(Reading time: 10 - 19 minutes)

17. என்னுயிரே உனக்காக - சகி

நேராக வீட்டிற்கு வந்தவன் தன் அறை கதவை திறந்து எதையோ தேடினான்.அவன் தேடிய பொருள் அகப்படவில்லை என்பது அவன் மேசையை பலமாக தட்டியதில் இருந்தே தெரிந்தது.தோட்டத்து பக்கமாக சென்று,அங்குமிங்கும் நோட்டமிட்டான்.   அவன் பார்வைக்கு கடும் விஷ மருந்து பாட்டில் ஒன்று இருந்தது,தெரிந்து.புரிந்துவிட்டது....அவனுக்கு...அவனை அன்று தாக்கியவன் தான் இந்த காரியத்தை செய்தது என்று!!! அன்று அவன் எடுத்து வைத்த கைப்பேசி தான் காணவில்லை என்று தேடினான்.ஆனால்,அவனுக்கு ராகுலை கொல்ல வந்ததன் காரணம் தான் விளங்கவில்லை.ஏதோ ஒரு விஷயம் அவனுக்கு விளங்கிற்று,ஏதோ தவறு நடக்க இருக்கிறது.

ராகுலை வார்ட் மாற்றி விட்டிருந்தனர்.இப்போது அவன் சிறிது தெளிந்திருந்தான்.

"மது...எப்போ வீட்டுக்குப் போகலாம்?"

Ennuyire unakkaga

"உனக்கு உடம்பு சரியான உடனே போகலாம் செல்லம்...இந்தா  ஜீஸ் குடி!"

"வேணாம்...இப்போ தானே குடிச்சேன்."

"பரவாயில்லை குடி!"

"நான் உன்னால ஜீஸையே வெறுத்துட்டேன்."

"நீ வெறுத்தாலும் பரவாயில்லை குடி!"-அவர்கள் பேசி கொண்டிருக்கையில் ஸ்ரேயாவும்,ரகுவின் பெற்றோரும் அங்கே வந்தனர்.

"ராகுல்..."-ஸ்ரேயாவின் பேச்சில் பயம் கலந்த பதற்றம் இருந்தது.

"ஸ்ரேயா."-அவள்,ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

"உனக்கு ஒண்ணும் ஆகலையேடா கண்ணா?"

"என்னாச்சு ஸ்ரேயா?எனக்கு ஒண்ணுமில்லை.நீ ஏன் அழுகிற?"

"நான் ரொம்ப பயந்துட்டேன்.அதான்...."-வார்த்தைகள் வெளி வராமல் பதறியது அந்த தாயின் மனம்.

மதுபாலா ஆதரவாக அவள் தோள் தொட்டாள்.

"எனக்கு ஒண்ணுமில்லை.என் முன்னாடி அழுகாதே!எனக்கு அழுகிறவங்களை பிடிக்காது."-ஸ்ரேயா கண்களை துடைத்துக் கொண்டாள்.

"அழலை..."

"ம்...இதான் நல்ல பொண்ணுக்கு அழகு!மது..ஆதி எங்கே?"

"கேட்டுட்டியா?என்னடா...இன்னும் இந்தக் கேள்வியை கேட்கலைன்னு நினைச்சேன்."

"ம்....பொ..றா..மை."-என்று ராகமாய்,அழகாய் இழுத்து கூறினான் ராகுல்.

"ஆதியைப் பற்றி கேட்கலை.அப்பா பேசினாரா?"-அதுவரை கலகலப்பாக இருந்த இடத்தில் அமைதி குடி கொண்டது.

"உன்கிட்ட தான் கேட்கிறேன்.அப்பா பேசலையா மது?ஏன் என்கிட்ட அவர் பேச மாட்டேன்கிறார்?"

"அது...வந்து...ராகுல் நீ ஜீஸ் குடிச்சா தான் பதில் சொல்வேன்."-மது எதையும் கூற விரும்பவில்லை.அவள் ஒரு பதில் கூறினால்,அவன் அதிலிருந்து ஆயிரம் கேள்வி கேட்பான் என்பது அவளுக்கு தெரிந்த ஒன்றே!!!

