(Reading time: 39 - 78 minutes)

 

தையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நிரஞ்ஜன் ரசித்து சிரித்து சிரித்து கண்களில் நீர் வந்தது. சோகம் என்பதே மறந்துபோனான். அவர் கூறுவதையே ரசித்து இருவரையும் மாறி மாறி பார்த்து கேட்டுக்கொண்டிருந்தான்.

“லவ் வந்தது சரி யார் போய் சொல்லுறது, கூட இருக்க பொண்ணுக்கு சொன்னதுக்கே அப்படி அறைஞ்சாள் இதில நேராக அவகிட்டவே எப்படி சொல்லுறதுன்னு ஒரே பயம்.. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா மறஞ்சு இருந்து தினமும் surprise gift கொடுத்து அவளை என்னை பார்க்க ஏங்கவச்சு அப்பறமா ஒரு நாள் போய் சொன்னேன்.. அங்க போய் பார்த்தால் ஜான்சி ராணி நம்ம அழகுல மயங்கி உடனே ஒத்துகிட்டாங்க” என்று பெருமையாக சொல்லிகொண்டார்.

“அச்சோ அச்சோ எவ்வளவு போய் சொல்லுறாரு பாரேன்... ராம் இதெல்லாம் கொஞ்சம் ஓவர். நான் உங்களை பார்த்து மயங்கினேனா? அதுசரி... நீ நம்பாத ரஞ்சன். அப்பயும் நான் reject பண்ணிட்டேன் அப்பறம் கெஞ்சி கொஞ்சி தான் மயக்கினாறு” என்று முடிக்கும் போது வெட்கபட்டவாறு கூறினார்.

இவர்கள் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தவனுக்கு மனதில் தேஜுவின் நினைவு மேலோங்கியது... என்னெல்லாம் கனவு கண்டுட்டு பாதிலேயே கனவு களஞ்ச மாதிரி இருக்கே... நானும் இப்படி தேஜு கூட வாழ முடியாதா???? என்று யோசித்தவன் சிறிது நேரம் கழித்து தான் மற்ற இருவரும் தன்னை கவனிப்பதை உணரத்தான்... பின்பு சுதாரித்து புன்னகைக்கையில் அவர்கள் இருவரும் சுதாரித்துவிட்டனர்...

மெதுவாக ஜானகி ஆரம்பித்தார்... “என்ன சொல்லு ரஞ்சன், இந்த காதல் கொடுக்குற தைரியமே தனிதான்... இவரில்லாம இருக்க முடியாதுன்னு புரியவச்சதும் அதுதான்” என்று அவர் முடிக்க, ராம்... “இவளுக்காக எதையும் சாதிக்கலாம்னு தைரியம் தந்ததும் அதுதான்... கடைசிவரை அவளுக்கு துணையா இருக்குறதில இருக்க சுகமே வேற ரஞ்சன்” என்று அவர் முடிக்கும் போது அவனின் கண்கள் கலங்கி இருந்தது... தன்னை துணை என்று நம்பியவளை ஏமாற்றி வந்த வலி ரணமாய் வலித்தது. கண்கள் மூடி அவன் அமர்ந்திருக்க, ஜானகியை கண்ணசைவில் குடிக்க ஏதேனும் கொண்டுவர சொல்லி அனுப்பிவிட்டு நிருவின் அருகில் அமர்ந்தார் ராம்.

“நான் உன் காபின்ல ஒரு பொண்ணோட புகைப்படத்தை மறைச்சு வச்சிருக்கியே அதையும்  பார்த்திருக்கேன். அதை நீ ஏக்கமாய் பார்க்குரதையும் பார்த்திருக்கேன். அந்த பொண்ணே உன்னை அழைக்கும் போது நீ அதை தவிர்குரதையும் பார்த்திருக்கேன்” அவர் முடிக்கவும் அவன் கண்களில் வழிய துவங்கிய கண்ணீரோடு தன் கதையை கூற துவங்கினான். தன் மீது தான் தவறு என்று புரிந்தது அவனுக்கு ஆனால் எதிர்கொள்ள தான் தைரியம் இல்லை...அதை மாற்றினார் ராம். சில நேரங்களில் சில நொடிகள் தான் சிலரை வாழ்க்கையில் சந்திப்போம் ஆனால் அந்த நொடி சந்திப்பே வாழ்க்கையையே மாற்றிவிட கூடும். அப்படி ராமின் வீட்டிற்கு நிரஞ்ஜன் சென்றது எதிர்பார்க்காதது ஆனால் அந்த பயணமே அவனது வாழ்க்கை பயணத்தை மாற்றியது.         

அன்றிரவு வீட்டிற்கு வந்த நிரஞ்ஜனின் மனம் பல நாட்களுக்கு பின் நிம்மதியாக இருந்தது, அது ராமிடம் பகிர்ந்துகொண்டதால் தான் என்று அவனுக்கு புரிந்தது. இருவரும் பெற்றோர் போல் அவனை கவனித்து கொண்டது பல நாட்களுக்கு பிறகு தன் பெற்றோரை பார்த்த ஒரு மகிழ்ச்சியை தந்தது. கண்கள் மூடி படுத்தவனுக்கு தேஜுவே கண்ணில் தோன்றினாள். மனம் முழுதும் அவள் நினைவில் “சாரி தேஜு உன்னை இப்படி விட்டுட்டு வந்திருக்க கூடாது. கூடிய சீக்கரமே உன்னை வந்து பார்ப்பேன் அத்தை மாமா சம்மதத்தோட உன்னை கல்யாணம் பண்ணிப்பேன், உன்னை கண்ணுல வச்சு தாங்குவேன்...” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு பல நாட்கள் கழித்து நன்றாக உறங்கினான்.

