(Reading time: 17 - 33 minutes)

11. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

ன்று விடிந்தது. போலி அமிர்தத்தால் சபிக்கப்பட்டு இருந்த அத்தனை அத்தனை அணில்களாய் இருந்த மனிதர்கள் அனைவரும் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களில் குமரிகாண்டத்தின் படைத்தளபதி தளபதி செங்கோலனும் இருந்தான். அவர்கள் அத்தனை பேரையும் அவர்களின் இருப்பிடம் சேர்க்க ராஜேந்திரன் தன்னுடைய கழுகுகளை அணுகினான். ராஜேந்திரன் அவர்களோடு நிலாயுகத்தின் விண்ணில் பறந்தபடி கடந்து கொண்டிருந்த போது கீழே காட்டின் ஒரு பகுதியில் ஏதோ கலவரம் நடப்பதை கவனித்தான்.

Bommuvin thedal“அங்கே என்ன நடக்குது?” – செங்கோலன் அந்த கலவரத்தை பார்த்துக்கொண்டு.

“தெரியல....நான் போய் பார்த்திட்டு வரேன்” என்று ஒல்லி ராஜேந்திரன் கீழே அந்த கலவரம் நடக்க்கும் இடத்தில் சென்று ஒரு மரத்தில் அமர்ந்து என்ன நடக்கிறது என கவனித்தான்.

நிலாயுகத்தின் கோவிலுக்கு காவலாக படையடுத்து செல்ல ஆரம்பித்த குட்டிச்சாத்தான்களை காட்டேரிகள் பல பேர் தாக்கி கொண்டு இருந்தன. அவர்களை சமாளிக்க முடியாமல் குட்டிச்சாத்தான்கள் தவித்துக் கொண்டிருந்தன. உடனே ராஜேந்திரன் விண்ணில் பாய்ந்தது சென்று கழுகுகளில் பயணம் செல்லும் மனிதர்களிடம் விஷயத்தை கூறினான்.

“நாம குட்டிச்சாத்தான்களை காப்பாத்தனும்...சீக்கிரம் கிளம்புங்க”  - செங்கோலன் கத்தினார்.

உடனே ராஜேந்திரனும் அவனின் கழுகுகள் படையுடன் கலவரம் நடக்கும் இடத்தை அடைத்தான். செங்கோலனுடன் மற்ற மனிதர்களும் அங்கே வந்து இறங்கினர். கட்டேரிகளை எதிர்த்து பெரும் சண்டை நடந்தது. ராஜேந்திரனின் கழுகுகள் காட்டேரிகளை மின்னலென தாக்க ஆரம்பித்தன. நீண்ட நேரம் அங்கே சண்டை நடந்தது. யாராலும் காட்டேரிகளை கொல்ல முடியவில்லை. ஆனால் செங்கோலனிடம் சிக்கிய காட்டேரிகள் மட்டும் இறந்து கொண்டே வந்தன. இதை பார்த்து அங்குள்ள எல்லோரும் செங்கோலனை ஆச்சிரியத்துடன் காண ஆரம்பித்தனர். இறுதியில் செங்கோலன் எல்லா காட்டேரிகளையும் கொன்றான்.

“அட பிரமாதம்....எப்படி நீங்க அந்த காட்டேரிகளை கொன்னீங்க?” – ராஜேந்திரன்.

“அதுதான் குமரிகாண்டத்தின் வீரர்களோட சக்தி....காட்டேரிகளை அழிக்கிற மர்மவித்தைகள் குமரிகாண்டத்தின் வீரர்களுக்கு தான் தெரியும்!” – செங்கோலன்.

குட்டிச்சாத்தான்கள் அனைவரும் காப்பற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்தன. குட்டிச்சாத்தான்களின் அரசர் சியாத் அங்கே முன் வந்து அவரகளிடம் பேசினார்.

“எங்களை காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி!” – சியாத்.

“நீங்க எல்லோரும் எங்கே போறீங்க?” – செங்கோலன்.

“நாங்க அந்த நிலாயுகத்தின் கோவிலை நோக்கி போறோம்....நாங்க போறோம்!” – சியாத்.

“ஏன்?...அரசர் மகேந்திரேன் சாகலை...இப்போ அவருதான் பொம்மு...அவங்க என்னை சந்திச்சு பேசினதுல ஒரு நல்ல விஷயம் இங்க நடக்க போகுது...அதனாலதான் எங்களோட பொறுப்பை பாக்க போறோம்.” – சியாத்.

“என்ன விஷயம் அது ?” – ராஜேந்திரன்.

“அந்த சூனியக்காரி ஷானுதாவை எதிர்த்து சீக்கிரமே ஒரு போர் வரபோகுது....அதனால் அந்த போர்ல எங்க பங்கும் இருக்கணும்....அதனால்தான் அந்த நிலாயுகத்தின் கோவிலுக்கு காவலாக நாங்க போறோம்....” – சியாத்.

“இது நல்ல செய்திதான்....இப்போ பொம்மு எங்கே இருக்கா?” – ராஜேந்திரன்.

