(Reading time: 42 - 84 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 16 - புவனேஸ்வரி கலைச்செல்வி

கால் இடறி விழப்போனவளை நொடிபொழுதில் தன் புறம் இழுத்து அணைத்துகொண்ட அர்ஜுனன் கலவை உணர்வில் இருந்தான் ... அவனின் இறுகிய அணைப்பு பேசிய பாஷை என்ன?  பயமா ? காதலா ? தவிப்பா ? நிம்மதியா ? அதிர்ச்சியா ? அதற்கு பதில் அவன் அறியான் ... அவன் அறிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான் ... சில்லிட்ட கரங்களும் தழுதழுத்த குரலுமாய் இருந்தவளின் " பயம் "..! அதை  தான் அவன் அறிந்தான் ....

" அஜ்ஜு " என்று மெல்லிய குரலில் அழைத்தவள், தாயின் கதகதப்பை தேடும் பிள்ளையை போல அவனின் நெஞ்சத்தில் தஞ்சமடைந்து விட்டாள்... அவளின் அர்ஜுன்  வந்துவிட்டான் அவளை காக்க .... உணர்வாய் கலந்தவன் அவளின் உயிருக்கு கவசமாய் வந்துவிட்டான்.... இன்னும் பயம் தெளியாத குரலில், கண்கள் கலங்க நிமிர்ந்து பார்த்தவளை கண்டவுடனேயே அவனின் கோபம் வந்த திசை தெரியாமல் ஓடி விட்டது ....

ஆனால் அவன் அங்கு வரமால் போயிருந்தால்? உடல் நலமில்லை என்று தெரிந்தும் இவ்வளவு தூரம் நடந்துவந்தவளை என்ன செய்வது ? அப்படியே இங்கீதமாய் தன்  தோழியை அவளின் காதலனுடன் அனுப்பினாலும், நிவிதாவையாவது  அழைத்திருக்கலாம் ...அல்லது மற்ற தோழிகளுடன் நடந்திருக்கலாம் .... இப்படியா நிற்கும் இடம் கூட தெரியாமல் நடப்பது ?  நினைத்து பார்த்தவனுக்கு என்னதான் செய்வதென்று தெரியவில்லை .. அதை வாய் விட்டே சொன்னான்... " உன்னை என்னதான்டி பண்ணுறது ? உன்மேல கோபமும் வரல, அதே நேரம் நீ பண்ணதையும் ஏத்துக்க முடில "

VEVNP

அவளோ கண்களை சுருக்கி " ப்ளீஸ் அஜ்ஜு நோ கோவம் " என்று கிடைத்த வாய்ப்பில் அவன் மூளையை சலவை செய்தாள்..அதற்குள் கார்த்திக், கீதா, நிவித, ஸ்வாதி, ஸ்ரீதர், மற்ற நண்பர்களும் அவர்களுடன் வந்த ஆசிரியர்களும் அவர்களை சூழ்ந்து கொண்டனர் .. அனைவரிடத்திலும் பார்வையை செலுத்திய அர்ஜுன் கார்த்திக்கை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ..

"உன்னை தானே நம்பினேன் " என்றது அவனின் பார்வை .. " சாரி பாஸ்" என்று வாய்விட்டு அவர்கள் சொல்ல அர்ஜூனால் இன்னமும் சுபத்ராவை காப்பாற்றியதை நம்ப முடியாத காரணத்தினால் அவர்களிடமும் இயல்பாக பேசாமல் முடியாமல் இருந்தான்..கார்த்திக்கின் குரல் கேட்டு சுபத்ராவும் அர்ஜுனனின்  முகத்தை எதிர்ப்பார்போடு பார்க்க, அவனோ கார்த்திக்கை பார்க்காமல் சுபத்ராவிடம்

" நீ ஊட்டியை  சுத்தி பார்த்தது போதும் .. இதுக்கு மேல என்னால பொறுமையா  உன்னை விட்டுகொடுத்து பார்த்துட்டு இருக்க முடியாது .. அன்னைக்கு நான் வேணாம்னு சொன்னேன் .. பட் உன்  பிடிவாதத்துக்காக விட்டு கொடுத்தேன் .. அது எவ்வளோ பெரிய தப்புன்னு இப்போ புரியுது ... இனி உன்னை யாருக்காகவும் விட முடியாது .. உனக்கு உன் பிரண்ட்ஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் அவ்வளோதானே ? அதுக்கு நானே ஏற்பாடு பண்ணுவேன் இப்போ கெளம்பு" என்று அவளின் கரம் பிடித்து அவன் அழைத்து சென்றான்..... கிட்டதட்ட அவளை தர தரவென இழுத்து சென்றான் என்றுதான் சொல்ல வேண்டும் .. சுபத்ராவிற்கே அவனின் இறுக்கமான பிடியும், கோபமும் அதிர்ச்சியை தந்தது .... அவன் அழைத்து செல்வதை தடுத்த ஒரு ஆசிரியரிடம் கூட, " இவ என் வைப் .. அவளுக்கு ஏதாச்சும் ஆனா நீங்க பதில் சொல்ல போறிங்களா ? " என்று கோபமாய் கேள்வி கேட்டு வைத்துவிட்டு சென்றான்.... ( சாது மிரண்டா காடு தாங்காதுன்னு என் அம்மா சொன்னாங்களே அது இதுதான் போல )

சென்னை...

