(Reading time: 10 - 19 minutes)

 

செங்கதிரவன் தன் செங்கோல் ஆட்சியினை உலகில் ஸ்தாபிக்க ஆரம்பித்திருந்தான்.

மதுபாலாவிற்கு எதுவும் ஓடவில்லை.இன்று என்ன நடக்க இருக்கிறதோ?இரு துருவம் இன்று வெகு நாட்கள் கழித்து சந்திக்க இருக்கின்றது.என்ன நடக்க போகிறதோ????

"மது..."

"........."

"மது...."

"ஆ...சொல்லுங்க அத்தை."

"என்னம்மா யோசிட்டு இருக்க?"

"அது...வந்து...இன்னிக்கு அவர்...."

"புரியுதும்மா எனக்கும் அதான் பயமா இருக்கு!!!!சாரதா அக்கா தான் எந்த பிரச்சனையும் வராம தடுக்கணும்."

"அவர் கிளம்பிட்டாரா?"

"ம்...கிளம்பிட்டான்.நான் கோவிலுக்கு முன்னாடி போறேன்.நீ சரணை கூட்டிட்டு வா மது!"

"சரிங்க அத்தை."-ராஜேஸ்வரி சென்றுவிட,மதுபாலா எதையோ சிந்திந்துக் கொண்டே சரணின் அறைக்கு சென்றாள்.

அவன்,எதையோ வேடிக்கை பார்த்தவாறு

நின்றிருந்தான்.

"என்னங்க..."-திரும்பினான்.

"நேரமாயிடுச்சிங்க கிளம்பலையா?"-அவன்,'இங்கே வா!'என்பதை போல் அழைத்தான்.

"என்னாச்சுங்க?"

"தெரியலை அம்மூ... இத்தனை வருஷமா இல்லாத ஏதோ ஒண்ணு,இப்போ ஏதோ மாதிரி இருக்கு!"-ஆதித்யாவின் குரலில் என்றுமே இல்லாத வலி தெரிந்தது.

"என்னமோ தப்பு நடக்குது அம்மூ!"

"என்னாச்சுங்க?ஏன் இப்படி பேசுறீங்க?"

"தெரியலை..."-அவன்,மதுவின் கரங்களை இறுக்கமாக பற்றி கொண்டான்.என்றுமே நடுங்காத அவன் விரல்கள் இன்று நடுங்குகிறதே!!!!!மதுபாலா சரணை மிருதுவாக அணைத்துக் கொண்டாள்.

"எதுவுமில்லைங்க...நீங்க டென்ஷன் ஆகாதீங்க...."

"ம்...."

"நார்மலா இருங்க!"

"ம்...."

"எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு தான்,நீங்க இப்படி இருக்கிறது,அத்தைக்கு வேதனையை தரும். அமைதியா இருங்க!"

"சரி..."-அவள்,அறிந்திருக்கவில்லை சரணின் மனதில் விழுந்த சலனம் உண்மையாய் நிகழ போகிறது என்று!!!!தாங்கி கொள்ளவே முடியாத அடுத்த வேதனையை ஆதித்யா சந்திக்க இருக்கிறான் என்று!!!!(அந்த சம்பவத்திற்காக அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்!!!!கதையில் புதிய திருப்புனை வர இருக்கிறது.)

துவும்,சரணும் பயணித்த கார் அந்த குளக்கரையை அடைந்தது.

அவன் இன்னும் எதையோ யோசித்தப்படி இருந்தான்.

"என்னங்க?"

"ம்..."

"வாங்க!"

"ம்...."-அவன் இறங்கி வந்தான்.அந்த குளக்கரையில் இறங்கிய போது,அவன் மனம் அவனிடத்தில் இல்லை. அவன்,வந்த வேலை ஆரம்பித்தது!!!!!!அதே குளத்தின் எதிர்கரையில் மஹாதேவன் சாரதாவிற்கு திதி கொடுத்து கொண்டிருந்தார்.

