(Reading time: 78 - 155 minutes)

ம்ம்ம். ஓகே ஓகே. நீ எது சொன்னாலும் ஓகே. என்னை பார்த்தா பாவமா தெரியலை. என்னை கொஞ்சம் கவனிக்கலாம் இல்ல”

“ம்ம்ம். உங்களை கண்டிப்பா கவனிக்க தான் வேணும். இதெல்லாம் முடிச்சிட்டு கவனிக்கலாம்ன்னு இருந்தேன்”

“ஹேய்” என்று இளவரசன் துள்ளி குதிக்காத குறை தான்.

“இருங்க இருங்க. ரொம்ப ஹைட்ல பறக்காதீங்க. அப்புறம் மேல இருந்து வந்து கீழ விழுந்தா ரொம்ப அடிப்பட்டுடும்.

இளவரசன் உஷாராகி “என்னடி, என்னை திரும்ப பயமுறுத்திற” என்றான்.

“நீங்க நடுவுல என்ன சொன்னீங்க”

“என்னடீ சொன்னேன்”

“நல்லா யோசிங்க”

“ஐயோ நான் என்னென்னவோ சொன்னேன், நீ எதை கேட்கறன்னு எனக்கு தெரியலைம்மா. நீயே சொல்லு”

“ம்ம்ம். என்னை பழி வாங்கறியான்னு கேட்டீங்க இல்ல”

“அதுக்கு தான் சாரி கேட்டேன் இல்ல டீ”

“அதெல்லாம் ஏத்துக்க முடியாது”

“அதுக்கு”

“அதுக்கு”

“ம்ம்ம். சொல்லு”

“சோ. நீங்க சொன்ன பனிஷ்மெண்ட் இப்ப தான் உங்களுக்கு கிடைக்க போகுது”

“என்ன சொல்ற”

“ம்ம்ம். நான் போய் தூங்க போறேன்.”

“என்னது”

“ஆமா. நீங்க சொன்ன பனிஷ்மெண்ட்டையே உங்களுக்கு கொடுத்திடலாம்ன்னு தான்.”

“என்னடி சொல்ற. ஏன் இப்படி பண்ற”

“இல்ல இளா. நீங்க எங்கேஜ்மென்ட்லயும் சரி, மேரேஜ்லயும் சரி என்னை ரொம்ப இம்சை பண்ணீங்க. அதுக்கெல்லாம் உங்களுக்கு பனிஷ்மெண்ட் வேண்டாமா”

“நீ பனிஷ்மெண்ட் கொடு டீ. நான் அதைக் கூட வேண்டாம்ன்னு சொல்லலை. ஆனா இப்படி வேண்டாம்.”

“நோ வே. பனிஷ்மெண்ட் கொடுக்கறது என்னோட இஷ்டம். சோ மை டெசிஷன் இஸ் பைனல்.”

“இப்ப என்ன தான் சொல்ற”

“ஹனிமூன் போனதுக்கு அப்புறம் தான் எல்லாம். இது தான் பனிஷ்மெண்ட்”

“என்ன” என்று அவன் அதிர்ந்து கேட்பது காதில் விழாததை போல் அவள் படுக்க சென்றாள்.

“இனியாஆஆஆஆ” என்று கத்திக்கூட பார்த்தான்.

“இளா வேஸ்ட்டா கத்தாதீங்க. வெளியில கேட்டுதுன்னு வச்சிக்கோங்க உங்க மானம் தான் போகும்”

அவளை முறைத்து விட்டு “போடீ” என்று அவனும் சென்று படுத்து விட்டான்.

திரும்பி திரும்பி படுத்துக் கொண்டிருந்தான். ஆனால் உறக்கம் மட்டும் வருவதாக இல்லை.

“இளா எத்தனை தடவை தான் திரும்பி திரும்பி படுப்பீங்க. உங்களால என் தூக்கம் டிஸ்டர்ப் ஆகுது.”

“ஆகும் டீ ஆகும். ஒரு மனுஷன் தூக்கம் வராம தவிக்கறானே அது உனக்கு தெரியுதா, உன் பிரச்சனை தான் உனக்கு முக்கியம்”

“பேசாம தூங்குங்க”

ஏதும் பேசாமல் எழுந்து போய் லைட் போட்டு, ஏதோ புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

இனியா அவனை பார்த்து முறைத்தாள்.

அவனோ கண்டு கொள்ளாமல் புத்தகத்தை பார்ப்பது போல் பாவனை செய்தான்.

“ஹலோ என்ன இது”

“என்னது”

“எதுக்கு இப்ப லைட் போட்டீங்க”

“தூக்கம் வரலை அதான்”

“நான் தூங்க வேண்டாமா”

“அது எனக்கு தெரியாது”

“இளா”

“ஒரு டென் மினிட்ஸ் ஓகே”

“ஏதோ பண்ணுங்க” என்று கூறி விட்டு படுத்துக் கொண்டாள்.

இளவரசனின் கண்கள் புத்தகத்தில் போக மறுத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

கழுத்தில் புது தாலிக் கொடியும், தலையில் மல்லிகை பூவும் சேர்ந்து அவனை ஏதோ செய்தது.

இது ஏதும் அறியாமல் இனியா கண் மூடிக் கிடந்தாள்.

சிறிது நேரத்தில் ஏதோ தோன்ற கண் விழித்து பார்த்தவள் கண் கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை கண்டவுடன் எழுந்து அமர்ந்து விட்டாள்.

“என்ன பண்றீங்க”

“ஒன்னும் இல்லையே”

“எதுக்கு இப்ப வெறிச்சி வெறிச்சி பார்க்கறீங்க”

“ராட்சஷி. ஏற்கனவே நீ மயக்கு மோகினி. இதுல கழுத்துல நான் கட்டின புது தாலி, தலைல பூன்னு சேர்த்து மயக்கினா நான் என்ன டீ பண்ணுவேன்”

இனியாவால் ஏதும் கூற இயலவில்லை.

“சரி விடு” என்றவன் அப்போது தான் நியாபகம் வந்தவனாக எழுந்து சென்று எங்கிருந்தோ ஒரு பெரிய கிப்ட் பேக் கொண்டு வந்து கொடுத்தான்.

“என்னது இது”

“அதை தெரிஞ்சிக்க நீ ஓபன் பண்ணணும்.”

இனியா அதை பிரிக்க அதில் பிங்க் கலரில் பெரிய டெடி பியரும், ப்ளூ கலரில் சின்ன டெடி பியரும் இருந்தது. அந்த சின்ன டெடி பியரில் ஐ லவ் யூ ஸ்வீட்டி என்று எழுதியிருந்தது.

அதை பார்த்த இனியாவிற்கு சந்தோசமே தாங்கவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.