நாட்கள் மாதங்கள் ஆனது, 4 மாதங்கள் ஓடியிருக்க, அனு தனக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுத்து இருந்தாள். எப்போதும் அங்கிருக்க தேவை இல்லாமல், குறிப்பிட்ட நேரம் மட்டும் ரேடியோ ஸ்டேஷன் சென்று வந்தாள்.

“ஹலோ... திருப்பூர் வாசிகளே... இது உங்கள் காலை தென்றல் fm... நீங்க கேட்டுகிட்டு இருக்குறது, காலை குயில்... எப்பவும் போல நம்ம வருண்(சக தொகுப்பாளன்) மாதிரி ஏன் கூ கூன்னு கூவபோகுதாணு நக்கலா கேட்க கூடாது மக்களே.. இது உங்க மனச தொட்ட, காதல் கீதங்கள்.. நினைச்சு பாருங்க ஒரு கையில newspaper, இன்னொரு கையில காபி backgroundல நம்ம காலை குயில் பாடல்கள் அப்படியே ரசிச்சு ஒரு காதல் பார்வையை மனைவி இருக்கவங்க அவங்ககிட்ட தூது விடுங்க, அப்பறம் பாருங்க நேத்து போட்ட சண்டையெல்லாம் காத்தோட போயிடும்... சரி நாங்க அப்போ என்ன பண்ணுறதுன்னு bachellor லாம் கேட்டிங்கன்னா, உங்களுக்கு எர்த மாதிரி அவள் வருவாளா பாடல் போடுறேன் அதை கேட்டுட்டு வாசலை பார்த்துட்டே இருங்க பாய்ஸ்... அதை தொடர்ந்து இன்னைக்கு யாருக்குலாம் பிறந்தநாள், நம்ம கிரேட் லீடர்ஸ் யாருலாம் இந்த நாளுல பிறந்திருக்காங்க.. அப்புறம் கொஞ்சம் ரொம்ப கொஞ்சம் நாட்டு நடப்பு இதெல்லாம் பார்க்க போறோம், இப்போ பொறுமையா கேட்டுட்டு இருக்க மாதிரியே அழகான ஒரு பாடலையும் கேளுங்க.... இது உங்கள் காலை குயில் பிரோம் காலை தென்றல்...” என்று அனு பேசி முடிக்க... இனிமையான அந்த பாடல் ஒலித்தது...

“காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே ஏன் நெஞ்சில்....

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே ஏன் நெஞ்சில்...

ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்....

மயக்கமென்ன.....காதல் வாழ்க....”

அவளது குரலும் சரி அவள் தொகுக்கும் விதமும் சரி பலரின் மனதில் இனிமையான எண்ணங்கள் தந்து, எப்போதும் இனிமையான விடியலாகவே அமைத்தது...

காலை 7 மணிக்கு அலாரம் அடிக்க விழிக்க முடியாமல் கண்களை பிரித்து தட்டு தடுமாறி தொலைபேசியை கையில் எடுத்து காலை தென்றல் ரேடியோ ஸ்டேஷன் வைத்தான் அஸ்வத். வேலைக்கு சேர்ந்து 1 மாதத்திற்கு மேல் ஆகிருந்தது. எப்போதும் விழித்ததும் முதல் வேலை அனு தொகுக்கும் நிகழ்ச்சியை கேட்பது தான்... அவளாலேயே நாள் இனிமையாய் விடிவது போல் தோன்றும் ஆனால் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால், எவ்வளவு சந்தோஷமா இருக்காள் பாரு, என்னை பத்தின நினைப்பு கொஞ்சம் கூட இல்லவே இல்லை... நான் மட்டும் எப்போ பார்த்தாலும் இவளை ஏன் தான் நினைக்குறேனோ என்று அர்ச்சனை செய்துவிட்டு தான் துவங்குவான். வேலை அஸ்வத்துக்கு மிகவும் பிடித்து போனது, தினமும் புது புது முயற்சி என்று விருவிருப்பாக இருந்தது.

அவன் சுறுசுறுப்பாக வேலைக்கு கிளம்ப அவன் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. “ஹலோ அப்பா???”

“தம்பி கிளம்பிட்டியாப்பா??”

“இதோ இப்போதான்ப்பா...” என்று மரியாதையாக பதில் தந்து கொண்டு இருந்தான்.

“ஒண்ணுமில்லை இந்த வாரம் நாங்க இரண்டு பேரும் அங்க வரலாம்னு இருக்கோம்... அஹல்க்கு function வைக்க நாள் பார்த்திட்டு இருந்தோம்மில்லை, இந்த ஞாயிற்றுக்கிழமையே நல்ல நாளா இருக்காம் அதான் function முடிஞ்ச கையோட கூட்டிட்டு வந்திடலாம்னு இருக்கோம். எல்லாருக்கும் சொல்லியாச்சு நீயும் அக்கா வீட்டுக்கு வந்திடுப்பா..” என்று கண்ணன் சொல்லி முடிக்க, அஸ்வதிற்க்கு தான் அர்ஜுனின் நினைவு வந்தது.. நீங்க நினைச்சால் போதுமா என்று எண்ணிக்கொண்டு “சரிப்பா” என்று கூறி வைத்துவிட்டான்..

(சரி வாங்க நம்ம அர்ஜுன் அஹல்யாவை என்ன கொடுமை படுத்துறாரு பார்க்கலாம்)

ஜு”

“....”

“என் சமத்தில்ல நீ...”

“....”

“இது ஒரு விஷயமா? கொஞ்சம் சிரிடா...”

இதற்கு மட்டும் ஓரகண்ணால் பார்த்து முறைத்துவிட்டு வேலையே இல்லாவிட்டாலும் மடிக்கணினியில் தட்டிக்கொண்டிருந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.