“அவங்க என்னோட மகன் கோக்கியோட அமிர்தத்தை தேடி போயிருக்காங்க...” – சியாத்.

“செங்கோலன் எனக்கு உங்களோட உதவி தேவைப்படுது.....இவங்க சொல்றமாதிரி இங்க நிச்சயம் ஒரு போர் நடக்க வாய்ப்பு இருக்கு! அதனால் உங்க நாட்டு வீரர்கள் இந்த போருக்கு தேவைபடுது...அவங்க இந்த போருக்கு வந்தா காட்டேரிகளை சுலபமா அழிக்க முடியும்...” – ராஜேந்திரன்.

“நீங்க சொல்றமாதிரி நான் நிச்சயம் உதவி பண்றேன்...ஆனா எங்க நாட்டுக்கும் அந்த அமிர்த நீர் தேவைபடுது....அதனால எனக்கு தேவையான அளவுக்கு அந்த அமிர்த நீரை எடுக்க அனுமதி நீங்க எனக்கு வாங்கி தரனும்...” – செங்கோலன்.

“நிச்சயம் அது உங்களுக்கு கிடைக்கும்...” – ராஜேந்திரன்.

“அப்படினா நம்ம ரெண்டு பேரும்  இப்பவே என்னோட நாட்டுக்கு கிளம்புவோம்....படைவீரர்களை இங்க கூட்டிட்டு வருவோம் “ – செங்கோலன்.

“ரொம்ப நன்றி!” – ராஜேந்திரன்.

மற்ற மனிதர்களும் குட்டிசாத்தான்களும் நிலாயுகத்தின் கோவிலை நோக்கி பயணம் தொடர்ந்தனர்.

ரக்கப்பல் குமாரிகாண்டத்தின் கரையை வந்து அடைந்தது. கடல் எல்லையில் குமரிகாண்டத்தின் வீரர்கள் காவலில் நின்றிருந்தனர். கப்பல் வந்து இறங்கியவுடன் பொம்முவும் நாய்கள் அரசர் துரயுகனும் தாங்கள் குமரிகாண்டதிற்கு வந்த காரணத்தை வீரர்களிடம் கூறி அனுமதியை பெற்றனர். கப்பலில் இருந்து ஆயிரம் ஆவிகளும் நாய்கள் படையும் இறங்கி குமரிகாண்டத்தின் கடற்கரையில் பிரமாஸ்திரத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். பொம்முவும் கோக்கியும் தனியாக வந்து அந்த கடற்கரையில் பிரமாஸ்திரத்தை தேடிக்கொண்டு இருந்தனர். வெகுநேரம் ஆகியும் யாராலும் அந்த பிரமாஸ்திரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

“பொம்மு எனக்கு பசிக்குது!” – கோக்கி

“உனக்கு எப்பதான் பசிக்காம இருக்கும்?” – பொம்மு எரிச்சலாக.

“இந்த கடற்கரையில் நாம எவ்வளவு நேரம்தான் தேடுறது வாங்க எங்கயாவது போய் சாப்பிட எதாவது இருக்கானு பாக்கலாம்” – கோக்கி அடம்பிடித்தது.

“பொம்மு அங்க பாரு...” – அரவிந்த்.

உடனே அரவிந்த் காட்டிய இடத்தில் பொம்முவும் கோக்கியும் பார்க்க அங்கே ஒரு சிறுமி கடலில் இருந்து நிறைய மீன்களை பிடித்து கொண்டு போனாள்.

“என்ன அதுக்கு?” – பொம்மு.

“எனக்கும் ரொம்ப பசிக்குது....அந்த பொண்ணுகிட்ட போய் எதாவது சாப்பிட கேக்கலாமே?” – அரவிந்த்.

“சரி வாங்க போவோம்!” பொம்மு சலித்து கொண்டு

மூவரும் அந்த சிறுமியை தொடர்ந்து சென்றனர். அந்த சிறுமியின் வீடு கடற்கரையின் அருகில் ஒரு குடிசை வீடுதான். மூவரும் அந்த சிறுமியின் வீடு முன் சென்று நின்றனர்.

வாசலில் அவர்கள் நிற்கும் போதே மீன்களை வறுக்கும் மனம் அரவிந்த் மற்றும் கோக்கியின் முக்கில் தெரிந்தது. அந்த சிறுமி எதிர்பாராமல் வெளியே வந்து மூவரையும் பார்த்து அதிர்ச்சியானாள்.

“யார் நீங்க ?” –அந்த பெண்

“நாங்க இங்க ஒரு வேலையா வந்தோம்...ரொம்ப பசிக்குது எங்களுக்கு எதாவது சப்படி கிடைக்குமா?” – கோக்கி

“அ அது குட்டிச்சாத்தான் தானே?” – அந்த சிறுமி பயந்தபடி.

“ஆமாம் பயப்படாத....நாங்க பசியில வந்திருக்கோம்.....” – அரவிந்த் பள்ளிளித்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.