(Reading time: 34 - 67 minutes)

சிறிது நேரம் பொருத்து தேஜுவும் மேலே வந்துவிட. கிடைக்கறிய வண்ண வண்ண மலர்களை போல் இடமிருந்து வலமாக வருசையாய் நின்றனர்.... வெள்ளி சாரலாய் விழும் மழையினை தன்மேல் தேக்கி, மனதில் எழுந்த மகிழ்ச்சியினை காற்றோடு இசைந்து ஆடி பசுமையாய் காட்சி அளிக்கும் மழைக்கால மரங்களை போல், பச்சை பசேலென நிறத்தில் பட்டுபுடவை அணிந்து நின்ற தேஜுவை தொடர்ந்து, வெளியே பார்க்க அடர்ந்த நிறத்தில் இருந்தாலும் சுவைக்க சுவைக்க உண்ட இதழினை அடர்த்தியாக்கி நாவை விட்டு சுவை நீங்கா இருக்கும் நவாப்பழ நிறத்தில் பட்டுடுத்தி நின்ற அர்ச்சனாவும், அவளை தொடர்ந்து கையில் எடுத்தாள் நிறமே இல்லாமல் தூய்மையாய் காட்சியளித்து, பெரும்கடலாய் பார்க்கையில் ரம்யமாய் மனதில் அமைதி பரவ செய்யும் சமுத்திரத்தின் நீல நிறத்தில் பட்டுடுத்தி அனுவும், அவளை தொடர்ந்து தொட்டால் கைக்கு குளிர்ச்சி தந்து, நுகர்ந்தால் மெய் சிலிர்க்கும் மணம் தந்து, மங்கலமாய் காட்சி அளிக்கும் சந்தன நிற சேலை உடுத்தி மனம் முழுதும் பெரும் எதிர் பார்ப்போடும், அதே நேரம் புதுவித உணர்வில் படபடப்பையும் ஏந்தி தன் கணவனாக போகும் அர்ஜுன் அருகில் தலை குனிந்து காத்திருந்தாள் அஹல்யா, அவளை தொடர்ந்து காதலை வென்றுவிட்ட கர்வத்தோடும், இனி இவள் என்னவள், அவளின் தாய் தந்தையின் பொறுப்பில் இருந்து அவளை என்னில் பாதியாக்கி பட்டு சிறகாய் காப்பேன் என்ற பொறுப்போடும், நெஞ்சமெங்கும் கிளர்ச்சியோடும் அமைதியாய் அமர்திருந்தான் அர்ஜுன். அவனை தொடர்ந்து எப்போதும் போல பார்போரை கவரும் வகையில் வசீகரமாய் அஸ்வத் நின்றான், அவனை தொடர்ந்து என்னதான் comedyaga இருந்தாலும் தன்னுள் இருக்கும் ஹீரோவை சிரமப்பட்டு வெளியே கொண்டுவந்து, தொடர்ந்து காதல் அம்பினை தொடுத்தவாறு அடுத்த மாப்பிள்ளை ஆவதற்கு தயாராக நின்றான் நவீன். அவனை தொடர்ந்து எந்தவித அலட்டலும் இல்லாமல் அமைதியாய் அனைவரையும் கவர்ந்தவண்ணம் நின்றான் நிரஞ்ஜன். பெண்கள் எல்லாம் புடவையிலும் ஆண்கள் எல்லாம் வேட்டி சட்டையிலும் அந்த இடத்தையே மெருகேற்றி காண்பித்தனர்.

““கெட்டிமேளம் கெட்டிமேளம்”” என்று அய்யர் கூற, பின்னிசை வாத்தியங்கள் இடத்தை முழுமையாக்க, சுற்றியிருந்த உறவுகளின் மனமெல்லாம் மகிழ்ச்சியில் நிரம்பிவழிய, கையில் இருந்த அர்ச்சதை ஆசிர்வதமாய் மணமக்களை நோக்கி செல்ல, அர்ஜுனின் கையால் திருமாங்கல்யத்தை தன் கழுத்தில் ஏந்தி உடல் முழுதும் ஒரு சிலிர்ப்பை உண்டு பண்ண, தன் மீன் விழிகளை உயர்த்தி தன்னவனை லியா காண, அவள் விழிகளில் கலந்தபடியே மூன்று முடிச்சினையும் போட்டான் அர்ஜுன். மகிழ்ச்சியில் உச்சியில் இருந்த இருவருக்கும் ஆனந்தத்தில் கண்கள் கலங்க ஒருவரை ஒருவர் பார்த்து நகைத்துக்கொண்டனர். வேறென்ன வரம் வேண்டும் என்னவள் என் அருகில் இருப்பதை விட என்று மனம் நிறைந்தது அர்ஜுனுக்கு...

