(Reading time: 12 - 24 minutes)

 

"ரி...அது சொல்ல தான் வந்தேன் கிளம்புறேன்."

"ஸ்ரேயா...ஒண்ணுக் கேட்கட்டா?தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"

"சொல்லுங்க..."

"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"-அவன் கேட்ட இந்ர கேள்வி அங்கிருந்த மற்ற இருவரையும் திணரடித்தது.

"தப்பா எடுத்துக்க வேணாம்."

"இல்லை..அப்படிலாம் இல்லை.எனக்கு கல்யாணம் ஆகலை."

"சரி....தேங்க்யூ."-அவள் சென்றுவிட்டாள்.

"டேய்! எதுக்குடா?அந்த பொண்ணுக்கிட்ட அப்படி ஒரு கேள்வி கேட்ட?"

"தோணுச்சு அதான்..."

"ஏன்டா?"

"ஓய்...அவளை கேட்டா?உனக்கு ஏன் வேகுது?"

"குறுக்கப் பேசாதே!"

"சரி...பேசலை.ஆபிஸ்க்கு போன் பண்ணி 3 டிக்கெட் போட சொல்லு."

"எதுக்குடா மூணு டிக்கெட்?"

"மூணு பேர் வராங்க அதான்."

"யார் யாரு?"

"மனோ,ராகுல்,அப்பறம்...."

"அப்பறம்?"

"அ...அம்மா."

"அம்மாவா?ஆதி...நீயாடா பேசுற?அதிசயம் ஆனால் உண்மை."

"ரகு.இந்த விஷயம் யாருக்கும்,தெரிய வேணாம்."

"எந்த விஷயம்டா.?"

""நான் தான் அம்மாவை வர சொன்னேன்னு...!"

"ஏன்டா?அம்மாக்கு இது தெரிஞ்சா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க?"

"வாழ்க்கை முழுசும் அழ வேண்டி வரும்."

"என்னடா சொல்ற?"

"ஆமா...எனக்கு ஆரம்பத்துல இருந்து அவங்க மேல கோபம் இல்லை.நான் தனியாகவே வாழ்ந்ததுக்கு காரணம்,இரண்டு ஒண்ணு...மஹாதேவன்,இரண்டு...ரம்யா."

"ரம்யாவா?"

"ஆமா.....என்னால எதையும் மறக்க முடியலை...நீ,நிரஞ்சன்,மது என் வாழ்க்கையில வரலனா?என்னால நினைச்சு பார்க்கவே முடியலை.அம்மா எனக்கு உயிர் கொடுத்தாங்க,நீங்க நல்ல வழியில கூட்டிட்டுப் போனீங்க,மது உணர்ச்சி கொடுத்து இருக்கா! நீங்களாம் சேர்ந்தது தான் நான்."

"ஆதி....சரி பழைசை கிளர வேணாம்.நீ வருத்தப்பட்ட உன் செல்லக்குட்டி டெல்லியில இருந்து வரான்ல,அவனை விட்டே உன்னை அடிக்க வைப்பேன்."

"ஐயோ! வேணாம்ப்பா! நான் வருத்தபடலை."-என்று குழந்தையை போல் அவன் கூற,ரகு சிரித்தே விட்டான்.ஆனால்,இந்த சந்தோஷம் நீடிக்குமா??????

 

"ம்மா...அம்மா..."

"என்ன மனோ?என்னாச்சு?"

"அம்மா....அண்ணா போன் பண்ணிருந்தாரு!"

"யாரு?குருவா?"

"சரண் அண்ணாம்மா..."-அவன் அண்ணா என்று சரணை அழைத்த விதத்திலும்,அவன் ஆனந்தத்தை கண்டப் பொழுதிலும்,ராஜேஸ்வரி அம்மாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது.இருந்தப் போதிலும்,

"சரணா?"-என்றார்.

"ஆமாம்மா.."

"நிஜமாகவாடா?"

"ஐயோ! சத்தியமா.."

"என்ன சொன்னான்டா?எப்படி இருக்கானாம்?ஒழுங்கா சாப்பிடறானா?இருக்காது...அவன் சரியா சாப்பிட்டு இருக்க மாட்டான்.ஒரு வாரத்துக்கு முன்னாடி கூட அக்கா பிறந்த நாள் வந்ததே...எப்படி இருந்தானோ! ஏன்டா...நான் இப்படி கத்திக்கிட்டு இருக்கேன்.நீ ஏன் கல்லை முழுங்குனா மாதிரி நிற்கிறே?"

