(Reading time: 11 - 21 minutes)

 

கொடைக்கானலில் மதன் வீட்டில் 

"ன்னடா அஸ்வின் யது இப்பிடி கோவமாய் நம்மகிட்ட வாராளே இன்னிக்கு என்னத்தை இழுத்து விடப் போறாளோ கடவுளே" என்று அவன் காதக் கடித்துக் கொண்டிருக்கும் போதே அவர்களிடத்தில் வந்து சேர்ந்த யது பொரியத் தொடங்கி விட்டாள்.

"அத்தான் உங்க தங்கச்சி  அவ மனசில என்ன தான் நினைச்சுக் கொண்டிருக்கா?  நாங்க எல்லாம் அவளுக்காக ஆவலா காத்திட்டிருந்தாள் அவ எக்ஸாம் அது இது என்று வரலாம். சின்ன  மாமாவும் சின்ன அத்தையும் இப்பதான் வந்தாங்க." என்றாள் அவனிடம் தகவலை தெரிவித்து விட்டு அங்கிருந்து அகன்றாள்.

புவி வரவில்லை என்றதும் கடுப்பான மதன் நண்பனையும் மறந்து கோபமாக தனது சித்தியிடம் சென்றான். அவளது முகத்தில் தவழ்ந்த புன்னகையை கண்டதும் தனது கோவத்தை கைவிட்டு அமைதியாகவே கேட்டான்.

அவள் வராததற்கான காரணத்தையும் அதனால் அவள் வருந்தியதையும் தனது சித்தி மூலம் கேட்டுக் கொண்டவன் தானே புவிக்கு போன் செய்தாள். ஆனால் அவளிடம் பதில் இல்லாமல் போக சம்ஸ் அனுப்பி விட்டு போனை வைத்தவன் அபோது தான் அருகில் நின்ற தனது நண்பனை பார்த்தவன் 

"சாரிடா அவ வரல என்றதும் கொஞ்சம் அப்சட் ஆகிட்டன் அனால் அவ தனிய வீட்டில இருக்கிறதா சித்தி சொன்னதும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு அவ என்னோட வெட்டிங்கை ரொம்ப எதிர் பார்த்தா ப்ச்.... நான் தான் அவசரப் பட்டிட்டன் அவ எக்ஸாம் முடிஞ்சதும் டேற் பிக்ஸ் பண்ணி இருந்தாள் அவளும் வந்திருப்பா"  என ரொம்ப வருந்தினான்.

அவனை தேற்றவே அஸ்வின் பெரும் பாடு பட வேண்டி இருந்தது. 

"ஏய் அஸ்வின் என்னடா வந்ததில இருந்து ஆளையே கண்ணில பாக்க முடியல? என்ன இவன் தன்னோட ஆளைப் பாக்க உன்னை இழுத்திட்டு போய்ட்டானா?" எனக் கேட்டுக் கொண்டே யாழினி அச்வினிடம் காப்பியை நீட்டினாள்.

"ப்ச எங்கக்கா இவனுக்கு தன்னோட தங்கச்சி புராணம் சொல்லவே டையம் போதல பிறகெங்க ரூபாவ பாக்க அழைச்சிட்டு போகப் போறான்."  என்றான் வருத்தத்துடன்.

"ஹிம்....  ஏண்டா இன்னிக்கு இவனா கிடைச்சான் பாவம்டா நீ தெரியாமல் மாட்டிக்கிட்டாயே. அவன் கொஞ்சம் தங்கிப் பைத்தியம்." 

"ஆமா அத யாரு சொல்றா பாரன் இவ எனக்கு மேலான பைத்தியம்." என்று சொல்லி சித்தான்.

"ஆங் மறந்திட்டன்டா   சித்தி  றூபாவ பாக்கணும் என்று சொன்னாங்க அவளுக்கு போன் செய்து சித்தி வாற விஷயத்தை சொல்லிடுறியா?"

அவன் முகம் பளீச்சிட்டது . " ஓ......  அப்பிடியா சரி நானே அவங்களை கூட்டிப் போறன். டேய் நீயும்   வாறியா?"  என்றான் குதூகலத்துடன்.

"ஹலோ சார் நீங்க இனி உங்களோட ஆள  நாளைக்கு மணவரையில தான் பாக்க முடியும் இப்ப  சித்தியும் சித்தப்பாவும் அச்வினோட போட்டு வருவாங்க." என்று தம்பியின் ஆனந்தத்தில் முற்றுப் புற்றுப் புள்ளி வைத்தாள்.

