(Reading time: 78 - 155 minutes)

சென்ற இடத்தில் எல்லோரும் சேர்ந்து போட்டோ பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஜோதி தான் திடீர் போடோக்ராப்பர் ஆகி இருந்தாள். இப்படி நில்லுங்க, அப்படி நில்லுங்க என்று எல்லோரையும் டார்ச்சர் செய்து கொண்டிருந்தாள்.

எல்லோரையும் சேர்த்து போட்டோவாக எடுத்து தள்ளினாள்.

அதிலும் இனியாவையும் இளவரசனையும் இப்படி போஸ் கொடுங்க, அப்படி கொடுங்க என்று சொல்லி இனியாவின் கோபத்திற்கு ஆளாகி கொண்டிருந்தாள்.

ஆனால் இனியாவால் ஏதும் சொல்ல முடியாமல் அமைதி காக்க, இளவரசன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

எல்லோரையும் எடுத்துக் கொண்டிருந்த ஜோதி யாருக்கும் எந்த வித சந்தேகமும் வராமல் ஒவ்வொருவராக கிளப்பி விட்டு பவித்ராவையும் சந்துருவையும் சேர்த்து வைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் சேர்ந்து இனியாவிற்கும் இளவரசனுக்கும் தனிமை கொடுத்து ஒதுங்கினார்கள். இனியாவால் தான் அவனின் செய்கைகளை தாங்கி கொள்ள இயலவில்லை.

“இளா. இங்க வந்ததுல இருந்து உங்க அழிச்சாட்டியம் தாங்க முடியலை. என்ன ஏதோ ரொம்ப சின்ன பையன் மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இருக்கீங்க.”

“ஹாஹஹா. ஹனிமூன் வந்துட்டு நான் ஜாலியா இருக்க கூடாதா, வா எல்லார்க் கிட்டயும் போய் கேட்கலாம் வா” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

இனியாவோ அவன் மேல் வந்து விழுந்தாள்.

“என்ன இளா நீங்க. வரவர உங்க தொல்லை தானகவே முடியலை” என்றவாறே விலகி அக்கம் பக்கத்தில் பார்த்தாள்.

ங்கு பெரியவர்களால் வெகு தூரம் நடக்க இயலாததால் அவர்கள் ஆங்காங்கே அமர்ந்துக் கொண்டு, ஜோதி, பாலு, பவித்ரா, சந்துருவை சென்று வருமாறு அனுப்பினார்கள்.

ஜோதியும் பிளான் செய்து “எங்களுக்கு ப்ரைவசி வேணும்ப்பா” என்று சொல்லி விட்டு சந்துருவும் பவித்ராவும் தனியே இருக்க வழி வகுத்தாள்.

இந்த மரமண்டைங்க ரெண்டும் ஏதாச்சும் பேசி தொலைக்காதுங்களான்னு அவளுக்கு ஒரு ஆர்வம் தான். ஆனா எங்க, அப்படி ஒன்னும் நடக்கலையே. சந்துருவாவது பவித்ராவை பார்க்கும் அளவுக்கு வந்திருந்தான். ஆனால் பவித்ராவோ அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

“கொஞ்ச தூரம் அப்படி நடக்கலாமா” என்றான் சந்துரு.

“ம்ம்ம்” என்று மட்டும் தான் கூறினாள் பவித்ரா அவனை பார்க்காமலே.

இந்த முறை பவித்ராவிடம் பேசி விட வேண்டும் என்று அவனும் தான் எவ்வளவோ முயற்சி செய்கிறான், அவனுக்கு அதற்கு ஏற்றார் போல தனிமை கூட கிடைக்கிறது. ஆனால் பவித்ரா இயல்பாக இருந்தால் தானே, எல்லோருடனும் இருக்கும் போதாவது பரவாயில்லை. அவனுடன் வர வேண்டி இருந்தால் ஏதோ கூட்டுக்குள் ஒடுங்கி கொள்வதை போல் ஆகி விடுவாள். நார்மலாக ஒரு வார்த்தை கூட வராது.