அந்த அஷ்டலக்ஷ்மி கோவிலில் பக்தர்கள் அனைவரும்  தங்களது  கோரிக்கையை இறைவனின் பாதம் சமர்பிக்க, ரகுராம் தன் காதலை தன்னவளிடம் சமர்ப்பணம் செய்ய காத்திருந்தான்... வரவேகூடாது என்று ஜானகி நினைத்த நாளும் இதோ வந்துவிட்டது ... அமைதியுடன் அவனை அவள் பார்க்க, அவனோ எதிலிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்து  கொண்டிருந்தான்.... அந்த சூழ்நிலையிலும் கூட அவனுக்கொரு பாடல் தான் ஞாபகம் வந்தது ..!!

நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா ?

தினம் தேய்கிறேனே இது தேவையா ?

கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி

கோவிலை தேடி நடக்கிறேன்

கூடையை கொடுத்து கும்பிட்டு முடித்து

கோரிக்கை வைக்க மறுக்கின்றேன்

அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்

பூமியில் உள்ளான் எவன் ?

பெண் கண்களை கண்டு காதலை சொல்லும்

தைரியம் உள்ளவன் அவன் அவன் அவன்

" என்ன ரகு சிரிக்கிறிங்க ? "

" ஹா ஹா இல்ல ஒண்ணுமில்ல "

" ப்ச்ச்ச் சொல்லுங்க  "

" இல்ல அங்க தேங்காய் உடைகிறாங்க பார்த்தியா "

" ஆமா அதுக்கென்ன ? "

" நீயும் அதே மாதிரி என் மண்டையை உடைச்சா எப்படி இருக்கும்னு என்  தலையை தேங்காய் மாதிரி கற்பனை பண்ணி பார்த்தேன் "

" நான் எதுக்கு உங்களை அப்படி பண்ண போறேன் "

" பின்ன என் காதலை உன்கிட்ட சொன்னா நீ என்னை சும்மா விடுவியா ? "

" ரகு ?????? "

இதுதான் நம்ம ரகு ஸ்டைல் ..... அவன் காதலை சொல்வான் என்பது அவள் எதிர்பார்த்தது தான் ... ஆனால் இப்படி காமெடி யாய் சொல்வான்னு  எதிர்பார்க்கலையே ... ! ஹா ஹா

" கண்ணை உருட்டி உருட்டி பார்த்து பயமுறுத்தாதே ஜானு .. நான் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுடுறேன் "

" ம்ம்ம்ம் "

" ஜானகி இப்போ நான் சொல்ல போறது எந்த அளவுக்கு உண்மையோ அதே மாதிரி இப்போ நான் உன் மேல காட்டுற அன்பும் என் நட்பும் உண்மைதான் ... எதையும் எதிர்பார்த்தோ இல்லை உன் மனசை மாத்தவோ நான் உனக்கு நண்பனாக இருக்கல ... ஒருவேளை  நான் சொல்ல போறது உனக்கு பிடிக்கலன்னாலும்  கூட நான் உனக்கு எப்பவும் ஒரு நண்பனாகத்தான் இருப்பேன்... நீ என் நட்பை சந்தேகபடாமல் இருந்தால் போதும் .. உன் வெறுப்பை கூட நான் தாங்கிடுவேன் " என்றவன் அவளை கூர்ந்து பார்க்க

" என்னால்  உன்னை எப்படி வெறுக்க முடியுமா ? " என்று பார்வையினாலேயே கேள்வி கேட்டாள் ஜானகி.... அது அவனை எட்டியதோ என்னவோ

" நீ என்னை வெறுக்க மாட்டேன்னு தெரியும் ஜானகி .. பட் அதே நேரம் உன் உணர்வுகளுக்கும் நான் மதிப்பு கொடுக்கணும் இல்லையா ?" என்று கனிவான குரலில் விளக்கம் கூறினான் ..

" பட் நான் உன்கிட்ட ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எதிர்பார்க்கிறேன் .. " ...அப்படி சொன்னவனை கேள்வியாய் ஜானகி பார்க்க

" அம்மா தாயே, எனக்கு இந்த மௌன ராகம் லாம் தெரியாது ... கொஞ்சம் உன் கேள்விகளை வாய்விட்டு கேட்டால் எனக்கும் நீ என் கதையை கேட்குறன்னு கொஞ்சம் நிம்மதியாய் இருக்கும் " என்று போலி பணிவில் சொன்னான் ... அவனின் பேச்சை கேட்டு சிரித்த ஜானகி

" சரி ..சொல்லுங்க  என் கிட்ட என்ன எதிர்ப்பார்க்குறிங்க? " என்றாள்....

" எனக்கு ............ எனக்கு பழைய ஜானகி  வேணும் "

" ரகு ???????????? "

" நான் முதன் முதலில் பார்த்த ஜானகி வேணும் "

" ...."

" அவ நீ இல்லை ஜானு ... நான் முதன்முதலில் பார்த்து மனதை பறிகொடுத்த ஜானகி நீ இல்லை "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.