"எண்ணக்கா சொல்றே ஏன் நான் போக கூடாது அவன் எப்பிடி தனியா அவங்களை கூட்டிப் போவான். நானும் போறன்."

"ம்.... அவனோட நானும் தான் போறன் சோ நீங்க நிம்மதியா இருங்க அப்புறம் பொன்னுருக்கினாப்  போல பொண்ணும் மாப்பிளையும் ஒருத்தருக் கொருத்தர் பார்த்துக்க கூடாது. அதனால நீ வீட்டில இரு சரியா." என்று அவர்கள் கத்தைத்துக் கொண்டிருக்கும் போதே லக்ஷ்மி மதனது ரூமிற்கு வந்தான்.

"என்னடா அவகிட்ட என்ன கத்திட்டிருக்காய் "

"ஒன்னும் இல்ல சித்தி " என்று சுரத்தையே இல்லாமல் சொன்னான்.

யாழினி நடந்ததை சொல்ல சித்தியிடம் இருந்தும் மறுப்பு வந்தது. அதோடு புவியின் பரிசு என்று சொல்லி ஒரு நகை பெட்டியை அவனிடம் கொடுத்தார்.  

லக்ஷ்மியை பார்த்தவுடன் அஸ்வின் அவர்களை எங்கோ பார்த்தது போல் இருப்பதாக உணர்ந்தான். அனால் எங்கு என்று தான் அவனாள் உணர முடியவில்லை. குடும்பமாக  அவர்களது உரையாடலின் நடுவில் தான் பானகத்துரும்பாக இடையில் நிற்க விரும்பாது அங்கிருந்து நகர முற்பட்டான்.

"சித்தி மறந்திட்டன் இது அஸ்வின் என்னோட குளோஸ் பிரண்ட் இவன் தான் மாப்பிள்ளை தோழன். அஸ்வின் இது என்னோட சித்தி லஷ்மி இவங்க பொண்ணு தான் என் தங்கை புவிக்கா."என வாய் தடுமாறி உளறிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் தோழன்.

அஸ்வின் லக்ஷ்மி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று விட்டு நிமிரும் போதுதான்  நண்பனின் தங்கை பெயரும் அவனது நாக்கு கடிப்பையும் கவனித்தான். அவனுக்கு துளிராக சந்தேகம் எழுந்தது. அது தனது புவி தானோ என்று. லக்ஷ்மியின் முகம் கூட எங்கோ பார்த்தது போல இருப்பதாக நினைத்தானே அது தனது தேவதையை அல்லவா பிரதி பலித்திருக்கிறது என்று எண்ணியவன் தனது நண்பனை முறைத்தான் அவன் கண்களால் மன்னிப்பு கூறினான். ஆக இவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. அது தான் என்றும் இல்லாது இன்று தங்கை புராணம் பாடியுள்ளான். ஆனால் எப்படி என்று தான் தெரிய வில்லை. என்று தனக்குள் சிந்தித்தான். பிறகு கேட்டு தெரிந்து கொள்ளலாம் என எண்ணினான்.

டேய் அத திறவன் பார்ப்போம் அப்பிடி என்னதான் புவி கிப்ட் பண்ணி இருக்கா என்று " என யாழினி மறுபடியும் அச்வினது ஐயத்தை தெளிவு படுத்தினான்.

அவன் நகைப் பெட்டியை திறந்ததும் அஸ்வினது மனது   பதினாறு வயது இளையனைப் போல் வேகமாக பரவசத்துடன் துடித்தது. அவனால் நம்ப முடியவில்லை. ஏனெனில் அதில் இருந்தது அவன் தெரிவு செய்த அதே பிறேசிலேட் தந்து தமையனுக்கு என்று புவி எடுத்த அந்த கடையில் இறுதியாக இருந்த ஒன்னுமொரு ப்றேசிலேட்.  

எல்லோரது பார்வையும் அவளது தேர்வை எண்ணி பெருமிதம் கொண்டது. அனிவரும் கீழே சென்றதும் அஸ்வின் மதனை பிடித்துக் கொண்டான்.

அவன் நடந்த அனைத்தையும் கூறினான். தனது தோழனின் சப்போட் தாக்கு உண்டு என்ற நின்மதியோடு ரூபா வீட்டை நோக்கி அவர்களது பயணம் விரைந்தது.  

தொடரும்!

Go to episode # 12

Go to episode # 14


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.