(Reading time: 12 - 24 minutes)

 

"லி...எப்படி இருக்கு?"

"நீ வந்துட்டுல்ல,இனி சரியாயிடும்.என்ன?திடீர் டிஸ்சார்ச்?"

"ஆன்ட்டி...வராங்கல்ல,அதான்...அவங்க இந்த நிலைமையில,இங்கே பார்த்தா...கஷ்டப்படுவாங்க...அதான்."

"ம்...அப்பறம்?"

"என்ன அப்பறம்?"

"அம்மா கஷ்டம்லாம் உன் கண்ணுல,தெரியுது...பக்கத்துலையே...ஒருத்தன் இருக்கானே அவன் கஷ்டம் புரியலையா?"-என்று பாவமாக கேட்டான்.

"ஏன்டா?தலை வலிக்குதா?"

"ஆனா...உன்னலாம் ஒண்ணுமே பண்ண முடியாது."

"ஏன்?"

"ஒண்ணுமில்லை."

"நிஜமா?"

"போடி..."

"சரி...போறேன்."என்று அவன் எழுந்து கிளம்ப,

"அம்மூ..."

"என்ன?"-அவன் மெல்ல எழுந்து நின்றான்.

"போயிடுவியா?"

"எங்கே?"

"போறேன்னு சொன்ன?"-அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

"ஆதி.."-அவன் மதுவை அணைத்துக் கொண்டான்.

"பேச்சுக்குக் கூட போயிடுறேன்னு சொல்லிடாதே.."

"ஆதி....இல்லடா...போக மாட்டேன்.இனிமே உனக்காக தான்."-அவன் மெல்ல அவளை விடுவித்தான்.அவன் கண்களில்,ஏதோ ஏக்கம் தெரிந்தது.மதுபாலாவால்,அவன் கண்களை நேரடியாக பார்க்க முடியவில்லை.தலை குனிந்தாள்.இருவருக்கும் இடையே இருந்த விலகல் குறையத் தொடங்கியது.இரு இதழ்களுக்கு இடையே இருந்த விலகலானது,குறையும் போது....சரணின் கைப்பேசி அவனை அழைத்தது.

"ஹலோ...அண்ணா...மனோ பேசுறேன்."

"டேய்...உனக்கு போன் பண்ண நேரங்காலமே இல்லையா?"

"ஏன்ணா?என்னாச்சு?"

"ஒண்ணுமில்லை....சொல்லு."

"வீட்டுக்கு வந்துட்டோம்ணா..."

"சரி....கமலாம்மாகிட்ட சொல்லி ராகுலுக்கும்,அம்மாக்கும் ஏதாவது செய்து தர சொல்லு ...நீயும் சாப்பிடு...ஒரு மணி நேரத்துல வந்துடுறேன்."

"சரி....ப்ரோ."-இணைப்பைத் துண்டித்துவிட்டு,சரண் மதுவை பாவமாக பார்த்தான்.அவள் ஒரு புன்னகையை அவனுக்கு தந்துவிட்டு,ஓடிவிட்டாள்.

ம்.....காதலில் சிக்கி தவிக்கும் பல ஆண்களுக்கு இந்த சூழல் சற்று கொடுமையான ஒன்று தான் போலவே!

அவன் கூறியது போலவே சரியாக ஒரு மணி நேரத்தில் அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.முன் பக்க தோட்டத்தில்,ராஜேஸ்வரி அம்மாவின் மடி மேல் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான் ராகுல்.சரண்,ரகு,நிரஞ்சன் மூவரையும் பார்த்ததும்,

"ஆதி..."-என்று ஓடிச் சென்று சரணை அணைத்துக் கொண்டான் ராகுல்.

"ஏ..செல்லம்...எப்படிடா இருக்க?"

"உன்கிட்ட வந்துட்டேன்ல ஜாலி தான்."-பல நாட்கள் கழித்து,தன் மகனின் முகத்தில் தெரிந்த ஆனந்தம் ரகுவை ஆனந்தப்படுத்தியது.

"ஏன்டா...வாலு....இங்கே இரண்டு பேர் நிற்கிறோமே நாங்க கண்ணுக்கு தெரியலையா?-நிரஞ்சன்.

