(Reading time: 7 - 13 minutes)

 

ப்போது....

"யார் சீக்கிரமே வந்துவா அம்மூ?"-என்றப்படி வந்தான் சரண்.

மது நடந்தவற்றை கூறினாள்.

"அம்மாடி!என் செல்லத்துக்கு இவ்வளவு பெரிய சந்தேகம் வருதா?"

"ஆமா!"

"நான் உனக்கு சத்தியம் பண்றேன் ராகுல்.நான் சீக்கிரமே வந்துவிடுவேன்!"

"நிஜமா?"

"நிஜமா!"

"சரிப்பா!"-சரண்,அவன் நெற்றியில் முத்தமிட்டான்.

துவிற்கு அது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

பொறுப்பே இல்லாமல் இருந்தவனா?இப்படி மாறினான்??ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்தே இவன் பேசுகிறான்.

"அம்மூ?"

"ம்...ஆ!என்னங்க?"

"என்ன யோசிக்கிற?"

"ஒண்ணுமில்லைங்க...இது நீங்க தானான்னு பார்க்கிறேன்!"

"நானே தான்!!பயப்பட வேண்டாம்!மாத்திரை கொடு ராகுலுக்கு!"

"இந்தாங்க!"-அவள்,அவன் கையில் ஒரு மாத்திரையை வைத்தாள்.

"ம்...இந்தா சாப்பிடு!"

"அப்பா!கசக்குது!"

"விழுங்கிடுடா!"-அவன்,அதை உண்டவுடன், ராகுலின் முகம் அஷ்டகோணலாய் மாறியது.

"ரொம்ப கசக்குதா?"

"ம்..."

"சரி இனி தரலை.அம்மூ இனி,ராகுலுக்கு மாத்திரை தராதே!"

"சரிங்க.."

"அப்பா??"

"என்னடா?"

"என்னை எப்போ ஸ்கூல்ல சேர்க்க போற?"

"அடடா!ராகுல் செல்லத்துக்கு ஸ்கூல் போற ஆசை வந்திடுச்சு...ஆனா, வயசு வரலையே!"

"ஏன்?"

"இந்த வருஷம் போகட்டும்.அடுத்த வருஷம் சேர்த்திடலாம் என்ன?"

"சரிப்பா!"

"அம்மூ...டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா?"

"வச்சிட்டேங்க...நீங்க பார்த்து போயிட்டு வாங்க!"

"அப்பா!நானும் வரட்டா?"

"ஏன்டா?"

"சும்மா தான்!"

"இப்போ வேணாம் செல்லம்...நீயும்,சீக்கிரமே சி.பி.ஐ.ஆயிடு,அப்போ போகலாம்!"

"ம்...."-அங்கே அழகிய காவியம் ஒன்று காலத்தால் எழுதப்பட்டு கொண்டிருந்தது.

இனி,நீங்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த படலம் வர இருக்கிறது. இதோ நமது கதாநாயகன் தன் பயணத்தை தொடங்க இருக்கிறான்.தன் நண்பனுக்காக,நாட்டிற்காக, மக்களுக்காக...

றுநாள் காலை.....

"அம்மா!நாங்க கிளம்புறோம்மா!"

"கண்ணா...பார்த்துப்பா.... பார்த்துப் போயிட்டு வா!"

"சரிம்மா!"

அடுத்ததாக ரம்யாவிடம்,

"போயிட்டு வரேன்!"

"ஒரு நிமிடம்!"

"என்ன?"

"நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்!"

"என்ன?"

"என்னை மன்னிப்பியா சரண்?"-அவளது கேள்வி,அனைவரிடமும் அதிர்ச்சியை வரவழைத்தது.

"ஏன்?"

"நான்...நான் ரொம்பவே திமிர்ல ஆடிட்டேன். உன்னையும்,மதுவையும் தகாத வார்த்தையில பேசி இருக்கேன்.என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்..."

"..............."-அவன், அமைதியாக மதுவை பார்த்தான்.அவள் முகம்,களை இழந்தது.

"உன்னால,மது தான் அதிக காயப்பட்டிருக்கா... அவக்கிட்ட மன்னிப்பு கேளு!"

-அவள்,சரியென தலையசைத்து மதுவிடம் சென்றாள்.

"மது...நான் பண்ண தப்புக்கு என்னை மன்னிச்சிடு மது...!"-மது அவளை அணைத்து கொண்டாள்.

"எனக்கு,உன் மேல எந்த கோபமும் இல்லை ரம்யா.விடு!முடிந்ததை பற்றி பேச வேண்டாம்."

"தேங்க்ஸ் மது!"-அவளுக்கு ஒரு சிரிப்பை பரிசளித்தாள் மதுபாலா.

"நான் கிளம்புற நேரத்துக்கு தான் அழுவீங்களா?சிரிச்சிட்டே தான் வழி அனுப்புங்களேன்!"-இருவரும் சிரித்துவிட்டனர்.

பின்,ஆதித்யா ராகுலிடம்,

"ராகுல்...கிளம்பட்டா?"

"சீக்கிரம் வந்திடு!"-என்று அவன் கையில் ஒரு காப்பினை அணிவித்தான்.

"என்னடா இது?"

"இது அப்பாவோடது.... உனக்கு எதுவும் ஆக கூடாதுல,அதான்!"-சரண்,அவன் நெற்றியில் முத்தமிட்டான்.

"எதுவும் ஆகாது கண்ணா!"

"பார்த்து போயிட்டு வாப்பா!"

"சரிடா!செல்லம்!"-அனைவரிடமும் விடைப் பெற்றுவிட்டு கிளம்பினர் சரணும்,நிரஞ்சனும்.செல்லும் முன் நிரஞ்சன் மதுவிடம்,

"மது...எனக்கு ஒரு உதவி பண்றீயா?"

"சொல்லுங்க..."

"தப்பா எடுத்துகாதே!!!பவி...பவித்ராக்கிட்ட நான் கிளம்புறேன்னு சொல்லிடு!"-மது விழித்தாள்.

"சொல்லிடுறேன்...ஆனா, அக்காவை ரொம்ப நாள் காக்க வைக்காதீங்க..."-நிரஞ்சன் மெல்ல சிரித்து,

"வரேன்..."-என்று விடை பெற்றான்.

இங்கே இருவரின் பயணம் ஆரம்பித்தது.அவர்களின் பயணம் இனிதே நிறைவடைய வாழ்த்துங்கள் நண்பர்களே!!!!

தொடரும்...

Go to EUU # 21

Go to EUU # 23

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.