"ஏம்மா...அதே ஊர்ல தானே குரு,அபி எல்லாம் இருக்காங்க?அவங்களைப் பற்றி கேட்கலை?"

"போடா...!சரண் அப்பா என்னை கல்யாணம் பண்ணிட்டு வரும் போது,சாரதா அக்கா ஒரு வார்த்தைக் கூட கோபமா பேசலை.சந்தோஷமா வாமான்னு சொன்னாங்க! காரணம்...அவங்களுக்கே தெரியும்! சரணுக்கு அப்போ மூணு வயசு இருக்கும்! அவன் அம்மா அம்மான்னு என் கூடவே தான் இருப்பான்.என் வயத்துல பிறக்காத என் பையன்டா அவன்.எனக்கு முதல்ல தாய் ஸ்தானத்தை தந்தவன் அவன்.அபி,குருவோட எனக்கு சரண் தான் முக்கியம்."-அவர் இவ்வளவு காரணம் கூறுவார் என்று,மனோ எதிர்ப்பார்க்கவில்லை.

"உங்க வேண்டுதல்,வீண் போகலைம்மா...."

"என்னடா?சொல்ற?"

"அண்ணா...உங்களை சென்னைக்கு வர சொல்லிருக்காரும்மா..."

"மனோ?"

"சத்தியமா...இன்னிக்கே வர சொல்லிருக்காரு! ராகுல், நீங்க,நான் உடனே போகணும்.சீக்கிரம் கிளம்புங்க..."-அவன் கூறியதைக் கேட்டு,அவருக்கு கண்ணீர் திரண்டது.அப்போது மனோவின் கைப்பேசி அலறியது.

"அம்மா...அண்ணா தான்."-என்று ஸ்பீக்கரில் போட்டான்.

"ஒய் .கிளம்புனீங்களா.இல்லையா?"-அவன் பேச்சில் தெரிந்த வித்தியாசமே பல கதையை சொல்லாமல் சொல்லிற்று.

"கிளம்பிட்டோம்...ச்சீப்."

"ஏ...விளக்கெண்ணை ச்சீப்ன்னு சொல்லாமல் இருன்னு எத்தனை தடவை சொல்றது?"

"மறந்துட்டேண்ணா.."

"நீ வாடா...உன் எலும்பை எண்ணுறேன்.அப்பறம்...சீக்கிரம் ராகுலை கூட்டிட்டு வா! வச்சிடுறேன்."-அவன் தன்னை பற்றி கேட்க மாட்டானா?என்று ஏங்கிய தாய் மனம் ஏமாற்றம் அடைந்தது.

"மனோ மனோ! ஒரு நிமிஷம்."

"என்னண்ணா?"

"அம்மா...வரும் போது! அவங்க மாத்திரைலாம் எடுத்துட்டு வா...! அவங்க மாத்திரை போடாம இருக்கக் கூடாதுல்ல...புரியுதா?"-மனோ சிரித்துக் கொண்டே,

"சரிண்ணா.."

"வச்சிடுறேன்னா."-போனை வைத்துவிட்டு ராஜேஸ்வரி அம்மாவைப் பார்த்தான் அவன்.அவர் மனம் கண்ணீரால் திரண்டிருந்தது.12 வருட தாய்,மகன் இடைவேளை இடிந்து தரை மட்டமானதே இன்று!

ன்று மாலை...

"சரண்.நீங்க டிஸ்சார்ச் ஆகலாம்."

"எது?நாளைக்கு தானே! டிஸ்சார்ச்ன்னு சொன்ன ஸ்ரேயா?"

"எங்க டீன் ஆர்டர்."-அப்போது மதுபாலா உள்ளே நுழைந்தாள்.

"இனி...அவங்களே சொல்லுவாங்க...நான் கிளம்புறேன்."-என்று ஸ்ரேயா சிரித்துக் கொண்டே வெளியேறிவிட்டாள்.மது,சரண் அருகே அமர்ந்தாள்.அவன் நெற்றியை வருடி தந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.