"நிரஞ்சன்..."-என்று அவனையும் அணைத்துக் கொண்டான்.பின்,

"அப்பா..."-என்று ரகுவை அணைத்துக் கொண்டு,அவன் கன்னத்தில் முத்தம் தந்தான்.அதைப் பார்த்து நிரஞ்சன் சரணிடம்,

"பார்த்தியா மச்சான்...அப்பாக்கு மட்டும் ஸ்பெஷல்."

"ஆதி..."

"என்னடா?"

"தலையில என்ன?"

"அதுவா?

"ஆமாம்..."

"ஒரு சின்ன ஆக்ஸிடன்ட்."-அவன் வந்த உடன் அதை கவனித்த ராஜேஸ்வரி அம்மாள் கேட்க வேண்டியதை,ராகுல் கேட்க வேண்டி தயங்கி இருந்ததை,ராகுல் கேட்டே விட்டான்.அதைக் கேட்ட அவர் மனம் ஓடி சென்று அவனிடம் கேட்டே விடு என்று கெஞ்சியது.ஆனால்,அவர் போகவில்லை.சரண் மனமோ....!அவர் வந்து கேட்க மாட்டாரா?என்று ஏங்கியது.

"சாப்பிட்டியா?ராகுல்?"

"சாப்பிட்டேன்...ஆதி."

"சரி...உள்ளே போகலாம் வா!"-என்று ராகுலை தூக்கிக் கொண்டு,உள்ளே சென்றான்.

உள்ளே...இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.மற்றவர்கள் எல்லாம் வெளியே பேசிக் கொண்டிருந்தனர்.

"ஆமா...மனோ எங்கேடா?"-ஆதித்யா.

"மனோ...கடைக்குப் போயிருக்காரு."

"எதுக்கு??"

"காய்கறி வாங்கிட்டு வர கமலா பாட்டி கூட போயிருக்காரு."

அப்போது-

"சரண்."-என்றது ஒரு பெண் குரல்.அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவன்,திரும்பினான்.

"ரம்யா..?"-என்று அதிர்ந்தன அவன் இதழ்கள்.

"ஞாபகம் வச்சிருக்கிறீயே?"-அவன் கண்கள் கோபத்தால் சிவந்தன.அதை உணர்ந்த ராகுல்,சரணின் கையைப் பற்றினான்.

"நீ எதுக்கு இங்கே வந்த?"

"நல்லா இருக்கே...இது நான் வாழ போகிற வீடு!நான் வராம?"

"நீ வாழ போற வீடா?ஏய்....இது என் வீடு."

"என்ன மாமா..நீ?அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்துட்டியா?"

"உன்னை யாரு இங்கே கூட்டிட்டு வந்தா?"

"அத்தை தான்...ஊருக்கு கிளம்பிட்டு இருந்தாங்க அப்போ நான் டெல்லிக்கு வரவே என்னையும் கூட்டிட்டு வந்தாங்க...இரண்டு பேரும் சமாதானம் ஆயிட்டிங்க போல...அவங்க பண்ண துரோகத்தை மறந்துட்டியா?"-அவ்வளவு தான் அவன் கோபம் தலைக்கேறி விட்டது.

"என்ன சொன்ன?துரோகமா?நீங்க பண்ணதை விடவா?அம்மா மனசு கஷ்டப்பட கூடாதேன்னு விடறேன் இல்லை....எப்பவோ உனக்கும்,உன் குடும்பத்துக்கும் சமாதி கட்டிட்டு இருப்பேன்.மரியாதையா இங்கே இருக்கிற வரைக்கும்,என் கண்ணுல படாதே! நான் ரொம்ப மோசமானவன்,கொன்னுடுவேன்.போ..."-என்று கத்தியே விட்டான்.அவள் அங்கே இருந்து சென்று விட்டாள்.நடந்தவற்றை எல்லாம் பாவம் கண்ட அந்த சின்ன குழந்தை ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தது.

"ஆதி...?"-அவன் அமைதியானான்.

"என்ன செல்லம்?"

"நீ ஏன் இப்படி கோபப்படுற?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.