(Reading time: 33 - 65 minutes)

 

"ன்ன பதிலே காணம்" 

"இல்ல அப்பிடி எனக்கு தோணல நீங்க முதல்ல வெளியே போங்க அஸ்வின்" 

"நீ ஏன் புவி உன் மனம் தெரிஞ்சும் இப்பிடி அதை மறைக்க பாக்கிறாய் என்ன தான் உன்னோட பிரச்சனை அதாவது சொல்லு."

"எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல நீங்க தான் பிரச்சனை உங்களோட இந்த இரட்டை மனம் தான் என்னோட பிரச்சினை போதுமா? என்ன இன்னும் விளக்கம் வேணுமா? நல்ல கேட்டுக் கொள்ளுங்க அங்க ஒரு பக்கத்தால சர்ஜிமேல காதல் என்று உருகி வழிஞ்சிட்டு இங்க என்கிட வந்து உங்க மேல எனக்கு காதல் இல்லையா என்று கீட்கிறீங்க? ஆமா எனக்கு நீங்க என்றால் உயிர் ஆனால் இப்ப இல்ல எப்ப நீங்க அவளை மாசார காதலிக்கிறீங்க என்று உங்க அம்மா சொன்னாங்களோ அப்போவே கொஞ்சம் நஞ்சமா மிஞ்சி இருந்த என் காதல் செத்திடிச்சு  செத்திடிச்சு. என்று கதறினாள். 

அஸ்வின் குழப்பத்திலும் ஆனத்தத்திலும் தவித்தான். அவள் தன காதலை ஒத்துக் கொண்டது மகிழ்ச்சி என்றாலும் சர்ஜிய தான் விரும்பியதாக தாய் சொன்னதாக சொல்லியதில் குழப்பம். எங்கோ தப்பு என்று அறிந்தான். அம்மா தான் ஏதோ தவறாக புரிந்து இவளையும் அவளையும் குழப்பியதாக நினைத்தான்.

"புவிம்மா அழாதடா இதோ பார் நான் நேசித்தது உன்னை மட்டும் தான் அவளும் அபியும் எனக்கு ஒன்று தான் அது மட்டுமல்ல அவள்  என்னோட பிரண்ட் நவீனனை உயிரா விரும்புறா அவனும் தான். அம்மா ஏதோ தானும் குழம்பி உன்னையும் குழப்பி இருக்கிறார்கள். சரி அன்று அம்மா என்ன சொன்னார்கள் சொல் இன்றே இதற்கொரு முடிவு எடுத்திடலாம்." என்று அவளை ஊக்கினான்.

அவளும் அன்று நடந்ததை சொன்னாள். அவன் அருகில் அமர்ந்து. அவன் பலமாக சிரித்தான். சரி தான் அபி ஏதோ சொல்ல நானும் அவள் உன் பெயரை சொல்லி விட்டாள் என்று நினைத்து. உன் பெயரை சொல்லாமல் அவங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் சம்மதம் அவ முடிவை நானே கேட்டு தெரிஞ்சுக்கணும் என்று மொட்டையாய் சொல்லி விட்டேன். அவர்கள் நான் சர்ஜியை தான் சொல்கிறேன் என்று நினைத்து விட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தன அண்ணன் மகள் தன வீட்டு மருமகளாக வேண்டும் என்று பிரியம் அதனால் தான் மருமகள் என்றதும் அவளை நினைத்தார்கள் போலும். ஹிம்.... இப்போ உன் குழப்பம் தீர்ந்ததா? இனி என் மனைவியாவதில் உனக்கு ஏதும் சங்கடம் உள்ளதா என் இதய கீதமே." 

"அவள் இல்லை என தலையசைத்து அழகாய் வெட்கப் பட்டு அவன் தோளில் முகம் புதைத்தாள். அவளின் அழகிய வெட்க நாணலில் சிலிப்படைந்தவன் அவள் புறம் திரும்பி அவள் முகத்தை கைகளில் ஏந்தி அவளின் மென் நெற்றியில் முத்த மிட்டான் பின் அவள் கன்னங்கள் காது மடல் என முத்தம் படர்ந்து சென்றது. அவள் உதட்டை சிறை பிடிக்க சென்றவன் மெதுவாக அவளிடம் இருந்து விலகினான். அவனின் விலகலில் கண் திறந்தவள் அவனை புரியாது பார்த்தாள்.