"இந்த பிண்டத்தை கரைச்சிட்டு வாங்க!"-என்ற அந்தணரின் குரலில் கலைந்தவன்,அவர் கூறியப்படி செய்தான். மதுவின் பார்வை சரணை விட்டு விலகவில்லை.அவன் மனதில் வேறு ஏதோ குழப்பம் உறுத்துக்கிறது என்று அவளுக்கு தெரியாமல் இல்லை.ஆனால்,அது என்ன?என்பது அவளுக்கு புரியவில்லை.45 நிமிடங்களை கழித்து படி ஏறி வந்தவனின் கண்கள் நேரடியாக அவரை சந்தித்தன.அவன்,கண்களில் அடுத்த நொடி கனல் பறந்தது.மதுவிற்கு அந்த நிலையை சமாளிக்கும் விதம் தெரியவில்லை.அவள்,அவன் விரல்களை பற்றினாள்.அவளின்,அந்த அழுத்தத்தில் தெரிந்த ஒருவித பயத்தில் அமைதியானான் சரண்.எதிர் நின்றிருந்தவரின் கண்கள் இப்போதாவது இவன் பேச மாட்டானா?என்ற ஏக்கத்தை தூதாக விடுத்தது.அவனோ,அதை கண்டுக் கொள்வதாய் தெரியவில்லை.மதுவின் கண்கள் மஹாதேவனுக்கு மரியாதை செலுத்தின.அவர்,அதை ஏற்று கொண்டதை போல மெல்லிய முறுவல் பூத்தார்.இவனா அதை கவனிக்காமல் விட்டிருப்பான்??மதுவின் கைகளை பற்றி அங்கிருந்து விரைவாக அழைத்து சென்றான்.

காரில் மௌனமே சரணமாய் அமர்ந்து பயணித்தான் சரண்.மது சற்று முன் கண்களால் நடந்த அந்த போரில் இருந்து இன்னும் விடுப்படவில்லை.சரண் காரை வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்கோ செலுத்தினான்.

"என்னங்க...."

"............."

"என்னங்க.."

".............."

"என் மேல கோபமா?"

".............."

"பேசுங்க!"-அவன்,காரை நிறுத்தினான்.

சிறிது நேரம் கனத்த மௌனம் நிலவியது.

"நான் தப்பு பண்ணி இருந்தா,தயவு செய்து மன்னிச்சிடுங்க!!!ப்ளீஸ்...இது மாதிரி பேசாம இருக்காதீங்க!நீங்க இப்படி இருக்கிறது என்னால தாங்க முடியலைங்க!"-ஆதித்யா,அவள் கண்களை உற்று நோக்கினான்.அவள்,கண்களில் தன்னிச்சைளாக திரண்டிருந்தது கண்ணீர்த்துளி.அவன்,ஏதோ எண்ணியவனாக,திடீரென்று,அவளை முரட்டுத்தனமாய் இழுத்து அவள் இதழை தன் வசமாக்கி கொண்டான்.அவனது இந்த செய்கை அவளை தடுமாற வைத்தது.சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்தவன்,

"உன் கேள்விக்கு பதில் கிடைத்ததா?"என்றான்.

ஆம்...அவளின் மனதில் அப்போதிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது அல்லவா???

நீ எனக்கானவள்,எனக்கு மட்டுமே உரியவள்.அப்படி இருக்க,உன் மீது எப்படி நான் கோபப்படுவேன்???என் உயிரோடு,உணர்வோடு கலந்தவள் அல்லவா நீ?என் இருதயமும் நிதம் உன் பேரை சொல்லி தானே துடிக்கிறது?என்னை நானே மன்னித்துக் கொள்ள முடியுமா?என்னை நானே தண்டித்துக் கொள்ள முடியுமா?

பல கேள்விகளை தொடுத்தது அவன் செய்த செயல்.

சற்றே சிந்தியுங்கள்...

உலகில் காதலே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்??

மண் மீது விண் கொண்ட காதலால் தான் மழைத்துளி கிட்டுகிறது...அக்காதல் இல்லாதிருப்பின் என்னவாகி இருக்கும்???

பூமியின் மீது கதிரவன் கொண்ட காதலால் தானே வெளிச்சம் வருகிறது?

கடலில் மீது நதி கொண்ட காதலால் தானே நமக்கு நதிக்கரைகள் தோன்றின.

உடலின் மீது உயிர் கொண்ட காதலால் தானே,நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்!!!!

காதல் மட்டும் இல்லையென்றால்??சிந்தித்து பாருங்கள்...மனிதனின் நிலைமையை!!!!மனிதன் மண்ணில் சாதிக்க பிறக்கிறான் என்றால்,வெற்றியின் மீது அவன் கொண்ட காதலே தோல்வியை அவனிடத்தில் மண்டியிட செய்கிறது.காதல் இல்லாமல் இருக்க முடியுமா????

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.