நண்பனின் காதல் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் இறுக தழுவிக்கொண்டான் நவீன். தொடர்ந்து அனைவரும் வாழ்த்தினை சொல்லி முடிக்க, தொடர்ந்து சடங்குகள் வந்தன.. மோதிரம் தேடி எடுப்பது, மெட்டி அணிவது, அருந்ததி பார்ப்பது என்று எல்லா சடங்குகளும் முடிய... கொஞ்சம் கொஞ்சமாய் கல்யாண கூட்டம் குறைந்தது. மணமக்களை மணமகளின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்...

அதன்பின் என்ன மணமகளை ஒருபுறம் தள்ளி சென்றனர், மணமகனை ஒருபுறம் தள்ளி சென்றனர். இருவரும் அவ்வபோது பார்த்துக்கொள்வதை பார்த்த உறவுக்கார பெண்கள் கிண்டல் செய்ய வெட்கம் எனும் போர்வையில் ஒளிந்துக்கொண்டாள் அஹல்யா...

கூட்டம் கூட்டமாக பேசிய பெண்களுக்கு எல்லாம் நேரம் மிகவேகமாய் செல்ல, வெவ்வேறு திசைகளில் இருந்துகொண்டு மற்றவரின் நினைப்பில் நேரத்தை கடத்திய மணமக்களுக்கு மட்டும் நேரம் தண்ணீர் குழாயில் சொட்டும் தண்ணீரை போல் மெதுவாக சென்றது... வீட்டில் இருந்த பெரியவர்கள் மட்டும் பரபரப்பாக சுற்றிக்கொண்டிருந்தனர். வெளியே போவதும் பைநிறைய பொருள்கள் வாங்கி வருவதும் என்று சுற்றிக்கொண்டிருந்தனர். இதை அனைத்தையும் பார்க்காதது போல் கவனித்துக்கொண்டிருந்த தேஜு, அனு, அர்ச்சனா அனைவரும் ரகசிய புன்முறுவலுடன் பார்க்க, அனு வெட்கத்தை மறைக்க சிரமபட்டுபோனாள்... நேரம் கடந்து இரவு துவங்கி, அனைவரும் உணவருந்திவிட்டு,கதை அடித்துக்கொண்டிருந்தனர்.

நேரம் கடக்க கடக்க அர்ஜுன் மகிழ்ச்சில் இருக்க, ஒருவித படபடப்பு உருவாவதை உணர்ந்தாள் அஹல்யா.. அவள் தாங்கள் பேசுவதை கவனிக்கவில்லை என்று உணர்ந்திருந்தும் பெருந்தன்மையோடு பேசாமல் விட்டுவிட்டனர் மூவரும்... அர்ச்சனா கதை பேசவென அஹல்யா வீட்டிலேயே தங்கிவிட, அஹல்யாவின் உறவினர்கள் சிலர் அருகில் உள்ள அர்ச்சனாவின் வீட்டில் தங்கிக்கொண்டனர். கண்ணனும் துளசியும் எவ்வளவு மறுத்தும் பிரித்து பார்க்கும் அளவிற்கு தோன்றவில்லை அன்புகரசிக்கு... இத்தனை வருடங்களில் தோழமை தாண்டி பலகியமையால் மருத்துபேச முடியாமல் விட்டுவிட்டனர் அஹல்யாவின் பெற்றோர்.

தேஜு மணி என்ன?

ம்ம்ம்ம் 9.30டி

விஷமமாக சிரித்தபடி, ஓஹோ.... என்று மெதுவாக இழுத்துவிட்டு, ஒன்னு.... ரெண்டு.... மூனு....  என்று அவள் வாய்விட்டு விஷம சிரிப்போடு எண்ண துவங்க, மற்ற மூவரும் புரியாமல் முழித்தனர்... அவர்கள் பார்வை புரிந்தும் எண்ணிக்கையை தொடர்ந்தாள் அனு. பத்து.... என்று அவள் கூறி முடிக்கவும் கதவை திறந்து கொண்டு ஹேமா வரவும் சரியாக இருந்தது... “ஹே வாயாடி இங்க என்ன கதை அடுச்சிகிட்டு இருக்கீங்க போங்க போங்க வெளிய போய் குட்டீஸ பாத்துக்கோங்க போங்க...” என்று சடங்குகள் செய்யும் இடத்தில் திருமணம் ஆகாத பெண்கள் இருக்க வேண்டாம் என்று அவர்களை வெளியேற்ற நினைத்து அம்மூவரையும் ஒரு காரணம் கூறி அனுப்பினார்....(இவர்களுக்கா இதெல்லாம் புரியாது?!?!) இதை கேட்டதும் மூவருக்கும் சிரிப்புவர, சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு ரகசியமாய் அஹல்யாவின் காதோரம் “ஆல் தி பெஸ்ட்” என்று கூறி ஓடி சென்றனர் அம்மூவரும்.

