யாரையுமே பார்க்கலை" என்று நக்கலாக கூறினான் ராம்.

 "அட போடா, அதெல்லாம் ஒன்னும் இல்ல, நா நல்லா பார்க்கலை, பார்த்த மாதிரி இருந்துச்சு சொன்னேன் அவ்ளோ தான், அக்கா வர்ரா சும்மா இருடா" என்று கூறிவிட்டு கிரிஷ்னா அந்த பெண்ணை தான் தேடிக்கொண்டிருந்தான் திரும்பி வருவாளா என்று.

ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை. மனதில் ஏதோ சொல்ல முடியாத சந்தோஷம் கிரிஷ்னாவுக்கு. அக்கா வந்தவுடன் வாங்கிக்கொண்டு விடைபெற்று கிளம்பிவிட்டனர். காலேஜுக்கு வெளியில் செல்லும் வரை திரும்பி திரும்பி பாத்துகொண்டே சென்றான்.

டுத்த நாள் வகுப்புகள் வழக்கம் போல் ஆரம்பிக்கப்பட்டது. அந்த பெண்ணை அவன் அதன் பிறகு பார்க்கவே இல்லை. ஓரே பிரிவு என்றாலும் முதல் பருவத்தில் இருவரும் வேறு வேறு வகுப்பு தான். கல்லூரி காலம் கலாட்டாவாக போய்க்கொண்டிருந்தது மகிழ்ச்சியாக. இன்னொரு முறை விடுதிக்கு சென்ற போது அவளை பார்த்தான். அவள் முகம் அன்று தான் நன்றாக பதிந்தது அவன் மனதில். காதல் உள்ளே குடிகொண்டது புரிந்தது கிரிஷ்னாவிற்கு. அவள் பற்றி எந்த விவரமும் அவனுக்கு தெரியாது, அவள் விடுதியில் தங்கியிருப்பதை தவிர, பெயர் கூட தெரியாது. அவ்வப் போதுபார்க்க நேர்ந்தது விடுதிக்கு திவ்யாவை பார்க்க செல்லும் போதெல்லாம்.

வள் பெயர் ராதா. எல்லாவற்றிலும் சிறப்பாக  இருக்க வேண்டுமென்று நினைப்பவள். செய்யும் வேலை எதுவாக  இருந்தாலும் முடிந்த அளவு சிறப்பாக செய்வாள். அம்மா அப்பா மீது அதீத பாசம். எல்லாவற்றையும் அப்பாவிடம் கூறுவாள். எதையும் மறைத்து பேசமாட்டாள் யாரிடமும்.

முதல் பருவம் தேர்வுகள் முடிந்து இரண்டாம் பருவம் அவரவர் பிரிவுகளில் படிக்க வேண்டும். கிரிஷ்னாவும், ராமும் ஒரே வகுப்பில் சேர்ந்தனர். இனி படிப்பு முடியும் வரை இதே வகுப்பில் தான் பயில வேண்டும். இரண்டாம் பருவம் முதல் நாள், கிரிஷ்னாவும் ராமும் ஒரே டெஸ்க், முதல் வரிசை. கிரிஷ்னாவின் பார்வை பெண்கள் பக்கம் முதல் வரிசையை நோக்கியது எதார்த்தமாக. கிரிஷ்னாவிற்கு ஒரு அதிர்ச்சி கலந்த சந்தொஷம் காத்திருந்தது. ராதாவைக் கண்டான்.

வளும் அதே பிரிவு. கிரிஷ்னாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கிரிஷ்னா ராமிடம்

"மாப்பு அங்க பாருடா, அந்த பொண்ணு தான்டா நான் பஸ்ட் டே பாத்தது" என்று கூறினான்.

"ஓகோ சரி ரைட்டு, அதுகென்னடா இப்போ" என்றான் ராம்.

"சும்மா சொன்னேன் டா.அன்னைக்கு நீ கேட்டல அதாண்டா சொன்னேன், வேற ஒன்னும் இல்ல" என்றான் கிரிஷ்னா.

“ஓகோ நியாபக சக்தி உனக்கு அதிகமா இருக்குன்றதையே நா மறந்துட்டு பேசுறேன் டா, நடக்கட்டும் நடக்கட்டும்" என்றான் ராம்.