அவனும் அவளை நார்மலாக பேச வைக்க ஏதேதோ முயற்சி எடுத்து தோற்றுப் போய் அந்த முயற்சியையே கை விட்டு விட்டான்.

ன்று இரவு எல்லோரும் சாப்பிட்ட உடன் அவரவர் அறைக்கு செல்ல எத்தனிக்க இனியாவும் ஜோதியின் அறைக்கு சென்றாள்.

“ஏய் இங்க எதுக்கு வர, நான் தூங்க போறேன், நீ உன் ரூம்க்கு போ” என்று ஜோதி அவளை துரத்தி விட்டாள்.

இது எல்லாவற்றையும் இளவரசன் கவனித்துக் கொண்டே நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டான்.

இருவரும் அவர்களின் அறைக்கு சென்றவுடன் இனியாவின் கால்கள் அறைக்குள் செல்லவே மறுத்து போராட்டம் செய்தது.

இளவரசன் எதையும் கவனிக்காதவன் போல உள்ளே சென்று விட்டான்.

இனியா தயங்கி தயங்கி உள்ளே சென்று ஷோபாவில் அமர்ந்து கொண்டாள்.

இளவரசன் வழக்கம் போல அன்றும் ஒரு கிப்ட் கொண்டு வந்து கொடுத்தான்.

“என்ன இளா இது. இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கிப்ட் கொடுத்துட்டே இருப்பீங்க”

“அது என் இஷ்டம். உனக்கு என்ன. ஒழுங்கா பிரிச்சி பாரு”

அதில் வொய்ட் அண்ட் ஸ்கை ப்ளு கலரில் சாரி இருந்தது.

“ஓ இளா. இதை நீங்களா செலக்ட் பண்ணீங்க. ஐயோ ரொம்ப சூப்பரா இருக்கு. இவ்வளவு நல்லா செலக்ட் பண்ணுவீங்களா”

“ரொம்ப அருமையா என் பொண்டாட்டியையே செலக்ட் பண்ணி இருக்கேன். இது பெரிய விஷயமா”

“உங்களை”

“ஹேய் விடு டீ. என்னோட மெயின் பிசினெஸ் டெக்ஸ்டைல்ஸ் தான் நியாபகம் இருக்கா இல்லையா”

“ஹிஹிஹி.”

“சரி அசடு வழியாத”

இனியா சென்று ரிபிரெஷ் செய்து விட்டு வரும் வரை காத்துக் கொண்டிருந்த இளவரசன் அவள் எதிர்பார்க்காத நேரத்தில் பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

“ஐயோ இளா விடுங்க”

“அதெல்லாம் முடியாது செல்லம்” என்றவாறே அவளை திருப்பினான்.

இனியாவோ முகத்தை நிமிர்த்த மாட்டேன் என்று அடம் பிடித்து தலை நிமிரவே இல்லை.

“ஏய் நிமிர்ந்து என்னை ஒரு முறை பாரு டீ”

‘ம்ஹூம்”

“அப்படி என்னடி உனக்கு என் கிட்ட போய் வெட்கம்”

“அதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது இளா”

பின்பு அவன் செய்த சேட்டைகளில் அவள் அவன் மார்பிலேயே சரணடைந்தாள்.

காலையில் கண் விழித்த இனியா அவன் விழிக்காதவாறு மெல்ல எழுந்து குளிக்க சென்றாள்.

அவள் குளித்து விட்டு வந்த பின்பும் அவன் எழுந்திருக்கவில்லை.

நல்ல வேளை அவன் எழுந்திரிக்கவில்லை என்று எண்ணிக் கொண்டே இனியா ரெடியாகி வெளியே சென்று விட்டாள்.

வெளியே வந்து விட்டாளே தவிர எங்கு செல்வது என்று தெரியவில்லை. யார் அறைக்கு போனாலும், இவ்வளவு சீக்கிரம் அதுவும் இளவரசன் இல்லாமல் வந்திருக்கிறேனே என்று பார்ப்பார்கள்.

அப்படியே யோசித்துக் கொண்டே ஹோட்டலின் கார்டனிற்கு வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.