"ம்ஹீம்... இது சரி வராது நீயாவது என்னை தடுப்பை என்று பார்த்தாள் நீயும் அமைதியாய் அனுமதி தந்து விட்டாய் இனியும் இங்கிருந்தால் நிலைமை கைமீறி விடும் பின்பு என் அம்மாவின் வளர்ப்பும் உன் அம்மாவின் வளர்ப்பும் என்னாவது" என்று அவளை சீண்டினான். அவள் பதிலுக்கு முறைத்தாலும் உள்ளுக்குள் சங்கடப் பட்டாள். அவன் சொல்வதும் சரிதானே. அப்போது தான் அவளுக்கு நியாபகம் வந்தது.

"அஸ்வின் இரண்டு வீட்டிலையும் நம்ம திருமணத்துக்கு சம்மதம் என்று சொன்னீர்களே! எப்படி என்னோட பேரன்ஸ்"  என்று முடிக்காது விட்டாள்.  

அவன் மதனின் திருமணத்தில் நிகழ்ந்ததை சொன்னான். அவர்கள் இப்போது இருந்திருந்தாள் இத்தனை குளப்பமும் உனக்கு இப்பிடி மன வேதனையும் வந்திராது. அவர்களே அல்லாவர்ரையும் பேசி முடித்திருப்பார்கள் நான் ஜாலியாய் காதல் வானில் சிறகடித்திருக்கலாம்."  அவள் மீண்டும் நாணினாள்.

"ஆவாள் அஸ்வின் உங்கம்மாக்கு சர்ஜிதான் அவங்க மருமகளா வரணும் என்றாள் என்னை எப்படி ஏத்துப்பாங்க?"

"பச்.... இப்போ எதுக்கு மீண்டும் கவலை. அவங்களுக்கு அவமேல பாசம் இருக்கு அம்மா இல்லாத பொண்ணு நம்ம வீட்டுக்கே வந்திட்டால் அவளை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கலாம் என்று தான். அவங்களை விட நவீனன் குடும்பம் அவளை ரொம்ப நல்லா பாத்துக்குவாங்க என்று தெரிஞ்சா அவங்க சந்தோஷமா அவளை கட்டி கொடுத்திடுவாங்க. அப்புறம் நம்ம மேட்டர் இன்னிக்கு அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்."

"எப்பிடி"

"உங்க வக்கீல் எங்களுக்கும் குடும்ப வக்கீல் தான். அவங்க ஜுனியர் எங்க வீட்டில என்னோட நின்னப்ப தான் உங்க சொத்து ஏலம் போறதப் பத்தி அவங்க கிட்ட சொன்னாங்க. என்னன்னு விசாரிச்சதில அது உங்களோடது என்று தெரிஞ்சிடிச்சு உடனே அவங்க மூலமா ஏலத்தை நிறுத்தி நானே எல்லாத்தையும் வாங்கிகிட்டன். அம்மாவும் அங்க தான் நின்னாங்க ஒரு மார்க்கமா பாத்தாங்க என்னடா இந்த பையன் இப்பிடி பரருரானே என்று. வீட்டுக்கு போனதும் அவங்களுக்கு சொல்லி புரிய வச்சிட்டால் போச்சு." என்றான் சாதாரணமாக அவள் நன்றியோடு  அவள் தோளில் சாய்ந்து கொண்டாள்.

கொஞ்ச நேரம் அவளோடு உரையாடி விட்டு  காலை வருவதாக கூறி அவன் கிளம்பிச் சென்று விட்டான். அவன் சென்று சிறிது நேரத்தில் அவனின் தாயுடன் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அவர் தான் தவறாக புரிந்து கொண்டமைக்கு மன்னிப்பு வேண்டினார். அவளை தனது வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ள தனக்கு பரிபூரண சம்மதம் என்று தனது சம்மதத்தை தெரிவித்துவிட்டு தனது வருங்கால மருமகளுடன் சிறிது உரையாடிக் கொண்டிருக்கையில் அவர்களின் வீட்டு அழைப்பு மணி கேட்க யதுவாக தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டே கதவைத் திறந்தாள். திறந்தவள் அதிர்ந்து போனாள். 

"ஏய் விடுங்கடா என்னை? விஜயன் விங்க என்னை? என்ன பண்ணுறீங்க?"