"சரி விடுடா, விடுடா, பாடத்தை கவனிடா, மொத நாளே வசவு வாங்காம மேம் கிட்ட" என்றான் ராம்.

தன் பிறகு, அவள் பெயர் ராதா என்று தெரிந்து கொண்டான், கொஞ்ச நாள் கழித்து, அவள் விடுதியில் இருப்பதால் அக்காவிடம் எதார்த்தமாக பேசி ராதாவை பற்றி தெரிந்து கொண்டான்.

"நல்ல பொன்னு, பாசமான பொன்னு, நல்லா படிப்பா, எனக்கு நல்ல ப்ரண்ட், என்னுடன் நல்லா பேசுவா" என்று திவ்யா கூறினாள்.

கிரிஷ்னாவின் காதலும் வளர்ந்து கொண்டே போனது. அவளை வகுப்பில் பார்த்துக் கொண்டே இருப்பான் யாரும் கவனிக்காத போது. அவளிடம் பேச முயற்ச்சிக்கவில்லை. யாரோ நம்மை பார்ப்பதை உண்ர்ந்த ராதா, கவனிக்க ஆரம்பித்தாள் கிரிஷ்னாவை. இவள் பார்க்கும் போது அவன் பார்க்காதது போல் திரும்பிக் கொள்வான். அவள் அதைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. படிப்பில் முதலாவதாக வருவதை மட்டும் லட்சியமாக கொண்டாள், காரணம் அவளின் அப்பாவிற்காக, அவளுக்கு ஐ.ஏ.ஸ் ஆக வேண்டும், ஹோம் நடத்தனும், கஷ்ட்டப்படுபவர்களுக்கு நிறைய உதவி செய்யனும், அம்மா அப்பா இல்லாத குழந்தைகளை எடுத்து படிக்க வைக்கனும் என்பது தான் கனவு, பி.இ படிப்பதில் விருப்பமே இல்லை. இருந்தாலும் அப்பாவின் ஆசைக்காக படித்தாள், இது வரை அவளுக்கென்று எந்த ஆசையும் இல்லை. அவள் விரும்பியதை விட எல்லாமே அதிகமாக செய்து கொடுத்தனர் அவளுக்கு.

 ராதாவுக்கும் கொஞ்ச நாள் கழித்து கிரிஷ்னா, திவ்யா அக்காவின் தம்பி என்று தெரிய வந்தது. இரண்டாம் வருடம் வந்தது. பார்வை மட்டுமே போதும் என்று இருந்தான். கிரிஷ்னாவிற்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

"ஹாய், ஹவ் ஆர் யூ? " என்று

அவன் ஹு ஆர் யூ என்றான்.

கிரிஷ்னாவா?..

ஆமாம், நீங்க யாரு என்றான்.

உன் கிளாஸ் மெட் தான், கண்டு பிடி என்றாள்.

 

15 comments

  • oh, iththanai varusaththai ore episode la koduthutteengale..<br />nice epi.. radha krishna seranum, athu than sariyaa irukkum..
  • very nice episode...<br />krishna - radha kandippa seranum anitha mam...<br />true love never fails... :P
  • Super update.. Orae update la ivlo info solitinga.. Gud (y) nichayamaga radhavum krishnavum than seranum... :yes: Avargalin latchiyangalaium adaiyanum..
  • Interesting plot Anitha.<br />BTW, sent you an email, please check it and feel free to get back if you have any questions / doubts :)
  • Thanks jansi :thnkx: , neenga solrathu sari, rendu perum avanga ambition la kavanam seluthanum ipo, matravai thaana nadakkum. irunthalum rendu perukkum ikattanaa soolnilai. vera vali irukaa....?
  • nice update...........radha Krishnan dan seranum.....rendu perum orutharuku oruthar romba nesikiranga........radha nambara madri avanga love-e avangala sethudum............. :yes:
  • Hi Anita, nice update inda episodela neraiya visayangala solliyirukeenga. Krishna & Radha kaadalku enna mudivunnu ketirukeenga .enakennamo avanga rendu perume avanga ambitionla kavanam selutanumnu tonudu.oru varusatla evvalavo nadakalame ......ராதாவிற்கு நம்பிக்கை இருந்தது தனது காதலில். நாம பண்ற காதல் உண்மையா இருந்த அந்த காதலே நம்மல சேர்த்து வைக்கும் என்பது தான். .... :cool: :)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.