(Reading time: 41 - 82 minutes)

வித்ரா ஏதும் கூறாமல் இருக்க சந்துரு “என்ன ஸ்வேதா” என்றான்.

“என்னை ஏன் என்னன்னு கேட்கறீங்க. இங்க என்ன நடக்குது”

“---“

“உங்க அண்ணன் கல்யாணத்தை காரணம் சொல்லி தான் நம்ம மேரேஜ் தள்ளி போட்டிருக்காங்க. இப்ப உங்க அண்ணனுக்கு எங்கேஜ்மன்ட் ஆகிடுச்சி. அடுத்து நம்ம மேரேஜ் பத்தி எல்லாரும் பேச ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா இங்க இவ என்னடான்னா உங்களை மயக்கிக்கிட்டு இருக்கா”

“ஸ்வேதா மைன்ட் யுவர் வார்ட்ஸ்”

“வொய் ஷூட் ஐ. நீங்க என்ன வேணும்னாலும் செய்வீங்க. நான் அது எதையும் கண்டுக்காம இருக்கணும்ன்னு சொல்றீங்களா”

“ப்ளீஸ் ஸ்டாப் இட். இங்க பங்ஷன் நடக்குது. இங்க கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி பெரிய இசூ ஆக்காத”

“ஓ. அப்படின்னா நீங்க பண்றதெல்லாம் பார்த்துட்டு நான் அமைதியா இருக்கணும்ன்னு சொல்றீங்களா”

“ஸ்டாப் இட் ஸ்வேதா. போதும். இங்க ஏதும் பேச வேண்டாம். இப்ப இங்க எந்த பிரச்சனை வரர்தையும் நான் விரும்பலை. இதுக்கு மேல இப்படி கத்திட்டு இருந்தா நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்று சந்துரு அடிக்குரலில் சீறினான்.

அவனின் கோபக் குரலை கேட்டு பயந்து ஒரு நிமிடம் தணிந்து பின்பு அவனருகே சென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு “ஏன் சந்துரு இப்படி எல்லாம் நடக்குது. அப்ப நம்ம லவ்க்கு என்ன அர்த்தம். நமக்கு நடுவுல இவளை மாதிரி ஒருத்தி எல்லாம் எப்படி வரலாம்” என்றாள்.

அவளின் வார்த்தைகளை கேட்ட சந்துரு அவள் கையை உதறி விட்டு “போயிடு இங்கிருந்து” என்று கத்தினான்.

அவனின் செய்கையில் ஆக்ரோஷம் அடைந்த ஸ்வேதா அங்கிருந்த செல்ல தொடங்கிய பவித்ராவின் கையைப் பிடித்து இழுத்து “எல்லாம் உன்னால தான் டீ. எப்படி உன்னால இப்படி சீப்பா பிஹேவ் பண்ண முடியுது. இவ்வளவு நாளா லவ் பண்ணிட்டு இருக்க எங்களுக்கு நடுவுல இந்த கொஞ்ச நாள்ல வந்துட்டியே, நீ எல்லாம் நல்ல குடும்பத்து பொண்ணா” என்றாள்.

அவள் பேச்சைக் கேட்ட பவித்ராவிற்கு இந்த வார்த்தையை எல்லாம் கேட்டுக் கொண்டு நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே என்ற எண்ணம் தான் வந்தது.

சந்துரு அதற்குள் பவித்ராவை பிடித்திருந்த ஸ்வேதாவின் கையை எடுத்து விட்டு ஏதோ பேச ஆரம்பிப்பதற்குள் பவித்ரா அங்கிருந்து வேகமாக சென்று கொண்டிருந்தாள்.

அவளை கண்ட சந்துருவால் அவளை தடுக்க இயலவில்லை. ஸ்வேதாவை கோபமாக முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

இதை எல்லாம் பவித்ராவின் வாயிலாக தெரிந்து கொண்ட ஜோதியால் கோபத்தை கட்டுப் படுத்த இயலவில்லை. பவித்ராவின் நிலையை கண்டு அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அவளிடம் ஒன்றும் சொல்ல இயலவில்லை.

“அக்கா ப்ளீஸ். என்னை எப்படியாவது அந்த வீட்டுக்கு மட்டும் போக விடாதீங்க” என்று அழுதான் பவித்ரா.