வெளியே வந்தும் அம்மூவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை, ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பார்வை இட்டுவிட்டு சிரித்துக்கொண்டனர். அதில் தேஜு தான் முதலில் வாய் திறந்தாள், அனுவை பார்த்தவாறு, “நம்ம சின்ன பசங்களாம்....” என்று அவள் நக்கலாக கூற, அதற்கும் சேர்ந்து சிரித்தனர் மூவரும்.

ஒருவழியாக அவர்கள் பார்வையில் இருந்து விடுதலை பெற்ற நிம்மதியோடு பெரியவர்கள் அலங்காரம் செய்துவிட அமைதியாய் அமர்ந்திருந்தாள் அஹல்யா... நகைகள் எல்லாம் போட்டுவிட காலையில் இருந்து நகைகளோடு சுற்றிய அலுப்பில் மீண்டுமா என்று அலுத்துக்கொண்டாள் அஹல்யா மெதுவாக வாய்திறந்து “எதுக்கு அத்தை இது போட்டிருக்கிறதே போதுமே” என்று அவள் கூற, அவள் அருகில் நின்றிருந்த அவள் வயதை ஒத்த திருமணம் ஆன பெண் அவளை கிண்டலாக பார்த்துவிட்டு, “இதை வேற எதுக்கு போட்டு கலட்டினு... அலுப்பா இருக்கா அஹல்” என்று சீண்ட, ஐயோ இவங்களுமா என்று அழுத்து போக பேசாமல் வெட்கத்தோடு குனிந்துக்கொண்டாள் அஹல்யா. பெரியவர்களுக்கு இது புரியும் தான் ஆனால் புரியாததுபோல் பேசாமல் அமைதியாய் இருந்தனர்.

பெண்களுக்கு தானே இத்தனை ஒப்பனை எல்லாம்... அர்ஜுன் முன்பே தயாராகிவிட பொருமையே இன்றி இங்கும் அங்கும் நடந்துக்கொண்டிருந்தான். அவனை பார்த்துக்கொண்டிருந்த மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தனர்.

“டேய் பிரசவம் நடுக்குற மனைவிக்காக காத்திருக்கிற மாதிரி இப்படி நடக்காதடா இப்போதானே முதல் கட்டத்துக்கே போகப் போற” என்று சும்மா இருக்காமல் கிண்டல் செய்தான் நவீன்.

“நானா? ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லையே” என்று பொய்யாக கூறினாலும் உள்ளே எழுந்த பரபரப்பை மறைக்க முடியவில்லை அர்ஜூனால்..

“இவனை முதலில் போய் ரூம்ல தள்ளலாம் வாங்க, இவன் தொல்லை தாங்களை” என்று அர்ஜுனை பார்த்தவரே கூறினான் நவீன்.

எப்போதும் போல் மல்லிகை மணம் அரை முழுவதும் தவழ்ந்து இருக்க, மலர்களால் அலங்கரிக்க பட்டு அருகில் பால் பழங்களோடு தயார் செய்திருந்தனர் பெரியோர்கள் அவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது அர்ஜுனுக்கு சிரிப்பாக இருந்தது. என்னவோ இத்தனையையும் சாப்பிடுவதற்காகதான் மணமக்கள் உள்ளே இருப்பது போல் தயார் செய்தது நினைத்து சிரித்தான். சுற்றும் முற்றும் பார்த்தவன் ஆயாசமாக மெத்தையில் அமர, அஹல்யா கதவை திறந்துக்கொண்டு வந்தாள். பெண்ணிற்கே உரிய நாணம் அவளை தடுத்தாலும், எத்தனை இரவுகள் திருமணத்தை பற்றி பேசி கரைந்திருக்கிறது என்று நினைத்தவளுக்கு சிரிப்பாக இருந்தது. எண்ணி எண்ணி கடத்திய நாட்கள் இதோ வந்துவிட்டது என்று எண்ணியவாறு அர்ஜுன் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.