(Reading time: 10 - 19 minutes)

 

"ப்போ உன் கேள்விக்கு பதில் கிடைத்ததா?"-கேட்டவனுக்கு,என்ன பதில் அளிப்பது என்றே தெரியாமல் விழித்தாள் மது.அவன்,கரங்கள் அவள் முகத்தை உயர்த்தியது.

"நீ எனக்கு சொந்தமானவடி!!எனக்கு மட்டும் சொந்தமானவ,எப்போ எனக்காக நீ உன் மனசையே தர துணிந்தாயோ!அப்போவே எனக்குள்ள கலந்திட்ட,எப்படி நான் உன் மேல கோபப்படுவேன்???ஆனா,அம்மூ எனக்கு உன் மேல மட்டும் தான் முழு உரிமை இருக்கு!!!அதனால,எதாவது காரணத்துக்காக நான் உன் மேல கோபத்தை காட்டுனா,பொறுத்துக்கோ!!"-அவள்,சரி என்பது போல தலை அசைத்தாள்.

"போகலாமா?"

"ம்..."-அவன்,காரை திருப்பினான்.சிறிது தூரம் சென்றதும்,ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்திருந்திருந்தவளின் கரத்தை அழுந்த பற்றினான் சரண்.அவனது, அந்த அழுத்தத்திற்கு விடையாக,அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள் மதுபாலா.

காதலில் வரையும் ஓவியமானது,எவ்வளவு அழகாக இருக்கிறது???எழுதுவதற்கு தமிழில் கூட வார்த்தைகளை தேட இருக்கின்றதே...அழகான அந்த மனங்கள் எழுதிய காவியத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.ஆதித்யா நேராக வந்து சோபாவில் அமர்ந்தான்.

"நான் உங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வரேன்!"

"அம்மூ..."

"ம்..."

"இங்கேயே உட்காரு!"-அவனது,பேச்சுக்கு கட்டுப்பட்டு அவனருகே அமர்ந்தாள் மது.அமர்ந்தவளின் தோள் மீது சாய்ந்துக் கொண்டான் சரண்.

"உடம்பு சரியில்லையாங்க?"

"மனசு சரியில்லை..."-அப்போது,

"ஆதி!"-ராகுல்.

"என்னடா?"

"என்னாச்சு?"

"தலை வலிக்குதுடா!"

"மாத்திரை போட்டுக்கிறீயா?"

"அப்பறமா போட்டுக்கிறேன்!"

"சரி...நீ போனை  வச்சிட்டு போயிட்டியா?"

"ஆமாம்டா...மறந்துட்டேன்."

"வசீகரன் தாத்தாவும்,நிரஞ்சனும் போன பண்ணாங்க.நீ வெளியே போயிருக்கன்னு சொன்னேன்.வந்ததும் பேச சொன்னாங்க!ஏதோ முக்கியமான விஷயமாம்."

"அப்படியா?சரி போனை எடுத்துட்டு வா!பேசலாம்!"

"சரி..."-ராகுல் அவனது கைப்பேசியை எடுத்து வந்து தந்தான்.ஆதித்யா நிரஞ்சனுக்கு தொடர்பு கொண்டான்.

(இத்தோடு கதையை முடித்து கொள்வோம்.அடுத்த அத்தியாயத்தில் முக்கியமான திருப்புமுனை நிகழ உள்ளது.அன்பு கொண்ட உங்கள் மனங்களை சற்றே உலுக்கி பார்க்கும் திருப்புமுனை அது.)

தொடரும்...

Go to EUU # 16

Go to EUU # 18

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.