"நீ பதிலே சொல்ல வேணாம்...நான் ஆதிக்கிட்ட கேட்டுக்கிறேன்."-என்று செல்லமாக அவளிடத்தில் கோபித்துக் கொண்டான் ராகுல்.

நாட்கள் நகர்ந்து நன்றாக குணமானதால்,வீட்டிற்கு அழைத்து வர பட்டான் ராகுல்.

"ஆதி..."

"ம்..."

"எனக்கு போர் அடிக்குது!"

"போரை திருப்பி அடிக்கலாமா?"

"எங்கே முடிந்தால் அடி பார்ப்போம்."

"டேய்!உனக்கு இது தேவையா?தேவையா?"-என்று தன்னை தானே நொந்துக் கொண்டான் சரண்.அப்போது,

"என்னங்க."-அவன் குறும்பான சிரிப்போடு திரும்பினான்.

"என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"நீ ஏன் மது ஆதியை,நீங்க, வாங்கன்னு சொல்ற?"

"அது..???"

"அப்படி கேளுடா என் செல்லமே!"-மது,ஆதித்யாவை முறைத்தாள்.

"கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா?"

"என்ன விஷயம் அம்மூ?"

"ஒரு விஷயம் சொல்லணும்."

"என்னது?"

"நீங்க அப்ஸட் ஆக மாட்டீங்களே!!"

"ம்ஹீம்...சொல்லு!"

"அது...வந்து...அத்தைக்கு நாளைக்கு திதி கொடுக்கணுமாம்."-அவன்,முகத்தில் இருந்த சிரிப்பு காணாமல் போனது.

அவன் அங்கிருந்து எழுந்து சென்று பால்கனியில் நின்றான்.

"எப்போ?"

"காலையில 8 மணிக்கு!!!!"

"சரி..."-யாராக இருந்தாலும்,அனைத்தையும் துறந்த ரிஷியாக இருந்தாலும் வலிக்க செய்யும்,ஆசையுடன் கருவில் சுமந்த அன்னைக்கு ஈம சடங்கு தன்னிரு கைகளால் நடக்க போகிறது என்றால்!!!!!

"ஆதி..."-சிரமப்பட்டு தன்னிலையை மாற்றினான் சரண்.

"என்னடா?"

"என்னாச்சு?"

"ஒண்ணுமில்லையே!!!"

"பொய் சொல்லாத!"

"எனக்கு என் அம்மா ஞாபகம் வந்திடுச்சி!"

"பாட்டி தான் வீட்டில இருக்காங்களே!"

"இது என்னோட இன்னொரு அம்மா!"

"அட!இதுக்கு போயா கவலைப்படுவ?என் அம்மா கூட தான் என் கூட இல்லை...ஆனா,நான் எப்பவும் அவங்க என் கூட இருக்கிறதா நினைச்சிட்டு இருக்கேன்.அதனால,நான் கவலைப்படுறதே இல்லை."-ஆதித்யாவிற்கு இதயத்தை அறுப்பது போல இருந்தது.அவனருகே அமர்ந்து,

"உன் அம்மா உன்னை விட்டு போகலை ராகுல்."

"இதையே தான் நானும் சொன்னேன்."-சரண் ராகுலை அணைத்து கொண்டான்.மதுவிற்கு கண்ணீர் மட்டுமே துணையானது.

"என்னை கட்டிப்பிடிச்சிக்கிறதுன்னா,எல்லாருக்கும் பிடிக்கும் போல!"

"ராகுல்.."

"ம்...."

"நான் எதாவது தப்பு பண்ணா மன்னிச்சிடுடா!"

"அப்பாவும்,சரியில்லை நீயும் சரியில்லை.உங்களை எனக்கு பிடிக்கவே இல்லை."-ஆதித்யா  பெருமூச்சை விடுத்தான்.

"ஸாரி...இனி அப்படி பேசலை செல்லம்."-அவன் மனநிலையை ஊகித்தவாறு கூறினான் சரண்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.