“சரி டா. பார்த்துக்கலாம் விடு”

“இல்லக்கா. இன்னைக்கே அப்பா என்னை அங்க தான் வர சொன்னாங்க. நான் என்னென்னவோ சொல்லி இங்க வந்துட்டேன். நான் எப்படிக்கா திரும்ப அங்கே போவேன். ப்ளீஸ்க்கா எதாச்சும் பண்ணுங்க”

“சரி விடு பவித்ரா. நீ இப்ப அழாத. நான் எதாச்சும் பண்றேன்”

ரண்டு நாட்கள் கழித்து போட்டோ ஆல்பமும், வீடியோ சிடியும் கொண்டு வந்தாள் ஜோதி பவித்ராவுடன்.

எல்லோரும் சூழ்ந்துக் கொண்டு ஆல்பத்தை பார்க்க ஆரம்பித்தனர்.

நிறைய போட்டோக்களில் இனியா வெட்கப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்.

பக்கத்திலோ ஜோதி அவளை சீண்டிக் கொண்டே இருந்தாள்.

சிறிது நேரத்தில் போட்டோவை பார்வையிட்டு முடித்து விட்டு ராஜகோபாலும் லக்ஷ்மியும் சென்று விட்டனர்.

அவர்கள் சென்ற பிறகு ஜோதியும் பவித்ராவும் வெளிப்படையாக கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இனியா பல்லைக் கடித்துக் கொண்டு ‘எல்லாம் அவனால்’ என்று எண்ணிக் கொண்டாள்.

அவளின் மனக் குரல் கேட்டதைப் போல ஜோதி இளவரசனுக்கு போன் செய்து “மாப்பிள்ளை சார், போட்டோஸ்ல எல்லாம் கலக்கலா இருக்கீங்க, அதை பார்க்க வேண்டாமா” என்றாள்.

“போட்டோஸ் எல்லாம் வந்துடுச்சா. ஏன் இங்க கொண்டு வந்து கொடுக்கலை”

“அந்த போட்டோஸ் நீங்க இங்க வந்து பார்த்தா நல்லா இருக்கும்ன்னு நான் நினைக்கறேன், நீங்க என்ன நினைக்கறீங்க”

இது தான் நல்ல சேன்ஸ் என்று எண்ணிய இளவரசன் “ஓகே. நான் அங்க வரேன், அவ கிட்ட சொல்லாதீங்க” என்றான்.

“ம்ம்ம். ஓகே ஓகே. நடத்துங்க நடத்துங்க”

ளவரசன், சந்துரு, ராஜலக்ஷ்மி எல்லோரும் வீட்டினுள் நுழையும் போது ஜோதி ஏதோ சீண்டிக் கொண்டிருக்க இனியா அவளை திட்டிக் கொண்டிருந்தாள்.

“என்ன சண்டை ரெண்டு பேருக்கும்” என்று கேட்டவாறே வந்தார் ராஜலக்ஷ்மி.

அவரின் குரல் கேட்டு திரும்பியவர்கள் ராஜலக்ஷ்மியை வரவேற்றனர்.

உள்ளே இருந்து ராஜகோபாலும், லக்ஷ்மியும் வந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தனர்.

இனியாவோ இளவரசனை வெட்டுவதை போல் பார்த்து முறைத்தாள்.

ஆல்பத்தை பார்ப்பதை போல் அவளருகில் வந்தமர்ந்தவன் “என்னடீ ரொம்ப நல்ல வரவேற்பா இருக்கு” என்று முணுமுணுத்தான்.

“உங்களை. போட்டோவை பாருங்க. எல்லாரும் என்னை எப்படி கிண்டல் பண்றாங்க தெரியுமா.”

ஒரு போட்டோவில் அவன் ஏதோ கூற இனியா தலை குனிந்தப் படி வெட்கப் புன்னகையுடன் நிற்கிறாள்.

அந்தப் போட்டோவை பார்த்தவன் அடுத்து திருப்பாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்து முறைத்தவள் அவனை திட்ட வாயெடுக்க, அவளை தடுத்து

“ஏய் எல்லாரோட மேரேஜ் போட்டோஸும் இப்படி தான் இருக்கும் டீ. இதெல்லாம் இல்லாம ஸ்டிப்பா நிக்கறதுக்கு எதுக்கு போட்டோஸ், நீயே சொல்லு”

“போங்க. நீங்க இதே மாதிரி எதாச்சும் சொல்லி சமாளிப்பீங்க.”

“சரி விடு செல்லம். இப்ப யாரு என்ன சொன்னாங்க. என் கிட்ட சொல்லு. மாமா பார்த்துக்கறேன்”

“மாமாவா அது யாரு”

“அப்படியா. சரி” என்றவன், ஜோதியை அழைத்து “ஏங்க, இனியாக்கு நான் என்ன முறையாகனும்” என்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.