"உனக்கு தெரியலையா புவி உன்னை கொல்ல போறாங்க? நீ அவனோட லைவ்விளையும் என்னோட லைவ்விளையும் சேர்ந்தே விளையாடிட்டே அது தான் இரண்டு பெரும் சேர்ந்து உன்னை பழி தீர்க்க போறம்."

"யது?... நீ நீ ஏன் இப்பிடி எல்லாம் பேசுறாய்? நான் என்ன செத்தேன்?" அவள் விஜயன் சகாவின் பின்னால் வீட்டுக்குள் அவர்களோடு கூட்டு சேர்ந்து வந்த  யது கண்டு அதிர்ந்தாள் என்றால் அவள் சொன்ன சேதி இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

"அத நான் சொல்றண்டி சஹா இவள முதல்ல அந்த கதிரையோட பிடிச்சு கட்டடா" அவன் உத்தரவின் பேரில் அவளை கதிரையில் பிடித்து கட்டினான் சஹா அவர்கள் கையில் உருட்டு கட்டை வேறு இருந்தது.

 "ஏண்டி நான் கட்டிக்க இருந்த  பொன்னை நீ அவ இஸ்டப் பட்டவனுக்கே கட்டி வச்சிட்ட இல்ல. என் கிட்ட இருந்து அந்த திமிர் பிடிச்ச கழுதய அன்னிக்கு நீ காப்பாத்திட்ட ஆனால் உன்னை இன்னிக்கு யாரடி காப்பாத்த வருவா? ஆங் அன்னைக்கு ஒருத்தன் வந்தான் இல்ல? பாவம் அல்பாயுசிலேயே போயச் சேர்ந்திட்டான் என்ன உன்னோட ஆளா அவன். என்னமா பாஞ்சு வந்தான் ஹீரோ மாதிரி . " என்று ஏதோ விட் அடிச்ச மாதிரி  அந்த வீடே அதிரும் அளவுக்கு சிரித்தான் அந்த விஜயன். 

அவளுக்கு அப்போது தான் புரிந்தது. அன்று சுதன் இறந்ததற்கு கூட இவன் தான் காரணம் என்று.

"இவனோட ஹீரோ அவனில்ல அவன் இருக்கான் இன்னும் இருக்கான் இவளை உயிரா நேசிச்சுக்கிட்டு இருக்கான். அதனால தானே என்னோட காதலை அவன் ஏத்துக்கல.  நாள் பாத்து காத்திருன்தண்டி உன்னை மொத்தமா ஒளிச்சு தலை முழுக. அதுக்கு தான் இங்க வந்து உன் கூடவே தங்கி உன்னை கண்கானிச்சிட்டு இருந்தன். அந்த வேலைக்காரி இதனை நாளா ஒரு வேலியா உனக்கு நின்னா. அவ பொண்ணுக்கு ஆக்சிடன்ற் ஆச்சுன்னு அவள இன்னிக்கு உன்கிட்ட இருந்து பிரிச்சிட்டன். ஹா..... ஹா..... ஹா.... உனக்கு கொஞ்சல் கேட்கிறதா? என்னோட அச்வினை கொஞ்சிட்டு இருந்தாயில்ல இந்தா வாங்கிக்க என்று அவள் வாயில் கட்டையால்  அடித்தாள் ரத்தம் கொட்டியது. புவி துடித்துப் போனாள் இந்த கை தானே காயாவுக்கு தாலி எடுத்துக் கொடுத்தது என்று அவள் இரு கைகளிலும் அடித்தான் விஜயன் அவள் வழியால் மயங்கிப் போனாள். தலையில் கட்டையால் அடித்தான் சஹா அவளிடம் மூச்சு பேச்சில்லை. அவளை எங்காவது கூவத்தில் வீசச்சொல்லி விட்டு சோவாவில் வந்து அமர்ந்தாள் யது மனது பூரா நிறைவுடன். 

இவளுக்காக தானே என்னை மறுத்தான் இன்று அவளே இல்லையே என்று கேக்கரித்தாள்.  அவள் முன்னாள்  அஸ்வின் போலீசோடு நின்றான். அவள் அங்கு அவன் போலீசோடு வருவான் என்று எதிர் பார்க்க வில்லை. 

பயத்தில் அவள் குரல் நடுங்கியது.  அஸ்வின் கொடுத்த அடியில் அவள் கன்னம் கண்ரிஸ் சிவந்தது. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.